16.6.2007 சனிக்கிழமை பீஜே குறிப்பிட்ட இடத்தில், நேரத்தில் டிஎன்டிஜே முன்னால் கடலூர் முன்னால் மாவட்ட நிர்வாகிகளாகிய எட்டு நபர்களும், நாங்கள் முபாஹலாவுக்கு குடும்பத்துடன் ஆஜரானோம்.
முபாஹலாவில் எதாவது காரணம் கூறி பிரச்சினை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களின் தரப்பு நடுவர் கோவை ஜாப்பர் பல வழிமுறைகளை ஆயத்தங்களை செய்தார்;.
அவற்றுக்கு நாம் சரியான பதிலடி கொடுத்து முபாஹலா நடைப்பெற்றே தீர வேண்டும் என்பதில் குறியாய் இருந்தோம.;
அல்லாஹ்வின் நாட்டபபடி முபாஹலா நடந்து முடிந்தது.
முபாஹலாவிற்கு காரணமான முன்னர் நாம் கூறி இருந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் எடுத்து வைத்து முபாஹலா செய்தோம்.
பீஜேயோ முபாஹலாவுக்கு காரணம் இல்லாத எங்கள் சொந்த தொழில் பிரச்சினைகளை எடுத்து வைத்து முபாஹலா செய்தார்.
இதற்கு முதல் நாளும், அன்றும் நமக்கு நடுவராய் இருந்த யூசுப் அவர்கள், அவரின் வெளிநாட்டு சகோதரர்கள் பலர் இந்த முபாஹலா நெல்லிக்குப்பததில் வேண்டாம் முடிந்தால் சமாதானம் செய்யுங்கள் என்றார்களாம்.
அதனால் யூசுப் அவர்கள் எங்களிடம் விசயத்தை சொன்னார் அது தங்களின் தனி விருப்பம் என்று சொல்லிவிட்டோம்.
யூசுப் அவர்கள் கோவை ஜாபரை தொடர்புக்கொண்டு பேசி இருக்கிறார் கோவை ஜாபர் பீஜே யை கலந்துக்கொண்டு தொடர்புக்கொள்வதாக சொல்லி பிறகு யூசுபை கோவை ஜாபர் தொடர்புக்கொண்டிருக்கிறார்,
நெல்லிக்குப்பம் பள்ளிவாசலையும், ஆம்புலன்ஸையும் டீஎன்டிஜே யிடம் அவர்களை தாங்கள் ஒப்படைக்க சொன்னால் முபாஹலாவை ரத்து செய்து விடலாம் என்று கூறி இருக்கிறார்.
அவவிசயத்தை யூசுப் நம்மிடம் கூறியபோது நாங்கள் அனைவரும் ஒருமித்து முபாஹலாவிற்கு எதையும் பினையாக ஆக்க நாங்கள் சம்மதிக்க மாட்டோம் பீஜே கூறிய அனைத்தையும் வாபஸ் பெற்றால் தான்; முபாஹலாவை ரத்து செய்ய முடியும் என்று கூறிவிட்டோம்.
அதையும் யூசுப், கோவை ஜாபரிடம் கூறி இருக்கிறார். அதற்கு கோவை ஜாபர் மறுத்திருக்கிகிறார்.
இதுதான் நடந்த உண்மையான விசயம்;.
இதற்கு மாறாக டிஎன்டிஜே வெப்சைட்டில் வழக்கப்படி எழுதியுள்ளார்கள். எல்லாவற்றையும் வல்ல அல்லாஹ் நன்கறிந்தவன்.
இவன்
ஐக்கிய தவ்ஹீத் ஜமாத்
கடலூர்
2 comments:
அன்பர்களே!,
எல்லாம் வல்ல இறைவன் , இந்த இருவரில் யார் பொய்யர் என்பதை விரைவில் நமக்கு தெரியப்படுத்துவானாக.
அன்புடன்,
Dr.AbuBenAdam
o brothers dont fight among yourself
Post a Comment