Tuesday, April 11, 2006

சேராத இடந்தனிலே சேர வேண்டாம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

சேராத இடந்தனிலே சேர வேண்டாம்.

எமது மெயிலைப் பார்வையிடும் பல்லாயரக் கணக்கானோருக்கும் அஸ்ஸ்லாமு அலைக்கும் (வரஹ்)

உள்ளதும் போச்சுதடா நொல்லக் கண்ணா என்று தலையில் கையை வைத்துக் கொண்டு ஒரே அழுகையாய் அழுது புலம்பி தவித்துக் கொண்டிருக்கிறார்களாம் காதர் மொய்தீனும் , அவரது ஆதரவாளர்களும் ( அந்தோப் பரிதாபம் ).

முட்டியப் பின் குணிய நினைப்பவர் பேராசிரியராக இருப்பதற்கு தகுதி வாய்ந்தவரா ? இவரைப் பொறுத்தவரை பேராசிரியராக இருப்பதற்கும் தகுதி கிடையாது, முஸ்லீம் லீக்கில் தலைவராக இருப்பதற்கும் அறவேத் தகுதி கிடையாது.

தான் மனவராக இருக்கும் போது கற்றுக்கொண்ட, தனது மானவர்களுக்கு பயிற்றுவிக்கும் முக்கியமான உபதேசங்களில்

சோராத இடந்தனிலே சேரவேண்டாம் . . .
துஷ்டனை கண்டால் தூர விலகு

போன்ற முக்கியமான பாலர் பாட உபதேசங்களை தானும் தனது வாழ்க்கைக்கு உகந்ததாக்கிக் கொள்ளல் வேண்டும். காரணம் அவர் தனி மனிதரல்ல ஒரு சமுதாயத் தலைவராவார். தமுமுகவினர் எந்த இலக்கை ( பணத்தையும், பதவியையும் ) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். சமீபத்தில் சுனாமி கணக்கு வழக்கை விசாரிக்கும் நடுவர் குழுவில் அவரும் பறிந்துரைக்கப் பட்டார் , கடைசிவரை நடுவர் குழுவில்லாமலேயே கணக்கை சமர்ப்பித்து விட்டதாக அவர்கள் விட்ட அறிக்கையையும் இவர் அறிவார் அவ்வாறிருக்கையில் எதுவும் தெரியாதவர் போல் தமுமுகவினருக்கு ஒருத் தொகுதியை தாரை வார்க்க முன்வந்தது தலைவர் எனும் தகுதிக்கு அறவே அவர் லாயக்கற்றவர் என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியது .

முஸ்லீம் லீக்கிற்குல் தமுமுகவின் பிரவேசத்தால் அதன் தனது ஆக்கிரமிப்புப் புத்தியால், லீக்கிற்கு ஒதுக்கிய 3 தொகுதிகளில் ஒருத் தொகுதி பாளையங்கோட்டை அநியாயமாக பறி போய் விட்டது .

இதிலிருந்தாவது தமுமுகவினர் யார் ? அவர்களுடைய நோக்கம் என்ன ? என்பதை லீக்கும் தமிழ் முஸ்லீம்களும் தெரிந்து கொள்ள கடமைப் பட்டுள்ளனர் .

தான் விரும்பிய புறா தமது கரங்களின் பிடிக்குள் வந்து விடவேண்டும். அது எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அது அவர்களுக்குப் பிரச்சனை இல்லை வரவில்லையென்றால் அதைப் பிடித்துக் கொண்டு வந்து அதன் சிறகுகளை முறித்து அதைப் பறக்கவிடாமலும், அடுத்தவனுக்கு உதவ விடாமலும் சிதைத்து விடுவார்கள் சில ஈனப்புத்தி பேர்வழிகள். முற்றிலும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்களே தமுமுகவினர். ( தமுமுக எனும் மூதறிஞர் பிஜே அவர்களின் சுதந்திரப் பறவை இன்னாள் சேடிஸ்டு;களுடைய கோரப்பிடிக்குள் சிக்கித்தவித்துக் கொண்டிருப்பது உங்களுகு;கு உதாரணமாகும்)

விஷயத்திற்கு வருவோம்
டிசம்பர் திருடனுக்கு பாளையங்கோட்டை ஒதுக்கப்பட்ட செய்தியறிந்த மில்லத் குடும்பத்தார்களும் , சத்தார் சாஹிபும் அவரது ஆதரவாளர்களும் பாளையங்கோட்டை தொகுதியை உள்ளடக்கிய அனைத்து ஏரியாக்களிலும் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர் இறுதியில் அது கைகலப்பிலும் முடிந்தது வரலாறு கானாத அளவுக்கு பாளையங்கோட்டை ஸ்தம்பித்தது .

நிலமை தீவிரமடைவதைக் கண்ட காதர் மொய்தீன் டிசம்பர் திருடனுக்கு கல்தா கொடுத்து விட்டு பாளையங்கோட்டையைத் திரும்பப் பெற்றார் .

விடுவார்களா ? டிசம்பர் திருடன் ஆதரவாதளர்கள், அறிவாளயத்தை நோக்கிப் புடைசூள படையெடுத்தார்கள் அறிவாளயம் ஸ்தம்பித்தது .

பழம் கனிந்து பாலில் விழுந்த செய்தியறிந்த கருனாநிதி தேர்தலும் நெருங்கி வருவதால் முஸ்லீம் லீக் உடைந்து லீக்கும் லி தமுமுகவும் இருப்பிரிவாக மோதிக் கொள்வதால் ஏற்கனவே தவ்ஹீத் ஜமாத் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதால் மொத்த முஸ்லீம் சமுதாய ஓட்டுக்களும் பிரிந்து விட ஏதுவாக அமைந்து விடும் என்று கருதி பிரச்சனையை முடிவுகுக்குக் கொண்டு வருவது போல் வேடம் பூண்டு லீக்கிற்கு ஒதுக்கிய பாளையங்கோட்டையைப் பிடுங்கி அவர்கள் இருவருக்கும் ஆகாமல் தனது ( திமுக ) வேட்பாளரை நிருத்தி விட்டார். இது தான் கருனாநிதி இத்துடன் தமுமுக காரர்களது ஆவேசமும், ஆக்ரோஷமும் ஒருவழியாக கண்ணகி மதுரையை எரித்து விட்டு அடங்கியது போல் அடங்கியது. ( அடப்பாவிகளா ! என்ன தயாள குணம் ?

கருனாநிதி என்ன செய்திருக்க வேண்டும் ?
பாளையங்கோட்டையை லீக்கிற்கு ஒதுக்கிய போது எந்தப் பிரச்சனையுமில்லை பொதுமக்களில் யாருடைய குறுக்கீடும் இல்லை , தமுமுக காரர்கள் அந்த தொகுதியை தனக்கு கேட்ட பொழுது அதற்கு காதர் மொய்தீன் தர மறுத்தபொழுதும் எந்தப் பிரச்சனையுமில்லை. மாறாக தட்டிப் பறித்து அதை தமுமுகவுக்கு தாரை வார்த்த போது தான் பிரச்சனை வெடிக்கிறது. பிரச்சனையின் மூலகாரணகர்த்தா தமுமுக காரர்களே அதனால் மீண்டும் அவர்களிடமிருந்துப் பிடுங்கி லீக்கிடம் கொடுத்திருக்க வேண்டும் இது தான் நீதி , இவ்வாறு செய்திருந்தால் இது போன்ற டாமினேஷன் பேர்வழிகள் மீண்டும் தலை தூக்க மாட்டார்கள். ஆனாலும் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் பறித்துப் பழக்கப்பட்டவர் என்பதால் லீக்கிற்கு ஒதுக்கியது போல் ஒதுக்கிப் பிடுங்கிக் கொண்டார். ( அந்தோப் பரிதாபம் மில்லத் லீக் )

இன்னும் அந்த சீட் காதர் மொய்தீன் வசமே இருந்திருந்தால் அவரிடமிருந்துப் பிடுங்கும் வரை இவர்கள் அடங்கி இருக்க மாட்டார்கள். காதர் மொய்தீன் மண்ணைக் கவ்வுவதற்கு இன்னும் எந்தெந்த வழிகளில் சென்று என்ன மாதிரியான சானக்கியத் தனத்தை கையாள முடியுமோ அவற்றையெல்லாம் கையாளுவார்கள். ஒரு வேளை காரியம் கைகூடாமல் போய்விட்டால் வெளியில் தெரியாதவாறு உள்ளுக்குள் சுரங்கம் வெட்டுவார்கள் இவ்வாறு வெட்டியது இவர்கள் தானா ? என்று தெரியாத அளவுக்கு மிக சாமர்த்தியமாக பள்ளம் வெட்டுவார்கள். எவ்வாறு கள்ள வெப்சைட் திறந்து இதுவரை அது யார் என்றேத் தெரியாதவாறு நடத்திக்கொண்டு மக்களோடு மக்களாக தோள் மேல் கைப்போட்டு உலா வருகிறார்களோ அதைப்போல் செய்வார்கள். ( ஆனாலும் எல்லோருக்கும் தெரியும் இன்ன இழிச்சவாயன் தான் இதை செய்கிறான் என்று )

ஒற்றுமைக்கரத்தை உடைத்தெறிந்தவர்கள்
தமிழக முஸ்லிம்களின் அனைத்து அமைப்பையும் மூதறிஞர் பிஜே அவர்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்காக ஒன்று திரட்டினார்கள் அப்பொழுது மேல்படி முஸ்லீம் லீடக்கிற்கும், தமுமுகவிற்கும் அழைப்பு விடப்பட்டது உண்மையிலேயே இவர்களுக்கு சமுதாய முன்னேற்றம் முக்கிய அம்சமாக இருந்திருந்தால் நிச்சயமாக இந்த ஓர் விஷயத்திற்காகவாவது இணைந்திருப்பார்கள், ஆனால் இவர்கள் ஏன் இணைய மறுத்தார்கள் கலைஞர் போடும் பிச்சை சீட்டுக்காக இதில் இணையாமல் அங்கேயே ஒட்டிக் கொண்டார்கள் .

இதுவரை படிப்பினைப் பெறாத மக்கள் இறுதியாக லீக்கிற்கு தமுமுக இழைந்த அநீதியின் மூலமாவது அல்லாஹ் படிப்பினையை ஏற்படுத்தட்டும்.
அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) இன்னும், ''சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக. அல்குர்ஆன் 17:81 .

2 comments:

விடியல் said...

த.மு.மு.க. முஸ்லிம் லீகை ஆதரித்ததால்தான் 3 தொகுதிகள் கொடுக்கபட்டன. (1 தொகுதி பற்றி பின்னர் பார்ப்போமே இன்ஷா அல்லாஹ்) அதுபோலவே தேசிய லீகை த.த.ஜ. ஆதரித்ததால் தான் தேசிய லீகுக்கு 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டன. இ.யூ. முஸ்லிம் லீகின் நிலை இதுதான். தேசிய லீகின் நிலையும் இதுவே. இவற்றின் பலம் அவ்வளவுதான்.


இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன். முஸ்லிம்கள் நிம்மதியாக தூங்கியதாக சான்றுபகரப்பட்ட இந்த அம்மையாரின் ஆட்சியில் மௌலவி ஹாமித் பக்ரீ அவர்கள் கைது செய்யப்பட்டு ஏறத்தாழ 100 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்த போது, இந்த சமுதயப் பேரியக்கம் அவரை ஜாமீனில் எடுக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அந்த சமயத்தில் த.த.ஜ. உருவாகியிருக்கவில்லை. முதல்வருடன் த.மு.மு.க. நெருக்கமாக இருந்த நேரம் அது.

'சேராத இடந்தனில் சேர வேண்டாம்' என்று அறிவுரை கூறப்பட்டு, பேராசிரியராக இருப்பதற்கு தகுதியில்லை என்று கூறப்படுகிற காதிர் முகைதீன் அவர்கள்தான் முயற்சி செய்து அவரை வெளியில் எடுத்தார் என்பதை இங்கு அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

Anonymous said...

என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான அமைப்பு சாராத சகோதரகள் கூட குடந்தை த.த.ஜ. பேரனியில் கலந்துக்கொண்டோம்..இட ஒதுக்கீடு என்ற பிரச்சினைக்காகத்தான் நாங்கள் சென்றோமே தவிர பி.ஜெ.வுக்காகவோ அல்லது த.த.ஜ வுக்காக அல்ல. கூடிய 70-80 ஆயிரம் பேரை - பத்து லட்சம் பேர் என்று மிகைப்படுத்தி சொல்லி சமுதாயத்தை - ஏன் கலந்து கொண்டவர்களே விழி பிதுங்குமாறு பொய்சொன்னவர்களின் "கூற்றை" செல்வி செயலலிதாவை சந்திக்க சென்ற போது - பொய்யர்களின் வாய் மூலமாக வெளிக்கொணர்ந்தான் வல்ல இறைவன்.

திடலில் நடத்தினால் மாநாடு - குறுகலான சந்தில் நடத்தினால் பொதுக்கூட்டம் என்று வித்தியாசம் தெரியாத த.த.ஜ. வினரின் பேரனியில் கல்ந்துக்கொண்டது அவர்கள் மட்டும் என்ற வாதம் வலுவற்றது...

முஸ்லிம்