Wednesday, June 07, 2006

பொய்களை உரத்துக்கூறும் ததஜ-வின் உமர்

மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றி பிழைப்பு நடத்தும் பொய்யர்கள் துகிலுரிக்கப்படுகிறார்கள். அதனை பொறுக்க முடியாத ரசிகர்கள் அரிப்பு, அடிவருடி என புலம்பித் திரிவது எப்படி உள்ளதென்றால், உண்மையான திருடன் மற்றவர்களைப்பார்த்து திருடன் திருடன் என கத்தி மற்றவர்களின் கவனத்தை திசைத் திருப்பி தப்பிச் செல்வது போன்றுள்ளது.

உலக விஷயத்திலும் இவர்களின் புளுகு மூட்டைகள் வெளியாகி வருவதால், மார்க்க விஷயத்தில் இவர்களை புரிந்துக்கொள்ள முடியாத சகோதரர்கள் உலக விஷயத்தில் எவ்வாறு பொய்யை அவிழ்த்துவிடுகிறார்கள் என்பதை வைத்தாவது இவர்கள் பொய்யர்கள்தான் என்பதை புரிந்துக்கொள்ள உதவும்.

இவர்களின் தடுமாற்ற விஷயங்களை சுட்டிக்காட்டுகிறவர்களுக்கும், அதற்கு உதவுகிறவர்களுக்கும் மிரட்டல் விடப்படுகின்றன. அசத்தியத்தில் உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட வழியைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் அறிந்த விஷயமே.

வெளிக்கொணரப்பட்ட தீன் முஹம்மதின் பொய் முகம்:

தீன் முஹம்மது என்ற பொய்யரின் புளுகு மூட்டைகள் இணையத்தில் பரவலாக பவனி வந்தன. ஆனால் ஜித்தாவில் நடந்த சகோதரர் பாக்கர் நிகழ்ச்சி சம்பந்தமாக 24 மணி நேரத்திற்குள் எழுதிய சூடான புளுகு மூட்டை செய்தியால், ததஜ-வின் தீன் முஹம்மதுவின் முகம் தெள்ளத் தெளிவாக மற்றவர்களுக்கு தெரியவந்தது. இவர் எழுதிய பொய்யான செய்தியை (முஜிபுர்ரஹ்மான் பற்றி எழுதிய பொய்யை மட்டும் நீக்கிவிட்டு) உணர்வு வாரஇதழில் வெளியிட்டனர். ஆனால் தீன் முஹம்மது என்பவர் கடைந்தெடுத்த பொய்யர் என்பது மக்களுக்கு வெட்டவெளிச்சமாகிவிட்டதால் பல்வேறு வகையில் அதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ததஜ நிர்பந்திக்கப்பட்டனர்.

மேலும் முகவைத்தமிழன்கூட அதனைக் கண்டித்து பொய்யுறைத்த சத்தியவாதிகள் என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.

எனவே, உணர்வில் கீழ்கண்டவாறு ஒரு செய்தி பிரசுரமானது.

தவறு செய்தவர்களை சங்கடப்படுத்தாத மறுப்பு:

கடந்த வார உணர்வு இதழில் (10-33) ஜித்தாவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி பற்றி செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். அந்த செய்தியை அனுப்பி உள்ள தீன் முஹம்மது என்பவர் ஜித்தாவில் கிளை உறுப்பினர் அல்ல. மேலும் அவர் யார் என்றும் தெரியவில்லை. ஜித்தா டி.என்.டி.ஜே நிர்வாக அலுவலகத்தின் மூலம் அனுப்பப்படும் அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே பிரசுரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மற்றபடி வேறு நபர்கள் அனுப்பும் செய்திகளில் தவறுக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. கவனமுடன் செயல்படும்படி உணர்வு நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றோம். நாங்கள் அனுப்பி உள்ள கீழ்கண்ட செய்தியை வரக்கூடிய இதழில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
- ஜித்தா டி.என்.டி.ஜே. நிர்வாகம்


1) தீன் முஹம்மது, 2) அதனை வெளியிட்ட உணர்வு வாரஇதழ், 3) ததஜ ஆகிய மூன்றும் பாதிப்படைந்துவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய மறுப்பு நாடகத்தை ஆடியுள்ளார்கள். இத்தகைய பொய் செய்தியை வெளியிட்டமைக்காக உணர்வு வாரஇதழ் சார்பாக என்ன வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள் என்று கேட்டால் அதற்கு உணர்வு வேறு ததஜ வேறு என்று பதில் தருகிறார்கள். அப்படியென்றால் உணர்வு சார்பாகவும் வரும் இதழில் மறுப்பு தெரிவிக்கப்படும் என்று ஏன் பொய் சொல்லவேண்டும்?

உணர்வு வாரஇதழ் ஒரு தரமான இதழாக இருந்திருந்தால், உணர்வு சார்பாக வருத்தத்தை பதிவு செய்திருக்கும்.

உண்மையை உரத்துக்கூறுவதாக சொல்லும் (ததஜ) உமரின் பொய் தஃப்ஸீர்

முஜிபுர்ரஹ்மான் மேடையில் அமர்ந்ததாக தீன் முஹம்மது விட்டு அண்டைப் புளுகிற்கு கீழ்கண்டவாறு உண்மையை உரத்துக்கூறும் ததஜ உமர், முன்பு ஒரு தஃப்ஸீர் எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.

! சிறிது நின்று விட்டுப் போனார் என்பது உங்கள் தரப்பு வாதம், சிறிது அமர்ந்து விட்டுப் போனார் என்பது எங்களுடைய வாதம் மொத்தத்தில் அரங்கத்திற்கு வருகை தந்துள்ளார் கேமராவும் மிண்ணி இருக்கிறது என்பதில் எவருக்கும் மாறுப்பட்டக் கருத்தில்லை இதைப் பெரிய இஸ்ஸூ வாக்க வேண்டிய என்ன அவசியம் வந்தது, முஜிபுர்ரஹ்மான் உமரி ததஜ வின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ளார் சிறிது நேரத்தில் விடைபெற்று விட்டார் என்பது மட்டுமே எமது ரிப்போர்ட்டர் சகோ தீன்முஹம்மது அவர்களுக்கு கிடைத்த தகவலாகும்.

ஏற்பாடு செய்யப்பட்ட ஒருக் கூட்டத்திற்கு ஒருப் பேச்சாளர் அந்தஸ்த்தில் உள்ளவர் அழைக்கப் படுகிறார் அவ்வழைப்பை ஏற்று அவரும் வருகைத் தருகிறார் அவ்வாறு வருகை தரும் பேச்சாளர் அந்தஸ்துடையவர் எங்கே அமருவார் ? கண்டிப்பாக அவரைப் போன்ற மற்ற பேச்சாளர்கள் எங்கே அமருவாரோ அங்குத்தான் அவரும் அமருவார் அமரவேண்டும் ! இது தான் நியதி

அழைப்பை ஏற்று வந்தவர் மேடைக்கு வராமல் பார்வையாளர்கள் வரிசையில் நின்று விட்டுப் போகிறார் என்றால் அவருடை உள்மனதின் பதிந்திருக்கும் கசடு வெளிப்படுகிறது.

சகோ தீன் முஹம்மது அவர்களுடைய கூற்று உங்கள் விதண்டாவாதப்படி பொய் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வோமேயானால் ?

உமரி முற்றிலும் அரங்கத்திற்கு வராமல் இருந்திருக்க வேண்டும் அதேப் போன்று நிகழ்ச்சி படம் எடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும். இது இரண்டும் நிகழாமல் இருந்தால் அவர் எழுதியது பொய்யாகும் இது இரண்டும் குறிப்பிட்ட அரங்கத்திற்குள் நடந்திருப்பதால் உங்கள் மறுப்புதான் விதண்டாவாதமாகும். அவர் ஒரு எழுத்தர் என்கிற முறையில் அவர் எழுதியதே சிறிது வித்தியாசத்துடன் முற்றிலும் உண்மையாகும்

தெளிவானக் கண்ணோட்டத்தில் படித்தவர்கள் புரிந்திருப்பார்கள். ஒன்சைடு சப்போட்டர்களும், சூட்டை ஏற்படுத்தி விட்டு (குழப்பத்தை உண்டு பண்ணி ) அதன் மூலம் குளிர்காய நினைக்கும் வக்கிரப் புத்தியுடையவர்களும் புரிந்து கொண்டாலும் புரியாதது போல் பாவனை செய்வதுடன் மக்களை குழப்புவார்கள் அது தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.


பொய் தஃப்ஸீரிலிருந்து விளங்கும் விஷயங்கள்:

1) தீன் முஹம்மது என்பவர் ததஜவின் ரிப்போர்ட்டர். (கையும் களவுமாக மாட்டிக்கொண்டதால் ஜித்தாவின் உறுப்பினர் அல்ல என்று செய்தி வெளியிட்டுள்ளனர்).

2) தீன் முஹம்மது பொய் சொல்லிவிட்டார் என்பதை பல ததஜ சகோதரர்கள் ஒத்துக்கொண்டனர். இதே வலைப்பதிவில்கூட அத்தகைய விஷயங்கள் பதிவாகியுள்ளன.

உணர்ச்சிவசப்பட்டு உண்மைகளை ஆராயாது எழுதி இயக்கத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் அறிவில்லா த.த.ஜ தொன்டர்கள் இதுபோன்ற சம்பவங்களை பார்த்தாவது திருந்துவார்கள் என்று நம்புகின்றேன்.

அபூ-ரும்மானா
Posted by அபூ-ரும்மானா April 25, 2006


ஆனால் உண்மையை உரத்துக்கூறுவதாக சொல்லும் (ததஜ-வின்) உமர்,

ஏற்பாடு செய்யப்பட்ட ஒருக் கூட்டத்திற்கு ஒருப் பேச்சாளர் அந்தஸ்த்தில் உள்ளவர் அழைக்கப் படுகிறார் அவ்வழைப்பை ஏற்று அவரும் வருகைத் தருகிறார் அவ்வாறு வருகை தரும் பேச்சாளர் அந்தஸ்துடையவர் எங்கே அமருவார்? கண்டிப்பாக அவரைப் போன்ற மற்ற பேச்சாளர்கள் எங்கே அமருவாரோ அங்குத்தான் அவரும் அமருவார் அமரவேண்டும் ! இது தான் நியதி
என்று புளுகுகிறார்.

ததஜவின் எதிரியாக பேசப்படுகிறவர்தான் மவ்லவி முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள். அவரை ததஜ சகோதரர்கள் பார்வையாளராக அழைத்திருந்தார்கள். கருத்து வேறுபாடு இருந்தாலும் (ததஜவின் பொய் பரப்பு தீன் முஹம்மதுகளை அறிந்திராத) முஜிபுர்ரஹ்மான் உமரி அங்கு வந்துவிட்டு சென்றார்.

பொய்க்கு தஃப்ஸீர் எழுதுய ததஜவின் உமர், பார்வையாளராக அழைக்கப்பட்டவரை பேச்சாளராக அழைக்கப்பட்டவர்போல் வார்த்தைகளில் வடிக்கிறார்.

உமரி முற்றிலும் அரங்கத்திற்கு வராமல் இருந்திருக்க வேண்டும் அதேப் போன்று நிகழ்ச்சி படம் எடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும்.


இவர்களின் நிகழ்ச்சிக்கு வந்தார் என்ற ஒரு விஷயத்தை வைத்துக்கொண்டு தினமலர் ஸ்டைலில் பொய்யை புணைந்து எழுதுவார்களாம்.

மீண்டும் அதே தீன் முஹம்மது விஷயத்தைப்பற்றி புதிதாக அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் ததஜவின் உமர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

??? தீன் முஹம்மது என்பவருடைய கட்டுரையை உணர்வு மறுத்தது

சகோதரர் பாக்கர் அவர்களுடைய வருகையை சகோதரர் தீன் முஹம்மது இனிய தமிழில் மிக அழகாக வடிவமைத்திருந்தார் சிறிய ஒரு மாற்றத்துடன் எழுதி இருந்தார் உமரி அரங்கத்தில் நின்று கொண்டிருந்ததை மேடையில் உட்கார்ந்து விட்டதாக எழுதி விட்டார் சம்பவம் ஒன்று தான் என்பதை கூறிக் கொள்கிறேன் இதிலிருந்து பொய்யையும் புரட்டையும் மூலதனமாக கொண்டு செயல்படும் மக்கள் உரிமையும், இளையவனும் படிப்பினை பெறவேண்டும் சிறிய மாற்றத்தில் கூட மக்களுக்கு செய்திகள் செல்லக் கூடாது என்று கண்ணும் கருத்துமாக ததஜ செயல்பட்டு வருவதை உணர்வு மறுத்த மேல்படி சம்பவம் உணர்த்துகிறது.


முஜிபுர்ரஹ்மான் விஷயத்தில் எழுதிய சின்ன மாற்றத்திற்காக (உமரி அரங்கத்தில் நின்று கொண்டிருந்ததை மேடையில் உட்கார்ந்து விட்டதாக தீன் எழுதியதற்காக) உணர்வில் மறுப்பு வெளிவந்ததாக எழுதுகிறார். முஜிபுர்ரஹ்மான் மேடையில் அமர்ந்ததாக எழுதப்பட்ட விஷயத்தை ஏற்கனவே கத்திரித்துதான் உணர்வு வெளியிட்டது. வெளியிட்ட செய்திக்கு மறுப்பு தெரிவிக்காத உணர்வு வாரஇதழ், வெளியிடாத செய்திக்கு மறுப்பு தெரிவிக்குமா? என்பதை வாசகர்களே உணர்ந்துக்கொள்ளட்டும்.

ததஜவின் அகராதியில் உண்மையை உரத்து கூறுவதென்றால் பொய்யை உரத்து கூறுவதென்று சொல்லாமல் சொல்கிறார்.

ததஜ ஜித்தா கிளை கடிதத்தின் நோக்கமென்ன?

1) மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட தீன் முஹம்மது என்பவரின் கடிதம் முழு வடிவத்துடன் ஜித்தாவில் பலருக்கு கிடைத்துவிட்டது. அவர் எழுதிய மவ்லவி "முஜிபுர்ரஹ்மான் உமரி" பற்றி பொய் என்று ஜித்தாவில் கூட்டத்தில் கலந்துகிகொண்டவர்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது. அந்த பொய்யர் தீன் முஹம்மது என்பவரின் கட்டுரை உணர்வில் வெளிவந்தததால் ததஜவின் ரிப்போர்ட்டர்தான் இந்த தீன் முஹம்மது என்பதை மறைக்க வேண்டிய சூழ்நிலை.

2) பாக்கரின் நிகழ்ச்சியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அந்த சகோதரர் உரையாற்றவில்லை. உணர்வில் உரையாற்றப்பட்டதாக பொய்யுரைக்கப்பட்டிருந்தது.

3) 1500-க்கு மேற்பட்டோர் வந்ததாக பொய்யுரைத்தது உணர்வில் பிரசுரிக்கப்பட்டுவிட்டது. பிறகு, (ஜித்தா சார்பாக வெளியிட்ட கட்டுரையில் 1000-க்கு மேற்பட்டோர் என்று விவரிக்கப்பட்டிருந்தது).

அல்லாஹ் கூறுகிறான்
நன்நம்பிக்கையாளர்களே ! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் ! மேலும் நீங்கள் உண்மையளர்களுடன் ஆகிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் - 9, 119)

மேற்கண்ட இறைவசனம் ததஜ-வின் உமர் அவரது ஒரு கடிதத்தின் இறுதியில் குறிப்பிட்டதாகும். ஆனால் அவர்,

ஈமான் கொண்டவர்களே நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (61:2)

என்று இன்னொரு இறைவசனம் உணர்த்தும் உண்மையை உணர்ந்துக்கொள்ள தவறிவிட்டார்.

ததஜவின் அகராதி சொற்கள் சில:

முதலில் வருவது ததஜவினர் பயன்படுத்தும் வார்த்தைகள்.

உண்மையை உரத்துக்கூறுதல் = பொய்யை உரத்துக் கூறுதல்
தெளிவான கண்ணோட்டம் = போலியான ததஜவின் கண்ணோட்டம்
அரிப்பு = இவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது
ஃபித்னா = இவர்களைப்பற்றிய உண்மையை தோலுரித்துக்காட்டுதல்
தஃவா பணி = ஸஹாபாக்களை இகழ்ந்து எழுதுவது, பேசுவது மற்றும் காரிஜியா, முஃதஸிலா போன்ற வழிகெட்ட பிரிவினரின் கருத்துகளை புதிய வடிவில் சொல்வது.
தஃவா பாதிப்படைதல் = பி.ஜே.யின் சி.டிக்கள் மற்றும் பி.ஜேயின் கருத்துகள் பரவ முடியாமல் தடை ஏற்பட்டுவிடல்.

12 comments:

Anonymous said...

ஏனுங்கோ அபு முஹம்மது தீன் முஹம்மதுதான் தான் செய்தது தவறு என்பதை ஒத்துக் கொண்டு மெயில் அனுப்பியிருக்கிறாரே அப்புறம் ஏனுங்கோ இந்த கட்டுரை. நாங்க எந்த அமைப்பும் கிடையாதுப்பா என்று சொல்லிக் கொண்டு ததஜ-வினரை மட்டும் திட்டிகினுருக்கிங்களே நீங்க மெய்யாலுமே எந்த அமைப்பையையும் சேராதவருங்களா.. இல்ல தமுமுக சம்பந்தமா எதுனா கேள்வி வந்தா என்னா செய்யிறதுன்னு யோசிச்சி இப்பிடி சொல்லி டபாய்க்கிறிங்களா?

அபூ முஹம்மத் said...

அனாமத்தா வந்து பினாத்தும் அனானிக்கு,

//தீன் முஹம்மதுதான் தான் செய்தது தவறு என்பதை ஒத்துக் கொண்டு மெயில் அனுப்பியிருக்கிறாரே//

தீன் முஹம்மது தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ளும்போது கூட (முஜிபுர்ரஹ்மான் உமரியைப் பற்றி எழுதப்போய் நமது புளுகு மூட்டை வெளிவந்துவிட்டதே என்று எண்ணி) அவரை கடுப்பாக ஒரு திட்டு திட்டிவிட்டு "நான் வேண்டுமானால் எழுதியதை ஒப்புக்கொள்கிறேன்" என்கிறார்.

அதுசரி அனானி அவர்களே!
தீன் முஹம்மது தவறு செய்துவிட்டார் என்று ஒத்துக்கொண்டு விட்டார் என்கிறீர்கள். உண்மையை உரத்துக்கூறும் உமர் என்பவர், தீன் முஹம்மது தவறு செய்யவில்லை என்கிறார். இந்த இருவரில் யார் பொய்யர் என்பதை தயவு செய்து நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்.

//தீன் முஹம்மதுதான் தான் செய்தது தவறு என்பதை ஒத்துக் கொண்டு மெயில் அனுப்பியிருக்கிறாரே அப்புறம் ஏனுங்கோ இந்த கட்டுரை.//

இந்த கட்டுரை தீன் முஹம்மதுக்காக எழுதப்பட்டது இல்லை. உண்மையை உரத்துக்கூறுவதாக சொல்லி பொய்-க்கு தஃப்ஸீர் செய்யும் ததஜவின் உமர் என்பவருக்காக எழுதப்பட்டது. இந்த கட்டுரைக்கு முழு பொறுப்பும் உண்மையை உரத்துக்கூறும் உமர் என்பவர்தான். எனவே கட்டுரையை மீண்டும் படித்துவிட்டு உருப்படியாக ஏதாவது கமெண்ட்ஸ் வையுங்கள்.

//நாங்க எந்த அமைப்பும் கிடையாதுப்பா என்று சொல்லிக் கொண்டு ததஜ-வினரை மட்டும் திட்டிகினுருக்கிங்களே நீங்க மெய்யாலுமே எந்த அமைப்பையையும் சேராதவருங்களா//


http://tamilmuslimthoughts.blogspot.com
என்ற முகவரியில் என்னுடைய கட்டுரைகளின் அட்டவணை இருக்கிறது. உணர்வு வாரஇதழ் தொடங்கி, தீன் முஹம்மது, இளையவன், ஃபழ்லுல் இலாஹி, குடந்தைப் பேரணியும் இயக்கவாதிகளும் ஆகிய அனைத்துக் கட்டுரைகளையும் முழுவதுமாக படியுங்கள். மேற்கண்ட கட்டுரைகளுக்கு பின்னால் ஏதாவது நியாயமான காரணங்கள் இருக்கிறதா என்பதை படித்துவிட்டு நான் ததஜ-வினரைப்பற்றி மட்டும் எழுதுகிறேனா? அல்லது தரம்தாழ்ந்து போகிறவர்களைப்பற்றி மட்டும் (ஆதாரத்துடன்) எழுதுகிறேனா? என்பதைப் புரிந்துக்கொள்ளுங்கள்.

அனைத்து இயக்கங்களைப்பற்றிய எனது நிலைப்பாட்டை குடந்தைப் பேரணியும் இயக்கவாதிகளும் என்ற கட்டுரையில் சொல்லிவிட்டேன்.

எனவே, என்னை ஏதாவது ஒரு இயக்கத்தில் இணைத்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வழி பார்க்காமல், உங்களைப்பற்றிய எனது குற்றச்சாட்டுக்கு இதே இடத்தில் மறுப்பு வையுங்கள். அதுவே நீங்கள் சத்தியவாதிகள் என்பதை நிரூபிக்க நல்ல சந்தர்ப்பமாகும்.

இஸ்லாமிய வழிப்போக்கன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அபு முஹம்மது என்கிற நீங்களே ஒரு அனாமத்துதான். நீங்க என்னவோ உங்க பேரு, ஊரு, வீட்டு நெம்பர் எல்லாம் போட்டுகிட்டு கருத்து சொல்றமாதிரி என்னை அனாமத்து என்கிறீர்கள். அனாமத்தா நீங்க பினாத்துறதுனாலதான் அப்புடியே நானும் பினாத்தி விட்டேன்.

சரி விசயத்திற்கு வருவோம்.

நீங்க எழுதினதையெல்லாம் போய் படிச்சிட்டு அப்புறமா கருத்து சொல்ல சொன்னதுனால நீங்க எழுதின ததஜவினரை அதன் தலைமை கண்டிக்குமா? என்ற கட்டுரையையும் இளையவன் பதில் சொல்வாரா? என்ற கட்டுரையையும் மட்டுமே படிக்க முடிந்தது. நீங்கள் ஒரு பினாத்தல் பேர்வழி என்பதை புரிந்து கொள்ள அந்த இரண்டு கட்டுரைகளுமே போதுமானதாகவும் இருந்தது.

தீன் முஹம்மது என்பவரை கண்டிக்கும் போது அவரை ததஜ கண்டிக்காதா என்று கேள்வி எழுப்பிய நீங்கள் இளையவனின் தவறுக்கு மட்டும் இளையவன் பதில் தருவாரா என்று கேட்டுள்ளீர்களே. இளையவனின் தவறையும் நீங்களாகவே கண்டு கொள்ளவில்லை. அதை இன்னொருவர் சுட்டிக்காட்டியவுடன்தான் இளையவன் பதில் தருவாரா என்று பினாத்தி தங்களை நடுநிலைவாதியாக காட்டிக் கொண்டுள்ளீர்கள்.

எந்த இயக்கத்திலும் இல்லாத தங்களுக்கு தீன் முஹம்மது எழுதியது மட்டும்தான் கண்ணில் தெரிந்திருக்கிறது. சபாஷ் சரியான நடுநிலை பேர்வழிதான் நீங்கள். அது ஒன்றே போதும் நீங்கள் ததஜவினர் மீது கொண்டுள்ள வெறுப்பை புரிந்து கொள்ள.

தீன் முஹம்மதுவை நீங்கள் விமர்சித்து சரியாக 20 நாள் கழித்துத்தான் இளையவனை விமர்சிப்பதுபோல் நடித்துள்ளீர்கள். தீன் முஹம்மதுவை ததஜவின் தலைமையோடு தொடர்புபடுத்தி கட்டுரை எழுதியதற்கும், இளையவனை தமுமுக தலைமையோடு தொடர்பு படுத்தாதமைக்கும் தாங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கவில்லை என்றால் தங்களை தமுமுகவின் அடிவருடி என்றோ, ஜவாஹிருல்லாஹ்வின் அடிவருடி, நடுநிலை வேசமனிந்த ஈனப்பிறவி என்றோ யாரேனும் சொன்னால் தாங்கள் கோபப்படக்கூடாது.

அதுபோல் தங்களுடைய மேற்கண்ட இரண்டு பினாத்தலிலும் உள்ள பாரபட்சங்களை காணும் போது நீங்கள் யாராலோ அவிழ்த்து விடப்பட்டவர்தான் என்பதும் புரிகிறது.

//தீன் முஹம்மது போன்ற பொய்யர் பட்டாளங்களை வைத்துக்கொண்டு இணையத்தில் தன்னை எதிர்ப்பவர்களை நாயைவிட்டுக் கடிக்கும் முறைபோன்ற ஒரு வகையை தனக்கு சம்பந்தமில்லாததுபோல் த.த.ஜ. ஏற்பாடு செய்துவைத்துள்ளது என்பது இவர்கள் மேல் உள்ள பொதுவான குற்றச்சாட்டு என்று எழுதியிருந்தேன்//

தீன் முஹம்மது என்பவரால் கொடுக்கப்பட்ட பதிலுக்கு தாங்கள் இட்ட மறுமொழியில் மேற்கண்ட இந்த செய்தியை குறிப்பிட்டுள்ளீர்கள். தீன் முஹம்மது என்பவர் உங்கள் கூற்றுப்படி பொய்யராகவே இருந்தாலும் அவரை நாய் என்று மறைமுகமான வார்த்தைகளில் திட்டுவதற்கு உங்களுக்கு யார் உரிமை வழங்கியது? (தங்களுடைய ஒரிஜினல் பெயரை போடாமல் அபு முஹம்மத் என்று அனாமத்தாக கட்டுரை எழுதுவது இதற்குதானே)

ததஜவினர் என்ன எழுதினாலும் அதில் உள்ள நியாயங்களை புரிந்து கொள்ளாமல் கேவலமாக விமர்சிப்பதை தனது முழுநேர வேலையாக செய்து வருவதுதான் தங்களுடைய சமுதாய கடமையாக கருதுகிறீர்களோ?

இளையவன் பதில் தருவாரா? என்று தாங்கள் எழுதிய கட்டுரைக்கு இதுவரை எந்த பதிலேனும் வந்ததா? வராத பட்சத்தில் அதையும் கண்டித்து தாங்கள் கட்டுரை எழுதியிருக்க வேண்டுமே. ஏன் எழுதவில்லை? அல்லது தனிப்பட்ட முறையில் இளையவனை கண்டு அந்த பதிலை பெற்றுக் கொண்டீர்களா? உங்கள் பருப்பு எங்களிடம் வேகாது என்பதை அனாமத்தாக புலம்பித் தீர்க்கும் தங்களுக்கு சொல்லி வைக்கிறேன்.

இன்று நீங்கள் விமர்சிக்கும் ததஜவை சேர்ந்த தீன் முஹம்மதாக இருக்கட்டும், உண்மையை உரத்துக்கூறும் உமராக இருக்கட்டும் இவர்கள் யாவரும் எதனால் உருவாக்கப்பட்டார்கள். அல்லது யாரால் உறுவாக்கப்பட்டார்கள்.

நேருக்கு நேராக சந்திக்க திராணியில்லாத தமுமுகவினரின் கள்ள வெப்சைட்டில் வரும் அவதூறான செய்திகளை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் இவர்கள் களத்தில் குதித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்களை கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்ததனால்தான் இவர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரரை தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளவர் என்று இளையவன் என்ற இஸ்லாமிய துரோகியால் எழுதியதனால்தான் இவர்கள் அதற்கு பதில் தருகிறார்கள்.

இதனால் அவர்களுடைய அனைத்து கருத்திற்கும் நான் பொருப்பாக மாட்டேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். நான் உங்களிடம் கேட்கும் கேள்வி என்வென்றால் இப்படி சமுதாயத்தை சீரழிக்கும் விதமாக இளையவன் போன்றோர் நடந்து கொண்ட பொழுது நீங்கள் என்ன குச்சி முட்டாயா (Lollipop) சுவைத்துக் கொண்டு இருந்தீர்கள்.

நாங்கள் சமுதாயத்திற்காக உழைக்கிறோம் பேர்வழி என்று சொல்லித்திரியும் தமுமுகவினர் நடத்தும் கள்ள வெப்சைட்டைப்பற்றி அனாமத்தாக திரியும் தாங்கள் ஒரு நாளேனும் விமர்சித்து கட்டுரை எழுதியதுன்டா? சமுதாயத்தைப்பற்றி ரொம்பவே அக்கறை உள்ளதுபோல் பாவ்லா காட்டும் தாங்கள் இதுபோன்ற தவறுகளுக்கு மூலக்காரணமாக திகழும் தமுமுகவினரையும், அவர்களால் நடத்தப்படும் கள்ள வெப்சைட்டையும்தானே முதன் முதலாக கண்டித்திருக்க வேண்டும்.

நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சகத்தனமாக கருத்துக்களை பரப்புவதை விட்டு விட்டு உறுப்படியான விசயங்களை செய்யப்பாருங்கள். தங்களுடைய கவனத்திற்கு இன்னுமொரு செய்தியை இங்கே தருகிறேன். இளையவன் என்ற பெயரில் கள்ள வெப்சைட்டை நடத்துவது தமுமுகவின் பேராசிரிய பெருந்தொகை ஜவாஹிருல்லாஹ் தான் என்று தற்பொழுது குற்றம் சுமத்தப்படுகிறது. அதையும் சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவரை சிலர் உத்தமர் என்று நம்புகின்றனர். அவரோ தனது பொருப்பை விளங்காமல் கள்ள வெப்சைட்டை நடத்தி வருகிறார். எந்த இயக்கத்திலும் இல்லாத உங்களைப் போன்றவர்கள் ஜவாஹிருல்லாஹ்வை நம்பி வழிகெடும் தமுமுகவினருக்காகவும் சற்று குரல் கொடுத்து அவர்களுடைய நேர்வழிக்கு உதவி செய்யுங்கள்.

இப்னு முஹம்மத்

Anonymous said...

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

எமது மெயிலைப் பார்வையிடும் அபூ முஹம்மது முதல் பல்லாயிரக் கணக்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சகோதரர் அபூ முஹம்மது அவர்களே !

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த ஒருசம்பவத்தை நினைவு கூறுவோமாக !

ஜகாத் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன அதில் ஒரு பேரீத்தம் பழத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பேரன் ஹஸன் (ரலி) சிறு குழந்தையாக இருக்கும் போது எடுத்து வாயில் போட்டு விடுகிறார்கள் சிறு குழந்தை தானே அதுக்கு என்ன தெரியும் என்று விடாமல் அக்குழந்தையினுடைய வாயில் விரலை விட்டு தோண்டி எடுத்து விடுகிறார்கள் அமானிதப் பொருட்கள் முறையாக முறையானவர்களுக்கு போய் சேரவேண்டும் என்கிற நன்னோக்குடனும், அமானித பொருளை பின் வரக் கூடிய சந்ததிகள் விழுங்கி விடக் கூடாது எனும் நன்னோக்கிலுமாகும்.

இன்றும் சுனாமியில் பாதிக்க பட்டவர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கையில் அவர்கள் பெயரைச் சொல்லி வசூல் செய்து அவர்களுக்கு சேர வேண்டிதை முறையாக அவர்களுக்கு சேர்க்காமல் அதில் பேரிடர் மையம் அமைக்கப் போகிறோம் என்று மிலன் மஹாலிலும், அடிக்கல் நாட்டு விழாவில் சமுதாயக் கூடம் அமைப்போம் இதில் பொது நிகழ்ச்சிகளும் நடத்தலாம் என்றும் கூறி விழுங்கி விட்டார்களே ? அவர்கள் உங்களுக்கு பொய்யர்களாகவும், ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் தெரியவில்லையா ?

அவர்கள் ஏழை பரதேசிகளுடைய எத்தனை லட்சங்களை நஷ்டமாக்கினார்கள் ? தெரியுமா ? தெரியாதா ? தீன் முஹம்மது எழுதிய உமரி மேட்டர் எத்தனை ஏழை மக்களுக்கு எத்தனை லட்சத்தை நஷ்டமாக்கியது ? கூறமுடியுமா ? இதற்கு நீங்களும் உங்களுடைய அறிவுப்பூர்வமான ? மெயிலை பிரசுரித்த ரய்சுதீனும் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளீர்கள். (அதனால் பொய்க்கு வக்காலத்து வாங்கவில்லை அது பொய்யுமல்ல )

உமரி மேடையில் தான் அமர்ந்தார் உங்களது கூற்றுக்கள் தான் பொய் என்று நாம் எப்பொழுதும் வாதிட்டதில்லை உமரி மேட்டரை தீன் முஹம்மது சற்று வித்தியாசத்துடன் எழுதினார் என்றே அவைகளுக்கு வியாக்கியானம் அமைத்து எழுதினோம்.

சகோதரர் ரய்சுதீன் அவர்களே !

சமீபகாலமாக நாம் எழுதி வருகிற முக்கியமான விஷயங்களை மூடிமறைப்பதற்காகவும், மக்களுடைய தெளிவான சிந்தனையை திசை திருப்பி விடுவதற்காகவும் பல மாதங்களுக்கு முன் நடந்த தீன் முஹம்மது விஷயத்தை பல பெயர்களில் தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

ஆக்கப் பூர்வமான விஷயங்களுக்கும் அறிவுப் பூர்வமான வாதங்களுக்கும் உங்களது வலைப்பதிப்பில் இடமளித்து வந்தால் அது மக்களிடம் சென்றடைய வாய்ப்புள்ளது மாறாக சொன்னதையே திரும்ப திரும்ப . . . எனும் கோயபல்ஸ் வாரிசுகளின் மின்னஞ்சல்களுக்கு உங்களது வலைபதிப்பில் இடமளிக்க முன்வருவீர்களேயானால் நீங்கள் யார் ? என்பதையும் உங்களது நோக்கம் என்ன என்பதையும் மக்கள் புரிந்து கொள்வார்கள். நடுநிலை என்றால் நடுநிலை தவறக் கூடாது. ஒரு நிலை ஆதரவு என்றால் தெரிவித்து விடவேண்டும். நடுநிலைவாதி போல் வேடம் பூணக் கூடாது.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : உலகில் இரண்டு முகங்களைக் கொண்டிருந்த மனிதனை இறுதித்தீர்ப்பு நாளில் மிகத் தீய மனிதனாக நீங்கள் காண்பீர்கள். அவன் சிலரை ஒரு முகத்துடன் சந்திப்பான், வேறு சிலரை இன்னொரு முகத்துடன் சந்திப்பான்.' அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி, முஸ்லிம்)

அஸ்ஸலாமு அலைக்கும்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

Anonymous said...

//தீன் முஹம்மது தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ளும்போது கூட (முஜிபுர்ரஹ்மான் உமரியைப் பற்றி எழுதப்போய் நமது புளுகு மூட்டை வெளிவந்துவிட்டதே என்று எண்ணி) அவரை கடுப்பாக ஒரு திட்டு திட்டிவிட்டு 'நான் வேண்டுமானால் எழுதியதை ஒப்புக்கொள்கிறேன்' என்கிறார்//

அபு முஹம்மத் அவர்கள் வெறுப்பின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார் போல தெரிகிறது. தவறை ஒப்புக் கொள்பவரை அப்படி எண்ணினார் இப்படி எண்ணினார் என்று சகட்டு மேனிக்கு கற்பனை குதிரையை பறக்க விட்டு அபாண்டமாக அவதூறு செய்கிறார்.

அந்த அல்லாஹ் அனைவரையும் நேர்வழியில் நடத்துவானாக..

இஸ்லாமிய தமிழன்

ஷாஹிரன் said...

//தீன் முஹம்மது என்பவர் ததஜவின் ரிப்போர்ட்டர். (கையும் களவுமாக மாட்டிக்கொண்டதால் ஜித்தாவின் உறுப்பினர் அல்ல என்று செய்தி வெளியிட்டுள்ளனர்)//

தீன் முஹமது என்பவர் ததஜவின் ஜித்தா கிளை உறுப்பினர் அல்ல, அவர் யாரென்றும் எங்களுக்கு தெரியாது என்று ஜித்தா கிளை மறுப்பு தெரித்து அதை உணர்விலும் வெளியிட்டிருக்கிறார்கள். அதை அபு முஹமதுவும் அவருடைய கட்டுரையில் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க தீன் முஹமது ததஜவின் ரிப்போர்டர் என்ற அபு முஹமதின் மேற்கண்ட செய்திக்கு ஆதாரங்களை காட்ட வேண்டும்.

அனுமானங்களை ஆதாரமாக கொள்ளக்கூடாது.

ஷாஹிரன் said...

//இவர்களின் தடுமாற்ற விஷயங்களை சுட்டிக்காட்டுகிறவர்களுக்கும், அதற்கு உதவுகிறவர்களுக்கும் மிரட்டல் விடப்படுகின்றன. அசத்தியத்தில் உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட வழியைத் தவிர வேறு வழியில்லை என்பதை அனைவரும் அறிந்த விஷயமே//

யார் தடுமாறியது, யார் தடம் மாறியது,யார் யாரை எங்கு மிரட்டினார்கள். சும்மா மொட்டையாக இப்படிச் சொன்னால் என்னவென்று நினைப்பது. இதையும் அபு முஹமது அவர்கள் தெளிவு படுத்தினால் நன்று.

அபூ முஹம்மத் said...

"தீன் முஹம்மது தவறு செய்துவிட்டதை ஒத்துக்கொண்டு விட்டார் என்கிறீர்கள். உண்மையை உரத்துக்கூறும் உமர் என்பவர், தீன் முஹம்மது தவறு செய்யவில்லை என்கிறார். இந்த இருவரில் யார் பொய்யர் என்பதை தயவு செய்து நீங்கள் தீர்ப்பு வழங்க வேண்டும்" என்று எனது முந்தைய கமென்ட்ஸில் கூறியிருந்தேன். இதற்கு உங்களின் பதிலென்ன?

உங்களின் விமர்சனம் முழுவதிலும் "பொய்களை உரத்துக்கூறும்" ததஜ உமரின் தஃப்ஸீர்களில் உள்ள அபத்தங்களை ஒத்துக்கொள்வதையோ அல்லது மறுப்பதையோ தவிர்த்துவிட்டு, தமுமுக காரன் தவறு செய்கிறானே, அவனை கண்டிக்காமல் எங்களை மட்டும் ஏன் கண்டிக்கிறாய் என்ற பதிலே மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

இளையவன் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிடுவதால், ததஜவினரும் அப்படியே செய்யவர்கள் என்பது, தஃவா செய்வதாக கூறிக்கொள்ளும் உங்கள் இயக்கத்தினருக்கு அழகல்ல.

//அபு முஹம்மது என்கிற நீங்களே ஒரு அனாமத்துதான். நீங்க என்னவோ உங்க பேரு, ஊரு, வீட்டு நெம்பர் எல்லாம் போட்டுகிட்டு கருத்து சொல்றமாதிரி என்னை அனாமத்து என்கிறீர்கள். அனாமத்தா நீங்க பினாத்துறதுனாலதான் அப்புடியே நானும் பினாத்தி விட்டேன்.//

1) Blogger - பிளாக்கர் கணக்கு வைத்துருப்பவர்களுக்காகவும்,
2) Other - பிளாக்கர் அக்கவுண்ட் இல்லாதவர்கள் தன்னுடைய பெயருடன் விமர்சனத்தை பதிவதற்காகவும்,
3) Anonymous - அனாமத்தாக (பெயரை போட விரும்பாதவர்) பதிவதற்காகவும்

என பிளாக்கர் வலைப்பதிவுகளில் 3 வழிகளில் விமர்சனத்தை பதிவதற்கு வசதி செய்துள்ளார்கள்.

இதில் நீங்கள் செய்தது 3-வது வழி. அட்லீஸ்ட் உங்களின் விமர்சனத்தின் இறுதியிலாவது பெயரை இட்டிருந்தால் இதுபோன்ற பிரச்னைக்கு வழியே இல்லை.

எனது கட்டுரை தீன் முஹம்மது என்பவருக்காக எழுதப்பட்டதல்ல. உண்மையை உரத்துக்கூறுவதாக சொல்லும் ததஜவின் உமர் என்பவர், ஏன் இப்படி தீன் முஹம்மது என்ற நபர் சொன்ன பொய்களுக்கு வரிந்துக்கட்டிக்கொண்டு பொய் தஃப்ஸீர் செய்ய வேண்டும் என்பதால்தான்.

ததஜவின் உமருக்கா எழுதப்பட்ட கட்டுரையை, தீன் முஹம்மதுவுக்காக என்று நினைத்துக்கொண்டு பினாத்துவது நீங்களா? நானா? என்று இதைப்படிப்பவர் கண்டுக்கொள்வார்கள்.

எனவே உங்கள் விமர்சனத்தில் நீங்கள் பதிந்துள்ள அனாமதேயம், பினாத்துதல் ஆகிய வார்த்தைகள் எனக்குரியது அல்ல என்பதால், உங்களுக்கே திருப்பி தருகிறேன்.

//நீங்க எழுதினதையெல்லாம் போய் படிச்சிட்டு அப்புறமா கருத்து சொல்ல சொன்னதுனால நீங்க எழுதின ததஜவினரை அதன் தலைமை கண்டிக்குமா? என்ற கட்டுரையையும் இளையவன் பதில் சொல்வாரா? என்ற கட்டுரையையும் மட்டுமே படிக்க முடிந்தது. நீங்கள் ஒரு பினாத்தல் பேர்வழி என்பதை புரிந்து கொள்ள அந்த இரண்டு கட்டுரைகளுமே போதுமானதாகவும் இருந்தது.//

(பொய்களை உரத்துக்கூறும் ததஜவின் உமர் உட்பட) ததஜவினர் விட்ட 10 லட்சம் புளுகுகள் தெரிந்துவிடும் என்றா குடந்தைப் பேரணியைப் பற்றி படிக்கவில்லை?. உணர்வு வார இதழின் அறியாமைகள் மினா விபத்து விஷயத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டதே, அதனை தெரிந்துக்கொள்ள உங்களுக்கு மனம் இல்லையா?. தமுமுக ஏற்க வேண்டுமா? மறுக்க வேண்டுமா? என்ற கட்டுரையை படித்தால் என்னை தமுமுகவின் அடிவருடி லிஸ்டில் சேர்க்க முடியாமல் போய்விடும் என்றா அதனை படிக்கவில்லை?

//தீன் முஹம்மது என்பவரை கண்டிக்கும் போது அவரை ததஜ கண்டிக்காதா என்று கேள்வி எழுப்பிய நீங்கள் இளையவனின் தவறுக்கு மட்டும் இளையவன் பதில் தருவாரா என்று கேட்டுள்ளீர்களே. இளையவனின் தவறையும் நீங்களாகவே கண்டு கொள்ளவில்லை. அதை இன்னொருவர் சுட்டிக்காட்டியவுடன்தான் இளையவன் பதில் தருவாரா என்று பினாத்தி தங்களை நடுநிலைவாதியாக காட்டிக் கொண்டுள்ளீர்கள்.

எந்த இயக்கத்திலும் இல்லாத தங்களுக்கு தீன் முஹம்மது எழுதியது மட்டும்தான் கண்ணில் தெரிந்திருக்கிறது. சபாஷ் சரியான நடுநிலை பேர்வழிதான் நீங்கள். அது ஒன்றே போதும் நீங்கள் ததஜவினர் மீது கொண்டுள்ள வெறுப்பை புரிந்து கொள்ள.//

தீன் முஹம்மது விஷயத்தில் ததஜ கண்டிக்குமா? என்று நான் எழுதியதற்கு காரணம், சகோ. பாக்கர் அவர்களிடம் நேரடியாக ஜித்தாவில் இதுபற்றி சொல்லியதற்கு அதற்காக உடனே ததஜவின் தளத்தில் மறுப்பு தெரிவிப்பதாக சொல்லியிருந்தார் என்பதாகும்.

//தங்களை தமுமுகவின் அடிவருடி என்றோ, ஜவாஹிருல்லாஹ்வின் அடிவருடி, நடுநிலை வேசமனிந்த ஈனப்பிறவி என்றோ யாரேனும் சொன்னால் தாங்கள் கோபப்படக்கூடாது.//

தஃவா செய்வதாக கூறிக்கொள்ளும் ததஜவினரிடமிருந்து "என்ன அரிப்போ" என்ற சொற்கள் கிடைத்ததால், அவர்களின் தஃவா பணி என்னவென்று தெரிந்தபின்னர் நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியுமா?

//அதுபோல் தங்களுடைய மேற்கண்ட இரண்டு பினாத்தலிலும் உள்ள பாரபட்சங்களை காணும் போது நீங்கள் யாராலோ அவிழ்த்து விடப்பட்டவர்தான் என்பதும் புரிகிறது.//

ததஜவும் தமுமுகவும் என்னை நடுவராக நியமித்தீர்களா? தமுமுகவைப் போன்று முஸ்லிம் லீக் இருக்கிறதே அதனை ஏன் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? அல்லது ததஜவினரை அரசியல்வாதிகள் என்று டிக்லேர் செய்யுங்கள்.

மார்க்கம் சொல்ல வந்தவர்கள் தவறு செய்யும்போது, அரசியல்வாதிகளைவிட அதிகமாக கண்டிக்கப்பட்டார்கள் என்பதை தஃவா பணியில் உள்ளவர்கள் நன்கு உணர்வார்கள். தஃவா பணி என்றால் என்னவென்று அறியாதவர்களும், தஃவா பணியில் பாதைமாறிப் போகிறவனால் சமுதாயம் எதிர்நோக்கும் மிகப்பெரும் பிரச்னைகளை அறியாதவர்களும் வேண்டுமானால் தஃவா செய்கிறவர்களும், அரசியல்வாதிகளும் ஒன்று என கணக்கு போடலாம்.

மக்கள் மன்றத்தில் உங்களைப்பற்றி எனக்குத் தெரிந்ததை அதுவும் ஆதாரத்துடன் சிக்கியதை வைக்கிறேன். ஒரு கையில் தமுமுக -வையும் இன்னொரு கையில் ததஜ வையும் வைத்துக்கொண்டு விமர்சனம் செய்வது இயக்கவாதிகளின் பண்பு. ஒரு கையில் இந்த இயக்கங்களையும் இன்னொரு கையில் குர்ஆன் சுன்னாவையும் வைத்து எடைபோடுவதே நல்ல முஸ்லிமுக்கு அழகு. பொத்தாம் பொதுவாக தெளிவு இல்லாமல் இயக்கங்களும் கழகங்களும் தவறு செய்கின்றன என்று பேசினால் உங்களைப்போன்ற பேர்வழிகள் துடைத்துவிட்டுக்கொண்டு போய்விடுவார்கள் என்று நன்றாக நான் அறிந்ததே. அதனால்தான் எனக்கு கிடைத்த ஆதாரத்தை வைத்து தெள்ளத்தெளிவாக இயக்கங்களையும் ஆட்களையும் பெயரிட்டு குறிப்பிடுகிறேன். ஒரு தனிமனிதனின் கண்ணியம் முக்கியமா? அல்லது இஸ்லாம் முக்கியமா? என்றால் எனக்கு இஸ்லாம்தான் முக்கியமாகப்படுகிறது.

//தீன் முஹம்மது போன்ற பொய்யர் பட்டாளங்களை வைத்துக்கொண்டு இணையத்தில் தன்னை எதிர்ப்பவர்களை நாயைவிட்டுக் கடிக்கும் முறைபோன்ற ஒரு வகையை தனக்கு சம்பந்தமில்லாததுபோல் த.த.ஜ. ஏற்பாடு செய்துவைத்துள்ளது என்பது இவர்கள் மேல் உள்ள பொதுவான குற்றச்சாட்டு என்று எழுதியிருந்தேன் என,

தீன் முஹம்மது என்பவரால் கொடுக்கப்பட்ட பதிலுக்கு தாங்கள் இட்ட மறுமொழியில் மேற்கண்ட இந்த செய்தியை குறிப்பிட்டுள்ளீர்கள். தீன் முஹம்மது என்பவர் உங்கள் கூற்றுப்படி பொய்யராகவே இருந்தாலும் அவரை நாய் என்று மறைமுகமான வார்த்தைகளில் திட்டுவதற்கு உங்களுக்கு யார் உரிமை வழங்கியது?//

தீன் முஹம்மது சொன்ன பொய்யை குர்ஆன் வசனத்துடன் முறையாக சுற்றிக்காட்டினேன். அதற்கு பதில் கொடுக்கும்போது, "என்ன அரிப்போ" என்று தீன் முஹம்மது எழுதியிருந்தார். குர்ஆன் மற்றும் நபிமொழியே தனது உயிர் மூச்சு என சொல்லும் ததஜவினரிடம் நான் குர்ஆன் வசனத்தை சுட்டிக்காட்டி சொல்லும்போது, அதே குர்ஆன் வசனத்தை சுட்டிக்காட்டி அவரின் பொய்க்கு ஆதாரம் வைக்கலாம் அல்லது வாய் மூடி இருக்கலாம். மாறாக "என்ன அரிப்போ" என்று அசிங்கமான வார்த்தையை ஆரம்பித்து வைத்தவரை நோக்கி கோபமடைச் செய்யாத உங்களின் உணர்வு, நான் பயன்படுத்திய வார்த்தைகள் எப்படி கோபப்பட வைத்தது என்று எனக்கு சொல்வீர்களா?

//(தங்களுடைய ஒரிஜினல் பெயரை போடாமல் அபு முஹம்மத் என்று அனாமத்தாக கட்டுரை எழுதுவது இதற்குதானே)//

அபூ முஹம்மது என்ற காரணப்பெயர் இஸ்லாத்தில் கூடாது என்பதற்கு ஆதாரத்தை தாருங்களேன்?

//ததஜவினர் என்ன எழுதினாலும் அதில் உள்ள நியாயங்களை புரிந்து கொள்ளாமல் கேவலமாக விமர்சிப்பதை தனது முழுநேர வேலையாக செய்து வருவதுதான் தங்களுடைய சமுதாய கடமையாக கருதுகிறீர்களோ?//

கேவலமாக விமர்சிப்பது ததஜ-வின் பழக்கம். எனக்கு முழுநேர வேலையும் இதுவல்ல என்பதால்தான் நூற்றுக்கணக்கான அபத்த கட்டுரைகளுக்கிடையே ஒரு சிலவற்றிற்கு மட்டும் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளேன். நான் சொன்னவற்றில் ஏதேனும் ஆதாரங்கள் இல்லையென்றால் கேளுங்கள்.

//இளையவன் பதில் தருவாரா? என்று தாங்கள் எழுதிய கட்டுரைக்கு இதுவரை எந்த பதிலேனும் வந்ததா? வராத பட்சத்தில் அதையும் கண்டித்து தாங்கள் கட்டுரை எழுதியிருக்க வேண்டுமே. ஏன் எழுதவில்லை? அல்லது தனிப்பட்ட முறையில் இளையவனை கண்டு அந்த பதிலை பெற்றுக் கொண்டீர்களா?//

நீங்களொரு "பினாத்தல் கேஸ்" என்பதை மீண்டும் நிரூபிக்கிறீர்கள். தீன் முஹம்மதின் தவறை குர்ஆன் வசனத்துடன் அழகாக சுட்டிக்காட்டியதற்கு உங்கள் தரப்பிலிருந்து "என்ன அரிப்போ" என்று பதில் வந்தது. ஆனால் இளைவன் தரப்பிலிருந்து
"சுட்டிக்காட்டிய தமிழ்முஸ்லிம் மன்றத்தினருக்கு நமது பதில்களும் நன்றிகளும்"
என்ற கட்டுரையை அவரது தளத்தில் பிரசுரித்தார். அரசியல் பேசும் அவர்களிடமிருந்து வந்த பதிலும், குர்ஆன் சுன்னா பேசும் உங்களிடமிருந்து வந்த பதிலும் ஒன்றா?

இப்படியெல்லாம் உங்களுக்கு சொன்னால் புரியாது என்பதால் எடுத்தெழுதுகிறேன்.

"சுட்டிக்காட்டிய தமிழ்முஸ்லிம் மன்றத்திற்கு நன்றி" - இளையவன்.

"என்ன அரிப்போ" -தீன் முஹம்மது.

//உங்கள் பருப்பு எங்களிடம் வேகாது என்பதை அனாமத்தாக புலம்பித் தீர்க்கும் தங்களுக்கு சொல்லி வைக்கிறேன்.//

பருப்பாக இருந்தால்தானே உங்களிடம் வேகாது. நான் ஆதாரங்களுடன் இடுவதெல்லாம் உங்களுக்கெதிரான நெருப்பு. நெருப்பு உங்களுக்கு சுடவில்லையென்றால், உங்களை சொரணையற்றவர்கள் என்று மக்கள் புரிந்துக்கொள்ளட்டும்.

மேலும், நான் செய்வது புலம்பலாக உஙகளுக்கு தெரியுமேயானால் கண்டுக்கொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

//இன்று நீங்கள் விமர்சிக்கும் ததஜவை சேர்ந்த தீன் முஹம்மதாக இருக்கட்டும், உண்மையை உரத்துக்கூறும் உமராக இருக்கட்டும் இவர்கள் யாவரும் எதனால் உருவாக்கப்பட்டார்கள். அல்லது யாரால் உறுவாக்கப்பட்டார்கள்.

நேருக்கு நேராக சந்திக்க திராணியில்லாத தமுமுகவினரின் கள்ள வெப்சைட்டில் வரும் அவதூறான செய்திகளை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் இவர்கள் களத்தில் குதித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்களை கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்ததனால்தான் இவர்கள் அதற்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரரை தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளவர் என்று இளையவன் என்ற இஸ்லாமிய துரோகியால் எழுதியதனால்தான் இவர்கள் அதற்கு பதில் தருகிறார்கள்.//

தமுமுகவினரின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். அதனை நான் வரவேற்கிறேன். அத்தவறுகளை தக்க ஆதாரங்களுடன் அழகாக இதே மன்றத்தில் பதியுங்கள்.

//இதனால் அவர்களுடைய அனைத்து கருத்திற்கும் நான் பொருப்பாக மாட்டேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.//

பொறுப்புடன் வரிந்துக்கட்டி வந்தவர், பொறுப்பில்லை என்று பாதியில் நழுவுவதேன்?. அப்படியில்லையென்றால் எந்த கருத்திற்கு தாங்களோ, ததஜவோ பொறுப்பில்லை என்பதையும் பட்டியலிட்டு விடுங்கள். உதாரணத்திற்கு தீன் முஹம்மது, ததஜ உமர் ஆகியோர் பயன்படுத்திய கருத்துகளை குறிப்பிடுங்களேன்.

//நான் உங்களிடம் கேட்கும் கேள்வி என்வென்றால் இப்படி சமுதாயத்தை சீரழிக்கும் விதமாக இளையவன் போன்றோர் நடந்து கொண்ட பொழுது நீங்கள் என்ன குச்சி முட்டாயா (Lollipop) சுவைத்துக் கொண்டு இருந்தீர்கள்.//

Lollipop போன்ற மிட்டாய்கள் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை (ஒவ்வாமை). ததஜவினர் வழிகெட்டுப்போனால் இந்த சமுதாயத்தில் புதிய "பிஜேயானிகள்" என்ற மதம் உருவானால் அதில் எனது பிந்தைய தலைமுறையினர் மாட்டிக்கொண்டு நரகத்திற்கு செல்ல நேரிடுமோ என்று கருதுகிறேன். தமுமுக பத்தோடு பதினொன்றாக முஸ்லீம் லீக்காக மாறுவதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

//நாங்கள் சமுதாயத்திற்காக உழைக்கிறோம் பேர்வழி என்று சொல்லித்திரியும் தமுமுகவினர் நடத்தும் கள்ள வெப்சைட்டைப்பற்றி அனாமத்தாக திரியும் தாங்கள் ஒரு நாளேனும் விமர்சித்து கட்டுரை எழுதியதுன்டா?//

"இளையவன் பதில் தருவாரா?" என்று தாங்கள் எழுதிய கட்டுரைக்கு இதுவரை எந்த பதிலேனும் வந்ததா? என்று நீங்கள் மேலே எழுதியதை மறந்துவிட்டீர்களோ? அனாமத்தாக உங்களைப்போன்று நான் எழுதுவதில்லை. காரணப்பெயர் வைத்துதான் எழுதுகிறேன். நீங்கள் எழுதியதைப் போன்று பெயர் போடாமல் எழுதவதுதான் அனாமத்து (Anonymous). காரணப்பெயர் போட்டு எழுதினாலும் அனாமத்து என்றால், ததஜவில் இருக்கும் அபூ ரும்மானா என்றொருவர் இதே வலைப்பதிவில் எழுதுகிறார். அவரும் அனாமத்துதான் என்று நீங்கள் சொல்கிறீர்களா?

அபூ முஹம்மத் என்ற எனது காரணப்பெயர் அனாமத் என்றால் இதே பதிவில் ஒரு விமர்சனத்தை பெயரில்லாமலும் ஒரு விமர்சனத்தில் காரணப்பெயர் (இப்னு முஹம்மத்) இட்டும் எழுதும் நீங்கள் "சூப்பர் அனாமத்தா?" என்பதை தாங்கள்தான் தெளிவுப் படுத்த வேண்டும்.

//சமுதாயத்தைப்பற்றி ரொம்பவே அக்கறை உள்ளதுபோல் பாவ்லா காட்டும் தாங்கள் இதுபோன்ற தவறுகளுக்கு மூலக்காரணமாக திகழும் தமுமுகவினரையும், அவர்களால் நடத்தப்படும் கள்ள வெப்சைட்டையும்தானே முதன் முதலாக கண்டித்திருக்க வேண்டும்.//

அதற்கு முந்தி பி.ஜே.யின் பிரிவினையை கண்டித்திருக்கவேண்டும் என்று ஏன் தாங்கள் சொல்வதில்லை?. எனக்கு தெரிந்தவற்றை நான் கண்டிக்கிறேன். உங்களுக்கு தெரிந்தவற்றை நீங்கள் கண்டிக்கிறீர்கள். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இயக்கத்தினராக பட்டியலிட்டு அவனைக் கண்டித்தாயா? இவனை கண்டித்தாயா? என்று கூறுவது முட்டாள்தனமாக உங்களுக்கு படவில்லையா?

அதே நேரத்தில், மற்ற இயக்கத்தினரின் தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டுவதை வரவேற்கவும் செய்கிறேன்.

//நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சகத்தனமாக கருத்துக்களை பரப்புவதை விட்டு விட்டு உறுப்படியான விசயங்களை செய்யப்பாருங்கள்.//

பொய்யர்களை அடையாளம் காட்டினால் "நயவஞ்சகத்தனம்" என்றால், "பொய்யர்களுக்காக பரிந்து வரும்" உங்களுக்கு என்ன பெயர் என்று சொல்லவேண்டும். அப்படி சொன்னால் ததஜவின் புதிய அகராதி சொற்களில் ஒன்றைச் சேர்த்துக்கொள்ள எனக்கு வசதியாக இருக்கும்.

//தங்களுடைய கவனத்திற்கு இன்னுமொரு செய்தியை இங்கே தருகிறேன். இளையவன் என்ற பெயரில் கள்ள வெப்சைட்டை நடத்துவது தமுமுகவின் பேராசிரிய பெருந்தொகை ஜவாஹிருல்லாஹ் தான் என்று தற்பொழுது குற்றம் சுமத்தப்படுகிறது. அதையும் சற்று கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவரை சிலர் உத்தமர் என்று நம்புகின்றனர். அவரோ தனது பொருப்பை விளங்காமல் கள்ள வெப்சைட்டை நடத்தி வருகிறார்.//

இளையவனை ஜவாஹிருல்லாஹ் என்று மீண்டும் மீண்டும் சொன்னால் இளையவன் அவரது பணியை நிறுத்திவிடப்போகிறாரா என்ன? நீங்கள் இளையவனை ஜவாஹிருல்லாஹ் என்றால், தீன் முஹம்மது, ததஜவின் உமர் போன்றவர்களை பி.ஜே என்று எழுதுவார்கள். போட்டிக்கு போட்டி போடுவதைவிட, ஆதாரத்தை முன் வையுங்கள். இளையவனின் தளத்தை மக்கள் வெறுக்கும்படி செய்யுங்கள். அப்படி மக்கள் ஏற்கனவே வெறுப்பதாக நீங்கள் நினைத்தால், அதனைப்பற்றி கவலைப்படாமல் இருங்கள்.

//எந்த இயக்கத்திலும் இல்லாத உங்களைப் போன்றவர்கள் ஜவாஹிருல்லாஹ்வை நம்பி வழிகெடும் தமுமுகவினருக்காகவும் சற்று குரல் கொடுத்து அவர்களுடைய நேர்வழிக்கு உதவி செய்யுங்கள்.//

1) //நீங்கள் யாராலோ அவிழ்த்து விடப்பட்டவர்தான் என்பதும் புரிகிறது.//

2) //எந்த இயக்கத்திலும் இல்லாத உங்களைப் போன்றவர்கள்//

என்று இரண்டு மாதிரியாக எழுதியுள்ளீர்கள். இதில் எது சரி என்று தெளிவுப் படுத்திய பின்னர் எனக்கு மேற்கண்ட அறிவுரையைச் சொல்லுங்கள்.

அபூ முஹம்மத் said...

//அபு முஹம்மத் அவர்கள் வெறுப்பின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார் போல தெரிகிறது. தவறை ஒப்புக் கொள்பவரை அப்படி எண்ணினார் இப்படி எண்ணினார் என்று சகட்டு மேனிக்கு கற்பனை குதிரையை பறக்க விட்டு அபாண்டமாக அவதூறு செய்கிறார்.//

கற்பனையா உண்மையா என்பதை இங்கு சொடுக்கி தெரிந்துக்கொள்ளலாம்.

அபூ முஹம்மத் said...

//அப்படியிருக்க தீன் முஹமது ததஜவின் ரிப்போர்டர் என்ற அபு முஹமதின் மேற்கண்ட செய்திக்கு ஆதாரங்களை காட்ட வேண்டும். அனுமானங்களை ஆதாரமாக கொள்ளக்கூடாது.//

ஷாஹிரன்,
நான் அனுமானங்களை பேசவில்லை. ததஜ-வின் உமர் எழுதிவற்றிலேயே ஆதாரம் உள்ளது. எனது கட்டுரையை படிக்காமலேயே எழுதுகிறீர்களா? அல்லது வேண்டுமென்றே எழுதுகிறீர்களா?

ஆதாரத்தை மீண்டும் எடுத்தெழுதுகிறேன்.

////முஜிபுர்ரஹ்மான் உமரி ததஜ வின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ளார் சிறிது நேரத்தில் விடைபெற்று விட்டார் என்பது மட்டுமே எமது ரிப்போர்ட்டர் சகோ தீன்முஹம்மது அவர்களுக்கு கிடைத்த தகவலாகும். -ததஜ உமர்////

//யார் தடுமாறியது, யார் தடம் மாறியது, யார் யாரை எங்கு மிரட்டினார்கள். சும்மா மொட்டையாக இப்படிச் சொன்னால் என்னவென்று நினைப்பது. இதையும் அபு முஹமது அவர்கள் தெளிவு படுத்தினால் நன்று.//

தடுமாறியதற்கு ஆதாரம்:


ஜகாத் சட்டங்கள்: ஜனவரி(2006) ஏகத்துவத்தில் மீண்டும் குழப்பங்கள்


அரைக்கால் டவுசரில்
தொழுகையா?


பெண்களின் ஆடை
அளவில் ஏன் இந்த முரண்பாடு?தடம் மாறியதற்கு ஆதாரம்:

த.த.ஜா-வுக்கென்று தனி ஈமான்!


மிரட்டப்பட்டதற்கு ஆதாரம்:

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் த.த.ஜ.வினர்

முத்துப்பேட்டை said...

அன்புள்ள அபூமுஹம்மத்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
'பொய்யை உரத்துக் கூறும் ததஜ-வின் உமர்' கட்டுரை கண்டேன். தீன் முஹம்மதுவின் கட்டுரைகளில் மேலும் பல பொய்கள் இருந்தாலும், முக்கியமான ஒன்றை விட்டு விட்டீர்கள் என எண்ணுகிறேன்.
அதாவது, பாக்கரின் ஜித்தா விஜயத்தை, ரிப்போர்ட் செய்த தீன் முஹம்மது, வரலாறு மட்டுமல்ல புவியியலும் தெரியவில்லை.
'சவூதியின் கிழக்குப் பகுதியான யான்புவிலிருந்து வந்திருந்த....' என்று எழுதியிருப்பதிலிருந்து தீன் முஹம்மது வரலாற்றை மட்டுமல்ல பூகோளத்தையும் மாற்றும் வல்லமை படைத்தவராகவே தெரிகிறது. இத்தகைய பொய், புரட்டுகளிலிருந்து வல்ல அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.
வஸ்ஸலாம், அபூஹாஜரா 11.06.2006