இஸ்லாத்தைக் குறித்து நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போன்று அமைந்த தங்களின் கீழ்க்காணும் கேள்விகளுக்கும் இதற்கு முன்னர் தாங்கள் கேட்ட கேள்விகளுக்கும் மிக்க நன்றி!
பல்வேறு தளங்களில் இக்கேள்வியை கேட்டதில் இங்கு மட்டுமே என் கேள்வி எவ்வித எடிட்டிங்கும் இல்லாமல் பதிக்கப்பட்டுள்ளது.
அதற்காக முதலில் தோழர் முகவைத்தமிழன் அவர்களுக்கு என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என் கேள்விக்கு பதிலளிக்க "முயன்றுள்ள" தோழர் அஸ்மின் அவர்களுக்கும் என் நன்றி.
ஆனால் உங்களின் பதில் என் கேள்விக்கு போதுமான பதிலாக இல்லை.
என் கேள்வி நேரடியானது.
1. "ஒருவர் செய்த பாவத்தை இன்னொருவர் சுமக்கமாட்டார்" எனில், ஆண்கள் தங்களுக்குள் நடத்திய கொடுக்கல், வாங்கல் போன்ற மற்று விஷயங்களில் செய்த தவறுகளுக்கு எதுவும் அறியா பச்சிளம் குழந்தைகளையும் பொதுவில் குற்றவாளி போன்று நிறுத்தி, அவர்கள் மீதும் சாபம் இறங்கட்டுமாக எனக் கூறுவது எவ்வகையில் சரியானது?
2. அறிவுப்பூர்வமான இஸ்லாம் இவ்விஷயத்திற்கு கூறும் அறிவுப்பூர்வமான விளக்கம் என்ன?
இதனை நான் மாற்று வார்த்தையில் கேட்பதானால்,
மஹாபாரத கதையில்.... ஓ! இ(த்)தி(போன)காசத்தில்(!), கட்டிய மனைவி திரௌபதியை மக்கள் மத்தியில் தன் சுயகவுரவத்தை காக்க பந்தயப்பொருளாக வைத்து சூதாடுகிறானே யுதிஷ்டிரன் - இந்து சனாதன தர்மம் அவதார புருஷனாக எடுத்துக்காட்டும் இவனின் செய்கைக்கும், அறிவுப்பூர்வமான மார்க்கமான இஸ்லாத்தை தூக்கி நிறுத்த அறிவுப்பூர்வமான விளக்கங்கள் அளித்து மற்றவர்களை மதம்மாற்ற முயலும் உங்களின் அறிஞர் பி.ஜெய்னுலாபித்தீன் மற்றும் அவரின் எதிரிகளாக இருந்த அந்த 8 பேர்களின் செய்கைக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? இதனை அறிவுப்பூர்வமாக விளக்க இயலுமா?
நன்றி,
சுதர்சன்.
தாங்கள் என்ன நோக்கத்தில் இக்கேள்வியை கேட்கின்றீர்கள் என்பது புரியவில்லை. இஸ்லாத்தைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு வேட்கையின் காரணமாக கேட்கின்றீர்கள் எனில் தங்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதத்தில் இஸ்லாம் கூறும் "முபாஹலா" குறித்தும் தங்களின் கேள்விக்கு பதில் அளிக்க கோரியும் நாம் விடுத்த வேண்டுகோளை அடுத்து எம் இஸ்லாமிய சகோதரர்களிடம் இருந்து ஏறாளமான மடல்கள் தங்களது கேள்விகளுக்கு விளக்கமாக எம்மிடம் கடந்த தினங்களில் வந்து மலை போல் குவிந்துள்ளன.
மற்றபடி தாங்கள் இங்கே கேட்டுள்ள பெரியவர் பி.ஜே நடத்திய முபாஹலா நிகழ்ச்சிக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இஸ்லாமிய வழிகாட்டல்களை தவறாக விளங்கியுள்ள பல முஸ்லிம்களைப் போன்று இவர்களும் "முபாஹலாவை" தவறாக விளங்கிய காரணத்தினாலேயே, தங்களை மக்கள் மத்தியில் நியாயவான்களாக சித்தரிக்க வேண்டி இப்படிப்பட்ட காரியங்களை செய்கின்றனர். இன்னும் தங்களின் கேள்விக்கு பதில் அளிப்பதாக கூறிக் எமக்கு நீங்கள் கூறிய பெரியவர் பி.ஜே அவர்களின் இயக்கத்தினரும் ஒரு மடல் அனுப்பியிருந்தனர் அம்மடலில் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்காக எம்மை ஒரு முபாஹலாவிற்கு அழைத்திருந்தனர் இதுதான இவர்களின் நிலை.
எனவே தாங்கள் இவர்களின் இச்செயல்களை இஸ்லாத்தோடு தயவுசெய்து தொடர்பு படுத்த வேண்டாம். "ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க இயலாது" என அறிவுறுத்தும் இஸ்லாத்தின் கொள்கைகளை தெளிவாக அறிந்துள்ள இத்தகையோர், "எவ்வகையில் தாய், தந்தையர்கள் செய்த தவறுக்கான தண்டனையை குழந்தைகளும் பெறும் விதத்தில் சாபம் கோர இஸ்லாம் கூறும்" என்ற சாதாரண கேள்வி மனதில் எழும் அளவிற்கு கூட சிந்தனை செய்யும் மனநிலையில் இவர்கள் இல்லை என்பதை தான் இச்சம்பவங்கள் காட்டுகின்றன.
எப்பொழுதும் எல்லா இடத்தும் கூறப்படுவது போல், முஸ்லிம் அல்லாத மாற்று சகோதரர்களிடம் ஒரு வேண்டுகோள்:
"இஸ்லாத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடுங்கள். இஸ்லாமியர்களின் செய்கைகளில் தயவு செய்து தேடாதீர்கள்."
அவ்வாறு நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இஸ்லாத்தில் மட்டுமே தேடும் பொழுது, இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் தான் என்பதை எவ்வித சந்தேகமும் இன்றி அறிந்து கொள்வீர்கள்.
ஆர்வத்துடன் இஸ்லாத்தைக் குறித்து சந்தேகம் எழுப்பிய சகோதரர் சுதர்சனுக்கு நன்றிகள். தங்கள் சந்தேகங்களை தாராளமாக மேலும் கேளுங்கள். இயன்றவரை அறிந்த வகையில் விளக்க முற்படுகின்றோம்.
இக்கட்டுரைகள் குறித்த விமர்சனங்களும், கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் முபாஹலாவிற்கு விளக்கம் அளித்து கட்டுரை அனுப்பக்கூடியவாக்ள் இனிமேல் கட்டுரைகள் அனுப்ப வேண்டாம் எதிர்பார்த்த அளவை விட அதிகமான கட்டுரைகள் வந்துள்ளதால் அவையே போதுமான பதிலாக அமைந்துள்ளன. தங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்பித்தந்து தனி மனித செயலை இஸ்லாத்தோடு ஒப்பிட்டு நடத்திய குற்ச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி. ஜஸாக்கல்லாஹ் ஹைர்.
நன்றி
முகவைத்தமிழன்
*********************************************************
சகோதரர் சுதர்சனின் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையிலும் முபாஹலா இஸ்லாத்தில் உள்ளதா இல்லையா என்ற கேள்விக்கு விளக்கமாகவும், தெளிவான பதிலாகவும் வந்து குவிந்த கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் மட்டும்.
1) இஸ்லாமிய இணையப் பேரவை (IIP) என்ற ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமியர்களின் இணையத்தளங்கள்,எழுத்தாளர்கள் மற்றும் முஸ்லிம் வலைப்பதிவாளர்களின் கூட்டமைப்பு அனுப்பியிருந்த கட்டுரை :
அன்பின் சுதர்சன் அவர்களுக்கு
தாங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று துவங்கி முபாஹலா பற்றிய ஒரு தகவலைத் தெரிவித்து அதனோடு கிருத்துவ நம்பிக்கையையும் பொருத்தி முபாஹலாவுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது எனில் இஸ்லாம் எந்த வகையில் அறிவுப்பூர்வான மார்க்கம் என விளக்கம் கேட்டுள்ளீர்கள்.
முஸ்லீம்களாகிய நாங்கள் வணங்கத் தகுதியான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம், வணங்கக் கூடாது. இஸ்லாம் அல்லாத மற்ற மதங்களில் அவரவர் கொள்கைப்படி தாங்கள் கடவுள் என்று எவைகளை எல்லாம் நம்பியுள்ளார்களோ அவைகளை வணங்குவார்கள். மேலும் படிக்க........
2) தமிழகத்தின் பிரபல அறிஞரும் பி.ஜே என்பவருடன் பல காலம் ஒன்றாக இருந்து பின்னர் பி.ஜே யின் தவறான கொள்கை பிடிக்காமல் வெளியேறியவருமான திரு.பஸ்லுல் இலாஹி என்பவர் தமிழகத்தின் வரலாற்றில் முபாஹலா என்ற இந்த வழக்கத்தை முதலில் தோற்றுவித்தது யார் என்பதில் இருந்து இந்த முபாஹலா வின் சரித்திரப் பின்னணியை ஆராய்ந்துள்ள அருமையான கட்டுரை.
தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலம் சகோதரர் சுதர்சன் அவர்கள் முபாஹலா சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். ஆண்கள் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை நியாயப்படுத்த தங்களின் மனைவி மற்றும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின் மீது கடவுளின் சாபம் உண்டாகட்டுமாக என சாபமிடுவது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமாக இருக்கிறது? இவ்வாறு சாபம் கோர இஸ்லாம்தான் வழி காட்டுகிறது எனில், இஸ்லாம் எந்த வகையில் அறிவுப் பூர்வமான மார்க்கமாகிறது? இதுதான் சுதர்சன் அவர்கள் முஸ்லிம்களிடம் நேரடியாக வைத்துள்ள கேள்வி. இதற்கு விளக்கம் அளிக்க கடமைப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களே விளக்கம் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள். மேலும் படிக்க........
3) துபையை வசிக்கும் தமிழக சகோதரார் திரு அஹமத் இமாம் அவர்கள் தங்களுக்கு முபாஹலா பற்றிய விளக்கத்தை குர்ஆனின் ஒளியில் விளக்கியுள்ளார்.
திரு.சுதர்சனம் அவர்களூக்கு,
நீங்கள் எழுப்பிய கேள்வி அர்த்தம் நிரம்பியது.முஹாபலா(முக்காபுலா அல்ல) என்ற பெயரில் ஒன்றும் அறியாத குடும்பத்தினர் மீது சாபம் இடுதல் இஸ்லாத்தில் இல்லாதது.மேலும் படிக்க........
4) அத்துடன் தங்களுக்கு வலைகுடாவில் வாழும் எமது சகோதரர் திரு. அபு ஃபாத்திமா அவர்கள் ஒரு கேள்வி ஒன்றையும் வைத்துள்ளார்கள் அதையும் இங்கு தங்களுக்கு அறியத் தருகின்றோம்.
தன்னை மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக கூறி இஸ்லாமிய மார்க்கத்தின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பிய சகோதரர் சுதர்சன் அவர்களிடம் ஒரு சிறு கேள்வி.
தாங்கள் கேள்வி எழுப்பும் பொழுது, மதங்கள் மக்களிடையே பகைமையை வளர்க்கின்றன எனவும், மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனவும் கூறினீர்கள்.
தங்களின் இக்குற்றச்சாட்டுகளுக்கு இஸ்லாம் எவ்வகையிலும் உகந்ததல்ல என்பதை மிக உறுதியுடன் கூற இயலும்.
இஸ்லாம் வளர்க்கும் பகைமை, மூடநம்பிக்கைகளை தாங்கள் பட்டியல் போட்டு காட்ட இயலுமா? பொத்தாம் பொதுவாக அனைத்து மதங்களுமே அப்படித்தான் எனக் கூறுவதை விடுத்து எந்த மதங்கள் எந்தெந்த வகையில் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன எனப் பட்டியல் போடுங்கள். அதில் தாங்கள் இஸ்லாத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விளக்கமளிக்க நாம் மிக்க ஆவலுடன் உள்ளோம்.
ஆனால் அதே சமயம், கடவுள் என்ற ஓர் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் நாத்திகம் பேசுபவர்களால் பகைமையே உருவாவதில்லை என்பது போலவும், அவர்களிடம் மூட நம்பிக்கைகள் இல்லை என்பது போலவும் தாங்கள் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டால் கூட, நாத்திகம் பேசுபவர்களுக்கு இடையில் ஒருமித்த சிந்தனை இல்லாததும், அவர்களுக்கென குறிப்பிட கொள்கையில் ஒத்த கருத்து இல்லாததும் அனைவரும் அறிவர். ஏன் கடவுள் இல்லை எனக் கூறிய பெரியாருக்கே சிலை வைத்து இன்று மாலை மரியாதைகளுடன் பூஜிக்கும் நிலையில் தான் நாத்திகர்கள் இன்று உள்ளனர்.
மற்றவர்களுடன் இவர்கள் வைத்து வளர்க்கும் பகைமையை விட, இவர்களுக்கிடையே இருக்கும் பகைமை தான் மிக அதிகம் உள்ளது. எனவே பகைமை வளர மதக்கோட்பாடுகள் தான் காரணம் எனப் பொதுவாக குற்றம் சுமத்துவது எவ்வகையிலும் நியாயமில்லை.
அதே போன்றே மூடநம்பிக்கைகளும். இன்று மூடநம்பிக்கைக்கு எதிராக களமிறங்கியுள்ளதாக மெச்சிக் கொள்ளும் பகுத்தறிவுவாதிகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதற்கு பெரியார் சிலை விவகாரமே மிகச் சிறந்த உதாரணமாகும்.
ஏன் அங்கு வரை செல்ல வேண்டும். இங்கு கேள்வியை எழுப்பிய நாத்திகவாதியான தங்கள் கேள்வியின் கருத்தில் அடங்கியுள்ள வாசகம் ஒன்றே நாத்திகவாதிகளின் அறியாமையை தோலுரிக்கின்றதே.
தாங்கள் கேள்வியை ஆரம்பிக்கும் பொழுது, "அனைவருக்கும் வணக்கம்" என்று கூறி ஆரம்பித்துள்ளீர்கள்.
"வணக்கம்" என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை அறிந்து தான் தங்களைப் போன்றவர்கள் அவ்வாறு கூறுகின்றார்களா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில், வணக்கம் என்ற பெயர்சொல் ஒருவரை நோக்கிக் கூறப்படும் பொழுது, "அன்னாரை வணங்குகிறேன்" என்ற பொருளிலேயே கொள்ளப்படுகின்றது.
இவ்வுலகில் "வணங்குவதற்கு தகுதியானவர் யார்?" என்ற ஓர் கேள்வியை நாத்திகம் பேசும் தங்களைப் போன்றவர்கள் இதுவரை எழுப்பியுள்ளீர்களா?. மரியாதை கொடுக்கின்றோம் என்ற பெயரில், "வணங்குதல்" என்ற வார்த்தைக்கு எவ்வித தகுதியும் பெறாத சக மனிதர்களை நாத்திகம் பேசுபவர்கள் "வணங்கிக்" கொண்டிருக்கின்றீர்களே. இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை விளக்க முடியுமா?
இவ்வுலகில் வணங்குதலுக்கு தகுதியானவர், "யார் இவ்வுலகு அனைத்தையும் படைத்து காத்து, பராமரித்து வருகிறாரோ அவர் மட்டுமே" என இஸ்லாம் கூறுகின்றது. "ஒருவரை வணங்க வேண்டும் எனில், யார் என்றே தெரியாத அந்த சக்தியை மட்டுமே வணங்க வேண்டும்" எனவும், எவ்வகையிலும் சக மனிதனை வணங்குதல் கூடாது எனவும் இஸ்லாம் கூறுகின்றது.
மற்ற அனேக மதங்கள் கண்டவை அனைத்தையும் வணங்கக் கூறுகின்றது. அல்லது மற்ற மதத்தினர் அவ்வாறு வணங்குகின்றனர். அதே போன்றே கடவுள் இல்லை எனக் கூறும் நாத்திகவாதிகளான தங்களைப் போன்றவர்களும் மனிதர்களை வணங்குகின்றனர். இது எவ்வகையில் அறிவார்ந்த செயல் என்பதை சற்றி விளக்க முடியுமா?
அறிவு ரீதியாக தங்களைப் போன்றவர்கள் சிந்திப்பர் என்பதனாலேயே தங்களிடம் பதிலாக இக்கேள்வி வைக்கப்பட்டது. அல்லாமல் தங்களின் கேள்விக்கு எதிர் கேள்வி கேட்கவேண்டும் என்பதற்காகவோ, அல்லது தங்களை வருத்தப்படுத்தும் நோக்கிலோ அல்ல. ஒரு தவறு கண்ட பொழுது எவ்வாறு தாங்கள் இங்கு "முபாஹலா" குறித்த கேள்வியை எழுப்பினீர்களோ, அதே போன்றே சிந்திக்க வேண்டும் என்ற நோக்கில் இக்கேள்வியை தங்கள் முன் வைக்கின்றேன். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
நன்றி
அபு ஃபாத்திமா
No comments:
Post a Comment