Tuesday, August 15, 2006

முஸ்லிம்களின் சுதந்திரதின கொண்டாட்டங்கள்


இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகத்தை நிணைவு கூறும் வகையில் தமிழகமெங்கும் சுதந்திர தின கொண்டாட்டங்கள்



சென்னை: ஆகஸ்ட் 15, செவ்வாயன்று இந்திய சுதந்திர தினம் தமிழக முஸ்லிம்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெருந்திரளான முஸ்லிம்கள் தமிழகமெங்கும் இந்திய சுதந்திரத்தை போற்றும் விதமாக இரத்த தான முகாம்கள் நடத்தி சமூக நலப்பணிகளில் ஈடுபட்டனர். ஆன்களும், பென்களுமாக நுற்றுக்கணக்காக முஸ்லிம்கள் தமிழகமெங்கும் இரத்த தானம் வழங்குதல் போன்ற சமூக நலப்பணிகளில் மிக ஆர்வமாக கலந்து கொண்டு இந்திய சுதந்திரத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டாடினர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்பட பல இஸ்லாமிய அரசியல் அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் வெகு விமரிசையாக தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி இந்திய சுதந்திரத்தை சக இந்தியர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்.

தமிழக முஸ்லிம்களும், சமுதாய அமைப்புக்களின் தலைவர்களும் இந்த தேசிய தினத்தில் தங்கள் சமூகம் இந்திய சுதந்திரத்திற்காக செய்த உயிர்த் தியாகங்களையும், பொருளாதார தியாகங்களையும், போராட்டங்களையும் நிணைவு கூர்ந்தனர். இந்திய சுதந்திரத்திர்க்காக உயிர் நீத்த வீர முஸ்லிம்களின் தியாகம் இன்று நிணைவு கூறப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை நிணைவு கூறும் விதமாக புகைப்பட, ஆவன கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

தமிழகமெங்கும் பெருந்திரளாக மாற்று மத சகோதரர்களும் சக இந்திய குடிமக்களும் முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்திற்காக செய்த தியாகங்களை அறிந்து கொள்ளும் விதமாக இந்த சுதந்திர தின கொண்டாட்டங்கள் அமைந்திருந்தது குறிப்பிட தக்கது.

செய்தி மற்றும் புகைப்பட உதவி : கோவை மற்றும் தமிழகமெங்கும் உள்ள நம் வாசகர்கள்.

கோவையில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமுமுக தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார் இவ்விழாவில் முஸ்லிம்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தனர். அத்துடன் தமுமுக தலைவர் அவர்கள் புகைப்பட கண்காட்சி ஒன்றறையும் திறந்து வைத்தார் அது மட்டுமல்லாது இரத்த தான முகாமையுமு; ஆரம்பித்து வைத்தார் அதில் ஆன்களும் பென்களுமாக பெருந்திரளான முஸ்லிம்கள் இரத்த தானம் செய்தனர்.

தமிழகமெங்கும் இன்ன பிற இஸ்லாமிய இயக்கங்கள் நடத்திய சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் அடுத்து வரும் பதிவுகளில் ...


முஸ்லிம்களின் சுதந்திர தின கொண்டாட்டங்களும் இரத்த தான காட்சிகளும் :












No comments: