தமிழக முதல்வர் அவர்களே!
நீதி விசாரனைக்கு உத்தரவு இடுங்கள்!!
கோவையில் அரங்கேறிய காவல்துறை நாடகம்??
உண்மைகள் உறங்குவதில்லை
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலம்.
தமிழர் வாழ்வை வதக்கி இடக்கினை செய்யும் தருக்கரை அடக்கடா என்றான் புரட்சிக் கவி.
அடக்க வேண்டியவர்கள் அரவணைத்து நின்றதால் தமிழ் சமூகம் பண்பாடு, தன்மானம், கலை, கலாட்சாரம், மொழி உணர்வு இவற்றை எல்லாம் படிப்படியாக இழந்து கொண்டு நிற்கிறது.
மத மோதலையும், ஜாதி மோதலையும், தூண்டி விட்டு குளிர் காய்ந்தவர்கள் தமிழகத்திலும் சமூக நல்லிணக்கத்தையும், மனித நேயத்தையும் சாய்க்க வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில் அமுக்கி வாசித்தவர்கள், தமிழினத் தலைவர் டாக்டர். கலைஞர் ஆட்சியில் தலை தூக்கி இருக்கிறார்கள். ஆம், புற்றுக்குள் இருந்த அரவம் மீண்டும் தலைதூக்கி இருப்பதற்குக் காரணம் தமிழ் ஆய்ந்த தலைமகன் ஆட்சியைக் கலங்கப்படுத்தவும், முஸ்லிம்கள் டாக்டர் கலைஞருடன் கொண்டுள்ள நெருக்கத்தை தூரமாக்க துவங்கப்பட்ட சதியின் உச்சகட்டம்தான் கோவை வெடி பொருட்கள், கைது நாடக அரங்கேற்றம்.
டாக்டர். கலைஞர் அவர்களே, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற மிச்சமுள்ள தோட்டாக்கள் தமிழகத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
குஜராத், கான்பூர், மீரட், அஹமதாபாத், கோவை, மண்டைக்காடு என எரித்தவர்கள், ஆம், ஜெட்லி கமிஷன் சுதந்திரம் பெற்று 2 ஆண்டுகளில் 700க்கு மேற்பட்ட வழக்குகள் ஆர்.எஸ்.எஸ்ஸின் மேல் பதிவு செய்ததாக கூறுகிறது. பற்ற வைப்பதில் பலே கில்லாடிகள், காந்தியை சுட்டுக் கொன்று விட்டு பழியை முஸ்லிம்கள் மேல் போட்டவர்கள் இவர்கள் சூழ்ச்சியில் வடமாநிலம் பற்றி எரிந்தது அன்று. இராவணன் முதல் வாலி வரை சூழ்ச்சியால் வென்றவர்கள் கையூட்டுக்கு நாக்கை தொங்கப் போடும் காவல்துறையின் கருப்பு ஆடுகளைப் பயன்படுத்தி கோவையில் சமூக நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்திற்கும் எதிராக திட்டமிட்டு பொய் நாடகம் ஒன்றை உருவாக்கி ஊதி விட்டுள்ளனர். தமிழக அரசின் நற்பெயரைக் கெடுக்கும் காக்கி சட்டைக்குள் கயமைத்தனம் செய்யும் கருப்பு ஆடுகளை, தமிழக அரசு இனம் கண்டு களைய வேண்டும், மக்கள் வரிப்பணத்தைச் சம்பளமாகப் பெற்று வாய்மைக்கு எதிராக டாக்டர் கலைஞர் அரசின் பெயரைக் கெடுக்கும் இரத்தின சபாபதி மீது நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், அதன் மூலம் உண்மைகள் உலகுக்கு எத்தி வைக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் நீதி நீதி நீதி விசாரனைக்கு ஆவண செய்ய வேண்டும்.
இவண்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்
No comments:
Post a Comment