Tuesday, November 14, 2006

சமூக அவலங்கள்?


இந்த சமூக அவலத்திற்கு காரணம் என்ன? இது போன்ற அவலங்களை கலைவதற்கு நமது சமுதாயத்தலைவர்கள் சிந்திப்பார்களா?

குழந்தையுடன் அக்தர் பேகம்

"கண்ணிலே நீர் எதற்கு? காலமெல்லாம் அழுவதற்கு" சென்னை பெண்களின் உருக்கமான வாழ்க்கை தினமும் கணவரின் செக்ஸ் தொல்லை, அடி-உதை கதறுகிறார் 17 வயது அக்தர் பேகம்!!

சென்னை, நவ. 8 : காதலியை ஏமாற்றினால் தண்டனை, மனைவி யதிட்டினால் ஜெயில், வரதட்சினை கேட்டால் அப்பா அம்மாவுடன் கம்பி எண்ண வேன்டும் என்று ஆண்களை எச்சரித்து வைக்க எத்தனையோ சட்டங்களை அரசாங்கம் அமல்படுத்தி கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் பெண்கள் வசந்த காலத்தை காண முடியாமல் தவித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அவர்களுடைய சோக கதையை கேட்கும்பூது இது போன்ற கொடுமைகளுக்கு விடிவு காலம் வராதா என்று நம் மனது ஏங்குகிறது. தங்களுக்கு நியாயம் கேட்டு அவாகள் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தின் கதவுகளை தட்டத் தொடங்கி இருக்கிறார்கள்.

பெண்கள் சந்திக்கும் கொடுமைகள்

சென்னை போலிஸ் கமிஷனர் தினமும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார். அவர் சந்திக்காத நாட்களில் தலைமையக துனை கமிஷனர் பொது மக்களிடம் மனுக்களை வாங்குகிறார். முன்பெல்லாம் பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து போலீஸில் புகார் சொல்ல அச்சப்படுவார்கள், ஆனால் இப்போது பெண்கள் தைரியமாக வந்து போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனுக்களை கொடுக்கின்றனர்.

கைப்பிடித்த கணவனுக்கு எதிராகவும், ஆசைக்காட்டி காதலனுக்கு எதிராகவும் புகார் கொடுக்க பெண்கள் தயக்கம் காட்டுவதில்லை. துணிச்சலாக வந்து குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசுகிறார்கள். தினமும் 15 பெண்களுக்கு மேல் கமிஷனரை சந்தித்து தங்கள் மனக்குறைகளை தெரிவித்து நியாயம் கேட்கின்றனர். நேற்று புகார் கொடுக்க வந்த பெண்களில் 3 இளம்பெண்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுக்கள் வித்தியாசமாக இருந்தன.

தனது கணவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை ஆவேசமாக கூறி அவரை ஜெயிலில் தள்ள வேண்டுமென கூறி போர்க்கொடியும் தூக்கியுள்ளார்.

அந்த பெண்ணின் பெயர் அக்தர் பேகம் (வயது 17) திருமண வயதை கூட எட்டாத அக்தர் பேகத்தின் கண்ணீர் கதை கேட்போர் நெஞ்சத்தை உருக்குவதாக உள்ளது. நேற்று அவர் தனது 2 மாத கைக்குழந்தையோடு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். பள்ளிக்கு புத்தகத்தை சுமந்து செல்ல வேண்டிய வயதில் கையில் குழந்தையை சுமந்து வந்து கமிஷனரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது :

நான் ராயப்பேட்டை அமீர்மஹால் பகுதியில் வசிக்கிறேன், எனது கணவர் பெயர் முகம்மது யூசுப், எனக்கு திருமணம் நடந்தது எனது விருப்பத்திற்கு மாறாக நடந்த சோக சம்பவம் ஆகும். நான் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். திருமணம் என்பதை நான் அப்போது நிணைத்துக் கூட பார்க்க வில்லை. இந்த நேரத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள எங்கள் உறவினர் ஒருவரது வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டேன். அந்த விருந்து நிகழ்ச்சி தான் எனது வாழக்கையை தடம்புரள வைத்து விட்டது. எனது கணவர் முகம்மது யூசுப் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். என்னைப் பார்த்த உடனே தனது பெற்றோரிடம் போய் என்னைத்தான் திருமணம் செய்வேன் என்று அடம் பிடித்திருக்கிறார்.

வற்புறுத்தி திருமணம்

உடனே அவரது பெற்றோர்கள் வந்து பெண் கேட்டனர், ஆனால் எனது பெற்றோர் அவளுக்கு 16 வயது தான் ஆகிறது படித்துக் கொண்டிருக்கிறாள், இப்பூது அவளை திருமணம் செய்து தர இயலாது என்று கூறிவிட்டனர். ஆனால் என் கணவரோ என்னைத் திருமணம் செய்து கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்று 2 நாட்கள் எங்கள் வீட்டு முன்பு உட்கார்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். நான் அவரில்லை என்று வசனம் பேசினார். ராணி போல வைத்து என்னை காப்பாற்றுவதாக கதை விட்டார். தொடாந்து என்னை படிக்க வைப்பதாகவும் பெற்றோரிடம் உறுதி கூறினார். இதையெல்லாம் உண்மை என்று நம்பிய எனது பெற்றோர் முகம்மது யூசுப்புக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். எனது கணவர் மைதா மாவு மொத்த வியாபாரம் செய்து வந்தார். திருமணத்தின் போது எனது பெற்றோர் 12 சவரன் நகைகளும் ரூ.25,000/- ரொக்கப் பணமும் கொடுத்தனர். என்னை ராணி போல வைத்து காப்பாற்றுவதாக கூறியவர், திருமணம் முடிந்த விறகு வேறு விதமாக நடந்து கொண்டார்.

தினமும் செக்ஸ் தொல்லை

திருமணம் நடந்தபோது குடும்ப வாழ்க்கை என்றால் என்ன என்று எனக்கு தெறியாது, ஆனால் அவரோ பச்ச மண் போல இருந்த என்னை செக்ஸ் தொல்லை கொடுத்து தினமும் அழ வைத்தார். தினமும் பகல் என்று கூட பாாக்காமல் நான்கைந்து முறை உரவு கொள்வார். என்னை படிக்க வைப்பதாக சென்னவர் படிக்க வைக்கவில்லை. மாறாக தினமும் என்னை கற்பழிப்பது போல பலாத்காரம் செய்து வயிற்றில் குழந்தையை கொடுத்தார். அவருடைய ஒரு பக்கம் மிகவும் மோஷமாக இருந்தது. மாந்திரீக வேலைகள் எல்லாம் செய்து வந்தார். நன்றாக இருந்த எனக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி முகத்தில் விபூதியை அதளித்து தினமும் அடித்து உதைத்து சித்திரவைதை செய்ய ஆரம்பித்தார். அவரது அடி-உதை தாங்காமல் நான் எனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டேன்.

குழந்தை பிறந்தது

திருமணமான பத்தே மாதத்தில் கடந்த ஆகஸ்ட்டு மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன். குழந்தையை பார்க்க எனது கணவர் வரவில்லை. பின்னர் எனது பெற்றோர் தான் எனது குழந்தைக்கு 3 சவரனில் தங்கச் சங்கிலி போட்டு என்னையும் என் குழந்தையையும் எனது கணவரிடம் கொண்டு விட்டனர். திருமணம் முடிந்த உடன் செக்ஸ் தொல்லை கொடுத்த அவர் குழந்தை பிறந்த உடன் வரதட்சினை கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். தாய்ப்பால் கொடுத்தால் எனது அழகு கெட்டு விடும் என்று கூறி தாய்ப்பால் கொடுக்க விடமாட்டார். குழந்தையை என்னிடம் தராமல் பிடுங்கி வைத்துக் கொள்வார்.

ரூ. 5 லட்சம் வேண்டும்

திடீரென்று ரூ. 5 லட்சம் பணம் உன் பெற்றோரிடம் வாங்கி வா என்று என்னை அடித்து உதைக்க ஆரம்பித்தார். நானும் இந்த மனித மிருகத்திடம் வாழ்வதை விட தனியாக வாழ்ந்து காட்டலாம் என்று குழந்தையை தூக்கிக்கொண்டு என் பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டேன். அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து விட்டோம். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு அவரிடம் இருந்து விடுதலை வாங்கித் தரும்படி வேண்டுகிறேன்.

இவ்வாறு அக்தர் பேகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அவரது கண்ணீருக்கு எப்படி பதில் கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

நன்றி : இந்த செய்தியை மின்னஞ்சலில் அனுப்பிய முகவை ரஃபீக்கிற்கு.

இஸ்லாம் முஸ்லிம் தமிழ் முஸ்லிம் வரதட்சினை அவலங்கள்

No comments: