Tuesday, October 03, 2006

Arab News-ஃபத்வா(?)வும் பீஜேவின் பித்தளாட்டங்களும்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

"அரப் நியூஸ் ஃபத்வா(?)"

பீஜே மற்றும் த.த.ஜ இணையத்தளத்தின் பித்தளாட்டங்கள்!


பீ.ஜே மற்றும் த.த.ஜ-வினர் தங்களின் அறிவீனத்தையும் சந்தர்ப்ப வாதத்தையும் கொள்கையற்ற நிலைப்பாட்டையும் தொடர்ந்து நிரூபித்து வருவது அறிவுடையோருக்கு தெரிந்த விஷயம்தான். அந்தத் தொடரில் இதனையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் அதிகாரப் பூர்வ இணையத்தளமாகிய tntj.net-ல் 20-09-2006 அன்று 'ரமளான் பிறை விஷயத்தில் ஸவூதியை பின்பற்றத் தேவையில்லை! சவூதி பத்திரிக்கை ஃபத்வா' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது! இதே செய்தியை பீ.ஜே தனது தனிப்பட்ட இணையத்தளமான onlinepj.com-யிலும் வெளியிட்டிருந்தார். இந்தச் செய்தி இரண்டு இணையத்தளங்களிலும் ஃபிளாஸ் நியூஸில் ஓடிக் கொண்டிருந்தன.

பீ.ஜே மற்றும் த.த.ஜவின் தகிடுதத்தங்களையும் அவர்களின் அறிவீனத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் அறிந்திருந்த சகோதரர்களுக்கு, இவர்கள் வெளியிட்ட இந்த ஃபத்வா?! எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பீஜேயின் சந்தர்ப்பவாத பட்டியலில் ஆயிரத்தில், இதனையும் இணைத்து ஆயிரத்தி ஒன்றாக ஆக்கிக் கொண்டனர். அவ்வளவுதான்!

ஆனால் இவர்களின் வேடங்களை அறியாமல், பல பொய் முகங்களை புரியாமல், இவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டிருந்த, மார்க்க நலன் நாடும் சுயசிந்தனையுள்ள சகோதரர்கள் 'அரப் நியூஸ் ஃபத்வா(?) வெளியீடு' மூலமாக பீ.ஜே மற்றும் த.த.ஜவின் அறியாமையை நன்கு அடையாளம் கண்டு கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்! அதற்காக ஃபத்வா(?) வெளியீட்டாளருக்கு நன்றி கூறிக் கொள்ளலாம்.

பித்தளாட்டம்: 1

ஸாலிம் (ரலி) அவர்களுக்கு பால் கொடுக்கும் விஷயத்தில் ஸஹ்லா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வழங்கிய ஃபத்வாவையே ஏற்க மறுத்த பீஜே, அரப் நியூஸின் ஆதில் ஸலாஹி என்பவரின் கேள்வி-பதிலை ஃபத்வாவாக? எப்படி ஏற்றார்?! என்றெல்லாம் வியக்கத் தேவையில்லை. தன் நிலைபாட்டிற்கு மாற்றமாக அல்லாஹ்வே சொன்னாலும் அதனை மறுப்பார்! தனக்குச் சாதகமாக ஷைத்தான் சொன்னாலும் அதனை சத்தியம் என்று ஏற்பார்! இதுதான் அவரின் உண்மை முகம் என்பதை அவரைப் பற்றி தெரிந்தவர்களுக்குத் நன்கு விளங்கும்! (அல்குர்ஆன் தர்ஜுமா மற்றும் விரிவுரையில் செய்துள்ள கையாடல்களையும் ஜேயுடன் கூடிய அரசியல் நிலைபாட்டையும் சிறந்த உதாரணமாகக் கூறலாம்)

பித்தளாட்டம்: 2

ஸவூதியில் வெளியாகும் அரப் நியூஸ் எனும் ஆங்கில நாளேட்டில் இடம் பெற்றுள்ள கேள்வி-பதிலை ''சவூதி பத்திரிக்கை ஃபத்வா'' என்று கூறி பீ.ஜே மற்றும் த.த.ஜவினர் தங்களின் அறியாமையை நிரூபித்துள்ளனர். சவூதி அரேபியா அரசு வழங்கும் மார்க்கத் தீர்ப்பான "ஃபத்வா"விற்கும் நாளேடுகள், வார, மாத இதழ்கள் ஆகியவற்றில் வெளியிடப்படும் பதில்களுக்கும் வித்தியாசம் தெரியாத அறிவீனர்கள் இவர்கள், என்றெல்லாம் த.த.ஜ பக்த கோடிகள் சிந்திக்கப் போவதில்லைதானே! அதனால் எதை ஃபத்வா என்று கூறினாலும் அதற்கு ஜேஜே போட்டுக் கொள்வார்கள்.

பித்தளாட்டம்: 3

அரப் நியூஸ் பத்திரிக்கையை தொடர்ந்து படித்துவரும், மார்க்க அறிஞர்கள் இல்லாத, சாதாரண சகோதரர்கள் கூட அரப் நியூஸின் கேள்வி-பதிலை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம், அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தரும் ஆதில் ஸலாஹி என்பவர் மத்ஹபுகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று உரத்துக் கூறும் முகல்லிது. மத்ஹபை பின்பற்றுவது தொடர்பாக அவர் எழுதிய பதில்களை தொகுத்து, மொழியாக்கம் செய்து, ஒவ்வொரு முஸ்லிமும் ஏதேனும் மத்ஹபை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று தமிழில் நூலாக வெளியிடப்பட்ட தகவல் 'உலக மகா மா மேதைகளுக்கு?!' தெரியாமல் போனது ஏனோ?! கிணற்றுத் தவளைகளுக்கு வழிகாட்டுவோர் பக்த கோடிகளில் யாரும் இல்லையா?!

பித்தளாட்டம்: 4

ஒரு வாதத்திற்காக இதனை நாம் ஸவூதி அரசாங்கத்தின் ஃபத்வா என்றே எடுத்துக் கொண்டாலும் அதில் இந்த த.த.ஜ கும்பலுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இவர்கள் பார்வையில் ஸவூதிகள் எல்லாம் ஸலஃபிகள்! ஸலஃபிகள் எல்லாம் வழிகேடர்கள்? பிறகு அவர்களின் பத்திரிக்கையில் வெளியான ஃபத்வா?! மட்டும் ஏன் இவர்களுக்கு இனிக்கிறது?! இவர்களின் சந்தர்ப்ப வாதத்திற்கு அளவே இல்லையா?

அம்மாவை சந்திக்கச் சென்றதிலும் சுனாமி, ஃபித்ரா கணக்குக் காட்டும் பூச்சாண்டியிலும்தான் 'குராபி தவ்ஹீது' கூட்டணி அமைத்தீர்கள்! அதில் உங்கள் உறுதியான சந்தர்ப்பவாத கொள்கையை உலகிற்கு உணர்த்தினீர்கள்! மார்க்க விஷயத்திலும் இதுதான் உங்கள் நிலைபாடா?! சுய சிந்தனையை இழந்த முரீதுகள் இருக்கும் வரை எந்த நிலைபாட்டை எடுத்தால் என்ன? அனைத்திற்கும் 'அல்லாஹு அக்பர்' கோஷம்தான்!

பித்தளாட்டம்: 5

'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பர். ஒரு இயக்கத்தவரை எதிர்க்க வேண்டும் என்ற வெறி பிடித்து அலையும் இவர்களுக்கு, 'அரப் நியூஸ்' தகவலை யாரோ கொடுத்து விட்டார்கள். உடனே எதிரணியினரை வீழ்த்தி சாதனை படைத்துவிட வேண்டும்! என்று தங்கள் இணைய தளங்களில் ஃபிளாஸ் நியூஸில் 20-09-2006 அன்று போட்டுவிட்டார்கள்.

அரப் நியூஸ் கேள்வி-பதில் மற்றும் ஆதில் ஸலாஹி என்பவரைப் பற்றிய தங்களுடைய மடமையும் அறிவீனமும் பிறகுதான் தெரிய வந்திருக்கிறது. எனவே அதன் பாதிப்புகளை இவர்களும் இவர்களின் பக்த கோடிகளும் சந்திக்க வேண்டிவரும்! எனவே விமர்சனங்களிலிருந்து தங்களையும் தங்களின் முரீதுகளையும் காப்பாற்றியாகவேண்டுமே! என்று பரதவித்த தானைத் தலைவர்கள் வழக்கம் போல செய்தியை திசைதிருப்ப திட்டமிட்டுள்ளனர். அதன் திட்டம் பீஜேஆன்லைன்-ல் செயலுக்கு வந்தது.

'ரமளான் பிறை விஷயம்! சவூதி அரசாங்க முஃப்தீ ஃபத்வா!' என்று ஃபிளாஸ் நியூஸ் மாறுகிறது. 'ஜாக் அமைப்பின் ரமளான் தொடர்பான சுற்றறிக்கையும் சவூதி ஃபத்வாக்களும்' என்று தலைப்பும் மாறுகிறது. அதில்,

- திடீரென 'ஜாக்' அமைப்பை வம்புக்கு இழுத்துள்ளனர்.

- பிறகு ஸவூதி அரசாங்க தலைமை முஃப்தியாக பணியாற்றிய மதிப்பிற்குரிய ஷேக் பின் பாஸ் அவர்களின் ஃபத்வாவை வெளியிட்டுள்ளனர்.

- பிறகு 'ஜாக்' அமைப்பு சவூதி அரசாங்கத்திற்கு மாற்றமாக செயல்படுகிறது! அவர்களை யாரேனும் சவூதி அரசுக்கு காட்டிக் கொடுக்கமாட்டீர்களா? என்ற புனித கோரிக்கையை? முன்வைத்துள்ளது பீஜே இணையத்தளம்.

- பிறகு அரப் நியூஸ் பதிலை இணைத்து ஃபத்வா?!வாக மாற்றியுள்ளது.

இதற்குக் காரணம், தனது அறிவீனத்தால் அவசரப்பட்டு வெளியிட்டுவிட்ட அரப் நியூஸ் ஃபத்வா?விலிருந்து மக்களை திசை திருப்ப வேண்டும், அதனை மறக்கடிக்க வேண்டும்! அதில் எழும் ஆக்கப் பூர்வமான விமர்சனங்களுக்கு முன் தானோ, தனது பக்த கோடிகளோ கொட்டு வாங்கக் கூடாது என்பதற்குத்தான் இத்தனை தந்திரங்கள்! தகிடுதத்தங்கள்!

உண்மையில் இவர்கள் 'ஜாக்' அமைப்பைத் தான் வம்புக்கு இழுக்க நினைத்துள்ளார்கள் என்றால், அரப் நியூஸ் ஃபத்வா(?)வை tntj.net-ல் வெளியிடும் போதே 'ஜாக்'கின் சுற்றறிக்கையையும் விமர்சனத்தையும் ஏன் வெளியிடவில்லை?!

ஒரு பத்திரிக்கையின் பதிலைவிட, ஸவூதி அரசாங்க தலைமை முஃப்தியின் ஃபத்வா அதிக மதிப்பிற்குரியது என்ற சிற்றறிவு கூடவா இவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது? இந்த அறிவு இருந்திருந்தால், அரப் நியூஸின் கேள்வி பதிலை, சவூதி அரசின் ஃபத்வா என்று கூறி, பொதுமக்களின் ஏளனத்திற்கு ஆளாவதற்கு பதிலாக ஷேக் பின் பாஸ் அவர்களின் ஃபத்வாவை முன்கூட்டியே வெளியிட்டிருந்திருக்கலாமே!? ஏன் வெளியிடவில்லை?

எனவே பீஜேஆன்லைன் உடைய புதிய இணைப்புகளின் காரணம், தமது அறியாமையை மக்கள் புரிந்து கொள்ளாமல் திசை திருப்புவதற்காகத்தான் என்பதை இவை அனைத்தும் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. அக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகள் அவர்களின் பதட்டத்தையும் பரதவிப்பையும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

பீஜே மற்றும் த.த.ஜ வின் இணையத்தளத்தினர் இவ்வளவு கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. காரணம் பக்த கோடிகள் இவ்வளவு ஆழமாகவெல்லாம் சிந்திக்க மாட்டார்கள்! ஏமாற்றும் வெற்றி உமதே!

பித்தளாட்டம்: 6

மேலும் இதில் பீஜேஆன்லைன் செய்துள்ள மற்றொரு முக்கியமான இணையதள மோசடியை கவனியுங்கள்! அதில் வெளியிடப்பட்டுள்ள ஷேக் பின் பாஸ் அவர்களின் ஃபத்வா பீ.ஜே-யால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது கிடையாது. ஜித்தா இஸ்லாமிய அழைப்பகத்தில் பணியாற்றிவரும் சகோதரர் முஜீபுர் ரஹ்மான் உமரீ அவர்கள் சுமார் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 'ஜாக்' தலைவர் எஸ். கமாலுத்தீன் மதனீ அவர்களுக்கும் பீஜேயிக்கும் அனுப்பிய பேக்ஸ் நகல்தான் அது! பேக்ஸ் நகலின் காரணமாக சில எழுத்துக்கள் அழிந்திருப்பதை காணலாம். அதன் அசல் பிரதியை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. (ஃபத்வா அசல் பிரதி download(1), download(2))

பிறரின் கட்டுரையை பீ,ஜே தனது கண்டுபிடிப்பாக தனது தளத்தில் போட்டுக் கொண்டார். பிறர் செய்திகளை தனது செய்திகளாச் சொல்வதில் வல்லவர் என்பது அவரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்!

பித்தளாட்டம்: 7

ஒருவன் பொய்யன் என்பதற்கு 'அவனிடையே ஏற்படும் முரண்பாடுகள்தான் மிக முக்கிய அடையாளம்' என்று பீஜே 19 பைத்தியங்கள் என்ற உரையில் குறிப்பிடுகிறார். அந்த வலையில் பீஜேயே இங்கு சிக்கிக் கொள்கிறார். அரப் நியூஸ் ஃபத்வா? தொடர்பாக பள்ளத்தில் விழுந்தவர், அதிலிருந்து தப்பிப்பதற்காக அதிலேயே மீண்டும் பள்ளம் தோண்டுவது போல், ஆதில் ஸலாஹியிடமிருந்து ஷேக் பின் பாஸ் அவர்களிடம் தாவுகிறார். இலங்கையில் இஸ்லாம் உங்கள் மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஷேக் பின் பாஸ் அவர்களையும் அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வந்த -கிபாருல் உலமா- பேரரிஞர் சபையையும் இழிவாக, கேளி செய்துள்ளார் பீஜே. பின் பாஸ் என்பவர் உலகம் தட்டை என்கிறார்! என்று கூறி ஏளனம் செய்த பீஜே, (இலங்கை கிளிப் / Download) இன்று பிறை விஷயத்தில் ஷேக் பின் பாஸ் அவர்களையும் கிபாருல் உலமா சபையின் கூற்றையும் எடுத்துக் கூறுவது அறிவீனம் இல்லையா? உலகமே உருண்டை என்று தெரியாதவர் பிறை விஷயத்தில் எப்படி சரியான தீர்ப்பைக் கூறியிருக்க முடியும்? குர்ஆன் சுன்னாவிற்கு மொத்த குத்தகை எடுத்திருக்கும் பீஜே உலகம் தெரியாத ஒருவரின் தீர்ப்பை எப்படி மக்களுக்குக் கொடுக்கலாம்? இது அநீதமில்லையா?

பித்தளாட்டம்: 8

தங்களை எதிர்ப்பவர்களை அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுப்பதற்கும் கருவறுப்பதற்கும் தயங்காத கல் நெஞ்சக்காரர்கள்தான் இந்த பீ.ஜே, த.த.ஜ இணையதளத்தினர் என்பதை இந்த கட்டுரையின் வாயிலாக தற்போது பதிவு செய்துள்ளார்கள்.

இவர்களின் மார்க்க விரோத முடிவை யாராவது சவூதி அரசின் கவணத்துக்கு கொண்டு வருவது
நல்லது.

மேற்கண்டவாறு எழுதியுள்ள உலகமகா சக்தி வாய்ந்த, மக்கள் பேரியக்கம் என்று தம்பட்டம் அடிக்கும் த.த.ஜ கும்பல், 'ஜாக்' என்ற இயக்கத்தை சவூதி அரசிடம் காட்டிக் கொடுக்க ஏன் பிறரிடம் உதவிப் பிச்சை கேட்கவேண்டும்! அவர்களுடைய சக்தியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி நேரடியாக சவூதி மன்னரிடமே முறையிட வேண்டியதுதானே! சவூதி மன்னரிடம் பீஜே ஆறு மணி நேரம் போனில் பேசினார்! என்று கூறினாலும் முரீதுகள் நம்பாமலா போய்விடுவார்கள்?! அதையும் நோட்டீஸ் அடித்து வினியோகிக்கத்தான் போகிறார்கள்!

நிலைமை இவ்வாறிருக்க, நேரடியாக காட்டிக் கொடுக்க தயங்குவதின் காரணம் என்ன? சவூதி அரசின் மார்க்க நிர்வாகத்தினர் தன்னையும் தனது தூய(?) ஏகத்துவ கொள்கையையும் அறிந்து கொண்டால் தனது பருப்பு அவர்களிடம் வேகாது என்ற காரணத்தினால்தான் தயங்குகிறார்களோ என்னவோ?! இத்தனை ஆயிரம் மக்களை திசை திருப்ப முடிந்த உங்களுக்கு சில மார்க்க அறிஞர்களை ஏமாற்ற முடியாதா என்ன?!

எனவே, த.த.ஜ விற்கு தைரியம் இருந்தால் தனது லெட்டர் பேர்டில் 'ஜாக்' பற்றி புகார் எழுதி அதனை சவூதிக்கு அனுப்பட்டும்! அதனை தனது இணைத்தளங்களிலும் வெளியிடட்டும்! அப்பொழுதாவது உங்களை யாரென அடையாளங்காட்ட 'ஜாக்' நிறுவனத்தினர் முன்வருகிறார்களா என்று பார்ப்போம்! வெளிப்படையாகவே தனக்கு எதிராக போர்பிரகடனம் செய்யும் இவர்களை சவூதி அரசிடமும், பிற அரபு நாடுகளின் இஸ்லாமிய நிறுவனத்திடமும் அடையாளம் காட்டாமல் 'ஜாக்' நிர்வாகம் எவ்வளவு காலங்கள் மௌனம் சாதிக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

பித்தலாட்டம் : 9

'ஜாக்' இயக்கம் அல்குர்ஆன் ஹதீஸுடன் மூன்றாவது ஆதாரமாக ஸஹாபாக்களையும் பின்பற்றுகிறார்கள். இதுதான் ஸவூதி அரசாங்கத்தின் ஸலஃபிக் கொள்கை. எனவே அவர்களின் கொள்கையைத்தான் இவர்கள் வாந்தி எடுப்பார்கள்! இவர்கள் ஸவூதி அரசாங்க ஊழியர் என்பதால்தான் ஸவூதி பிறையைத்தான் பின்பற்றவேண்டும் என்கிறார்கள்! என்றெல்லாம் ஊர் ஊராக, நாடு நாடாக கூவி அழைந்தார் பீஜே! இலங்கையில் நடந்த இஸ்லாம் உங்கள் மார்க்கம் நிகழ்ச்சியில் 'சவூதியில் பணம் வாங்குபவர்கள் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிவாயில் கட்டுவதற்காக அழைகின்றார்கள்' என்று போடியத்தைச் சுற்றி தன்னால் முடிந்தவரை டான்ஸ் ஆடிக் காட்டினார்.

ஆனால் இன்று அவர் தனது இணைய தளத்திலேயே 'ஜாக்' நிறுவனம் ஸவூதி அரசுக்கு மாறு செய்கிறது! எனவே இதனை யாரேனும் ஸவூதி அரசுக்கு தெரியப்படுத்த மாட்டார்களா? என்று கொக்கரித்து வழமைபோல் தனது முரண்பாட்டை நிலைநாட்டியுள்ளார். 'ஜாக்' அமைப்பினர் ஸவூதிக்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை என்று அவர் கூற்றுக்கு முரணாக அவர் வாயிலிருந்தே முத்துக்கள் உதிர்ந்து விட்டனவே! இவ்வாறு இழிவடைவது அவருக்கு தேவைதானா??

சமீபத்தில் மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் 'ஜாக்' அமைப்பினருக்கு வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கில் ஹவாலாவில் பணம் வருகிறது! என்று வழக்கம்போல் உளவுத்துறைக்கு தகவல் தந்தார். அதற்கடுத்த ஓரிரு நாட்களில் 'ஜாக்' அமைப்பினர் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, 'இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி இல்லாததால் இந்திய அரசை ஏமாற்றுவது கூடும் என்றும் ஹவாலாவில் பணம் பெறுவது கூடும்! என்று ஃபத்வா கொடுத்தவரே அண்ணன் பீஜேதான்!' பதிலடி கொடுத்தார்கள்! தவளை தன் வாயால் கெடும்! என்பார்கள்!

பித்தளாட்டம்: 10

'நாம் நமது நிலைபாட்டிற்கு ஆதாரமாக அரபு நியூஸ் ஃபத்வா?வையோ, பின் பாஸ் ஃபத்வாவையோ கூறவில்லை, மாறாக 'ஜாக்' அமைப்பினர் தங்களின் நிலைபாட்டிற்கு தாங்களே முரண்படுகின்றனர் என்பதற்காகத்தான் கூறினோம்' என்று தங்களுக்கே உரித்தான உயரிய நடையில் மலுப்பல் பதில் சொல்லி தம் சகாக்களை தக்கவைத்துக் கொள்ள த.த.ஜ கும்பல் முன்வரலாம். இதுவும் போலித்தனமான நிலைபாடுதான்!

காரணம், இன்று (02-10-2006) வரை த.த.ஜ தனது செய்தியாகத்தான் தனது ஆதாரப் பூர்வமான இணைய தளங்களில் பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக, tntj.net தளத்தில் அரப் நியூஸ் ஃபத்வா? மட்டும்தான் உள்ளது. 'ஜாக்' பற்றிய தகவல் அதில் இடம் பெறவே இல்லை. எனவே த.த.ஜ தனது நிலைபாட்டிற்கு சான்றாகத்தான் அரப் நியூஸ் ஃபத்வா?வை சமர்ப்பித்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இமாம்களின் கருத்துக்கள் வேண்டாம்! ஸஹாபாக்களின் கூற்றுக்கள் வேண்டாம்! தன் அறிவுக்கு புலப்படாத ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களும் வேண்டாம்! தன் நிலைபாட்டிற்கு ஒத்துவராத அல்குர்ஆன் வசனங்களுக்கு அதன் எதார்த்தப் பொருளும் வேண்டாம்! என்று மார்க்கத்தை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும் 'உலகமகா மூதறிஞர்' தற்போது ஆதில் ஸலாஹி என்ற ஒரு மத்ஹபு முகல்லிதின் பதிலை ஃபத்வா(?)வாக ஏற்று தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கின்றார் எனும் போது இது அவருடைய சரிவின் உச்ச கட்டம்தான்! பாவம்!

பித்தளாட்டம்: 11

த.த.ஜ கும்பல் முரண்பாட்டின் மொத்த உருவம் என்பதற்கு இதில் கூட மகத்தான சான்று உள்ளது. 'பிறர் மேடையில் மார்க்கப் பிரச்சாரம் செய்ய மாட்டோம்! எங்கள் கொள்கையை சாராதவர்களை எங்கள் மேடையில் ஏற்றவும் மாட்டோம்!' என்பது இவர்கள் தஃவா(?)வின் தாரக மந்திரம்! (ஆனால் அதில் இவர்கள் பொய்யர்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளது)

இந்த நிலைபாட்டிற்கு குர்ஆன் ஹதீஸிலிருந்து ஏதேனும் ஆதாரம் தாருங்கள்! என்றால் அதெல்லாம் அங்கே கிடைக்காது. அதுதான் தவ்ஹீதின் தூய வடிவம்(?), சரி அப்படியானால் அவர்கள் கூறும் காரணம்தான் என்ன?

"இது எங்கள் இயக்க நிலைபாடு! நாங்கள் மட்டும்தான் தூய முறையில்? மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம்! பிறர் மேடையில் நாங்கள் ஏறினாலோ, எங்கள் மேடையில் பிறரை ஏற்றினாலோ அவர்களுக்கு நாங்கள் அங்கீகாரம் கொடுத்ததாகிவிடும். எங்கள் மேடையில் அவர்களை ஏற்றியதால் அவர்களும் தூய வடிவில்தான் மார்க்கத்தை கூறுகிறார்கள்! என்று பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள், இதனால் அவர்களின் அசத்தியமும் சத்தியமாக மக்களை சென்றடைந்துவிடும். இதன் காரணத்தினால்தான் நாங்கள் எங்கள் மேடையில் பிறரை ஏற்றுவதில்லை, நாங்களும் பிறர் மேடையில் ஏறுவதுமில்லை!" இதுதான் அவர்கள் வாயிலிருந்து உதிரும் முத்துக்கள்!

இதனை அப்படியே ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால், இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்து கொள்ள ஓர் இணையத்தளம் என்றும், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் என்றும் குறிப்பிட்டுவிட்டு, அரப் நியூஸ் நாளிதழின் கேள்வி பதிலை ஃபத்வா?வாக பதிவு செய்துள்ளீர்களே! இப்போது அரப் நியூஸிற்கும் ஆதில் ஸலாஹி என்பவருக்கும் ஷேக் பின் பாஸ் அவர்களுக்கும் சவூதி ஃபத்வாவிற்கும் தங்களின் மேலான? அங்கீகாரம் கிடைத்ததாக ஆகாதா? ஏன்தான் இந்த முரண்பாடுகளோ??!

பித்தளாட்டம்: 12

ஒரு இயக்கத்தின் பிறை பற்றிய நிலைபாட்டை விமர்ச்சிக்கவும் அரசாங்கத்திடம் காட்டிக் கொடுக்கவும் பீஜே மற்றும் த.த.ஜ கும்பல் புறப்பட்டுள்ளது. பிறை தொடர்பாக இந்தக் கும்பலின் நிலைபாடு உலகறிந்த ரகசியம்! எதற்கெடுத்தாலும் விவாதம் என்று சவடால் விட்டுத் திரியும் இவர்கள், பிறை தொடர்பாக பல ஊர்களில் பலருடன் விவாதங்கள் நடத்தியுள்ளார்கள். இந்தக் கும்பலுக்கு தைரியமிருந்தால் அவர்கள் நடத்திய விவாதங்களை தங்களின் இணைய தளங்களில் வெளியிடட்டும்! அதில் அவர்களின் செய்துள்ள பித்தளாட்டங்களையும் திருட்டு எடிட்டிங்களையும் உலகிற்கு உணர்த்த அது வாய்ப்பாக அமையும்!

எடிட்டிங் செய்யப்படாத களியக்காவிளை விவாத சிடிகள் என்று த.த.ஜ சார்பில் வெளியிடப்பட்ட சிடிகளில் எத்தனை தகவல்கள் திருட்டுத் தனமாக எடிட்டிங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் பட்டியல் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். குராஃபிகளிடம் இருக்கும் உண்மையான நடத்தை கூட இந்தக் கும்பலிடம் இல்லை என்று காரித் துப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இவர்களின் பிறை விவாத சிடிகளும் இணையத்தில் வெளியிடப்பட்டால் இந்தக் கும்பலின் திருட்டு எடிட்டிங் திறமையை பொதுமக்கள் இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வசதியாக அமையும்.

இறுதியாக, இவர்களின் பேச்சிலும் எழுத்திலும் நடவடிக்கைகளிலும் நிலைபாட்டிலும் இதுபோன்ற எண்ணிலடங்கா முரண்பாடுகள்!. சிந்தனையாளர்கள் பலர் காலத்தின் மதிப்பு கருதி இவர்களை கண்டுகொள்வதில்லை, இவர்கள் விஷயத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்தக் கும்பல் அதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

"அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!" என்றோ, அல்குர்ஆன், ஹதீஸ் வாசகங்களைக் கொண்டோ இவர்களுக்கு உபதேசிப்பதற்கு தயக்கமாக உள்ளது, காரணம், அதனையும் கூட விமர்சனம் செய்யாமல் இந்தக் கும்பல் விட்டுவைக்காது.

யாஅல்லாஹ்! அறியாமல் இவர்களின் வலையில் சிக்கிக் கிடப்பவர்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக! அறிந்து கொண்டே மார்க்கத்தில் விளையாடுவோரை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவாயாக! அவர்கள் விஷயத்தில் நீயே போதுமானவன்!

- அப்துல்லாஹ்

8 comments:

muslimeen said...

BISMILLAHIRRAHUMANIRRAHEEM

LAST 20 YEARS QURAN HADHEES FOLLOWERS PRAY IN IFTHAR DUA IS DHAHA FALLAMAU....DUA.BUT NOW PJ SAID HIS WEBSITE THAT DUA IS LAEEF.THIS IS AN EXAMPLE OF HIS FAUL T OF RESEARCH.PJ REVISE MANY FATWAS.

Anonymous said...

அல்லாஹ்வின் அடிமை(அப்துல்லாஹ்) என உலாவும் ஷைத்தானின் அடிமைக்கு,
'Arab News- ஃத்வா (?)வும் பீஜேவின் பித்தளாட்டங்களும்'
என்று எழுத்துப்பிழையுடன் ஆரம்பித்த இந்த தமிழ் மேதாவியின் எழுத்துப்பிழைகளை முதலில் பட்டியலிட்டுவிட்டு விஷயத்திற்கு வருவோம்
'அக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகள் அவர்களின் பதட்டத்தையும் பரதவிப்பையும் மேலும் உறுதிப்படுத்துகின்றன.'
என்று மேலே பார்த்துத் துப்பிய இவர் தனது தலையங்கத்திலேயே எழுத்துப் பிழை விட்டிருப்பதைப் பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகிறது. Pது யின் முரண்பாடுகளை பட்டியலிட வந்த இவரின் தலையிலேயே குட்டிவிட்ட அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.எழுத்துப்பிழையை சுட்டிக்காட்ட இவர் சொன்ன வாசகத்திலேயே ('அக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகள் அவர்களின் பதட்டத்தையும் பரதவிப்பையும் மேலும் உறுதிப்படுத்துகின்றன') எழுத்துப் பிழையை வரவைத்து இவரை இழிவுபடுத்திய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இவர் செய்துள்ள வாசகத்தில் உள்ள எழுத்துப்பிழைகள்
தவறான வாசகம் சரியான வாசகம்தெரிந்தவர்களுக்குத் நன்கு விளங்கும் தெரிந்தவர்களுக்கு நன்கு விளங்கும்நிலைபாட்டையும் நிலைப்பாட்டையும்பரதவித்த தானைத் தலைவர்கள் யார் வீட்டுத் தமிழோ??காரித் துப்பும் காறித் துப்பும்செய்திகளாச் செய்திகளாகச்
(இன்னும் பல உண்டு )cont....

Anonymous said...

பிழையை சரியென நினைத்து விடுகின்ற எழுத்துப் பிழைகள் பதட்டத்தாலோ அல்லது பரிதவிப்பாலோ வருவதல்ல. நம்மை நாம் ஒரு போதும் தமிழ் பண்டிதர்களென்று தம்பட்டம் அடித்ததில்லை. எமது மார்க்கக் கருத்துக்களை பிறர் விளங்குமளவுக்கு தமிழ் தெரிவதே போதும் என நினைப்பவர்கள் நாங்கள். ஆனால் இவர் விடும் பிழைகளை திருத்துமளவுக்கு தமிழ் ஞானம் எமக்கு உண்டு என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
ஆனால் இவர் விட்டுள்ள எழுத்துப் பிழைகள் பதட்டத்தாலும் பரிதவிப்பாலும் வந்தவையே என்பதற்கு பின்வரும் எழுத்துப்பிழை ஆதாரமாக அமைகிறது.
'பித்தளாட்டம் : 1'என்று ஆரம்பித்து தொடர்ச்சியாக 8 வரை தமிழையே பித்தலாட்டமாக்கி திடீரென தமிழ் ஞானப்பால் குடித்ததுபோல் 'பித்தளாட்டம் : 9' என்று சரியாக எழுதிவிட்டார். பித்தலாட்டம் 10 முதல் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்.பித்தலாட்டத்தை பிழையாக, சரியாக, பிழையாக என்று மாறி மாறி எழுதியதிலிருந்து இவர் எந்தளவு பதட்டத்தோடும் பரிதவிப்போடும் உள்ளார் என்பது தெளிவு.இதுவும் மேலே பார்த்து உமிழ்ந்த கதைதான்.
இனி விஷயத்திற்கு வருவோம்

'ஸாலிம் (ரலி) அவர்களுக்கு பால் கொடுக்கும் விஷயத்தில் ஸஹ்லா(ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வழங்கிய ஃபத்வாவையே ஏற்க மறுத்த பீஜே'

என்று பித்தலாட்டம் 1 இல் எத்தனையோ தடவைகள் பதிலளிக்கப்பட்ட ஸாலிம்(ரலி) சம்பந்தமான ஹதீஸை மீண்டும், மீண்டும் சொல்வதிலிருந்து இந்த ஹதீஸை இவர்கள் நடைமுறைப் படுத்துகிறார்கள் என்றுதான் தெரிகிறது. இவரின் மனைவி, தாய், சகோதரிகள் எத்தனை இளைஞர்களுக்கு பால் கொடுத்து தாயாகி இருக்கிறார்களோ தெரியாது.
எங்கள் நாட்டிலும் இவர்களின் இதே கூட்டத்தைச் சேர்ந்த ஓரிரு ஸல(ஃப்)புகளும் தாயன்புக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து உங்கள் முகவரியைத் தந்தால் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். 'மாற்றான் மனைவியிடம்தான் நீங்கள் பாலருந்தத் தயார் என்றும், உங்கள் உறவினர்களை மற்றவர்களுக்கு பாலருந்த விடமாட்டீர்கள்' என்றும் மக்கள் தப்பாக எடைபோடாமல் இருக்கவாவது புனைப்பெயரிலும், ஊர் பேர் தெரியாத இணையத்தளங்களில் எழுதுவதை விட்டும் இனிமேலாவது தவிர்ந்துகொள்ளுங்கள். cont.......

Anonymous said...

PJ யின் கூற்றுக்கு சாதகமாக ஷைத்தானே ஆதாரத்தோடு சொன்னாலும் PJ அதை ஏற்பார். ஆதாரத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கும் PJ யின் இந்த நல்ல பன்புதான் நீங்கள் ஷைத்தான் எனக் கூறிய ஸலாஹியின் பதிலை சரிகாணவைத்தது. ஸஹாபியாகட்டும், ஸலாஹியாகட்டும், இலாஹியாகட்டும், பின் பாஸாகட்டும் ஆதாரத்தின் அடிப்படையில் அனைவரது கருத்துக்களையும் சமமாக நினைக்கும் மனோபலம் சத்தியத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
'ஸவூதியில் வெளியாகும் அரப் நியூஸ் எனும் ஆங்கில நாளேட்டில் இடம் பெற்றுள்ள கேள்வி -பதிலை 'சவூதி பத்திரிக்கை ஃபத்வா ' என்று கூறி பீ ஜே மற்றும் த.த.ஜவினர் தங்களின் அறியாமையை நிரூபித்துள்ளனர்'
சவூதியில் வெளியாகும் பத்திரிகையொன்றுக்கு சவூதிப் பத்திரிகை என்று சொல்லாமல் இலங்கைப் பத்திரிகை என்றா சொல்வது? அதில் என்ன அறியாமை இருக்கிறது? அறி(வி)வா(லி)ளியே சொல்லுங்கள்.
யசயடிநெறள பத்திரிகையின் செய்தியென்று இணையத்தளத்தில் கொட்டையெழுத்தில் போட்டிருந்தும் சவூதி மன்னரின் ஃபத்துவாவாக சொன்னது போன்று இவர் எழுதியிருப்பது இவரின் அறிவுத்திறமையா? பார்வைத்திறனா?
இணைய தளத்தில் எழுதியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அது சவூதி அரசின் ஃபத்வாதான்.
சவூதியில் இருந்து வெளிவரும் எந்தச் செய்தியானாலும் எந்த ஃபத்வாவானாலும் அதற்கு சவூதி அரசாங்கத்தின் அனுமதி இருக்கவேண்டும் என்பதை அறியாத இந்த ஷைத்தானின் அடிமை, அடிப்படை அறிவைப்பற்றி பேசுவதுதான் விந்தையிலும் விந்தை.
இவருடைய நிதானத்தைவிட அவசரக்குடுக்கைத் தனமே மேலோங்கி நிற்கிறது.மேலும் இந்தப் பத்திரிகையின் ஆசிரியரான Khaled Al-Maeena வெளிநாடுகளில் நடைபெறும் மாநாடுகளில் சவூதியின் பிரதிநிதியாக கலந்துகொண்டுள்ளமை மேலும் இதை உறுதிப்படுத்துகிறது.
http://arabnews.com/?page=16§ion=4&d=6&m=10&y=2006&mode=/writers/writers.htm&pix=about.jpg
தராவீஹ் 23 ரகாஅத்துகள் இல்லை என்பதில் அனைத்து சவூதி உலமாக்களும் ஒத்த கருத்திலிருந்தும் ஹரத்தில்(மக்கா-மதீனா) 23 தொழக் காரணம் என்ன? சவூதி அரசாங்கத்தின் தலையீடா இல்லையா? சிறுபிள்ளைக்குக் கூட தெரிந்த இவ்விடயம் அப்துஷ்ஷைத்தானுக்கும் தெரிந்திருக்கும் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.
இதே அரப் நியூஸ் பத்திரிகை 29-09-2006 அன்று தராவீஹ் 20 ரக்காத்துகள் என்று ஃபத்வா கொடுத்திருப்பதும், இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
மேலும் இந்த ஷைத்தானின் அடிமைக்கு தமிழ் தெரியாது என்பது ஒருபுறம் இருக்க ஃபத்வா என்னும் சாதாரண அரபிச் சொல்லுக்குக் கூட அர்த்தம் தெரியவில்லை என்பதுதான் உண்மை.
சவூதி அரசாங்கத்தில் உள்ள அறிஞர்கள் கொடுத்தால் தான் அதற்கு ஃபத்வா என்று பெயர் மற்ற அறிஞர்கள் கொடுத்தால் அதை ஃபத்வா என சொல்லக் கூடாது என்று அரபியிலும் மார்க்கத்திலும் தனது அறியாமையைக் காட்டியுள்ளார்.
ஃபத்வா என்ற சொல் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் மார்க்க தீர்ப்பிற்கு பயன்படுத்தப்படும்.
சவூதி அரேபியாவில் உள்ள அறிஞர் கொடுத்ததால் அதை ஃபத்வா என்று சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்ள அறிஞர்கள் கொடுக்கும் தீர்ப்பிற்கு ஃபத்வா என்று சொல்லக்கூடாதா ......
தமிழ்நாட்டிலும் சரி இன்ன பிற இஸ்லாமிய நாடுகளிலும் சரி தாங்கள் கொடுக்கும் மார்க்கத் தீர்பை ஃபத்வா என்று தான் கொடுப்பார்கள். இதை இவர் தவறு, அறியாமை என்கிறாரா?
'அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தரும் ஆதில் ஸலாஹி என்பவர் மத்ஹபுகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று உரத்துக் கூறும் முகல்லிது'

என்று எங்களுக்குத் தெரியாத ஒன்றை கண்டுபிடித்துச் சொல்லித் தந்துவிட்டதாக மார்தட்டும் இவருக்குத் தெரியாது ஸலபுகளையும் அவர்களின் உலமாக்களையும் கூட நாம் பல வருடங்களாக மத்ஹபுவாதிகள் என்று சொல்வது.

Anonymous said...

'இவர்கள் பார்வையில் ஸவூதிகள் எல்லாம் ஸலஃபிகள்! ஸலஃபிகள் எல்லாம் வழிகேடர்கள்? பிறகு அவர்களின் பத்திரிக்கையில் வெளியான ஃபத்வா?! மட்டும் ஏன் இவர்களுக்கு அனிக்கிறது?! இவர்களின் சந்தர்ப்பவாதத்திற்கு அளவே இல்லையா?'

சத்தியம் எவர் வாயிலிருந்து எச்சந்தர்ப்பத்தில் வந்தாலும் அதை வாதமாக வைப்பது சத்தியசீலர்களுக்கு இனிப்புத்தான். PJ யின் மாமிசத்தைப் புசிக்கும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு அந்த இனிப்பு சந்தர்ப்பவாதம்தான்.'அம்மாவை சந்திக்க சென்றதிலும் சுனாமி,ஃபித்ரா கணக்குக் காட்டும் பூச்சாண்டியிலும்தான் 'குராபி தவ்ஹீது' கூட்டணி அமைத்தீர்கள்! அதில் உங்கள் உறுதியான சந்தர்ப்பவாத கொள்கையை உலகிற்கு உணர்த்தினீர்கள்'
அனைவருக்கும் தேவையான ஒன்றை அனைவரும் சேர்ந்து கேட்டு அனைவரும் பெற்றுக்கொள்ள முனைவது சந்தர்ப்பவாதமா? சுனாமித் திருடர்கள் போன்று தேர்தலில் நின்று அனைத்தையும் தனியே அமுக்கிக்கொள்ள நினைப்பது சந்தர்ப்பவாதமா?
புதிய தகவல்கள் கிடைக்கும் போது flash news மாறுவது விமர்சனங்களில் இருந்து தப்புவதற்கு என்ற உங்கள் crash news இனை சொல்லித்தந்தமைக்கு நன்றி. ஷைத்தான் அறிவாளியாக இருந்தாலும் அவன் அடிமையும் அவ்வாறுதான் இருப்பான் என நம்புவது அறிவீனம்.
'உண்மையில் இவர்கள் ஜாக் அமைப்பைத்தான் வம்புக்கு இழுக்க நினைத்துள்ளார்கள் என்றால், அரப் நியுஸ் ஃபத்வாவை tntj.net இல் வெளியிடும் போதே ஜாக்கின் சுற்றறிக்கையையும் விமர்சனத்தையும் ஏன் வெளியிடவில்லை?'
என்று கேட்டுள்ளார்? உண்மையில் ஜாக் அமைப்பை வம்புக்கு இழுக்க நினைக்கவில்லை.(ஹி..ஹி...ஹி....) என்பதுதான் அதற்கான பதில்இவரின் அர்த்தம் நிறைந்த(?) கேள்விக்கு பொருத்தமான விடை இதுதான். கேள்வியைக்கூட அர்த்தமுள்ள நடையில் கேட்கத் தெரியாத இவருக்கு அடுத்தவரின் எழுத்துப்பிழை மட்டும் தெரிந்துவிடுமாம்.
'ஷேக் பின் பாஸ் அவர்களின் ஃபத்வாவை முன்கூட்டியே வெளியிட்டிருக்கலாமே? ஏன் வெளியிடவில்லை?'
என்று கேட்ட இவர் இது பழைய செய்தி என்பதை பின்வருமாறு ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.
'சகோதரர் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் சுமார் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு....'

ஆனால் arab news இல் இது சுடச்சுட வந்த செய்தி. யாரும் புதிய செய்தியை முதலில் போடுவதுதான் வழக்கம். பின் பாஸின் ஃபத்வாவை பிரசுரிக்கக் காரணம் அவர் தலைமை முஃப்தி என்பதற்காகவல்ல. சவூதி அரசாங்கம், சவூதி ஊடகங்கள், பின் பாஸ் போன்ற கிபாருல் உலமாக்கள் என்று மொத்த சவூதியும் சர்வதேசப் பிறையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சவூதியைப் பின்பற்றும் ஹலபுகளுக்குச் சொல்லத்தான்.
'ரமழான் பிறை விஷயம்! சவூதி அரசாங்க முப்தி ஃபத்வா! என்று ஃபிளாஸ் நியூஸ் மாறுகிறது. ஜாக் அமைப்பின் ரமழான் தொடர்பான சுற்றறிக்கையும் சவூதி ஃபத்வாக்களும் என்று தலைப்பும் மாறுகின்றது. அதில் திடீரென ஜாக் அமைப்பை வம்புக்கு இழுத்துள்ளனர்'
சவூதி அரசாங்க முஃப்திகளுக்கும், ஜாக் இற்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பிருப்பதால்தான் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவான விடயம்.
"Arab News- ஃத்வா (?)வும் பீஜேவின் பித்தளாட்டங்களும்"
இது ஷைத்தானின் அடிமை எழுதிய தலைப்பு. பின் திடீரென த.த.ஜ அமைப்பை வம்புக்கு இழுத்து தலைப்பு 'பீஜே மற்றும் த.த.ஜ இணையத்தளத்தின் பித்தளாட்டங்கள்' என்று மாறுகிறது. ( இவரின் இதே ஸ்டைலில் விமர்சித்துள்ளேன். விளங்காவிட்டால் மன்னிக்கவும்.)

Anonymous said...

'மேலும் இதில் பீஜேஆன்லைன் செய்துள்ள மற்றொரு முக்கியமான அணையதன மோசடியை கவனியுங்கள்! அதில் வெளியிடப்பட்டுள்ள ஷேக் பின் பாஸ் அவர்களின் ஃத்வா பீ.ஜே யால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது கிடையாது. ஜித்தா இஸ்லாமிய அழைப்பகத்தில் பணியாற்றிவரும் சகோதரர் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் சுமார் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜாக் தலைவர் எஸ் கமாலுத்தீன் மதனி அவர்களுக்கும் பீஜேபிக்கும்; அனுப்பிய பேக்ஸ் நகல்தான் அது!'
'பிறர் செய்திகளை தனது செய்திகளாச் சொல்வதில் வல்லவர் என்பது அவரைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும்'
கிறுக்குத் தனமாக உளறவும் ஓர் அளவு வேண்டும். ஒரு கட்டுரையை அல்லது ஒரு செய்தியை முதன் முதலாக அறிவித்தவரை மறைத்துவிட்டு தனது சொந்தக் கண்டுபிடிப்பாக சொல்வதுதான் பிழை. ஒரு கட்டுரையை அல்லது ஒரு செய்தியை முதன் முதலாக அறிவித்தவரைச் சொல்லி தனக்கு அந்த செய்தி கிடைத்த முறையை சொல்லாமல் இருப்பது எந்த அடிப்படையில் பிழை? எந்த வழியில் கிடைத்தது என்று கேட்டும் சொல்லாமல் இருந்தால்தான் அது பிழை. உதாரணத்திற்கு, ஐன்ஸ்டைனின் சநடயவiஎவைல வாநழசல யைக் கற்பிக்கும் ஆசிரியரைப் பார்த்து 'நீங்கள் இதை எந்த வழியில் படித்தீர்கள் என்று சொல்லாத காரணத்தினால் ஏதோ நீங்கள்தான் அதை கண்டுபிடித்ததாக சொல்ல வருகிறீர்கள் என்று நான் விளங்குகிறேன்' என்று ஒரு மாணவன் சொல்வது எத்தகைய அபத்தமோ அதுபோன்றுதான் இதுவும்.
மேலும் சகோ. முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் PJ அவர்களுக்கு எந்த fax உம் அனுப்பவில்லை. மாறாக வாஜ்பாயிற்கு(பிஜேபிக்கு)த்தான் அனுப்பியுள்ளார்??( தமிழ்ப் பண்டிதர் அவ்வாறுதான் எழுதியுள்ளார்)
'பின் பாஸ் என்பவர் உலகம் தட்டை என்கிறார் என்று கூறி ஏளனம் செய்த பீஜே இன்று பிறை விஷயத்தில் ஷேக் பின் பாஸ் அவர்களையும் கிபாருல் உலமா சபையின் கூற்றையும் எடுத்துக் கூறுவது அறிவீனம் இல்லையா?'

சத்தியத்தை பின் பாஸ் சொன்னாலும், ஜோர்ஜ் புஷ் சொன்னாலும் ஏன் இந்த அப்துஷ் ஷைத்தானே சொன்னாலும் அதை தூக்கிப்பிடித்து வரவேற்பது குற்றமா? அல்லது உங்களைப் போன்று Pது சத்தியத்தை சொல்லிவிட்டாரே என்று பொறாமைப்பட்டு சத்தியத்தை மறைப்பது குற்றமா? 'இவர்களின் மார்;க்க விரோத முடிவை யாராவது சவூதி அரசின் கவணத்திற்கு கொண்டு வருவது நல்லது. மேற்கண்டவாறு எழுதியுள்ள உலகமகா சக்தி வாய்ந்த மக்கள் பேரியக்கம் என்று தம்பட்டம் அடிக்கும் த.த.ஜ கும்பல் ஜாக் என்ற இயக்கத்தை சவூதி அரசிடம் காட்டிக் கொடுக்க ஏன் பிறரிடம் உதவிப் பிச்சை கேட்கவேண்டும்!'

என்ன கருத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கவனியாமல் இப்படிக் கூறிய உலக மகா அறிவாளியிடம் இவரின் இதே ஸ்டைலில் கேட்கிறோம்
'கிணற்றுத் தவளைகளுக்கு வழிகாட்டுவோர் பக்த கோடிகளில் யாரும் இல்லையா?'
இது இவர் ததஜ வினரிடம் கேட்கும் பிச்சை. பிஜே யை அழித்தே தீருவோம் என மார்தட்டிக்கொள்ளும் உங்களுக்கு எதற்கு ததஜ வின் உதவி? நீங்கள் நேரடியாகச் சொல்லப் பயமா? உங்களுக்குத் தைரியம் இருந்தால் கள்ள வெப்சைட்டுகளில் ஒளிந்துகொண்டு கதையளக்கும் கள்ளக் காதலர்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு ( பிஜே யோடு வேண்டாம் பாவம் நீங்கள்) என்னோடு விவாதிக்கத் தயாராகுங்கள். (எத்தனை முறைதான் இந்தப் பேடிகளுக்கு சவால் விடுவது?)

Anonymous said...

'இது எங்கள் இயக்க நிலைபாடு! நாங்கள் மட்டும்தான் தூய முறையில்? மார்க்கப் பிரச்சாரம் செய்கிறோம்! பிறர் மேடையில் நாங்கள் ஏறினாலோ, எங்கள் மேடையில் பிறரை ஏற்றினாலோ அவர்களுக்கு நாங்கள் அங்கீகாரம் கொடுத்ததாகிவிடும். எங்கள் மேடையில் அவர்களை ஏற்றியதால் அவர்களும் தூய வடிவில்தான் மார்க்கத்தை கூறுகிறார்னள்! என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள் இதனால் அவர்களின் அசத்தியமும் சத்தியமாக மக்களை சென்றடைந்துவிடும். இதன் காரணத்தினால்தான் நாங்கள் எங்கள் மேடையில் பிறரை ஏற்றுவதில்லை. நாங்களும் பிறர் மேடையில் ஏறுவதுமில்லை. இதுதான் அவர்கள் வாயிலிருந்து உதிரும் முத்துக்கள்இதனை அப்படியே ஒரு வாதத்திற்காக ஏற்றக்கொண்டால் இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்துகொள்ள ஓரு இணையத்தளம் என்றும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் என்ளும் குறிப்பிட்டுவிட்டு அரப் நியூஸ் நாளிதழின் கேள்வி பதிலை ஃபத்வா?வாக பதிவு செய்துள்ளீர்களே! இப்போது அரப் நியூஸிற்கும் அதில் ஸலாஹி என்பவருக்கும் ஷேக் பின் பாஸ் அவர்களுக்கும் சவூதி ஃபத்வாவிற்கும் தங்களின் மேலான? அங்கீகாரம் கிடைத்ததாக ஆகாதா? ஏன்தான் இந்த முரண்பாடுகளோ??!'

என்னே வாதம். ஒருவர் சொன்ன கருத்தை மேடையில் சொல்லிக் காட்டுவதற்கும், அக்கருத்தைச் சொன்ன குறித்த நபரை மேடையில் பேச அனுமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக்கூட புரியாதவர்களுக்கு மூதறிஞர் பீஜே யை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது. உதாரணத்திற்கு 'குற்றங்கள் குறைய வேண்டுமானால் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்' என அத்வாணி கூறுகிறார் என்று பீஜே மேடையில் பேசியதால், அத்வாணிக்கு தனது மேடையில் பேச பீஜே சந்தர்ப்பம் அளித்துவிட்டார் என்று எந்த மூளையுள்ள ஒருவனும் சொல்வானா?
விவாதங்களின் முடிவுகள் யாருக்குச் சார்பாக இருந்தது என்பது உலகறிந்த உண்மை.
யா அல்லாஹ் பொறாமைக்காரன் பொறாமைப் படும்போது ஏற்படும் தீங்கைவிட்டும் எம்மைக் காப்பாயாகரஸ்மி30, கனால் வீதி,சிலாபம்,இலங்கை0094773580844

Anonymous said...

http://rizwanarazmi.blogspot.com/