அல்லாஹ்வின் திருப்பெயரால்..எப்புடி இருந்தவங்க..! எப்புடி ஆயிட்டாங்க..!?!?
இஷh தொழுகை முடிந்து கடைத்தெருவில் காய்கறியும், மளிகை சாமானும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார் சுல்தான் பாய். வந்து கொண்டிருக்கிற வழியில் உசேன் பாய் எதிரே வந்தார்.
அஸ்ஸலாமு அலைக்கும் உசேன் ஜீ.. என்று முகமன் கூறினார் சுல்தான் பாய்.
வலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்முத்துல்லாஹி தஆலா வபரக்காத்துஹூ.. என்று கையை நீட்டி சுல்தான் பாயோடு கை குலுக்கிக் கொண்டார் உசேன் ஜீ.
என்ன உசேன் ஜீ எப்ப சென்னையிலருந்து வந்தீங்க.. -சுல்தான் பாய்.
மதியம்தான் வந்தேன். உங்களை பார்க்கத்தான் வீட்டுக்கு போயிட்டு வந்தேன். தொழுதுவிட்டு கடைத்தெருவிற்கு போயிருக்கிறதா சொன்னாங்க.. அதான் வந்தேன் வர்ற வழியிலேயே உங்களை பார்த்துட்டேன். -உசேன் ஜீ.
சரி வாங்க போய்கிட்டே பேசுவோம்... ஆமா.. போன காரியம் என்னாச்சு? -சுல்தான் பாய்.
அல்ஹம்துலில்லாஹ். நம்ம எதிர்பார்த்ததை விட அல்லாஹ் ரொம்பவும் சிறப்பாக்கி தந்தான். -உசேன் ஜீ
ஆனா சென்னையில ஒரு விசயம் கேள்விப்பட்டதிலருந்து மனசுக்கு ரொம்ப கவலையா போச்சி. அதான் அதைப் பத்தி உங்க கிட்ட பேசலாம்னு வந்தேன். -உசேன் ஜீ
அப்புடி என்ன விசயம் கேள்விப்பட்டீங்க..!
நம்ம த.மு.மு.க. காரவுங்க தேர்தல்ல நிக்க மாட்டாங்கன்னு சொல்லி இங்க உள்ள ரெண்டு, மூனு பொடிப்பசங்க ரொம்ப வீராப்பு பேசினாங்கல்ல.. -உசேன் ஜீ
ஆமாம், அதுக்கென்ன இப்ப..? -சுல்தான் பாய்.
இல்ல உசேன் பாய் நடக்குறத பார்த்தா இவுங்க திட்டம் போட்டுத்தான் அவரை வெளிய தள்ளிருக்காங்கன்னு இப்ப தெளிவா புரியுது.. -உசேன் ஜீ
கொஞ்சம் புரியுற மாதிரிதான் சொல்லுங்களேன்.. -சுல்தான் பாய்.
நம்ம பி.ஜே இருக்காருல.. அவரைத்தான் சொல்றேன்.. த.மு.மு.கவுலருந்து அவரை வெளியாக்குனாங்கல்ல அதுக்கு உண்டான காரணம் இப்ப புரிஞ்சிருச்சின்னு சொல்றன்.. -உசேன் ஜீ
ஏன்? என்னாச்சி..? -சுல்தான் பாய்.
தி.மு.க கூட்டணில இருக்குற காதர் மொய்தீனுக்கு மூனு தொகுதி தி.மு.க கொடுத்திருக்கிறது உங்களுக்கு தெரியுமுல..
ஆமாம்..
அந்த மூனு தொகுதில ஒரு தொகுதிய த.மு.மு.க.வுக்கு தந்துருங்கன்னு போயி காதர் மொய்தீன்கிட்ட கேட்டிருக்காங்க..
அப்புடியெல்லாம் இருக்காது உசேன் ஜீ.. யாரோ தெரியாம சொல்லியிருப்பாங்க.. த.மு.மு.க தேர்தல்ல நிக்கிற அமைப்பு இல்லன்னு அவுங்க பல முறை சத்தியம் பண்ணி சொல்லியிருக்காங்க.. -சுல்தான் பாய்.
இருவரும் பேசிக்கொண்டே சுல்தான் பாய் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டனர். சுல்தான் பாய் உள்ளிருக்கும் தனது பேரக்குழந்தையை 'பாத்திமா இங்க வந்து இந்த பைய வாங்கிட்டு போ' என்று குரல் கொடுத்துவிட்டு விருந்தினர் அறையில் இருந்த இருக்கையில் இருவரும் இருந்து பேச்சை தொடந்தனர்.
அட நீங்க ஒன்னு.. நாங்கல்லாம் உங்களுக்கு சப்போர்ட் பண்ணினதுனாலதான் தி.மு.க உங்களுக்கு 3 சீட்டு கொடுத்துச்சி.. அதனால பாளையம்கோட்டை தொகுதிய எங்களுக்கு தந்துருங்கன்னு காதர் மொய்தீன் கிட்ட போயி இவுங்க சண்டை போட்டுருக்காங்க.. இவுங்களோடு இம்சை தாங்காத காதர் மொய்தீனும் நாங்க பேசி முடிவு பண்ணி சொல்றோம்னு சொல்லி அனுப்பி வெச்சிட்டாரு.. அவுங்க கட்சி ஆளுங்கலோட பேசிப் பார்த்திருக்காரு. அதுல ஒரு முக்கியமான தலைவரு அப்புடி நீங்க ஒரு சீட்டை த.மு.மு.க.வுக்கு குடுத்தீங்கன்னா நான் ராஜினாமா செய்துவிடுவேன் என்று ஒரு போடு போட்டிருக்கார்.. - உசேன் ஜீ.
ச்சே.. அப்புடியா..? இந்த த.மு.மு.க காரவுங்களுக்கு என்ன ஆச்சு...! -சுல்தான் பாய்.
அதுமட்டுமில்ல, அந்த தலைவரு இன்னும் கோபப்பட்டு சில செய்திய சொல்லியிருக்காரு.. அவுங்க நம்ம சீட்டை வாங்கி நம்ம கட்சி பெயர்லயே போட்டியிடுவாங்க.. ஆனால் தேர்தல்ல போட்டியிடாத அமைப்புன்னு அவுங்களுக்கு பேரு மட்டும் வேணுமா? இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு அந்த தலைவரு ரொம்ப சூடா பேசியிருக்காரு... அவுங்களுக்கு தேவைப்பட்டா தி.மு.க.வுல கேட்டு அவங்களே சீட்டு வாங்கிக்கட்டும். நம்ம கட்சிக்கு தந்த சீட்டுல நம்ம கட்சிய சேர்ந்தவங்கதான் நிக்கனும், மத்தவங்க நிக்கிறதுக்கு நான் சம்மதிக்கவே மாட்டேன்னு பிடிவாதமா அந்த தலைவரு சொல்லிருக்காரு.. -உசேன் ஜீ.
சுப்ஹானல்லாஹ்!! என்ன கூத்து நடத்துறாங்க பார்த்திங்களா? -சுல்தான் பாய்.
அப்புடியும் த.மு.மு.க காரவுங்க விடுற மாதிரி இல்ல.. தி.மு.கவுல இருக்குற முக்கியமான தலைவரு ஒருத்தர போயி சந்திச்சி நீங்கதான் எங்களுக்கு எப்புடியாவது முஸ்லீம் லீக் கட்சியிலருந்து ஒரு சீட்டை கழட்டி தரனும்னு கெஞ்சிருக்காங்க.. அவரும் ஒரு கட்டத்துல காதர் மொய்தீனுக்கு போனை போட்டு இவுங்க இம்சை தாங்க முடியல பாய்.. இவுங்களுக்கு ஒரு சீட்டை குடுத்துறுங்களேன்னு சொல்லியிருக்காரு.. -உசேன் ஜீ.
அதுக்கு அவரு என்ன சொன்னாராம்....?
அப்படியெல்லாம் கொடுக்க முடியாது.. வேனும்னா எங்களுக்கு தந்த 3 சீட்டை 2 சீட்டுன்னு அறிவிச்சி 1 சீட்டை எடுத்துக்குங்க.. தி.மு.க.வுலருந்து நேரடியா த.மு.மு.க.வுக்கு 1 சீட்டை கொடுத்துக்குங்கன்னு முதல் முதலா கொஞ்சம் கோபப்பட்டுத்தான் காதர் மொய்தீனும் பேசியிருக்காரு.. - இப்புடியே இழுபறிலதான் அங்க நிலைமை இருக்குன்னு சென்னைல இருக்குற நம்ம வாணி சாதிக் ரொம்ப வருத்தப்பட்டு சொன்னாரு.. -உசேன் ஜீ.
அதுக்கப்புறம் உள்ள நிலைமை எதாவது வாணி சாதிக் போன் பண்ணி சொன்னாரா? -சுல்தான் பாய்.
எதுவும் புது செய்தி இருந்தா போன் பண்ணுறதா சொன்னாரு.. ஆனா ஒன்னு எப்புடியும் ஒரு சீட்டு வாங்கிற்றதுங்குறதுல த.மு.மு.க குறியா இருக்குங்குறது மட்டும் ரொம்ப தெளிவான விசயம்னு சொன்னாரு.. அதுக்காக எப்பேர்பட்ட வேலையையும் செய்யுறதுக்கும், யார் கால்ல விழுறதுக்கும் த.மு.மு.க தயாரா இருக்குதுங்குறதையும் சொன்னாரு.. -உசேன் ஜீ.
இவ்வளவு கேவலமான நிலைக்கு த.மு.மு.க காரவுங்க அவுங்களையே தள்ளிக்கிட்டு யாரை தேர்தல்ல நிறுத்தப் போறாங்களாம்.. அப்புடியே அவுங்கள்ல யாராச்சும் நின்னா அது எடுபடுமா? சமுதாயம் காறித் துப்பாதா? -சுல்தான் பாய்.
தேர்தல்ல யாரை நிறுத்தப்போராங்கன்னு தெரிஞ்சா இன்னும் அதர்ச்சி அடைவீங்க.. -உசேன் ஜீ.
யாரு நிப்பா..? நின்னா ஜவாஹிருல்லா நிப்பாரு.. இல்லாட்டி ஹைதர் அலி நிப்பாரு.. அவங்கல உட்டா வேற யாரு இருக்கா அங்க..? -சுல்தான் பாய்.
அதான் இல்லை.. துபைல இருக்குற மேலப்பாளையம் பலுழுல் இலாஹியைதான் அவுங்க நிறுத்தப் போறாங்களாம்.. அதைத் தான் வாணி சாதீக் சொல்லி ரொம்ப வருத்தப்பட்டாரு.. என்று உசேன் பாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவருடைய மொபைல் போன் அலறியது.. நம்ம வாணி சாதிக் தான் அடிக்கிறாரு.. என்ன சேதின்னு கேப்போம்.. என்று சொல்லிக் கொண்டே போனை எடுத்தார்..
அஸ்ஸலாமு அலைக்கும்.. என்று சலாத்தை சொல்லி பேச்சை துவங்கியவர் சரி.. ஆமாம்.. அப்புடியா? என்று சேதியை கேட்டுக் கொண்டிருந்தவரின் முகம் ஒரு கட்டத்தில் மிகவும் இறுக்கமான நிலைக்கு போயிருந்தது... ஒரு வழியாக பேச்சை முடித்துக் கொண்டு மீண்டும் சுல்தான் பாய் பக்கம் திரும்பினார்.. அது ஒண்ணுமில்ல.. அவுங்களுக்கு சீட்டு கிடைச்சிருச்சாம்.. மண்ணடி தெருவுல ஒரு பத்து பதினஞ்சி பேரு ரொம்ப ஆரவாராமா சத்தம் போட்டுகிட்டு போறாங்களாம்.. பாளையம்கோட்டை தொகுதில நிக்கிறது உறுதி ஆயிடுச்சாம்.. த.மு.மு.க.வுலருந்து திருட்டு பட்டம் பெற்ற பலுழுல் இலாஹி த.மு.மு.க.வின் வேட்பாளராக தேர்தல்ல நிக்கிறாரு.. என்னவொரு கூத்து பாத்திங்களா..? எப்புடி இருந்த இயக்கத்தை எப்புடி ஆக்கிட்டானுங்கன்னு பாத்திங்களா.. -உசேன் ஜீ.
அடத்... தூ.. இவுங்களையெல்லாம் நல்லவங்கன்னு நம்பினமே நம்மல சொல்லனும்.. இதுக்கு மேலயும் இவுங்க மூஞ்சில செருப்பு, வெலக்கமாற வீசாம இருந்தால் இந்த சமுதாயம் மாதிரி ஒரு இழிச்சாவாயி சமுதாயம் வேற இல்லை.. காலையில ஃபஜ்ர் தொழுதவுடன் நம்ம தவ்ஹீத் ஜமாஅத் தலைவர போயி சந்திப்போம்.. இவங்கனால நாம அவுங்கல ரொம்பத்தான் பகைச்சிக்கிட்டோம்.. இப்பத்தான் உண்மை தெரிஞ்சி போச்சில்ல இனி ஒரு நிமிசம் இந்த பயலுவல நம்பக்கூடாது. காலையிலயே அவுங்கள போயி பார்த்து பேசுவோம்.. என்று சற்று கோபப்பட்டவராக சுல்தான் பாய் பேசினார்..
சரி பாய் நான் புறப்படுறேன் என்று சலாம் சொல்லி உசேன் ஜீயும் விடை பெற்றார்.. ஆனால் மறுபடியும் வருவார்.. இன்ஷh அல்லாஹ்..
Monday, April 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment