முகவை MNP யினர் நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்
முகவை மாவட்ட மனித நீதிப் பாசறையினர் கீழக்கரை யூசுப் சுலைஹா மருத்துவமனையினரோடும் முகவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இனைந்து முகவை மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் கடந்த 24.02.2007 அன்று இலவச கண் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினர்.
இம்முகாமிற்கு பிரபல கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஆர். முத்துச்சாமி M.B.B.S., D.O., யூசுப் சுலைஹா மருத்துவமனை, அவர்கள் வந்திருந்து சிகிச்சை அளித்தார்கள். கண்ணில் நீர் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், மாறு கண், சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் பாதிப்பு, நீர்ப்பை அடைப்பு, கண்களில் உள்ள புரை போன்ற கண் சம்பந்தமான அணைத்து வியாதிகளுக்கும் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்க்கொள்ளப்பட்டது.
இம்மருத்துவ முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் கிளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். இம்முகாமில் நூற்றுக் கணக்கான சிகிச்சை பெற வசதி இல்லாத ஏழை மக்கள் சிகிச்சை பெற்று சென்றனர். அத்துடன் அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ள முக்கிய நோயாளிகள் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த நாள் 25.02.2007 அன்று கீழக்கரை யூசுப் சுலைஹா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கீழக்கரை யூசுப் சுலைஹா மருத்துவமனை நிர்வாகம் தங்கும் இடம், உணவு, அறுவை சிகிச்சை, IOL லென்ஸ், மருந்துகள், சசிகிச்சையின் பின்னர் வீடு திரும்ப பயன ஏற்பாடு முதலியவற்றை இலவசமாகவே செய்திருந்தனர்.
பெரியபட்டினம் என்ற இந்த கிராமத்தை சேர்ந்த ஏழை மக்களும் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பலன் பெற்றனர்.
இம்மருத்துவ முகாம் சீரக நடப்பதற்கான ஏற்பாடுகளை பல வகைகளிலும் முகவை மூவட்ட மனித நீதிப் பாசறையினருடன் இணைந்து கீழக்கரை யூசுப் சுலைஹா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர். செய்யது அப்துல் காதர் M.B.B.S., FCCP., GMC (LON) அவர்களும், டாக்டர். N.S.லலிதா ராஜ குமாரி M.B.B.S , இணை இயக்குனர், நலப்பணிகள், அரசு தலைமை மருத்துவமனை, இராமநாதபுரம் அவர்களும் திரு. R. கிர்லேஷ் குமார் I.A.S மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
காரைக்குடி, இஸ்லாம்
No comments:
Post a Comment