Thursday, March 08, 2007

டெல்லியில் தமிழக முஸ்லிம்கள் போராட்டம்!! TMMK RALLY

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், டெல்லியில் பேரணி


டெல்லி சென்ற முஸ்லிம்களின் ஒரு பகுதி

தமுமுக வின் டெல்லி பேரணி மற்றும் அதில் தலைவர்கள் ஆற்றிய உரையை பார்ப்பதற்கு இங்கு சொடுக்கி தமுமுக வின் இணையத் தளம் செல்லவும் அங்கு மிகத் தெளிவாக் இதன் வீடியோக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.


புதுடெல்லி, மார்ச்.8-

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

பேரணி

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற 13 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது.

காலை 10 மணிக்கு ராமலீலா மைதானத்தில் தொடங்கிய பேரணி, பாராளுமன்றத்தை நோக்கி வந்தது. இந்த பேரணியை பாராளுமன்ற தெருவில் உள்ள போலீஸ் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு பேரணியில் பங்கேற்ற தொண்டர்களிடையே பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் உரையாற்றினார்கள்.

பிருந்தா கரத்

பேரணியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் முன்னேற்ற கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தவிர, டெல்லி மற்றும் அண்டை மாநில முஸ்லிம் அமைப்புகளும் பேரணியில் திரளாக கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் தங்கள் உரையில் வலியுறுத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பலர் உரையாற்றினர்.

சோனியாவை சந்திப்போம்

பேரணியில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. மற்றும் இடதுசாரிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியும், அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன்சிங், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து தீர்மான அறிக்கையை அளிக்க உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

நன்றி : தினத்தந்தி

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

No comments: