சென்னை, செப். 13-
தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வாழும் சிறுபான்மைச் சமுதாய மக்களின் நலன்களைப்பாதுகாப்பதில் தி.மு.க. அரசு எப்பொழுதும் கனிவும், கரிசனமும் கொண்டுள்ளது என் பது அச்சமுதாய மக்கள் அனைவரும் அறிந்த தாகும்.
2006 ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சிறு பான்மை இனத்தைச் சேர்ந்த வர்களுக்கு தனி இட ஒதுக் கீடு வழங்க வகை செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கேற்ப, 13.5.2006 அன்று இந்த அரசு அமைந்தவு டனேயே, 24.5.2006 அன்று கவர்னரின் முதல் உரையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் இட ஒதுக்கீடு ஏற்படுத்து வதற்குத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்'' என்றும்.
2006-2007 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், "சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குக் கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன், தமிழகத்திலும் அவர்களுக்கு இட ஒதுக் கீட்டுக்கு வழி வகுத்திட தேவைப்படும் உறுதியான நட வடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்'' என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதன் முதல் கட்டமாக-நீதியரசர் ஜனார்த் தனனை தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்திடம்-இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும், ஆய்வும் செய்து உரிய பரிந்துரையை வழங்குமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அம்பாசங்கரை தலைவ ராகக் கொண்டு அமைக்கப் பட்ட தமிழ்நாடு 2-வது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்துக்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை தொடர்பான புள்ளி விவரங்களை அடிப் படையாகக் கொண்டு முஸ்லிம் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்க லாம் என்று தமிழ்நாடு பிற் படுத்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசுக்குப்பரிந்துரை செய்துள்ளது.
இந்தப் பரிந்துரையை ஏற்று, பேரறிஞர் அண்ணா வின் 99 ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப் பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும், அப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கிறிஸ்தவர் களுக்கு 3.5 சதவீதமும் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 15.9.2007 முதல் தனி இட ஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறதென முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : மாலைமலர்
3.5 சதவீதம் ஏற்புடையதா? இல்லை ஏமாற்று வேலையா? பொறுத்திருந்து பார்ப்போம்.
2 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு ரமளான் மாதத்தில் கிடைத்திருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
தமிழக முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு மிக மிக குறைவுதான் இருந்தாலும் இந்த முதல் நடவடிக்கையை தமிழக முஸ்லிம்கள் குறை சொல்லாது பாராட்ட வேண்டும். அல்லாஹ்வின் அருளால் நம் முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளின் அயராத முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதற்காக பாடுப்பட்ட நம் முன்னோர்கள், நம் முஸ்லிம் சமுதாயத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளின் காலம் சென்ற தலைவர்கள், முன்னால் தலைவர்கள், தற்போதைய தலைவர்கள், அமைப்புகளை சார்ந்தவர்கள், தனிப்பட்ட முறையில் முயற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவரையும் விருப்பு, வெருப்பின்றி, தன்னால்தான் என்றில்லாமல் சுயநலமின்றி அனைவரையும் நாம் பாராட்டுவோம். அனைவர்களுக்காகவும் இந்த ரமளான் மாதத்தில் அல்லாஹ்விடம் நாம் துஆ செய்வோம். புனிதமான ரமளான் மாதத்தில் நாம் பெற்றிருக்கும் இந்த இடஒதுக்கீட்டிற்கு தகுதி பெறும் அளவிற்கு யா அல்லாஹ் எங்கள் சமுதாயத்தில் குழந்தைகளுக்கு கல்வி வளர்ச்சியைத் தருமாறும், அரசாங்க வேலைத்தானே என்றில்லாமல் படைத்தவனாகிய (அல்லாஹ்வுக்கு) உனக்கு பயந்து வேலைசெய்யும் பக்குவத்தைத்தருமாறும் இந்த புனிதமான ரமளான் மாதத்திலே அல்லாஹ்விடம் இருகரமேந்தி துஆ செய்வோம்.
சமுதாயத்தில் இருக்கும் அனைத்து அமைப்புகளின் தலைவர்களே! சமுதாயத்தில் இருக்கும் கொடை வள்ளல்களே! ஆர்வலர்களே! கண்ணியமான பெற்றோர்களே!
இடஒதுக்கீட்டிற்கு தகுதியான குழந்தைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அதை துரிதமாக செய்ய வேண்டும். இந்த கல்வி படித்தவர் நம் சமுதாயத்தில் இல்லையே என்று கையை பிசைந்துகொண்டு, அந்த இடத்தை நழுவ விடாமல் அதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டை முறையாக பயன்படுத்துவோம். இடஒதுக்கீடு அதிகமாக அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!
வஸ்ஸலாம்
சகதுல்லாஹ்
துபை
இடஒதுக்கீடு லட்சியத்தை வென்றெடுக்க முன்நின்ற தமுமுக போன்ற மக்கள் இயக்கத்தின்வெற்றியைமுதலில்வாழ்த்துவோம் அறுபத்துஒன்பதுசதவீத இடஒதுக்கீடுதடைதகர்ந்தபின்
இறையருளால் மேலும் சதவீததை அதிகபடுத்த அரசுகளுக்குஅழுத்தங்கள்கொடுப்போம்.இன்சாஅல்லாஹ்
abusalih
Post a Comment