Saturday, September 02, 2006

சபாஷ்!!!

சபாஷ்!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்-வின் திருப்பெயரால்......
முக்கிய குறிப்பு : இங்கு சைக்கிள் ஓட்டி புகழ் சைபுல்லாஹ் ஹாஜா என்று சில இடங்களில் வரும் சைக்கிள் ஓட்டுதல் என்றால் கடையநல்லூரில் என்ன அர்த்தம் என்று உங்கள் அருகாமையில் உள்ள கடையநல்லூர் சகோதரர்களிடம் கேட்ட தெறிந்து கொள்ளுங்கள். ததஜ வின் சைபுல்லா ஹாஜா அவர்கள் "சைக்கிள் ஓட்டுவதில்" புகழ் பெற்றவர் என்பது கடையநல்லூர் வாசிகளுக்கு நன்றாக தெறியும் ஆகையால் அவரை கடையநல்லூர் வாசிகள் அழைக்கும் அந்த வார்த்தையை அப்படியே பயன்படுத்தியுள்ளோம் - தென்காசி பட்டனத்தான்.

பிளாஷ் பேக்-1:

கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது இடித்தவுடன் அதில் சிலையை வைத்தார்கள். அத்தோடு அந்த இடம் முழுக்க முழுக்க இராணுவ
காட்டுபாட்டில் வந்தது. இதன் பின் சுளுளு சார்ந்த ஒருவன் அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு முறையீடு செய்தான் இராமஜென்ம பூமியிலுள்ள இராமர் சிலைக்கு வழிபாடு செய்யுவும் பூஜை செய்யவும் இடைஞல் இருப்பதாலும் இவ்வாறு இருப்பது ஆகமக விதிகளுக்கு எதிராகும்
எனவே நான் ஒரு இந்து என்ற அடிப்படையில் எனக்கு வழிபாடு செய்ய அனுமதி வேண்டும் என முறையீடு செய்து தீர்ப்பு பெற்று அதன்படி இன்றுவரை செயல்படுத்தப்படுகின்றது.


மரியாதைக்குரிய அப்துல் ஜலீல் மதனி அவர்கள் 11.12.2005 திடிரென உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் அருகிலிருந்த நின்றுயிருந்த கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியின் கணக்கர் சகோ. ரபீக் அஹம்த் கித்வாய் அவர்களிடம் பள்ளியின் சாவியை கொடுத்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவுடன் நினைவு இழந்துவிட்டார்கள். இந்நிலையில் பள்ளியில் எந்தவித இடையூமில்லாமல் வழக்கமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது இமாம் அப்துல்லாஹ் உமரி அவர்கள் தொடர்ந்து தொழுகையை நடத்தி வந்தார்கள் இவர் ஆரம்ப காலம் முதல் மர்கஸில் இமாமாகவும், உள்ளுர் தஃயீயாகவும் இருந்து வந்தார் அத்தோடு மஸ்ஜித் முபாரக் பள்ளி கட்டிய காலம் (1993) முதல் இவர் தான் பள்ளியின் இமாம் (அதாவது சுமார் 13 வருடமாக மஸ்ஜித் முபாரக் பள்ளியில் இமாமாக இருந்துவருகிறார்). 15.01.2006 அன்று ஜாக் மாநில தலைவர் கமாலுத்தீன் மதனி அவர்கள் தலைமையில் கூடிய மஸ்ஜித் முபாரக் நிர்வாக குழு பள்ளி செயலாளர் அவர்களின் உடல் நலக்குறைவு காரணமா அந்த பொருப்பினை துணைசெயலாளர் அப்துல்லாஹ் உமரி (பள்ளி இமாம்) அவர்கள் மேற்கொள்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதன்படி எல்லாம் முறையாக செயல்பட தொடங்கியது. (ஏற்கனவே இருந்த பள்ளி நிர்வாக குழு தலைவர் சேக் உதுமான் மற்றும் 9 பேர் ஆகும் இந்த நிர்வாக குழுவை ஜாக் மாநில செயலாளர் அங்கீகரித்து 13.11.2001-ல் அதாவது சர்வ ஆரோக்கியத்துடன் அப்துல் ஜலீல் மதனி அவர்கள் இருந்த போது முறையாக கடிதம் அனுப்பட்டுள்ளது.
அதில் பள்ளி நிர்வாக செயலாளர் அப்துல் ஜலீல் மதனியும் துணைசெயலாளர் அப்துல்லாஹ் உமரி ஆகிய இருவரும் அடக்கம்) இந்த சமயத்தில் ததஜ சிங்கம் பாக்கர் கடையநல்லூர் பள்ளிக்கு விஜயம் செய்து சைபுல்லாஹ் வகைறாக்களை தூண்டிவிட்டு பள்ளியில் பிரச்சனை செய்ய ஏற்பாடு செய்தனர் (இதை பாக்கர் மறுக்க தயாரா?) அதை போல் பள்ளியை உள்ளுர்வாசிகள் நிர்வகிக்க வேண்டும் என ஒப்பாறி வைக்கும் ததஜ கும்பல் ஜலீல் மதனி அவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகுள்ள நிர்வாகத்தில் எத்தனைபேர் வெளியூர்வாசிகள் என்ற பட்டியலை வெளியீட தயாரா? பள்ளி நிர்வாக குழுவில் சைபுல்லாஹ் காஜாவின் பெயர் கிடையாது - இதனால் தான் இவ்வளவு கூத்தும் அரகேற்றுகின்றார்கள் ததஜ-வின் கிரிமினல்கள்

இந்நிலையில் கடந்த 11.02.2006 அன்று இரவு சுமார் 11:30மணியளவில் சைபுல்லாஹ் காஜா தலைமையில் 14 பேர் கொண்டர் கும்பல் பூட்டிய பள்ளியில் அத்துமீறி நுழைந்து பள்ளியின் கீழ்தளத்தில் நூலகம் அருகில் உள்ள சுவரில் வைக்கப்பட்ட கல்வெட்டை (அந்த கல்வெட்டு வாசகம் 'அல் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகம் ஜம்மிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ பதிவு எண் 105ஃ89 கடையநல்லூர் (Click Here To View Doc) அயுதங்கள் உதவியுடன் உடைந்தெறிந்து விட்டு வேறு ஒரு கல்வெட்டை அந்த இடத்தில் பதித்து விட்டு சென்றுவிட்டார்கள். இது குறித்து பள்ளியின் அருகில் டிராவல் நடத்திவரும் நூருல் அமீன் என்பவர் (அவர் பள்ளி நிர்வாக கமிட்டி மெம்பர்) மற்றும் பள்ளி இமாம் அப்துல்லாஹ் உமரி ஆகிய இருவரும் மறுநாள் காலை அதாவது 12.02.2006 அன்று கடையநல்லூர் காவல் நிலையம் சென்று இது குறித்து புகார் செய்கின்றார்கள் (புகாரை பதிவு செய்தற்கான இரசீது எண் 37ஃ06) அதே தினம் சைக்கிள் ஓட்டி சைபுல்லாஹ் காஜா பள்ளியின் முதல் தளத்திலுள்ள நிர்வாக அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்துச்சென்று விடுகின்றார் பூட்டுவதற்கு முன்பு இந்த அலுவலகத்தின் ரோட்டு பகுதியிலுள்ள அதாவது பள்ளி நுழைவாயில் மேல்பகுதியில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் Jamiyathu Ahlil Quran Val Hathees – District Headquarter” என்று கோல்ட் கலரில் சன் பேப்பருடன் (COOLING PAPER) எழுதப்பட்டிருந்த STICKER-ரை கிழித்த எறிந்துவிட்டுத்தான் சென்றார் (இது பள்ளி திறப்பு விழா நடக்கும் போதே ஒட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட தக்கது இதை கடையநல்லூர் வாசிகள் அனைவரும் அறிவார்) அத்தோடு இமாம் அவர்களை நீ தொழவைக்க கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இதனை இமாம் அவர்கள் ஜாக் மாவட்ட தலைமையிடம் கூறியுள்ளார் மாவட்ட தலைவர் ஏர்வாடி சிராஜ் அவர்கள் 13.2.2006 கடைநல்லூர் விஜயம் செய்து கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு காவல் நிலையம் சென்று சம்பவத்திற்க்கு காரணமான சைபுல்லாஹ் காஜா தலைமையிலான சைபுல்லாஹ் உட்பட 14 பேர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து ஜாக் மாநில தலைமை நிர்வாகிகள் நடவடிக்கை வலியுறுத்தியது உடன் காவல் துறை ஆய்வாளர் சைபுல்லாஹ் வகைறாக்கள் மீது 147, 148, 427 மற்றும் 448 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள் நடத்திய சமாதான கூட்டத்தில் கல்வெட்டை இடித்து தள்ளியதை (சாட்சிகள் இருந்ததால்) சைபுல்லாஹ் ஓத்துக்கொணடார் சைபுல்லாஹ் வைத்த புதிய கல்வெட்டை எடுத்துவிட்டு பழைய கல்வெட் அதே இடத்தில் மீண்டும் வைப்பதற்கும் ஓப்புக்கொண்டார் (அதன்படி சைபுல்லாஹ் வைத்த கல்வெட்டை அவர் கையால் நீக்கிவிட்டு பழைய கல்வெட்டை அதே இடத்தில் வைக்கப்பட்டது இது பொது மக்கள் மத்தியில் நடைபெற்றது) அலுவலக சாவியை கித்வாய்யிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்ட சைபுல்லாஹ் அதன்படி செய்ய சாவியை கொடுக்க வில்லை (இத்கிதவாய் வேறுயாருமல்ல ததஜ நடத்தும் அரபி மதரஸா-வின் கணிணி ஆசிரியர்) இதனால் 15.02.2006 தென்காசி கோட்டாசியாளர் திருமதி ரமணி சரஸ்வதி அவர்கள் முன்னிலையில் தென்காசி கோட்டடாசியளார் அலுவலகத்தில் இருதரப்பினரையம் (ஜாக் நிர்வாகிகள் மற்றும் சைபுல்லாஹ் வகைறாகள் வைத்து) சமதான கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொள்ளவதற்கு வந்த சைபுல்லா குறித்த நேரத்தை விட மிக தாமாதமாக வந்தார் அதன் பின் விசாரணையில் பள்ளி எங்களுக்கு தான் சொந்தத் என சைபுல்லாஹ் கூறியுள்ளார் அதற்கான ஆவணங்கள் கேட்டபோது சில விளம்பரம் மற்றும் லட்டர்பேடில் ஏழுதியவைகளை கொடுத்ததுள்ள இதனை வாங்கி பார்த்த தென்காசி கோட்டாசியாளர் இந்த ஆவணங்கள் உரிமைகோருவதற்கு தகுந்தல்ல என்றார் உடனே சைபுல்லா வகைறாக்கள் ஒரு மாத கால அவகசம் கொடுத்தால் ஆவணங்களை சமர்பிப்பதாக கூறினார். உடனடியாக தென்காசி கோட்டாசியாளர் அவர்கள் 15.03.2006 அன்று அசல் ஆவணங்களுடன் இருதரப்பாரும் மீண்டும் வரவும் அதுவரை சைபுல்லாஹ் வகைறாக்கள் வைத்துள்ள அலுவலக சாவியை சகோ. கித்வாயிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதே போல் அப்துல்லாஹ் உமரி அவர்கள் தான் தொடர்ந்து இமாமாக இருக்கவேண்டும் என உத்தரவு பிறப்பதார் கோட்டாசியாளர்.

சாவி ஒப்படைக்கதால்; 17.02.2006 அன்று மீண்டும் சமாதான கூட்டத்தை கூட்டினார் கோட்டாசியாளர் அதில் ஏன் சாவியை ஒப்படைக்கவில்லை என்று கேட்டதற்கு கி;வாய் ஜாக்-கினால் நியமனம் செய்யப்பட்டவர் எனவே அவரிடம் சாவியை கொடுக்க முடியாது என சைபுல்லாஹ் கூறினார் இதன் பிறகு கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளரிடம் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்டார். அத்தோடு முறைவைத்து ஜும்மா நடத்துவற்கான ஒப்பந்தம் ஏற்படுகின்றது அதாவது ஒரு வாரம் சைபுல்லாஹ் வகைறாக்கள் அடுத்த வாரம் ஜாக் என்றும் உத்தரவு பிறப்பித்தாh.; 18.02.2006 மாலைவரை சாவியை சைபுல்லாஹ் ஒப்படைக்கதால் (காரணம் கோட்டாசியாளருக்கு அதிகாரமில்லை என வாய்சாவடால்வேறு) 18.02.2006 அன்று கோட்டாசியாளர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள் பள்ளி அலுவலகத்திற்க்கு மேல் பூட்டு போட்டு சீல் வைத்தனர் இதனை வீடியோ பதிவு செய்து அரசு தரபு ஆவணமாக வைத்துள்ளனர். தற்போது சைபுல்லாஹ் வைகைறாக்கள் அத்திரத்தின் உச்சியிலிருந்தனர் பின்பு 15.03.2006 கூட்டம் பல்வேறு காரணங்களால் நடைபெறவில்லை மறாக 20.03.2006 மீண்டும் தென்காசி கோட்டாசியளார் அவர்கள் தலைமையில் கூடிய கூட்டத்தில் இருதரப்பாரும் சமர்ப்பித்த ஆவணங்களை பரிசீலித்து ஒரு உத்தரவு இடுகின்றார் (CLICK HERE TO VIEW)

முறைவைத்து தொழுகையை பிரச்சனை தொடர்பாக இரண்டு வாரம் முடிந்த பிறகு ததஜ-வின் துண்டுதலின் பெயரில் அவர்களது அரசியல் நண்பர்கள் நைனார் நாகேந்திரன் மூலம் மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக தென்காசி கோட்டாசியாளர் அவர்களின் உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது அதாவது ஒரு நாள் சைபுல்லாஹ் வகைறாக்கள் அடுத்த நாள் ஜாக் என்று இதனையும் பொது நலன் கருதி ஜாக் நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர் 24.3.2006 பள்ளியில் நுழைந்த சைபுல்லாஹ் வகைறாக்கள் பள்ளியை அடுத்த நாள் ஜாக்யிடம் கொடுக்காமல் ரவுடியிஸம் செய்தனர் இதனால் அன்று ஏற்கனவே பள்ளியினுள் ஜாக் நிர்வாகிகளை தாக்குவதற்கு தயார் நிலையில் எல்லாம் சைபுல்லாஹ் தலைமையில் சதுரஅடி புகழ் சைபுல்லாஹ் சகோதரர் சேகனா மேற்பார்வையில் ரெடியாகி உள்ளனர் இந்த நிலையில் 25.03.2006 அன்று பள்ளியினுள் நூழைந்த ஜாக்கினர் மீது கொலைவெறி தாக்குதல் தொடர்ந்தனர் சைபுல்லாஹ் வகைறாக்கள் (இதில் தனது நண்பரை பார்ப்பதற்காக கடையநல்லூர் வந்த நெல்லை ஏர்வாடியைச் சார்ந்த சகோதரர் ஒருவர் பள்ளியில் தொழ வந்துள்ளார் அவர் அநியாமாக தாக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவர் மீது வழக்கு உள்ளது இவர் சௌதியிலிருந்து விடுமுறையில் தாயகம் சென்றவர்)

கொலை வெறி தாக்குதல் நடந்தால் பள்ளியினுள் காவல் துறையினர் நுழைந்தனர் இருதரப்பாரையும் பள்ளிலிருந்து அப்புறப்படுத்தி பள்ளியை பூட்டி காவல் துறை காட்டுபாட்டில் பள்ளி யாருக்கும் அனுமதியில்லை.

பள்ளியை பூட்டி விட்டு தொழுகை நடைபெறுவதை தடைசெய்து யார் சைபுல்லாஹ் வகைறாவா? ஜாக்கா? அல்லது தமுமுக வா? சிந்தியுங்கள் சகோதரர்களே பள்ளில் தொடர்ந்து தொழுகை நடைபெற வேணடும் என்பதற்காக ஜாக் நிர்வாகிகள் கடைசி வரை எல்லா வகையான (உத்தரவிற்கும்) ஓப்பந்த்திற்க்கும் கட்டுப்பட்டனர் ஆனால் உலகத்திலே குர்ஆனையம் ஹதீஸை மட்டும் பின்பற்றும் சைபுல்லாஹ் என்ன செய்தார்கள் பள்ளியை பூட்டி விட்டு (சைபுல்லாஹ் வகைறாவான சேக் உதுமான் தான் தொழுகை நடத்துவதை தடைசெய்தார் என அவர்கள் கொடுள்ளதுள்ள வாக்கு மூலம் (CLICK HERE TO VIEW) அவர்களுடைய கைகூலிகளை வைத்து பொதுமக்கள் போன்று தோரணையில் காசு அடிச்சு தீர்ப்பு வாங்கும் தென்காசி வக்கீல் கனகசபாபதி மூலம் வஃக்பு தீர்பாயத்தில் இடைக்கால தீர்வு வாங்கி பள்ளியை திறந்தாக அதிகாரபூர்வ இணையளத்தில் பிளாஸ் நியூஸ் ஒட செய்தவர்கள் யாரை ஏமாற்ற நினைக்கின்றார்கள். தன்னிடத்தில் மீடியாக்கள் இருப்பதால் யாரை வேண்டுமானலும் நாறடிக்கமுடியம் என்ற இருமாப்பிலா? என்னிக்கொள்ளுங்கள் அநியாயக்காரன் எவனும் எந்த காரத்திலும் வெற்றி பெற்றதில்லை.

கள்ள மெயில் அனுப்பவதற்க்கு புனித மக்கா நகரத்தில் கூடிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதன் படி செயல்பட்டுவரும் சௌதி அரேபியாவின் ததஜ-வினரே புனித நகரத்தின் புனிதம் தெரியாதா? அல்லது உங்கள் அண்ணன் புனித மக்கா நகரத்திற்க்கு புனிதமில்லை (நவூதுபில்லாஹ்) என்று எதாவது புதிய இரகசிய பத்வா வழங்கியுள்ளாரா?

இந்த கள்ள இ-மெயில் அனுப்பும் வெளிச்சத்திற்கு வராத மூளை கழுவி விடப்பட்ட ததஜ-வினரே உங்களிடம் சில கேள்விகள்:

• கடையநல்லலூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியில் சில வருடங்களாக இருந்த கல்வெட்டை உடைந்தெறிந்து புதிய கல்வெட்டை வைத்து பள்ளியில் பிரச்சனையை முதலில் உண்டாகியது யார் ததஜ-வின் மாநில துணைத்தலைவர் சைபுல்லாஹ் வகைறாவா? அல்லது ஜாக் நிர்வாகிகளா? அல்லது தமுமுகவா?

• அனைத்து ஒப்பந்தங்களையும் ஏன் ஒரு நாள் சைபுல்லாஹ் வகைறா மறுநாள் ஜாக் அமைப்பு என்ற ஓப்பந்தத்தை கூட மீறியது யார்? (சைபுல்லாஹ் வகைறாவா? அல்லது ஜாக் நிர்வாகிகளா? (ஏன்ன காஃபிர் போட்ட உத்தரவு அதை நிறைவேற்ற அசியமில்லை என அண்ணன் அளவியுள்ளாரா?)

• பள்ளியில் குண்டர்களை அடைத்து வைத்து மறுநாள் முறையில் பள்ளியினுள் வந்த ஜாக் அமைப்பினரை முதலில் தாக்கியது யார் சைக்கிள் ஓட்டி புகழ் சைபுல்லாஹ் வகைறாவா? அல்லது ஜாக் நிர்வாகிகளா?

• அரசியல் பண்டாரங்களை பள்ளி விவாகாரத்தில் நுழைய வைத்து, பல்வேறு அரசு நிர்வாகம் வழங்கிய தீர்ப்புக்களை திருத்தியது யார்? சைபுல்லாஹ் வகைறாவா? அல்லது ஜாக் நிர்வாகிகளா?

இப்போது பிளாஸ் பேக்-1ல் உள்ளது போல் பிஜெபி-யாக மாறிய பிஜெ-யின் அடிவருடிகளை அடையாளம் காணுங்கள். அதாவது பள்ளியை மூடுவதற்கு முழுகாரணகர்த்தவாக இருந்த சைபுல்லாஹ் மற்றும் வைகைறாக்கள் எந்த அளவிற்க்கு என்றால் ஜலீல் மதனி அவர்கள் ஆரோக்கியத்துடன் நடமாடிக்கொண்டிருந்த காலத்தில் நிர்வாகத்தில் எந்தமாற்றமில்லாம் (குறிப்பாக இந்த குழுவில் எந்த வெளியூர்வாசிகள் இடம்பெறவில்லை) அதே குழு தான் அந்த குழுவின் துணைசெயலாளர் அப்துல்லாஹ் உமரி அவர்கள் ஜலீல் மதனி அவர்களின் உடல் நலக்குறைவிற்க்கு பின் அவர் வகித்த செயலாளர் பொறுப்பை ஏற்றார்கள் இது சதாரண நடைமுறையில் உள்ளவை அதாவது செயலாளர்-க்கு பதில் துணைசெயலாளர். இப்படி கூத்தடித்து பள்ளியை மூட வழிவகை செய்துவிட்டு தனது கைபாவைகளை கொண்டு வஃக்பு தீர்பாயத்திற்க்கு தவறான தகவல்களை வழங்கி இடைஉத்தரவு (இடைகால நிவாரணம்) பெற்று பள்ளியை திறப்பது போல் பசங்கு செய்யும் சைபுல்லாஹ் வகைறாக்களை அடையாளம் காணுங்கள். (இவர்கள் வஃக்பு தீர்பாயத்திற்க்கு கொடுத்துள்ள தவறான தகவல்களால் பள்ளி நிரந்தரமாக மூடிவைப்பதற்க்கு சட்டத்தில் வழிவகைகள் உள்ளன என்பதனை அறிந்த சிந்தனை வாதிகளும் மற்றம் சமூக அக்கறையுள்ள ஷ வழக்கறிஞர்கள் மிகமனவேதனையுள்ளனர் - அல்லாஹ் பாதுகாப்பானக)

பிளாஷ் பேக்-2:

கடந்த சில மாதங்களுக்கு முன் அண்ணன் பிஜெ அவர்கள் விண் டிவில் தோன்றி ஜாக்-குண்டர்கள் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக்-னுள் அத்துமீறி நுழைந்து கல்வெட்டை வைத்துவிட்டு சென்றார்கள் அதனை உள்ளுர் தவ்ஹீத் வாதிகள் முறையிட்டின் பெயரில் ததஜ-வின் மாநில துணைத்தலைவர் (சைக்கிள் ஓட்டி புகழ் - கடையநல்லூர் வாசிகளிடம் கேட்கவும் சைக்கிள்ஓட்டி-க்கு அர்த்தம்) ஸைபுல்லாஹ் காஜா தலைமையில் சென்று அத்து மீறி வைத்த கல்வெட்டை நீக்கினார்கள். என்று அழாத குறையாக ஒப்பாரி வைத்தார் அண்ணன் பிஜெ.

ஜாக் அமைப்பினர் தான் கல்வெட்டை அத்துமீறி வைத்தார்கள் என்பதனை நிருபிக்க சவடால் புகழ் அண்ணன் பிஜெ தயாரா? (நாங்கள் தான் புதிய கல்வெட்டை வைத்தோம் என்று சைபுல்லாஹ் வைகைறாக்கள் அறிக்கை விட்டு பிஜெயின் உண்மைபேசும் தன்மையை நாறாடித்தார் என்பது கொசுரு செய்தி) ஜாக் அமைப்பினார் தான் கல்வெட்டை உடைத்தார்கள் என்றால், கல்வெட்டை உடைத்தெடுத்தற்ககாக கடையநல்லூர் காவல் நிலையத்தில் சைபுல்லாஹ் மற்றும் வகைறாக்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறை அதிகாரிகள் மீது வழக்கு போட தயாரா ததஜவின் கிரிமினல் தலைமை

கடையநல்லூர் வெளிச்சத்திற்க்கு தெரியாத உண்மை செய்திகள் - கடந்த கால வரலாறு

மரியாதைக்குரிய அப்துல் ஜலீல் மதனி அவர்கள் கடையநல்லூரில் அழைப்பு பணி செய்வதற்க்கு வந்த காலம் முதல் மிக கடுமையான விளைவுகளை சந்தித்தார்கள் ஆனால் அவர்கள் மீது யாரும் கை வைக்க அச்சம் காரணம் மந்திரி மஜீத் அவர்களின் பிரியத்திற்குரிய மருமகன் (சகோதரி மகன்) மற்றும் உள்ளுர் வாசிகளிடம் சக்தி வாய்ந்த கீழ கட்சி குடும்பத்தை சார்ந்தவர் அத்தோடு மிகவும் மக்களால் மதிக்க கூடியவர் இந்தனை தகுதியுடன் தனது சொந்த பணத்தில் ஒரு கடையின் மாடியில் சிறிய இரண்டு அறையை கட்டி அதில் ஜம்மியா (ஜம்மியத்துல் தஃவாத்துல் இஸ்லாமிய) மர்கஸை ஏற்படுத்தி தஃவா தொடங்கிய போது மிகபெரிய மாற்றங்கள் ஏற்பட்டன கடையநல்லூரில் அதற்க்கு முன் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் கூட்டதில் பேசி கொண்டிருந்த போது டியூப் லைட்கள் நொறுக்கபட்டு, இம்தாதி மண்டையை கல்லால் உடைத்தார்கள் அந்த கொடுர நிலைமையை அல்லாஹ் ஜலீல் மதனி மூலமாக இலகுவாக்கினான் எந்த அளவிற்க்கு என்றால் குறிப்பிட்ட இடத்தில் குராபிகள் கூட்டம் போட வேண்டுமென்றால் ஜலீல் மதனி அவர்கள் நோ அப்ஜெக்ஸன் வேண்டும் என்ற அளவில் இருந்தது.

கடையநல்லூரில் ஜம்மிய்யா என்று அழைக்கப்பட்டு வரும் கடையநல்லூர் மர்கஸ் ஒரு கடையின் மாடியில்; இயங்கி வந்த காலமுதல் மௌலவி அப்துல்லாஹ் உமரி என்பவர்தான் பள்ளியின் இமாமகா நியமிக்கப்பட்டு செய்ல்பட்ட வருகின்றார்கள். தென்காசி, கடையநல்லூர், சுரண்டை, ஆலங்குளம் மற்றும் பளியங்குடி ஆகிய ஊர்களுக்கு இவர்கள் தான் ஆரம்ப காலத்தில் தஃயீ இவர்களைப்பற்றி சிறு குறிப்பு இவர்களுக்கு நான்கு வரு;டங்களுக்கு முன் வெளிநாட்டில் அழைப்புபணி செய்வதற்க்கு வாய்ப்பு கொடுத்தபோது அவர்கள் அந்த வாய்பினை ஏற்ற மறுத்துவி;ட்டார்கள் அத்தோடு மஸ்ஜித் முபாரக் பள்ளியிலே இருப்பதற்க்கு விரும்கின்றேன் என்று மாநில தலைமைக்கு தெரிவித்து விட்டார்கள். பள்ளியின் அருகிலே இஸ்லாமிய புத்தக கடை வைத்து நடத்தி வருகின்றார்கள். இவர்களை தான் கடைசி வரை ஜலீல் மதனி அவர்கள் பள்ளின் இமாமகவே வைத்திருந்தார்கள் என்றால் அப்துல்லாஹ் உமரியைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இந்த உமரியைத்தான் சைபுல்லாஹ் வகைறாகக்ள் தொழவைக்க கூடாது என்று மிரட்டினார்கள்

இந்த கொடுரமான காலகட்டத்தில் சைக்கிள் புகழ் ஸைபுல்லாஹ் காஜா திருச்சியிலும், நாகர்கோவில் மற்றும் காயல்பட்டினம் ஆகிய ஊர்களில் சொகுசுடன் தஃவா பணியும் கைநிறைய வெளிநாட்டு சம்பளத்துடன் வளமாக இருந்து வந்தார். இதே காலகட்டத்தில் ஜலீல் மதனி அவர்கள் ஃபிர்தொஸியவில் ஆசிரியராக இருந்து வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கடையநல்லூர் வந்து செல்வார்கள் ஜும்மாவும் குர்கிளாஸும் தொடர்ந்து நடத்திவந்தார்கள். ஆனால் சைபுல்லாஹ் காஜா வளமுடன் வாழ்ந்து வந்தார் வெளியூர்களில். அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பு தலைவராக வரும் வரை கமாலுத்தீன் மதனியிடம் வெளிநாட்டு ஜல்லியை பெற்று இன்பமாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில்.......

சில வருடங்களுக்கு முன் கடையநல்லூரை சார்ந்த ஆரம்பகாலம் முதல் தவ்ஹீத் கொள்கையை ஏற்று பின்பற்றி வரும் நூருல் அமீன் என்பவர் ஜாக்கின் மாநில தலைமைக்கு ஒரு புகார் ஒன்று அனுப்புகிறார் அதில் பல செய்திகளினூட மஸ்ஜித் முபாரக் பள்ளி மேலப்பாளையம் பள்ளியைப்போல் அக்கிரமிப்பதற்க்கு சில சதிகாரர்கள் சதிசெய்து வருகின்றார்கள் இந்த சதி தெரியாமல் மீது ஜலீல் மதனி அவர்கள் மேற்படி சதிகாரர்களிடம் பரிவுகாட்டுகின்றார் என்பது பிரதான செய்தியாகும். இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக ஜாக்கின் உயர்மட்ட ஆலோசனை குழுவினர் ஜலீல் மதனி அவர்களை நேரில் அழைத்து விசாரணை செய்கின்றார்கள் இதனை எதிர்கொண்ட ஜலீல் மதனி அவர்கள் முடிவில் பள்ளின் கீழ் தளத்தில் நூலகம் அருகில் கீழ்கண்ட கல்வெட்டை வைக்கலாம் என ஆலோசனை சொல்லப்பட்டு அந்த கல் குறிப்பிட்ட இடத்தில் ஜலீல் மதனி அவர்களின் கைபட வைக்கப்படுகின்றது (கொத்தனார் தான் வைத்தார் - இந்த வார்த்தையை பிடித்து விளையாட நினைப்பவர்களுக்கு பே.. பே... பே..) இது பள்ளி நிர்வாக கமிட்டியை கூட்டி ஜலீல் மதனி அவர்கள் தன்னிலை விளக்கம் கொடுத்து கல்வெட்டு வைத்தது சம்ந்தமாக எல்லோருடைய ஒப்புதலையும் பெற்ற பிறகே நடைபெறுகின்றது. அதன் பிறகு பள்ளி நிர்வாக கமிட்டி உறுப்பினர் நூருல் அமீன் அவர்களை நிர்வாக கமிட்டி விசாரித்து நேரிடையாக மாநில தலைமைக்கு புகார் செய்தது குறித்து கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது. மேற்சொன்ன சம்வங்கள் நடைபெற்றது ஜலீல் மதனி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நடமாடிக்கொண்டு இருந்த சமயத்தில் என்பதனை நினைவில் கொள்ளவும்.

பள்ளி கட்டிட பணி தொடங்கிய சிறிது காலத்தில் ஜலீல் மதனி அவர்கள் கடையநல்லூரில் நிரந்தரமாக தங்கி கட்டிட பணியினை மிக விரைவாக முடித்தார்கள் அதுவரை நடோடியாக சுற்றிய சைக்கிள் புகழ் சைபுல்லாஹ் அண்ணன் பிஜெயின் காலை பிடித்து கடையநல்லூரில்; இருப்பததற்ககு பல உள்வேலைகளை செய்தார். இது அறிந்த ஜலீல் மதனி அவர்கள் வருத்துப்பட்டார்கள். இறுதியாக பள்ளி திறந்தவுடன் சைபுல்லாஹ் கடையநல்லூரில் செட்டில் ஆகிவிட்டார் அன்று முதல் இன்று வரை பள்ளியை கைபற்ற பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றார்கள். அதில் ஒன்று தான் அனைத்து தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பின் தலைமையை கடையநல்லூர் வரவைத்து அதில் பணியில் அமர்ந்து கொண்டார் அந்த அலுவலகம் கடையநல்லூர் மெயின் பஜாரில் மஸ்ஜித் முபாரக் பள்ளிக்கு வரும் வழியில் வைத்தார் சில வருடம் கழித்து பள்ளிக்கு அருகிலுள்ள கட்டிடத்தின் மொட்டைமாடியில் அலுவலத்தை மாற்றினார் அதே கட்டிடத்தில் கீழ்தளத்தில் தமுமுக அலுவலகம் இருந்தது வந்தது பிரிவு வந்தவுடன் கட்டிஉரிமையாளிடம் உள்ளடி வேலை செய்து தமுமுகவை காலிசெய்து விட்டு அதில் ததஜ-வின் அலுவலகம்.

சைபுல்லாஹ் காஜா எந்த அளவிற்கு ஜலீல் மதனிக்கு இடைஞ்சல் செய்தார் என்பதனை அறிந்தால் இந்த கேடுகேட்ட ததஜ-வினரை அடையாளம் காணுவீர்கள். உதாரணத்திற்க்கு ஒரு சம்பவம், சௌதி அரேபியா-வின் ஜித்தா-மாநகரில் வாழும் கடையநல்லூர் வாசிகள் அனைவரிடம் வசூல் செய்து ஒரு ஆப்புலன்ஸ் வாங்கி அதை பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்தார் அதனை உள்ளுர்வாசிகள் நன்மைக்கு பயன் படுத்தி வந்தனர் இதற்கு பொறுப்புதாரியாக ஜலீல் மதனி அவர்கள் இருந்தார்கள். இதில் பொறமைகொண்ட சைபுல்லாஹ் ததஜ பெயரில் தனி அம்புலன்ஸ் வாங்க வேண்டும் என் கொக்கரித்து பல்வேறு சௌதிவாழ் கடையநல்லூர்வாசிகளிடம் தொடர்பு கொண்டு கடனாக சுமார் 3 முதல் 4 இலட்சம் வரை பெற்று புதிய ஆம்புலனஸ் வாங்கிவிட்டார்கள் (விரைவில் இதனை பிஜெ-யை வைத்து நிகழ்ச்சி மூலம் வழங்க இருக்கிறார்கள் - தற்போது சர்வீஸில் இல்லை) வந்தார் இதை ஏன் சொல்கின்றேன் என்றால் எந்த அளவிற்க்கு ஜலீல் மதனி அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் பள்ளி நிர்வாகத்திற்க்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தினார் என

சைபுல்லாஹ்-வுடைய நடவடிக்கைகளினால் ஜலீல் மதனி அவர்கள் அடிக்கடி கூறும் வார்த்தை நான் உயிரோடுயிருக்கும் வரை பள்ளியில் பிரிவினையை அனுமதிக்கமாட்டேன். அதற்காக அவர் பல்வேறு முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வந்தார். அவர் இருந்த காலம் வரை மதனி அவர்களை எதிர்த்து சைபுல்லா வால் செயல் படமுடியவில்லை அதற்க்கு பல காரணங்கள் அதில் ஒன்று இருவரும் நெருங்கிய உறவுக்காரர்கள்.


இப்போது மரணித்தபின் மறியாதைக்குறிய ஜலீல் மதனி அவர்களை புகழும் பி.ஜேயும் ததஜ வினரும் அன்று எவ்வளவு கேவலப்படுத்தினார்கள் என்பதற்கு 1996 ல் உணர்வில்
கிரிமினல் பி.ஜே அவர்கள் மறியாதைக்குறிய ஜலீல் மதனி அவர்களை கேவலப்படுத்தும் வகையில் எழுதிய ஒன்றே சாட்சியாகும் இந்த கிரிமினல் பி.ஜே எப்படிப்பட்டவர்
என்பதற்கு. தனக்கு தேவைபட்டால் ஒருவரை ஆஹா...ஓஹோ..என்று புகழ்வதும் இல்லையென்றால்
அவர்மீது பொம்பிளை குற்றச்சாட்டு முதல் திருட்டுப்பட்டம் வரை கட்டுவதும் இந்த கிரிமினல் பி.ஜே க்கு கைவந்த கலை அதற்காக தன்னிடம் உள்ள மீடியாக்களை திறம்பட
உபோயோகப்படுத்தி ஒப்பாறி வைத்து அப்பாவி மணிதர்களை குற்றாவாளிகளாக சித்தறிப்பதில் கிரிமினல் பி.ஜே யை மிஞ்சியவர்கள் உலகில் யாருமே இல்லை யஹீதிகளே பி.ஜே யிடம் தான் பாடம் படிக்க வேண்டும். இன்று மரணித்து விட்ட ஜலீல் மதனி திரும்ப வந்து சாட்சி சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில் அவரை புகழும் இதே கிரிமினல் பி.ஜே 1996 ம் வருடம் உணர்வில் இந்த ஜலீல் மதனி அவர்கள் ரூ.18,000 ம் ஃபித்ரா காசை அமுக்கி விட்டார் என்று எழுதி ஜலீல் மதனி அவர்கள் மீது களங்கம் கற்பித்தார் கிரிமினல் பி.ஜே. இது ஒரு உதாரனமே.

பிளாஷ் பேக்-3:

கோவை குண்டுவெடிப்பு விரைவு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம் முடிவுற்று குற்றம்சாட்டப்பட்டவர்களின் வக்கீல் வாதம் தொடர்ந்து நடைபெற்றுவருவது அனைவரும் அறிந்தது. இதில் கடந்த 22ந்தேதி கோவை சிறைவாசிகள் சார்பாக வாதடிவரும் திரு. கண்ணபிரான் அவர்கள் சிறப்பு வாதம் வைத்தார்கள் அதாவது 1873 வருட சாட்சிகள் சட்டம் பிரிவு 10 கீழ் சாட்சி சொன்னவர்களின் சாட்சி நிராகரிக்க வேண்டும் காரணம் சதி திட்டம் அமுலில் உள்ள போது இதை சொல்லியிருக்க வேண்டும் சதிதிட்டம் முடிவுற்றபிறகு இதனை கூறியிருப்பதால் இதனை ஏற்க கூடாது அத்தோடு அவர்களை கைது செய்து தனிவழக்கு தொடர வேண்டும்.

அதாவது வேறுவார்த்தையில் சொன்னால் 1873 வருட சாட்சிகள் சட்டம் பிரிவு 10 கீழ் சாட்சி சொன்ன 1067 வது சாட்சி ஏ.எஸ் அலாவுத்தீன் மற்றும் 1225 வது சாட்சி அண்ணன்
பிஜெ ஆகியோர் கோவையில் குண்டு வைக்க திட்டம் தீட்டிய போது உடன் இருந்துள்ளார்கள் குண்டு வெடிக்க போவது பற்றி அவர்களுக்கு முன்னமே தெறியும் ஆனால் அதை முன்னமே காவல் துறைக்கு அறிவித்து குற்றத்தை தடுக்காமல் கைதாவதில் இருந்து தங்களை காத்து கொள்வதற்காக உளவுத்துறையுடன் இனைந்து திட்டமிட்டு (STING OPERATION) நடத்திய நாடகத்தின் மூலம் முஸ்லிம் இளைஞர்களை வரவழைத்தும் அவர்களுடன் தொலைபேசியில் குண்டு வைப்பது போலவும் கொலை செய்வது போலவும் உரையாடியும் காட்டிக்கொடுத்து அப்பாவி இளைஞர்கள் பலரை சிறைக்கு அனுப்பி விட்டு உளவுத்துறையின் அனுதாபத்தின் மூலம் தங்களை கைதிலிருந்து காத்துக்கொண்டார்கள் ஆகவே பி.ஜெயினுல்லாபுதீனையும் ஏ.எஸ் அலாவுதீனையும் கைது செய்து வழக்கு தொடரவேண்டும் என்பதுதான் தற்போது இந்த வழக்கில் வாதாடி வரும் வழக்கறிஞர்களின் வாதம்.




இந்த தலைப்பு செய்திகளிலிருந்து தப்பிப்பதற்க்குதான் இந்த அடால் உடால் பள்ளி மீட்பு நாடக காட்சிகள். இதெல்லாம் சிறிது காலத்தில் சரியாகி விடும் சட்டம் தான் கடமையை செய்யும். காசு வாங்கிய கடமைக்கு சில காலம் தலையாட்டும் நீதி துறை முதல் காவல் துறை ஜாவன்கள் தொடர்ந்து தலையாட்ட முடியாது என்பது திருச்சி சிங்கார தோப்பு பள்ளியின் வழக்கில் இறுதி தீர்பை நினைவூட்டுகின்றோம்.....

இந்த வரலாற்று செய்தி அப்பபோது தொடரும்.

கடையநல்லூர் ஆரம்பத்தில் நடந்ததென்ன வீடியோ பைல் விரைவில்...

விரைவில் மேலப்பாளையம் பள்ளி விவாகாரம் குறிந்து உண்மை நிலவரம்.

அதுவரை, வக்ஃப் போர்டு அதிகாரிகள் ஒட்டிய உத்தரவை வஃக்போர்ட் அதிகாரிகளே கிழித்தார்கள் என்று கள்ள மெயில் அனுப்பும் வெளிச்சத்திற்க்கு வராத கூட்டம் நிறுபிக்க தயாரா? அதே போல் புதிய உத்தரவு யார் போட்டது? யார் ஒட்டியது வஃக் போர்டு அதிகாரியா? அல்லது ஆன்மீக ரௌடியின் (அட நம்ம ஷம்ஸுல் லூஹா தான்) கூட்டமா? பொய்களை பரப்பும் ததஜ-வின் கிரிமினல் தலைமையின் இலட்சனம் விரைவில் அல்லாஹ் வெளிப்படுத்துவான். அதுவரை பொறுமையுடன்...



அன்புடன்

தென்காசி பட்டணத்தான்
இஸ்லாம் காரைக்குடி முஸ்லிம் மூதூர்

No comments: