தமிழக அரசின் தனி இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கால் வயிற்று கஞ்சி தான்!
ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை!
ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் அறிக்கை!
குறிப்பு :ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (ITJ) என்பது தமிழ்நாடு தவ்ஹீது் ஜமாத் (TNTJ) யில் இருந்து உடைந்த ஜமாத்தாகும்.
தமிழக முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வி, வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு சம்மந்தமான தமிழக அரசின் அவசர சட்டம் 13.08.2007 ல் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 215 சாதிக்கு மேல் உள்ளதற்கு மொத்தம் 30 சதவீதம். இதில் முஸ்லிம்களையும் கிருத்துவர்களையும் தனியாக பிரித்தெடுத்து தலா 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்கடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவாக உள்ள கிருத்துவ சமுதாயத்திற்கும் 3.5 சதவீதம் அதே தமிழகத்தில் 13 சதவீதத்திற்கும் மேல் இருக்கின்ற முஸ்லிம் சமுதாயத்திற்கும் 3.5 சதவீதம். இது தமிழக அரசின் சிறு பிள்ளை தனமான நன்கு ஆராயாத தனி இட ஒதுக்கீடு உத்தரவாகும். எதில் எப்படி சமத்துவத்தை காட்டுவது என்பது கலைஞர் அறியாததல்ல. உலகில் முஸ்லிம் என்றால் எல்லோருக்கும் இழக்காரம் தான்! அதில் கலைஞர் மட்டும் விதிவிலக்கல்ல என்பதை மட்டும் நினைவுப்படுத்துகின்றோம்.
எது எப்படியோ, முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கை கால் வயிற்று கஞ்சியுடன் வயிறு நிறைந்துள்ளது. பட்டினியாய் இருந்தவர்களுக்கு கால் வயிற்று கஞ்சி அளித்த தமிழக அரசுக்கும், கலைஞர் அவர்களுக்கும் முஸ்லிம் சமுதாயம் சார்பாக ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது. இட ஒதுக்கீடு விசயத்தில் முழு வயிறு நிறைய முஸ்லிம்கள் தொடர்ந்து முயற்சி செய்வது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. - ஏ.கே.-
1 comment:
Thanks for posting!
I passed to admire your work and to desire to you to one good weekend.
David Santos
Post a Comment