
கீழக்கரை: வரதட்சணை கேட்பவர்கள் துரோகிகள் என்று ஹசன் அலி எம்.எல்.ஏ., ஆவேசமாக பேசினார்.
கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. ஹசன் அலி எம்.எல்.ஏ., தலைமை வகித் தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். திருச்சி சேவாதள் தலைவர் கமலா பண்டாரி, கல்லூரி தாளாளர் ரகுமத்துன்னிஸ்ஸா, சென்னை சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் புகாரி, பெண்கள் கல்வி நிறுவனங் களின் இயக்குனர் ஷெரிபா அஜீஸ் ஆகியோர் பேசினர்.
ஹசன் அலி எம்.எல்.ஏ., பேசுகையில், "வரதட்சணை கேட்ப வர்கள் மத துரோகிகள். இவர் களை கல்லால் அடிக்க வேண்டும். வரதட்சணை கேட் பவர்களுக்கு எமது வளைகுடா நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கொடுப்பது நிறுத்தப் பட்டுள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்
இஸ்லாம் , காரைக்குடி
No comments:
Post a Comment