Thursday, July 31, 2008

இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தின் 44-வது பிரிவை நீக்கக் கோரி அகில இந்திய அளவில் போராட்டம்! முஸ்லிம் லீக் தலைவர்அறிவிப்பு!

முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு எதிரான இந்திய அரசியல் அமைப் புச் சட்டத்தின் 44-வது பிரிவை நீக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அகில இந்திய அளவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதற் கட்டமாக 3 மாத காலத்திற்குள் 10 கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் துவக் கப்பட உள்ளதாகவும் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. தெரி வித்துள்ளார்.

நாகை தெற்கு மாவட்ட முஸ்லிம் லீகின் செயற்குழு கூட்டமும் புதிய நிர் வாகிகள் தேர்வும் நாகூரில் நடைபெற்றது. இதில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற் றினார்.
அப்போது அவர் குறிப்பிட்டதாவது-

நாகை தெற்கு மாவட்ட முஸ்லிம் லீகின் சார்பில் நடைபெறும் இக்கூட்டத் தில் திரளாக பெருமளவில் நீங்கள் கலந்துகொண் டுள்ளதைக் கண்டு பெரி தும் மகிழ்ச்சி அடைகி றேன்.

கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் காலம் தொட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பணி களுக்கு நாகை மாவட்ட மக்கள் பேராதரவு அளித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த மணி விழா மாநாட்டில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்துள் ளோம். முஸ்லிம் லீகிற்காக தங்களது வாழ்வை அர்ப் பணித்துக்கொண்ட பல சமுதாயப் பெருமக்கள் நமது நன்றிக்குரியவர் களாக நமது நினைவில் என்றும் உள்ளார்கள்.

மரியாதைக்குரிய கஸ்ஸாலி நானா யூசுப் நானா அடியக்கமங்கலம் ரஜாக் போன்ற பல பெரு மக்கள் முஸ்லிம் லீகிற்காக உழைத்துள்ளார்கள்.

அதே போன்று இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் காமில் மாளமார் அவர்கள் ஜின்னா சாஹிபுடனும் நமது காயிதெ மில்லத் துடனும் சிராஜுல் மில்லத் துடனும் நெருங்கிப் பழகி யவர்கள். முஸ்லிம் லீகின் ஆரம்ப காலத்தையும் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நன்கறிந் தவர்கள்.

அவர்கள் தெரி வித்த நல்ல பல ஆலோ சனைகளை முஸ்லிம் லீக் செயல்படுத்தும்.

நாகை தெற்கு மாவட் டத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் 26 ஊர் களில் உள்ளனர். அதில் 20 ஊர்களில் முஸ்லிம் லீக் பிரைமரி அமைக்கப்பட்டு விட்டது. மீதி உள்ள 6 ஊர்களிலும் பிரைதரி களை அமைக்க நீங்கள் பாடுபட வேண்டும்.

முஸ்லிம் லீகின் அனைத்து அணிகளுக்கும் நிர்வாகி களை தேர்வு செய்து பணிகளை முடுக்கிவிட வேண்டும். முஸ்லிம் லீக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அல்லா தவர்களையும் சேர்ப்ப தற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு காலத்தில் முஸ்லிம் லீக் நவாபுகளாலும் ஜமீன் களாலும் மிட்டா மிராசு களாலும் நிர்வகிக்கப்படும் கட்சியாக இருந்தது.

ஆனால் இன்று ஏழை எளிய மக்கள் ஏராளமா னோர் முஸ்லிம் லீகில் நிர்வாகிகளாக உள்ளனர்.

காலத்திற்கேற்ப அரசியல் மாறி உள்ளது.

ஒரு காலத்தில் ஏகபோக மாக இருந்த கட்சிகளின் நிலை இன்று மாறி உள்ளது. தேசிய கட்சி களின் ஏகபோக நிலைமை மாறி மாநில கட்சிகளின் கை ஓங்கி காணப்படு கிறது. இன்று எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று தங்களது சித்தாந்த அடிப்படையில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற முடியாது. மற்ற பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துத்தான் தேர்தலைச் சந்திக்கவும் வெற்றி பெறவும் முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

அந்த அடிப்படையில் கேரளாவில் முஸ்லிம் லீக் தனது பலத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறது. அது போன்ற நிலை தமிழகத் திலும் உருவாக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

முஸ்லிம் லீக் தமிழகத் தைப் பொறுத்த அளவில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியிலும் மத்தியில் காங்கிரஸ் தலைமையி லான கூட்டணியிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த கூட்டணி முறை தொடர்ந்து கடைப்பிடிக் கப்படும்.

முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு விரோத மாக அரசியல் நடத்தும் பி.ஜே.பி.க்கு எதிரான அரசியலையே முஸ்லிம் லீக் மேற்கொள்ளும். பி.ஜே.பி. மட்டுமல்லாது அதனோடு கூட்டணி வைத்துக்கொள் ளும் மற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும் அவை அனைத்தும் முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான கட்சியாகவே கருதப்படும்.

மத சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என பி.ஜே.பி. போன்ற மதவெறி அமைப்பு பல சதித் திட் டங்களைத் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றன.

நமது இந்தியா மதச் சார்பற்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய அரசா கும். அரசுக்கு மதச்சார்பு கிடையாது. அனைத்து மதங்களின் உணர்வுகளை யும் மதிப்பதுதான் நமது அரசியல் கொள்கை ஆகும்.

நமது அரசியல் அமைப்புச் சட்டம் அனைத்து மதத்தினரும் தங்கள் மதத்தின் கொள் கைப்படி வாழ முழு சுதந் திரம் அளிக்கப்பட்டுள் ளது.

அதேசமயம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 44-வது பிரிவு அனைவருக்கும் பொதுவான சட்டம் ஒன் றினை ஏற்படுத்த வலி யுறுத்துகிறது. இது முஸ் லிம்களின் மத சுதந்திரத் தைப் பறிக்கும் வாய்ப்பு உள்ளதால் அரசியல் அமைப்பு சட்ட விவா தத்தின்போது இந்தப் பிரிவிலிருந்து முஸ்லிம் களுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என காயிதெ மில்லத் வலியுறுத்தினார்.

ஏறக்குறை 60 ஆண்டு காலம் இதனை முஸ்லிம் லீக் தொடர்ந்து வலி யுறுத்தி வந்துள்ளது.

அகில இந்திய அளவில் இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போராட்டம் நடத்தப் படும்.

அதன் முதல் கட்டமாக சுமார் 10 கோடி மக்களி டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவை நீக்கக் கோரி கையெழுத்து வாங் கும் இயக்கம் நடத்தப்படும்.

அதற்கான பணிகள் விரை வில் துவங்கப்படும்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்

Wednesday, July 30, 2008

நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயண வரலாறு

நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயண வரலாறு


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் இறை இல்லம் கஅபாவில் இரு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. எனது நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஜம்ஜம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு (என் இதயம்) நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும் கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான புராக் என்னம் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். யார் அது என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை) ஜிப்ரீல் என்று பதிலளித்தார். உங்களுடன் (வந்திருப்பவர்) யார் என்று கேட்கப்பட்டது. அவர் முஹம்மது என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா? என்று கேட்கப்பட்டது. அவர் ஆம் என்றார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் (என்) மகனும் இறைத்தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக! எனச் சொன்னார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். யார் அது? என்று வினவப்பட்டது. அவர் ஜிப்ரீல் என்று பதில் அளிக்க, உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் முஹம்மது என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரும்படி அவரிடம் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவு ஆகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும் யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும் சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும் என்று சொன்னார்கள். பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச்சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளித்தார். அவரை அழைத்து வரச் சொல்லி அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளித்தார். (அவரை அழைத்து வரச் சொல்லி) ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை நல்ல வருகை என்று வாழ்த்துச் சொல்லப்பட்டது. பிறகு நான் யூஸுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்ற பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது.


நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்குச் ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார்? என்று கேட்கப்பட்டது. முஹம்மத் என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆள் அனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. ஆம் என்று பதிலளிக்கப்பட்டது. அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் இறiவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் புகுவார்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். யார் அது? என்று வினவப்பட்டது. ஜிப்ரீல் என்று பதிலளிக்கப்பட்டது. உங்களுடன் இருப்பவர் யார் என்று கேட்கப்பட்டது. முஹம்மது என்று பதிலளிக்கப்பட்டது. (அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா? என்று கேட்கப்பட்டது. அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) ஸலாம் உரைத்தேன். அவர்கள் மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று சொன்னார்கள்.


பிறகு அல் பைத்துல் மஃமூர் எனும் வளமான இறை இல்லம் எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர் இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும் என்று சொன்னார்கள். பிறகு (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ஹஜ்ர் எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. இதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ்,நைல் ஆகிய இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள் உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும் என்ற பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன.


நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள் என்ன செய்தாய் என்று கேட்டார்கள். நான் என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள் எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிமாகத் தெரியும். நான் பனு இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உங்கள் இறைவனிடம் திரும்பச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள் என்று சொன்னார்கள். நான் திரும்ப சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகு முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்து கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்ன செய்தாய் என்று கேட்க அதை இறைவன் ஐந்தாக ஆக்கி விட்டான் என்றேன். அதற்கு அவர்கள் முன்பு சொன்னதைப் போலவே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டு விட்டேன் என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக) நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமுல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்கு பத்து நன்மைகளை நான் வழங்குவேன் என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பாளர் : மாலிக் இப்னு சஃசஆ, நூல் : புகாரி (3207)

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை


ஜூலை 24,2008,00:00 IST

மதுரை: அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ., ஐ.டி.சி.,களில் பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.2007-08 ல் உதவித் தொகை பெற்று தொடர்ந்து படித்தால் பள்ளி மேற்படிப்பு ( புதுப்பித்தல்) கல்விஉதவித் தொகை பெறலாம். இறுதி தேர்வில் 50 சதவீத மதிப்பெண், ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் இருக்க வேண்டும். வகுப்புகளுக்கு ஏற்ப ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உதவித்தொகை கிடைக்கும். விடுதி மாணவர்களுக்கு மாதம் ரூ. 235 முதல் ரூ.510 வரை, மற்றவர்களுக்கு ரூ.140 முதல் ரூ.330 வரை 10 மாதங்களுக்கு வழங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு புதுப்பித்தல் ஆக.,10 மற்றும் புதிதாக ஆக.,31 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் பட்டியலை புதுப்பித்தல் ஆக.,20, புதியது செப்.,10 க்குள் கலெக்டர் அலுவலக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு www.minorityaffairs.gov.in இன்டர்-நெட் முகவரியில் வெளியிடப்பட்டுள்ளதாக கலெக்டர் எஸ்.ஜவஹர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு : சமுதாய நலன் கருதி குவைத்திலிருந்து மெளலவி பரங்கிபேட்டை கலீல் பாக்கவி அவர்களின் சுட்டிக்காட்டல் மற்றும் வேண்டுகோளுக்கினங்க இந்த செய்தி இங்கு வெளியிடப்படுகின்றது.
நன்றி : தினமலர்

அபுதாபியில் நடந்த IDMK நிகழ்ச்சியின் வீடியோக்கள் (PART-02)



கடந்த 24.06.2008 அன்று அபுதாபியில் உள்ள கேரளா அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்ற இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் பங்கு கொண்டது ஞாபகம் இருக்கலாம். அந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பிரமுகர்களான திரு. C.M ஹீசைன், திரு. முகம்மது ஷாபி, திரு. இஜாஸ் பெய்க், திரு. அட்நாக் அப்துல் ரவூஃப் ஆகியோர் ஆற்றிய சிறு உரைகளின் வீடீயோ தொகுப்பு இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை காணவோ, டவுன்லோட் செய்யவோ கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.






திரு. முகம்மது ஷாபி,திரு. C.M ஹீஸைன், திரு. இஜாஸ் பெய்க், திரு. அட்நாக் அப்துல் ரவூஃப்


Tuesday, July 29, 2008

குண்டுவெடிப்புகளுக்கு மதச்சாயம் பூசாதீர் - MNP கண்டனம்

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு மதச்சாயம் பூசக்கூடாது உண்மைக் குற்றவாளிகளை காவல்துறை இனம் காண வேண்டும் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை

நெல்லை 29, ஜீலை 2008, குஜராத்திலும், பெங்களுருவிலும் நடந்த குண்டு வெடிப்புக்களை தொடர்ந்து அதற்கு மதச் சாயம் பூசப்பட்டு தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை குறி வைத்து காவல்துறை தனது அத்துமீறலை நடத்தி வரும் வேலையில் இதனை கண்டித்து குண்டுவெடிப்புக்களுக்கு மதச் சாயம் பூசாமல் உண்மை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று இன்று நெல்லையில் மனித நீதிப் பாசறை அமைப்பின் சார்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் மாநில பொதுச்செயளாலர் யா.முஹைதீன் தெறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கடந்த சில நாட்களாக அஹமதாபாத், பெங்களூர் ஜார்கண்ட் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நீதிப் பாசறை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாகவும் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாகவும் நடைபெற்ற இந்தக் குண்டுவெடிப்பு சம்பங்களில் காவல்துறை உண்மையான குற்றவாளிகளை இனம் காண வேண்டும்.

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார சக்திகள் மதச்சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி இவ்வாறு திசை திருப்பும் வேலை தொடர்ந்தால் சட்டத்தின் பிடியிலிருந்து உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் என்பது பாமர மக்களுக்கும் புரியும்.

இதில் காவல்துறை நேர்மையாகவும் நடுநிலையாகவும் விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும்.



கடந்த 2006ம் ஆண்டு ஏப்ரல் 6ம்நாள் மஹாராஷ்டிர மாநிலம் நந்தித் என்ற இடத்தில் வெடிகுண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த பஜ்ரங்தள தீவிரவாதிகள் வெடித்துச் சிதறியதும், அச்சம்பவத்தில் பல பஜ்ரங்தள தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதும் காவல்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் அங்கு முஸ்லிம்கள் அணிவது போன்று தொப்பிகளும் போலி தாடிகளும் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடந்த மாலிகான் குண்டுவெடிப்பில் போலி தாடியோடு ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 2008, ஜூன் மாதம் மஹாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள கத்காரி ரங்யாத்தன் தியேட்டரில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் குண்டுவெடிப்பு நடந்தது. இச்சம்பவத்தில் இந்து ஜாக்ரன் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மேலும் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்திற்கு சில தினங்கள் முன்பாக தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும், பஸ் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி பயங்கரவாதிகள், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தவும் இந்துக்களை ஒருங்கிணைக்கவும் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது திருப்பி விட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவத்திற்கு முன்பே பல மாதங்களாக குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததையும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இவற்றையெல்லாம் காவல்துறை கவனத்தில் கொண்டு தற்போது நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் இதற்கு முன்பு நாட்டில் நடந்த குண்டுவெடிப்புகளின் விசாரணையை சரியான கோணத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

இன்று நெல்லையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மனித நீதிப் பாசறை மாநில பொதுச் செயலாளர் யா முஹைதீன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எம்.என்.பி.யின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மதுமுபாரக், மாவட்டச் செயலாளர் மஹபூப் அன்சாரி ஆகியோர் உடனிருந்தனர்.


Monday, July 28, 2008

தமுமுக இணையத் தளம் முக்கிய அறிவிப்பு

தமுமுக இணையத் தளம் முக்கிய அறிவிப்பு


சில தொழில் நுட்பக் காரணங்களால் தற்காலிகமாக நமது இணையத்தள முகவரிகளான

www.tmmkonline.org

www.tmmk.in


இயங்கவில்லை.

ஆனால் பின்வரும் முகவரிகள் மூலம் நமது இணையத்தளத்தை நீங்கள் பார்க்கலாம்

www.tmmk.info

www.tmmkonline.net

www.tmmkonline.com

மேலே உள்ள செய்தி தமுமுக தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து பெறப்பட்டது. சமுதாய மக்களின் தகவலுக்காக இங்கு பிரசுரிக்கப்படுகின்றது. -முகவைத்தமிழன்



புதுப்பிக்கப்பட்ட செய்தி : (29.07.2008 நேரம் இந்திய நேரம் மாலை 5.30)

தமுமுக தலைவர் திரு. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் மின்னஞ்சல் முகவரியான jawahir@tmmk.in சரியாக வேலை செய்வதாகவும் இனி அதிலேயே அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதே போல் தமுமுக வின் http://www.tmmk.in/ என்ற இணைய முகவரியும் பிரச்சினைகள் நீங்கி சரியாக வேலை செய்வதாகவும் திரு ஜவாஹிருல்லாஹ் அவர்கள் மினஞ்சல் மூலம் தெறிவித்தள்ளார் என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

----- Original Message -----
From: jawahirullah
To: makkalurimai@gmail.com
Sent: Tuesday, July 29, 2008 3:09 PM
Subject: my email


Dear All,


My email id jawahir@tmmk.in is now working allright. You can communicate to me in this address. Also kindly note our website with url http://www.tmmk.in/ which was down has been set right. You can browse our website in this url. Kindly inform our friends.


jawahirullah

Sunday, July 27, 2008

அண்ணல் நபியவர்களி் இறுதி நாட்கள் (VIDEO) - மெளலவி ஹாமித் பக்ரி

"அண்ணல் நபியவர்களி் இறுதி நாட்கள்"

அஷ்ஷேய்க். ஹாமித் பக்ரி அவர்கள்

Al-Sheikh. Hamid Bakri


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ஹாமித் பக்ரி அவர்கள்

Saturday, July 26, 2008

IGC குவைத் நடத்தும் - "உணர்வாய் உன்னை" மற்றும் "அல்ஹம்துலில்லாஹ்" நிகழ்ச்சிகள்

بسم الله الرحمن الرحيم



எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலைமையை தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை (அல்குர்ஆன் 13:11)



தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான் (அல்குத்ஆன் 87:14)


குவைத் வரலாற்றில் முதல் முறையாக
(IGC) குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம் நடத்தும்

இஸ்லாமிய வழியில்
உணர்வாய் உன்னை

ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்.



* நம் உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுதல்.
* கோபம், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுதல்.
* அனைவரிடமுமட் அன்பை பேணுதல்.
* நாட்டிலும், வீட்டிலும் அமைதி மற்றும் சமாதானத்தை நிலைபெறச் செய்தல்.
* நம்மிடம் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
* எண்ணங்களை தூய்மைப்படுத்தி செயல்களை வளப்படுத்துதல்.
* கடந்த கால பாதிப்புகளில் இரந்து விடுபட்டு நிகழ்கால வாழ்வில் வெற்றிபெறுதல்.
* இறைவன் நம்மை படைத்த நோக்கத்தினை அறிதல்



அறிவின் எல்லை விரிய...ஈமானின் சுவையை உணர ...இனிய தமிழில் எளிய நடையில்....திருமறை நிழலில் ....சம்பிக்கையூட்டும் ஒரு உன்னத பயிற்சி முகாம்!!



நாள் : 31-07-2008, வியாழக் கிழமை
நேரம் : மாலை 03.30 - 09.30
இடம் : ஜம்யிய்யத்து இஸ்லாஹி, ரவ்தா



அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாமிய சிறப்பு ஒலி-ஒளி தொகுப்ப நிகழ்ச்சி
SPECIAL VISUAL PRESENTATION - ISLAMIC PERSPECTIVE




உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல)அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளெயேம் (பல) அத்தாட்சிகளும் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா. (அல்குர்ஆன் 51:20, 21)



இத்திருமறை வசனங்களில் றகூறியுள்ள அத்தாட்சிகளை கன்ணாலும், கருத்தாலும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் ஓர் அறிய காட்சித் தொகுப்பு நிகழச்சி.



நாள் : 01-08-2008, வெள்ளிக் கிழமை
நேரம் : மாலை 05.00 - 08.30
இடம் : ஜம்யிய்யத்து இஸ்லாஹி, ரவ்தா

தொடர்புக்கு : 3925612, 9619827, 6412875, 2470159

நிகழச்சிகளை தொகுத்து வழங்குபவர்
சகோ. ஜலாலுதீன், துபை



ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலீஃபா, மஹ்கூலா மற்றும் சிட்டி பகுதிகளில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டள்ளது.


பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.





அபுதாபியில் நடந்த IDMK நிகழ்ச்சியின் வீடியோக்கள்


கடந்த 24.06.2008 அன்று அபுதாபியில் உள்ள கேரளா அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்ற இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் பங்கு கொண்டது ஞாபகம் இருக்கலாம். அந்ந நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபல மார்க்க அறிஞர் மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள் மிகச் சிறப்பான் உரை ஒன்ற ஆற்றினார்கள். மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி, இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. குத்புதீன் ஐபக், திரு. வருசைக் கனி ஆகியோர் ஆற்றிய உரையின் வீடீயோ தொகுப்பு இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை காணவோ, டவுன்லோட் செய்யவோ கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.





திரு. வருசைக் கனி, திரு. அப்துல் ரவூப் பாக்கவி, திரு. குத்புதீன்

Friday, July 25, 2008

ஹைதர் அலி மீது நடவடிக்கை எடுக்க வலியுருத்தி மாணவ மாணவிகள் போராட்டம் Wakf Board College பூட்டப்பட்டது

திரு. ஹைதர் அலி அவர்கள்


வக்பு போர்டு சேர்மன் மீது நடவடிக்கை கோரி வக்பு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மதுரை வக்போர்டு கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி முதல்வரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மதுரை கே.கே.நகரில் உள்ள வக்புவாரிய கல்லூரி முதல்வராக ஐ.இஸ்மாயில் இருந்து வருகிறார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கல்லூரியை சிறந்த முறையில் நிர்வகித்து மாணவர்களிடையே பாராட்டை பெற்றார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் முதல்வர் இஸ்மாயில் மீது பல்வேறு புகார்களை தெரிவித்தது. அவரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு வற்புறுத்தி வந்தது.

இருந்தபோதிலும் இஸ்மாயில் முதல்வர் பதவியில் நீடித்து வந்தார். இதற்கிடையில் முதல்வர் இஸ்மாயில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விருப்ப ஓய்வை ஏற்றுக்கொள்வதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் இஸ்மாயிலை பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்று வற்புறுத்தி வக்போர்டு கல்லூரி மாணவ_மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்றுமுன்தினம் நூற்றுக்கணக்கான மாணவ_மாணவிகள் கே.கே.நகர் பகுதியில் நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்போர்டு கல்லூரி மாணவ_மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். கல்லூரிக்கு உள்ளேயே வகுப்புகளை புறக்கணித்தனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு போலியான முகவரியை கொடுத்து செயலாளராக செயல்பட்டு வரும் அசனை உடனடியாக நீக்க வேண்டும். வக்போர்டு சேர்மன் ஹைதர் அலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி முதல்வராக இஸ்மாயில் தொடர்ந்து நீடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து மாணவ மாணவிகளும் நிறைவேற்றக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்தில் கைவிடுமாறு கல்லூரி நிர்வாகம் செய்த சமரச முயற்சியை மாணவ_மாணவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து வக்போர்டு கல்லூரி காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது.
செய்திகள் : முதுவை ஹிதாயத்

Thursday, July 24, 2008

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும், பண்புகளும் - ரம்ஸான் பாரிஸ் (VIDEO)

"அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும், பண்புகளும்"

அஷ்ஷேய்க். ரம்ஸான் பாரிஸ் அவர்கள்

Al-Sheikh. Ramzan Faris


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ரம்ஸான் பாரிஸ் அவர்கள்

Wednesday, July 23, 2008

IDMK புகைப்பட காட்சிகள் - (சி.டி வெளியீட்டு நிகழ்ச்சி துபாய்)

கடந்த 20.06.2008 அன்று துபாய் மன்டல இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கட்சி உள்ளரங்க பொதுக்கூட்டம் மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழச்சியில் துபாய் மாகானத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களில் பணிபுறியும் முக்கிய புள்ளிகளும், பொறியாளர்களும், அறிவு ஜீவீகளும் கலந்து கொண்டனர். நிகழச்சியின் புகைப்படத் தொகுப்பை கீழே சொடுக்கி காணவும்.






சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை

"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை"

அன்புள்ள சகோதரர் திருச்சி அமானுல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ

நேற்று (22-07-2008) நீங்கள் அனுப்பிய ஈ மெயிலை பார்த்ததும் .....தவறாக புரிந்து கொள்ளக்கூடிய மனிதரிடமிருந்து வந்திருக்கிறதோ என்கின்ற எண்ணம்தான் உண்டானது. எழுத்தில் கோபம் தெரிகிறது, ஆனால் ஏன்? எதற்கு என்பதுதான் புரியவில்லை.



" உங்கள் கோபத்துல அல்லாஹ் தண்ணிய ஊற்றுவானான, வயிற்றெரிச்சலில் பாலை பாலை ஊற்றுவானாக" என்ற ஆரம்ப வார்த்தைகளே நீங்கள் எதையோ படித்துவிட்டு தவறாகப்புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிந்தது. "


ஐடிஎம்கே" அண்ணே! என்றுவேறு எனக்கு அறிமுகமில்லாத ஒரு கட்சியின் உரிப்பினராகவே என்னை ஆக்கி விட்டீர்கள். இதுவரை எந்த அரசியல் கட்சியலும் இருந்ததில்லை, ஆனால் அரசியலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக எடுத்து படித்தவன்தான். அதுமட்டுமல்ல உலக அரசியலையும் ஓரளவு படித்ததிருக்கிறேன். காரணம் ஐரோப்பாவில் பல ஆண்டுகள் இருந்தவன், உலகிலுள்ள ஏராளமான பத்திரிகைகளை படிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றவன். இன்னும் சொல்லப்போனால் இன்று இருக்கும் பல கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் பாடத்தையே கற்றுக் கொடுக்கக்கூடிய அளவுக்கு அல்லாஹ்வால் கல்வி ஞானத்தை கொடுக்கப் பெற்றவன்தான்.

தமுமுக வின் மீது எமக்கு நல்ல அபிப்ராயம் உண்டு. அதுபோன்று தௌஹீத் ஜமாஅத்தார்கள் மீதும் நல்ல அபிப்ராயம் உண்டு. பொதுவாக உலகிலுள்ள எந்த மனிதரையும் வெறுக்கச் கொல்லி இஸ்லாம் சொல்லவில்லை. இன்று உலகில் வாழும் அத்தனை பேருமே பெருமானார் ஸல்லல்லாஹ

{ அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்துகள் தான் (அவர்கள் எந்த மதத்தை எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரியே!) என்பதை மனிதில் ஆழமாக பதிய வைத்துக் கொண்டீர்களானால் மற்றவர்கள் மீது எந்தவிதமான வெறுப்பும் வராது. அவர்கள் காஃபிராக இருந்தாலும் சரியே! ஏன் அவர்களும் அல்லாஹ்வின் படைப்புதானே!

ஆனால் இன்று என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்குள்ளேயே போட்டி, பொறாமை, வெறுப்பு! இதைவிட கொடுமை வேரென்ன இருக்க முடியும்? என்ன காரணமாக இருக்க முடியும் என்று கொஞ்ச நேரம் அமைதியாக யோசித்துப் பாருங்கள். இஸ்லாத்தைப்பற்றி சரியாக புரிந்து கொள்ளாத சமூகத்தினராக இன்றைய முஸ்லிம்கள் வாழ்வது முக்கிய காரணம்.



தமுமுக வில் சேருமாறு அழைப்பு விடுத்திருக்கிறீர்கள். நன்றி. ஆனால் பலவிதமான மனிதர்களை படைத்துள்ள அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் பொருப்புகளை அளித்துள்ளான். தகுதிகளை வழங்கியுள்ளான். அவரவர்களின் வழியில் எது சிறந்தது என்பதை தேர்வு செய்து வாழும்போதுதான் அது அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். அதைவிடுத்து தமுமுக வில் நான் சேரும் பட்சத்தில் எனது கல்வி ஞானம் முதற்கொண்டு மற்ற செயல்பாடுகளும் அதன் தலைமைக்கு கட்டுப்பட வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும்.


"சுதந்திரம்" என்பதுகூட அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்கியிருக்கும் மாபெரும் அருட்கொடை. அதை எதற்காக ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு நான் இழக்க வேண்டும்? இன்றைய கட்சிகளையும், இயக்கங்களையும் மேலோட்டமாக பார்த்தாலே ஒரு விஷயம் தௌ்ளத் தெளிவாக புரியும்.


* ஜமாஅத்தே இஸ்லாமியா? மௌதூதி அவர்களின் கொள்கைதான் அவர்களுக்கு அஸ்திவாரம்.


* தௌஹீத் ஜமாஅத்தா? பி.ஜே. என்ன சொல்கிறாரோ அது மட்டும்தான் அவர்களுக்கு இஸ்லாம்.


* சுன்னத்துவல் ஜமாஅத்தா? நாங்கள் செல்வது மட்டும்தான் இஸ்லாம். நீங்களாக சிந்திக்க அனுமதி கிடையாது! (சிந்திக்க தூண்டுகின்ற மார்க்கத்தில் சிந்தனைக்கு 144 போடுகின்றவர்கள்.)


* தரீக்கா குரூப்பா? முஸ்லிம்களை முஷ்ரிகீன்களாக ஆக்கியே தீர்வது என்ற முடிவோடு இருப்பவர்கள்.


* தப்லீக் ஜமாஅத்தா? தொழுகை ஒன்றே போதும். வீட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சரி 40 நாள் ஜமாஅத்துக்கு வா எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பவர்கள். அதுமட்டுமின்றி ஒருசில விஷயங்களை மட்டும் உள்வாங்கிக்கொண்டு பெரிய ஆலிம்களுக்கு இணையாக தங்களை நினைத்துக் கொள்பவர்கள்.


மேலே சொன்ன இவர்கள் எவரிடமும் நடுநிலைப்போக்கு இல்லை. அதன் காரணமாக எங்கு பார்த்தாலும் முஸ்லிம்களுக்கிடையே வெறுப்பு, போட்டி, பொறாமை அத்தனையும் கண்கூடாக இன்று சமுதாயத்தில் காணமுடிகிறது. இவ்வளவையும் மீறி ஒருசில இயக்கங்களால் நன்மை விளையத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.


நீங்கள் தமுமுக வில் இருக்கிறீர்கள். அதில் இருப்பதன் வாயிலாக சமுதாயத்துக்கு நல்லது செய்யு முடியும் என்று நம்புகிறீர்கள். உங்கள் நிய்யத்தை அல்லாஹ் கபூல் செய்வானாக, ஆமீன். ஆனால் நடுநிலை போக்குடன் இருந்தால்தான் இம்மையிலும், முக்கியமாக மறுமையிலும் வெற்றயடைய முடியும் என்பது எனது கருத்தாக இருக்கிறது. (இந்த சமுதாயத்தை அல்லாஹ் திருக்குர்ஆனில் நடுநிலை சமுதாயம் என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்ளுங்கள்) அதுமட்டுமின்றி எந்த இயக்கத்தில் சேர்ந்தாலும் தலைமைக்கு கட்டுப்படவேண்டிய கட்டாயத்தில் எனது சுதந்திரம்



பாதிக்கப்படலாம். தேவையா எனக்கு இது! அவரவர்கள் விரும்பிய இடத்தில் முழு மனத்தூய்மையோடு பணியாற்றினாலே எல்லா வெற்றியையம் அல்லாஹ் கொடுப்பான். வஆகிருதஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.



எம்.ஏ.முஹம்மது அலீ

Tuesday, July 22, 2008

பி.ஜே குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் சொல்கின்றாரா? - Taif சயீத் சவால்

S.M. பாக்கருக்கு, பகிரங்க சவால்!

S.M. பாக்கர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!

நீங்கள் பேசி வருவதாவது "எங்களிடம் தனிமனித வழிபாடு ஏதும் கிடையாது. குர்ஆன் ஹதீஸை மட்டும்தான் சகோதரர் பி.ஜே அவர்கள் சொல்கின்ற காரணத்தினால் அவர் சொல்வதை கேட்கின்றோம்" என்று மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றீர்கள். உங்களிடம் மீடியா இருப்பதால், இது பல இலட்சம் மக்களை இலகுவாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. அதை நம்பக்கூடியவர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.

"சகோதரர் பி.ஜே குர்ஆன், ஹதீஸையும் சொல்லி வருகின்றார்" என்று சொல்வீர்கள் என்றால் அது உண்மையாக இருக்கும். ஏன் என்றால் சமீப காலங்களாக சகோதரர் பி.ஜே அவர்கள் குர்அன், ஹதீஸீக்கு மாற்றமாக பிரச்சாரங்கள் செய்து வருகிறார். நீங்கள் உண்மைக்கு மாற்றமாக சொல்லி மக்களுக்கு தவறான வழியைக்காட்டுகின்றீர்கள்! இதை பார்த்து கொண்டிருக்க முடியாது.

ஆகவே நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளராக இருந்தால், அதை நிரூபிக்க தயாரா? நீங்கள் கூறுவது தவறு என்று நான் நிரூபிக்க தயாராக இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.

தாங்கள் தவறாக (பி.ஜே குர்ஆன், ஹதீஸை மட்டும் தான் சொல்கின்றார் என்று) பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைப்பதை வாபஸ் வாங்குங்கள், இல்லையேல் இந்த பகிரஙடக சவாலை எதிர் கொள்ளுங்கள்.

இதற்கு எந்த ஒரு பதிலையும் தராமல் நீங்கள் அலட்சியம் செய்வதாக சொல்லி, திசைதிருப்ப முயற்ச்சித்தால், நீங்கள் பிரச்சாரம் செய்வது தவறானது என்பதற்கு அதுவே ஆதாரம்.

ஆகவே கீழ்கண்ட தலைப்பில் நீங்கள் விவாதிக்கத் தயாரா? என்று பகிரங்க அறைகூவல் விடுக்கின்றென்.

தலைப்பு :

"பி.ஜே அவர்கள், குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் சொல்கின்றாரா?"



முதலில் விவாதிக்க உங்கள் ஒப்புதல் வேண்டும். அதன் பின்பு எப்பொழுது? எங்கு என்பதை முடிவு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

N. SAEED
Saudi Oger Ltd. P.O Box - 1250 - Al taif 41888, Saudi Arabia.
Mobile : +966502347599, E.Mail saeed_taif@yahoo.com


இவரின் பழைய கட்டுரைகள் :

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-01)

.

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)

.

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-03)






குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!

'குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல! முற்றுப்புள்ளி வைப்பீர்!!


60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் கழிப்பறை கட்டியதில் தான் முஸ்லிம்கள் முன்னேறி இருக்கிறார்கள். தலித்களைவிட கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு போன்றவற்றில் மிக, மிக பின் தங்கி உள்ளனர். இதற்கு காரணம் தகுதியற்ற தலைமைத்தனம் என்ற பிரண்ட்லைன் கூற்றை மறந்துவிட முடியாது. முஸ்லிம் லீக்கை குறை சொல்லி உரிமை, உணர்வு என வார்த்தைகளில் உஷ்ணத்தை ஏற்றி ஆர்ப்பாட்டம், போராட்டம், என போலி வேஷம் போட்டு ஆரவாரத்தோடு புறப்பட்ட த.மு.மு.க விழலுக்கு இறைத்த நீராய் 60 ஆண்டு முஸ்லிம் லீக்கின் ஏமாற்றும் வேலையை கச்சிதமாய் செய்து இருக்கிறது. ஆம் 2 சீட்டுக்கு திராவிட கட்சிகளிடம் அடகு வைக்கும் சாதனையை வெற்றிகரமாய் நிகழ்த்தி இருக்கிறது. கோவை 19 உயிர்கள் பலி, கப்ருஸ்தான் இடிப்பு, பள்ளி உடைப்பு, மீரட், மண்டைக்காடு, கான்பூர், குஜராத், என சமூகத்தின் அவலங்களை காட்சி பொருளாய் கடை விரித்து, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் சென்றவர்கள்....

இன்று அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் சூது வலையில் சிக்கி, உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து அரசியல் இல்லை, தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர்பல்டி, இட ஒதுக்கீட்டு துரோகத்திற்கு பாராட்டு, அரசியல் ஹராம், ஈடுபட மாட்டோம் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மேடைதோறும் விளம்பிய காட்சி, நடிப்பதில் நடிகர்களை மிஞ்சிய மாட்சி, லட்சியத்தை மாற்றி, மாற்றி பேசுவதிலும் தன்னை நம்பி வரும் தொண்டர்களை முட்டாளாக்கி வைத்துக் கொள்வதில் அரசியல்வாதிகளை விஞ்சிய அரசியல் வியாதிகள் த.மு.மு.க என்றால் மிகையில்லை. இளைஞர்களே சிந்தியுங்கள்.

சமுதாயத்தை மேய்ப்பவர்கள் போல் காட்டிக் கொண்டு சமூகத்தை ஏய்த்தவர்கள், ஒற்றுமையை உடைத்து இமாலய சாதனையைச் செய்தவர்கள், மற்றவர்களின் பார்வைகளில் இஸ்லாமிய சமூகத்தை சர்க்கஸ் கோமாளிகளாக காட்சி அளிக்க வைத்தவர்கள். இவர்களின் குழப்பத்தின் உச்சகட்டத்தை கண்டு நம்மை ஏமாற்றும் அரசியல் கட்சிகளில் இளைஞர்கள் தஞ்சம் புக வேண்டிய நிலையை ஏற்படுத்தியவர்கள். இன்று எங்கே நம் த.மு.மு.க கூடாரம் கலைந்து விடுமோ! என அஞ்சி அற்புதமான வாய்ப்புகளை விட்டு விட்டு அரசியலைப் புறக்கணித்த துறவிகள், இந்திய தேசிய மக்கள் கட்சியை (ஐனுஆமு) ஆரம்பித்த பிறகு முன்னேற்றம் என சமுதாயத்தை பின்னேற்ற அரசியல் குழப்பத்தை மீண்டும் துவக்கி இருக்கின்றனர். தி.மு.க.விற்கே எங்கள் ஆதரவு என நஞ்சு வைக்கும் வஞ்சகர்களின் வாயில் கதவைத் தட்டி இருக்கிறார்கள். வாழ்க என சொல்ல இதயம் வலிக்கிறது. இளைஞர்களே சிந்தியுங்கள்.

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுத்திட, சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமித்திட சமூகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்பிட, நம்மைக் கருவருக்கும் அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்து வஞ்சம் செய்யும் சமுதாயத் தலைவர்கள் (ளழசசல) துரோகிகளின் தூக்கு கயிற்றை அறுத்து எரிந்திட சமுதாயத்து எண்ணங்கள், உணர்வுகள், கனவுகள், இவற்றிற்கு வடிவம் கொடுத்திட கடந்த இரண்டு ஆண்டுகளாக களப்பணியாற்றி தலித், கிருஸ்துவ, முஸ்லிம்களை அரவணைத்துச் சென்றிட முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சியைத் துவக்கி சென்னையில் தலைமையகம் அமைத்து, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்திற்கான வேலையை முடித்து, துண்டு பிரசுரம், சி.டி.க்கள், கலந்துரையாடல், பொதுக்கூட்டம், கருத்து பரிமாற்றம், உலமாக்கள், அறிவு ஜீவிகள் சந்திப்பு, என சமூகத்தின் சிந்தனையைத் தூண்டி அரசியல் சார்பற்ற அமைப்புகளை எல்லாம் ஒன்றினைத்து எதிர்கால பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நம் அரசியல் பலத்தை காட்டிய களத்தில் நிற்கும்போது ஆம் கனிபறிக்க மரம் ஏறும் போது கருநாகம் காலைச் சுற்றுமாம்.

அதுபோன்று தேர்தல் வரும்போது எல்லாம் சில்லரைகளுக்காக குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொள்கையை கோடிக்கு விற்றவர்கள், வாய்ப்பைத் தவற விட்டு விட்டு, மீண்டும் சமூகத்தின் வாக்கு வலிமையை சிதைக்க அன்று மார்க்கத்தில் குழப்பம், இன்று அரசியலில் குழப்பம் செய்ய வருகின்றனர். இளைஞர்களே எச்சரிக்கை. ஜமாத்தார்களே, சமுதாயப் பெரியவர்களே, ஆலிம் பெருமக்களே, ஆன்றோர்களே, குழப்பவாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பீர். சாட்டையடியில் குழப்பவாதிகளின் கொட்டம் அடங்கட்டும். குள்ள நரி செயல்கள் ஒடுங்கட்டும். அதன்மூலம் நம் அரசியல் வலிமை பிறக்கட்டும், மற்றவர்கள் நம் அரசியல் வலிமையை உணரட்டும். நம் தனித் தன்மை தமிழ்த் தரணியில் சிறக்கட்டும், வருங்கால சந்ததிகள் நம்மைப் போற்றட்டும்.

குழப்பவாதிகளுக்கு காற்புள்ளி அல்ல முற்றுப்புள்ளி வைப்போம். வாரீர்! வாரீர்.


இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

50ஃ330இ திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 600 005
தமிழ்நாடு செல் : 994380211, 9344510369, 9786011679, 9443021050

Monday, July 21, 2008

ஃபர்ஸானா ஆலிமா மற்றும் அஹமத் பாகவியின் உரை (AUDIO)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த 20-07-2008 அன்று குளச்சல் மஸ்ஜிதுல் முனீஃபில் நடந்த சொற்பொழிவில் ஆலிமா ஃபர்ஸானா அவர்களும், அஃப்ஸலுல் உலமா அஹமத் பாகவி அவர்களும் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆடியோவை கேட்க இங்கு சொடுக்கவும்.

.


மேலதிக கட்டுரைகளும், ஆடியோக்களுக்கும்.


Sunday, July 20, 2008

கோவையில் IAS ல் தேர்ச்சி பெற்ற முஸ்லிம்கள்

முஸ்லிம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆக இருப்பவர்கள்






படங்கள் : கோவை தங்கப்பா

Thursday, July 17, 2008

ஹிஸ்புல்லாவின் நஸ்ருல்லாஹ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்குறுதி அளிக்கிறார் (Exclusive)

ஹிஸ்புல்லாவின் நஸ்ருல்லாஹ் உங்களுக்கு சுதந்திரத்திற்கான வாக்குறுதி அளிக்கிறார்!!



இஸ்ரேலிய யூதர்களின் பிரதமர் ஓல்மர்ட் அவமானத்தை வாக்குறுதியளிக்கிறார்!!

Nasrullah Gurantees Freedom and Israel's Olmert Guarantees Humiliation

 
மகிழ்ச்சியில் ஹிஸ்புல்லாஹ்வின் கொடியை அசைக்கும் ஹிஸபுல்லா
 
இதுதான் மத்தியகிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் எங்கும் அன்றைய தின முழக்கமாக இருந்தது. ஜீலை 16, 2008 அமெரிக்காவின் கள்ளக்குழந்தையான இஸ்ரேலுக்கும் தங்கள் மண்ணை மீட்க அற்பனிப்பு யுத்தங்களை நடத்திக் கொண்டிருக்கும் லெபனானின் போராளிகளான ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையேயான யுத்தம் முடிந்து சரியாக இரன்டு வருடங்களும் நான்கு நாட்களுமாகியிருந்தன. இன்றைய தினம் ஹிஸ்புல்லாக்களின் தலைவரான ஹஸன் நஸ்ருலு்லாஹ் அவர்கள் தன் மக்களுக்கு வாக்களித்திருந்தபடி தனது நாட்டின் இறுதி பனயக் கைதிகளாக யூத தீவிரவாத நாடான இஸ்ரேலிடம் பிடிபட்டு சித்திரவதைகளை அனுபவித்து கொண்டிருந்த ஐந்து குடிமக்களை மீட்டு வந்திருந்தார். ஆம், அதன் எதிரொளியாக மத்திய கிழக்கு நாடுகலெங்கும் மகிழச்சி கரைபுரன்டோடியது. லெபனான் தனது நாடு முழுவதும் இந்த மகிழச்சியை கொண்டாட பொது விடுமுறை அளித்திருந்தது.

ஹிஸ்புல்லாக்களின் கட்டளைக்கு பணிந்த யூத தீவிரவாத நாடான இஸ்ரேல் பல வருடங்களாக பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐந்து லெபனானிய போராளிகளை இஸ்ரேல்-லெபனான் எல்லையில் "ரோஸ் ஹனிக்ரா எல்லை வாயில்" ஹிஸ்புல்லாக்களிடம் கையளித்தது. பின்னர் நகூரா என்ற கடற்கரையோர நகரத்தில் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்த ஐந்து போராளிகளும் உலங்கு வானூர்தியில் ஏற்றப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலங்கு வானூர்திகள் துனைக்கு பரந்து வர லெபனானிய தலைநகரான பெய்ரூட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

ஆச்சர்யம், அதிசயம், ஆம்!! இந்த வீரப் போராளிகளை வரவேற்க லெபனானின் தலைவாக்ள் மட்டுமின்றி உலக நாடுகிளன் தலைவர்களும், தூதுவர்களும் பெய்ரூட் விமானி நிலையத்தில் பல மனிநேரங்கள் காத்திருந்த காட்சியை தொடாச்சியாக அரபு தொலைக் காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. லெபனானின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அனைத்து அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், எதி்ர்க் கட்சித் தலைவர்கள், லெபனானில் இயங்கும் அனைத்து குழுக்களின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள்,இஸ்லாமிய, கிருத்துவ, அனைத்து சமய தலைவர்கள், ஜெர்மனி, பிரான்ஸ்,ஈரான், என பல நாட்டுத் தலைவர்களும், தூதுவர்களும், இராஜ தந்திரிகளும் பெய்ரூட் விமான நிலையத்தின் வெட்ட வெளியில் இந்த வீரப் போராளிகளை வரவேற்க பல மணி நேரம் காத்து நின்ற காட்சி ஆச்சாயப்படத்தக்கதாக இருந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலங்கு வானூர்திகள் புடைசூழ வீரப்போராளிகளின் வானூர்தி தரைதொட்ட தருனம் லெபனானின் தேசிய கீதம் முழங்கின நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் அந்த வீரப் போராளிகளுக்கு நெஞ்சை உயர்த்தி மறியாதை செய்து வரவேற்றதற்கு உலகம் சாட்சியானது. யாரைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றனரோ அந்த போராளிகளை முப்படை அணிவகுப்புடன் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், இமைச்சர்கள், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், உலக துர்துவர்கள் என அனைவருமே திரன்டு வரவேற்றது அமெரிக்க, இஸ்ரேலிய தீவிரவாத அரச தலைவர்களுக்கு பல மாதங்களுக்கு துர்க்கத்தை கெடுக்கும் என்பது உண்மை.

இந்நிக்ழ்வில் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நாயகனாக போற்றப்பட்டவர் சமீர் குந்த்தார் என்பவராவார். சரி யார் இந்த சமீர் குந்த்தார் என்று கேட்கின்றீர்களா? யூத இஸ்ரேலிய பயங்கரவாதிகாளால் தீவிரவாதி என்றும் லெபனானிய, பாலஸ்த்தீனிய மக்களால் போராளியாக போற்றப்படும் இந்த சமீர் குந்த்தார் என்பவர் லெபனான், பாலஸ்த்தீன், சிரியா போன்ற நாடுகிளல் வாழும் சில மக்களால் பின்பற்றப்படும் மதமான "துரூஸி" எனும் பரிவைச் சோந்தவர், லெனபானிய மலைப்பகுதி கிராமமான் "ஆபே" எனும் ஊரில் 1962 ம் வருடம் ஜீலை 20ம் நாள் பிறந்தார், அந்த கால கட்டத்தில் தான் அரபு இஸ்ரேலிய யுத்தங்கள் தீவிரமடைந்திருந்த காலம், இஸ்ரேலிய யூத இனவெறி அரசு பாலஸ்த்தீனிய, லெபனானிய மக்க கொன்று அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி கொண்டிருந்த காலம். அந்த கால கட்டத்தில் ஹிஸ்புல்லாவோ, ஹமாஸோ தோன்றியிராத காலகட்டம் அது. அன்றைய நாட்களில் தங்கள் நிலத்தையும் இழந்து, உயிர் உடமைகளையும் இழந்து அவமானப்படுத்தப்பட்டு சொந்த மன்னில் அகதிகளாக ஆகியிருந்த மக்களில் பலர் தங்கள் மண்ணின் விடுதலைக்காக ஒன்று சோந்து போராடத் துவங்கியிருந்த காலம்.

அமெரிக்க, பிரித்தானி உதவிகளுகடன் அரபு மக்களின் மீது தனது அடக்குமுறையை இஸ்ரேல் ஏவி விட்டிருந்த காலம் அது அப்போது அபு அப்பாஸ் என்பவர் "பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனி" (PLF) என்ற ஒரு போராளிக் குழுவொன்றை நிறுவி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இரானுவத்திற்கெதிராக கொரில்லாத் தாக்குதல்களை நடத்தி வந்தார். அந்த நேரத்தில் தனது இன அரபு மக்கள் படும் கஷட்டங்களை கண்ட இளைஞனான சமீர் கந்தார் தனது மிகச் சிறிய வயதில் அபு அப்பாஸ் அவர்களின் பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனியில் தன்னை இணைத்துக் கொண்டார். அத்துடன் நில்லாது அற்பனிப்புடன் பல இஸ்ரேலிய யூத ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான பல தாக்குதல்களிலும் பங்கெடுத்துள்ளார். 1970 ல் இருந்து 1980 கால கட்டங்களில் உலகின் பல பாகங்களில் அமெரிக்க, இஸ்ரேலிய நிலைகளின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி அமெரிக்க, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களை பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனி நிலை குலைய வைத்திருந்த காலம் அது.

 
தாக்குதலுக்கு தயாராக சமீர் கந்தார் குழு இடமிருந்து முதலாவதாக சமீர்
 
வீரியமிக்க இளைஞனாக இருந்த சமீர் குந்த்தர் அவர்களின் தலைமையில் யூத இன வெறியர்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த பாலஸ்த்தீனிய கடற்கரையோர நகரமான நகரியாவின் மீது ஒரு தாக்குதலை தொடுத்து அங்குள்ள யூதர்களை நிலைகுலையச் அங்கிருந்த விரட்ட் வேண்டிய முக்கிய தாக்குதலுக்கு பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனி தயாராகியது. சமீர் குந்த்தார் அவர்களுக்கு அந்த தாக்குதலை தலைமையேற்று நடத்த வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஏப்ரல் 22, 1979 "தாக்குதல் நஸர்" என்று பெயரிடப்பட்டிருந்த நகரியா மீட்பு நடவடிக்கையில் இறங்க சமீர் கந்த்தார் தலைமையில் நன்கு பயிற்சி பெற்றிருந்த பாலஸ்த்தீன் விடுதலை முண்ணனியின் நான்கு நபர்களை கொண்ட கொரில்லா போராளி குழுவொன்று கிளம்பியது. சமீர் குந்த்தார் தவிர அப்துல் மஜீத் அஸ்லன், அஹ்மத் அல் அப்ரஸ், முஹன்னா ஸாலிம் அல் முஅய்யத் என் மூன்று போராளிகளும் இடம் பெற்றிருந்தனர். லெபனானின் கடற்கரையோர நகரமான "டையர்" எனும் இடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலேயே இருந்தது தாக்குதல் நடத்த வேண்டிய நகரியா என்ற பகுதி, நிலப் பரப்பு வழியாக ஊடுருவ இயலாது யூத பேரிணவாதிகள் கடுமையான கண்ணிவெடிகளை விதைத்து பாதுகாப்பை பலப்படுத்தியிருந்ததால், 55 குதிரை சக்தியுள்ள இழுவை இயந்திரம் பொறுத்தப்பட்ட ரப்பர் விரைவுப் படகில் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் நள்ளிரவின் அமைதியை கிழித்த வண்ணம் நகரியாவை நோக்கி பயனப்பட்டார்கள் இந்த கொரில்லாப் போராளிக் குழுவினர்.

நகரியாவின் கடற்கரையில் வந்திரங்கிய சமீர் குந்த்தாரின் போராளிக் குழுவினர் தங்களின் திட்டமிடப்பட்ட தாக்குதல் நடவடிக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம் திடீரென ஒரு யூத இணவெறி காவலன் ஒருவன் இவர்களை கண்டுவிட்டான் உடனே அவன் தனது சகாக்களை அழைக்க முற்ப்பட்டபோது போராளிக் குழுவினர் நடத்திய தாக்குதலில் அந்த யூத இணவெறிக் காவலன் கொல்லப்பட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டதும் உஷாரான இஸ்ரேலிய யூத இணவெறி இரானுவத்தினர் அவ்விடத்தில் வந்து குவிந்தனர் உடனே நிலைமையை உணாந்து தங்கள் திட்டத்தை மாற்றிக் கொண்ட போராளிக் குழுவினர் யூத இணவெறி இரானுவத்தினரோடு கடுமையான துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டவாறு முன்னேறினர். அப்போது நடந்த கடுமையான சண்டையில் சமீர் குந்தாரோடு வந்திருந்த போராளிகளான அப்துல் மஜீத் அஸ்லன், முஹன்னா ஸாலிம் அல் முஅய்யத் ஆகிய போராளிகள் வீரச் சாவை எய்தினர். அஹ்மத் அல் அப்ரஸ் மற்றும் சமீர் குந்த்தார் ஆகியோர் ஆயுதம் உள்ளவரை போராடினர் இறுதியில் எதிரிகளிடம் பிடிபட்டனர். இந்த வீரப் போராட்ட்த்தில் இவர்கள் இரு யூத இன வெறி காவலர்களை கொன்றனர். கடுமையான சண்டைக்கு மத்தியில் இந்த போராளிகள் அங்கிருந்த குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தாக்குதலை நடத்தினர் (இஸ்ரேலில் பொதுமக்கள் (சிவிலியன்) என்று யாரும் கிடையாது, இஸ்ரேலிய குடிமகன் ஒவ்வொருவனும் இரானுவ வீரனாவான், ஆயுதம் தரித்தே இருப்பார்கள் யூதர்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ளவும்) அப்போது ஒரு யூதக் குடும்பம் இந்த சண்டைக்கிடையில் மாட்டிக் கொண்டது. அங்கிருந்த யூதனை பணயக் கைதியாக பிடித்த சமீர் குந்த்தார் அவர்கள் தனது தாக்குதலை தொடாந்து நடத்திக் கொண்டே முன்னுறினார்.

இதற்கிடையில் தனது குழந்தையோடு துனி வைக்கும் அலமாறியில் ஒழிந்த அந்த யூதனின் மனைவி குழந்தை அழவே குழந்தையின் அழுகை ஒலி தன்னை போராளிகளிடம் காட்டிக் கொடுத்து விடும் என்று பயந்து தனது குழந்தையின் வாயையும் மூக்கையும் பொத்தி கொன்று விட்டாள். இதற்கிடையில் நடைபெற்ற சண்டையில் சிக்கி பணயக் கைதியாக பிடித்து வைத்திருந்த யூதனும் செத்து விட்டான். சமிர் குந்த்தார் அவர்களை யூத இரானுவம் கைது செய்தது. பின்னர் உலக நாடுகளின் பரிதாபத்தை பெறுவதற்காக வேண்டியும், பாலஸ்த்தீன் அரபு போராளிகளை உலக மக்கள் மத்தியில் பயங்கிரவாதிகளாக காட்டுவதற்காகவும், சமீர் கந்த்தார் பிடித்து வைத்திருந்த யூதனின் குழந்தையை மன்டையை சிதறடித்து கொன்ற யூதர்கள் அதை சமீர் கந்த்தார் தான் செய்ததாக் குற்றம் சாட்டினர். உலகெங்கும் பச்சிலம் குழந்தையை அரபு தீவிரவாதி மன்டையை சிதறடித்து கொன்றதாக பிரச்சாரம் செய்து அனுதாபம் ஈட்டினர் யூத பயங்கரவாதிகள். (பல ஆயிரம் பாலஸ்த்தீன் பச்சிலம் குழந்தைகளை தீவிரவாத இஸ்ரேலிய இரானுவம் கொன்று குவிப்பதை இன்றைய உலகம் வேக்கை பர்ர்க்கின்றது ஆனால் ஒரு யூதனோ அல்லது யூதக் குழந்தையோ தாக்குதலில் கொல்லப்பட்டால் உலகம் கதறுகின்றது தீவிரவாதம் என்று)
 
பாலஸத்தீன் ஃபத்தாஹ் போராளிக் குழு தலைவர் மர்வான் பர்கூத்தி உடன் சமீர்
 
யூதர்களால் பிடிக்கப்பட்ட போராளி சமீர் குந்தார் அவர்கள் மீது குழந்தையை மன்டையை சிதறடித்து கொன்றது என பல பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன ஆனால் அவை அனைத்தையும் இன்று வரை மறுத்தே வந்துள்ளார் சமீர் குந்த்தார் அவர்கள். முக்கியமாக குழந்தை படுகொலையை தான் செய்யவில்லை என மறுத்துள்ளார். ஆனால் ஆக்கிரமிப்பு சக்திகளான யூத தீவிரவாதிகளின் நீதி மன்றம் சமீர் குந்தார் அவர்களுக்கு 542 வருடங்'கள் சிறைத் தண்டனை விதித்து தீர்பளித்தது. தனது 17 வயதில் சிறை சென்ற சமீர் அன்றிலிருந்து இன்று வரை கிட்டத்தட்ட 27 வருடங்கள் யூதர்களின் சிறையில் வாடிய சமீர் குந்தார் அவர்கள் நீண்ட கால் அரபு சிறைவாசி என்ற பெயரினையும் பெற்றார். தனது சிறைவாசத்தின் போது சிறைவாசிகளின் நலனுக்காக போராடிய ஒரு இஸ்ரேலிய அரபு பென்னை மணந்தார் ஆனால் பின்னர் அந்த பென்னை விவாகரத்து செய்து விட்டார். இன்று அவரது வயது 46.

பாலஸ்த்தீன் சுதந்திர இயக்கத்தின் முக்கிய போராளியாக சமீர் கந்த்தார் இருந்தமையால் அவரை மீட்பதற்கு பல போராளிக் குழுக்களும் நடவடிக்கை எடுத்தன. சமீர் குந்தாரோடு பிடிபட்ட அஹ்மத் அல்அப்ராஸ் அவர்கள் 1985 ல் இஸ்ரேலால் செய்யப்பட்ட "ஜிப்ரீல் ஓப்பந்தம்" மூலம் விடுதலை செய்யப்பட்டார், ஆனால் சமீர் குந்தாரை விடுதலை செய் இஸ்ரேல் ஒவ்வொரு கட்டத்திலும் மறுத்தே வந்துள்ளது. 1985 ம் ஆன்டு சமீர் கந்தாரின் விடுதலை கோரி இஸ்ரேலிய அமெரிக்க பயணிகள் பயனம் செய்த கப்பல் ஒன்றை பாலஸத்தீன விடுதலை முண்ணனியினர் பிடித்தனர் பின்னர் சமீர் கந்தாரை விடுவிக்க இஸ்ரேல் மறுத்து விட்டதால் அதில் இருந்த முரன்டு பிடித்த ஒரு அமெரிக்க யூதனை கொன்று விட்டு கப்பலை எகிப்திடம் ஒப்படைத்து விட்டனர்.

பின்னர் நடந்த பல பணயக் கைதிகள் பறிமாற்றத்தின் போதும் சமிர் கந்தாரை விடுவிக்க மறுத்து விட்டது இஸ்ரேல். ஆனால ஹிஸ்புல்லா உதயமானதற்கு பிறகு ஹிஸ்புல்லாக்களின் தலைவரால் இஸ்ரேலிய சிறையில் வாடும் பாலஸ்த்தீன், லெபனான் விடுதலை போராளிகளுக்கு ஒரு வாக்குறுதி அளிகப்ப்பட்டது அது என்னவென்றால் இஸ்ரேல் சிறையில் வாடும் கடைசி லெபனானிய கைதியை மீட்கும் வரை ஹிஸ்புல்லா போராடும் என்பதே அது. அது போலவே பல பாலஸத்தீன லெபனானிய கைதிகளை மீட்டெடுத்துள்ளது ஹிஸ்புல்லா.

மே 26, 2006 ம் ஆண்டு ஹிஸ்புல்லா இஸ்ரேலிய யூத இனவெறி இரானுவத்தினர் மீது திடீர் தாக்குதல் நடத்தி அவர்களில் 8 போரை கொன்றதோடு இருவரை காயங்களோடு பிடித்து சென்றது. அந்த இருவரை விடுதலை செய்ய வேண்டுமானால் சமீர் கந்தாரோடு கடைசியாக இஸ்ரேலிய சிறைகளில் மிச்சமிருக்கும் லெபனானிய போராளிகளையும் 50 வருடங்களுக்கும் மேறப்பட்ட யுத்தத்தில் இறந்து போன பாலஸத்தீன்,லெபனானிய, அரபு வீரர்களின் சடலங்களின் மிச்ச மீதிகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியது, ஆனால் இஸ்ரேல் அதை மதிக்காமல் அமெரிக்காவின் பேச்சை கேட்டு யுத்தத்தை ஆரம்பித்து 1000 த்திற்கு மேற்ப்பட்ட லெபனானியர்களை கோழைத்தனமாக குடியிருப்புக்கள் மீது குண்டுகளை வீசி கொன்றதுடன் தனது முழு படை பலத்தையும் பயன்படுத்தியும் ஹிஸ்புல்லாக்களின் அதிரடித் தாக்குதலின் முன் ஒன்றும் செய்ய இயலாமல் நூற்றுக் கணக்கி்ல் தனது இரானுவ வீரர்களை இழந்து அவமானகரமான தோல்வியை சந்தித்தது.

பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் சமீர் கந்தார் உட்பட எஞ்சியிருந்த லெபனானிய போராளிகளை விடுவிக்கவும், 50 வருடங்களுக்கும் மேறப்பட்ட யுத்தத்தில் இறந்து போன பாலஸத்தீன்,லெபனானிய, அரபு வீரர்களின் சடலங்களின் மிச்ச மீதிகளையும் தங்களிடம் ஒப்படைக்கவும் ஒத்துக் கொண்டது. பேச்சுவார்ததை ஜெர்மனிய நாட்டின் நடுநிலைமை வகித்தது. இறுதியில் நேற்று வீரப் போராளிகள் சமீர் கந்தார் தலைமையில் சுதந்திரப் பறவைகளாக லெபனானிய மண்ணில் நுலைந்தனர்.

இநத மாவீரர்களைத்தான் லெபனானின் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், அனைத்து அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், எதி்ர்க் கட்சித் தலைவர்கள், லெபனானில் இயங்கும் அனைத்து குழுக்களின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள்,இஸ்லாமிய, கிருத்துவ, அனைத்து சமய தலைவர்கள், ஜெர்மனி, பிரான்ஸ்,ஈரான், என பல நாட்டுத் தலைவர்களும், தூதுவர்களும், இராஜ தந்திரிகளும் பெய்ரூட் விமான நிலையத்தின் வெட்ட வெளியில் இந்த வீரப் போராளிகளை வரவேற்க பல மணி நேரம் காத்து நின்று வரவேற்றனர். இவர்களின் விடுதலையில் ஒட்டுமொத்த அரபுலகமும் திளைத்தது.
 
இரானுவ உடையில் சுதந்திரப் போராளிகளாக வலது புறம் முதலாவதாக சமீர் குந்தார்

பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் இரானுவ உடையில் வந்து பேசிய சமீர் கந்தார் உட்பட அனைத்து போராளிகளும், நாங்கள் பாலஸ்த்தீன் மண்ணில் யூத பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு லெபனானிய மண்ணிற்கு வந்துள்ளோம் ஆனால் பாலஸ்த்தீன மண்ணை மீட்பதே எங்கள் குறிக்கோளாகும் அது வரை எங்கள் போராட்டம் தெர்ரும் என்றனர். பின்னர் பேசிய ஹிஸ்புல்லர்களின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் அவர்கள் இஸ்ரேலிய சிறைகளில் வாடிய அரபு சிறைவாசிகளின் சுதந்திரத்திற்கு அவர்களை மீட்டெடுப்பதாக உறுதியளித்திருந்தோம் அதில் உறுதியாக நின்று அவாக்ளை மிடு்டெடுத்துள்ளோம், இன்னும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்த்தீன மண்ணையும், பாலஸ்த்தீனர்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட ஒவ்வொரு அரபு மண்ணையும் மீட்டெடுத்து அவர்களின் சுதந்திரத்திற்கு உறுதியிளத்தள்ளோம் அவர்களின் சுதந்திரம் உறுதியாக்கப்படுதம் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.
 
ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாவுடன் சமீர் குந்தார்
 
பல வருடங்களாக எந்தவொரு அரபு அரசாங்கமோ, ஆட்சியாளர்களோ யுத்தத்தின் மூலமோ, பேச்சுவார்த்தைகளின் மூலமோ சாதிகக் இயலாத காரியத்தை பல முறை சாதித்து இறுதியாக இஸ்ரேலிய சிறைச்சாலையில் வாடிய கடைசி லெபனானிய போராளியையும் மீட்டெடுத்துள்ளனர் இன்னும் தங்கள் சக போராளிகளின் சடலங்கள் கூட யூத ஆக்கிரமிப்பு மண்ணில் இருக்கக் கூடாது என்று அவற்றையும் மீட்டெடுத்துள்ளனர் ஹிஸ்புல்லாஹ் போராளிகள். இன்னும் மீதியுள்ள போராளிகளின் சுதந்திரத்திற்கும் உறுதியளித்துள்ளனர். இந்த போராளிகளை வரவேற்க ஒட்டுமொத்த லெபனானே திரன்டு வீதிகளில் மக்கள் வெள்ளமாக நின்றது ஆச்சர்யமளிக்கின்றது.

இந்நிகழ்வுகளை கண்டு கழித்து தொலைக்காட்சியை மூடியபின்னும், மேடையில் ஓங்கி ஒலித்து சமீர் கந்தாரின் குரலும், ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வின் குரலும் இன்னும் எம் காதுகளில் ரீங்காரமிடுகின்றன!! ஆம்!! "இன்னும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்த்தீன மண்ணையும், பாலஸ்த்தீனர்களையும், ஆக்கிரமிக்கப்பட்ட ஒவ்வொரு அரபு மண்ணையும் மீட்டெடுத்து அவர்களின் சுதந்திரத்திற்கு உறுதியிளத்தள்ளோம் அவர்களின் சுதந்திரம் உறுதியாக்கப்படுதம் வரை எங்கள் போராட்டம் தொடரும், நாங்கள் தோற்க்கடிக்கப்பட்ட காலங்கள் மலையேறிவிட்டன...இனி வெற்றிகள் மட்டுமே எம்மை தொடரும்...." தொடரட்டும் இவர்களின் போராட்டம் இந்த மாவீரர்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றிபெற்று ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்த்தீனத்தின் கடைசி அங்குல நிலத்தையும் மீட்கும் வரை இறுதி யூதனை கப்பலேற்றி வந்த இடத்திற்கே திரும்ப அனுப்பும் வரை தொடரட்டும் இவர்களின் போராட்டம். இவர்களின் போராட்டத்தில் வெல்ல நாம் வாழத்துவோம், பிறார்த்திப்போம்!! வாழ்க பாலஸ்த்தீன சுதந்திர போராளிகள்!! வெல்லட்டும் பாலஸ்த்தீன் சுதந்திர போராட்டம்!!

நன்றி
முகவைத்தமிழன்
இந்த கட்டுரைக்கு எவ்வித காப்புரிமையும் இல்லை யாரும் பயன்படுத்தி கொள்ளலாம்.


Tuesday, July 15, 2008

வஞ்சிக்கப்பட்டோரே! அரசியல் வாழ்வுரிமைக்கு அழைக்கிறது IDMK

வஞ்சிக்கப்பட்டோரே! அரசியல் வாழ்வுரிமைக்கு அழைக்கிறது IDMK


என் இனிய சமூகத்தின் இளவல்களே! ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளே!

தாழ்ந்தவர்கள் என்பது உன்னைப் பொறுத்தது. தாழ்த்தப்பட்டவர்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. நீ திட்டமிட்டு வஞ்சகத்தின் வளையில் வீழ்த்தப்பட்டு இருக்கிறாய்.

கல் தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடியின் தவப் புதல்வர்களே! வீரம் விளைகின்ற மண்ணுக்கு சொந்தக்காரர்களே! வேகாத பொருளை வெள்ளித் தட்டில் கொடுப்பதைப் போன்று சில சீட்டுக்களை ஒதுக்கியதால் உன் ஓலம் ஓய்ந்து விட வில்லை. செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக 5 தாழ்த்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் அன்று. மாட்டுக்கு உள்ள மரியாதைக் கூட உனக்கு இல்லை.

சில அரசியல் கட்சிகளின் முகவரியும், முகமும் தெரியாத காரணத்தினால் எலி வந்து கருவாட்டை நாடி பொறியில் மாட்டிக் கொள்வதைப் போன்று மாட்டிக் கொண்டு நிற்கிறாய். காயம் தேடும் காக்கைகளின் கொடூர செயல்களில் இருந்து உன்னைக் காத்துக் கொள்ள முடியவில்லை. அரசியல் கட்சிகளில் பார்வைக் குருவிகளாக அங்கொன்றும், இங்கொன்றும் காட்சிப் பொருளாய் நிறுத்தப்பட்டு இருக்கிறாய். ஆகையால்தான் சோகங்களை எண்ணிக் கொண்டு கண்ணீரைச் சிந்திக் கொண்டு நிற்கிறாய். தன்னை உணராதவனை மற்றவர்கள் அசைக்கிறார்கள், ஆம், உண்மையில் நீ அசைக்கப்படுகிறாய். அரசியலில் அடிமைப் படுத்தப் படுகிறாய்.

மானுடத்தை மானுடமாய்ப் பார்க்கின்ற மார்க்கத்தை இதயத்தில் இருத்திக் கொண்டதால் மானுடம் எங்கே காயப்படுகிறரோ அங்கே எங்கள் இதயங்கள் சலனப்படுகின்றன. அங்கே உரிமைக்குரல் எழுப்புகின்றன. உன்னை விலை பேசும் எத்தர்களை இனம் கண்டு ஒதுக்கிவிட்டு, ஆம், செத்த மீனைக் கடல் கருவாடு என்று ஒதுக்கிவிடுவது போல் ஒதுக்கி விட்டு அரசியல் உரிமைக்கு வஞ்சிக்கப்பட்ட சமூகங்களை இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) அழைக்கிறது.



இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு

Saturday, July 12, 2008

தப்லீக் சகோதரர்களே இஸ்லாத்தை புரிந்து கொள்ளுங்கள்(PART-02) - அன்ஸார் தப்லீகி

"தப்லீக் சகோதரர்களே இஸ்லாத்தை

புரிந்து கொள்ளுங்கள் (PART-02)"

அஷ்ஷேய்க். அன்ஸார் தப்லீகி அவர்கள்.

Al-Sheikh. Ansar Tableeqi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அன்ஸார் தப்லீகி அவர்கள்

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல 3,181 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!


ஹஜ் புனித பயணம் செல்ல 3 ஆயிரத்து 181 பேர் குலுக்கல் முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி சார்பில் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த குலுக்கலை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, ஹஜ் பயணம் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பம் கடந்த ஆண்டை விடவும், இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது என்றார்.

அதிகரிக்க கோரிக்கை:

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் ஆருண் எம்.பி. கூறும்போது, கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ஹஜ் பயணம் செய்ய 3 ஆயிரத்து 850 பேருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இந்த ஆண்டு 3 ஆயிரத்து 181 பேருக்குத்தான் வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஆனால் இந்த முறை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனவே ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். எனவே மேலும், 500 முதல் ஆயிரம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

3 ஆயிரத்து 181 பேர் தேர்வு:
தமிழ்நாடு முழுவதும் இருந்து விண்ணப்பிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 181 பேர் ஆண்லைன் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வாசுதேவன், தமிழ்நாடு ஹஜ்கமிட்டி உறுப்பினர் செயலர் அலாவுதீன், அசன்அலி எம்.எல்.ஏ., மத்திய சென்னை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரெசிடெண்ட் அபுபக்கர் எஸ்.கே.அகமதுஅலி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நன்றி தினத் தந்தி

Thursday, July 10, 2008

கீழக்கரையில் IDMK கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

இந்திய தேசிய மக்கள் கட்சியின்

கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும்

மத நல்லிணக்க விழா அழைப்பிதழ்

பெரிதாக்குவதற்கு புகைப்படத்தின் மேல் கிளிக் செய்யவும்

Sunday, July 06, 2008

தப்லீக் சகோதரர்களே இஸ்லாத்தை புரிந்து கொள்ளுங்கள் - அன்ஸார் தப்லீகி

"தப்லீக் சகோதரர்களே இஸ்லாத்தை

புரிந்து கொள்ளுங்கள் (PART-01)"

அஷ்ஷேய்க். அன்ஸார் தப்லீகி அவர்கள்.

Al-Sheikh. Ansar Tableeqi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அன்ஸார் தப்லீகி அவர்கள்

மக்கள் முன்னேற்றக் கழகம் (MMK) தமுமுக வின் புதிய அரசியல் கட்சி உதயம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்
புதிய அரசியல் கட்சி அறிமுகம்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழுக்கூட்டம் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள எஸ்.எம்.ஹெச். பேலசில் ஜுலை 4 அன்று நடைபெற்றது.

செயற்குழுவில் பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலளார் ரிபாயி உள்பட செயற்குழு உறுப்பினர்கள் 150 பேர் பங்குக் கொண்டார்கள்.

தமுமுகவின் கொள்கை விளக்கப்பாடலான தமுமுக தலைமையிலே என்ற ஒலிநாடா கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான சைய்யது நிசார் அஹ்மது வெளியிட்டார்.

இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. புதிய அரசியல் கட்சி (மக்கள் முன்னேற்றக் கழகம்)

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் புதியதொரு அரசியல்கட்சியை தொடங்குவதென்றும் இது தொடர்பாக மாநில தழுவிய மாநாட்டை நடத்தி புதிய கட்சியையும் அதன் நிர்வாகிகளையும் அறிவிப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது. இதற்கு மக்கள் முன்னேற்றக் கழகம் என்றும் பெயரிடப்படுகிறது.
என்பதாக தமுமுக வின் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

காரிருளிலிருந்து பேரொளி நோக்கி - சகோதரத்துவ சமூக நீதிப்பேரவை

இறைவனின் திருப்பெயரால்

காரிருளிலிருந்து பேரொளி நோக்கி

சகோதரத்துவ சமூக நீதிப்பேரவை

அவர்கள், அவர்களுக்காக.... அவர்களாகவே நடத்தும் இறைப்பணி


அறிமுகம்:

தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாக மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டு வாழும் மக்கள் பல்லாயிரம் பேர். அதேபோல படைத்த இறைவனை மறந்து பல தெய்வக் கொள்கையைப் பின்பற்றி வழிதவறிப் போனவர்களோ ஏராளம். இவர்களுக்கு இஸ்லாம் என்னும் இறைநெறியை ஒரு விடுதலைச் செய்தியாக, அவர்களது வாழ்வின் ஈடேற்றத்துக்கான நேரிய வழியாக, எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை பிறந்தது. அப்படிப்பட்ட தூய நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட அழைப்புப்பணிக்கான கூட்டமைப்பின் பெயர்தான் 'சகோதரத்துவ சமூகநீதிப் பேரவை'. இஸ்லாத்தில் இணைந்தவர்கள் தங்கள் சமூகத்துக்காகத் தாங்களாகவே நடத்தும் அமைப்பே இது.

வழிமுறை:

இஸ்லாத்தை விரும்பி ஏற்ற பிரபலமான தலைவர்கள், அழைப்புப்பணியில் பல்லாண்டு அனுபவம் மிக்க தனிநபர்கள் மற்றும் நற்பணியில் ஆர்வமுடைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் அனைவரும் இஸ்லாத்தைப் பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்ற கொள்கையில் ஒன்றுபட்டனர். இந்த அமைப்பின் லட்சியமாக

‘பூமியில் எவர்கள் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கிப் பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம் (திருக்குர் ஆன் 28:5)’


என்ற திருமறை வசனத்தின்படி செயல்பட தயாராயினர். நபிகளார்(ஸல்) அவர்கள் காலத்தில் ஏதாவது கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தைத் தழுவினால், அவரை அக்கூட்டத்தினரிடம் அனுப்புவார்கள்; அவர்கள் மத்தியில் இஸ்லாமிய அழைப்புப்பணி செய்யப்பணிப்பார்கள். இந்த சுன்னாவின் - நபிவழியின் அடிப்படையில் அமைந்ததே இவ்விறைப்பணி.

பேரவைப் பணிகள்: ஒரு பார்வை

* ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் கிராமங்களுக்கு, குழுவாகவும் தனியாகவும் செல்வது

* கிராம மக்களை ஒன்றுதிரட்டியோ அல்லது தனியாகவோ சந்திப்பது; அடிமைச் சங்கிலிகளைத் தகர்க்கும் இஸ்லாத்தின் விடுதலைச் செய்தியை விளக்குவது

* இஸ்லாத்தின் தூதைச் சமர்பிப்பது; இறையருளைப் பெற அழைப்பது

* தலித் சகோதரர்கள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள், திருமண நிகழ்ச்சிகள் இவற்றில் கலந்துகொண்டு உரையாற்றுவது

* இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை அறிமுகம் செய்வது

* நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் விருந்துகள் ஏற்பாடு செய்வது; முஸ்லிம் அல்லாதோரை கலந்துகொள்ளச் செய்வது; இஸ்லாத்தை எடுத்துரைப்பது.


பேரவையின் பொறுப்பிலுள்ள கிராமங்கள்:

மதுரை மாவட்டம்:

1. மேலக்கால்
2.எஸ். கீழப்பட்டி

தேனி மாவட்டம்:

1. உப்புக் கோட்டை
2.கோணாம்பட்டி
3.துரை ராஜபுரம்

திண்டுக்கல் மாவட்டம்:

பழைய வத்தலக்குண்டு

விருதுநகர் மாவட்டம்:

சின்ன செட்டிக் குறிச்சி

இராமநாதபுரம் மாவட்டம்:

1. பாலக்கரை
2.கண்ணாரேந்தல்
3.வன்னிக்குடி
4.மக்கா நகர்
5.குளத்தூர்

இந்த கிராமங்களில் செய்யும் பணிகள்:

* இமாம்களை நியமனம் செய்வது, சம்பளம் வழங்குவது

* குழந்தைகள் மதரஸா நடத்துவது

* மாலை நேர பயிற்சி வகுப்பு நடத்துவது

* ரமளான் நோன்பாளிகளுக்காக நோன்புக் கஞ்சி அளிப்பது

* நோன்பு திறப்பு நிகழ்ச்சியான இப்தார் விருந்துகளுக்கு ஏற்பாடு

* ஏழைகளுக்குப் புத்தாடை வழங்குவது

* ஏழைப்பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைப்பது

* நோட்டுப்புத்தகம் வழங்குவது

* I.T.I போன்ற தொழிற்கல்வி கற்க ஏற்பாடு செய்வது

* கத்னா செய்வது, அரசுப் பதிவேடுகளில் பெயர்மாற்றம் செய்வது

* இலவச மருத்துவம், மருந்து விநியோகம் செய்வது


அருளகம்:

இஸ்லாத்தை தழுவிய, பள்ளி - மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன. இதற்காக அருளகம் என்றபெயரில் மாணவர் விடுதி உள்ளது. இங்கு உணவு,உடை,இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

உங்கள் பங்களிப்பு இவைகளுக்காக...

1.பிரச்சாரப்பணிகளுக்கான செலவுகள்:

* நீட்டோலைகள்
* புத்தகங்கள்
* பொதுக்கூட்டங்கள், தேனீர் விருந்துகள்

2.புதிய கிராமங்கள் பராமரிப்புச் செலவுகள்:

* இமாம் சம்பளம்
* பள்ளிவாசல் பராமரிப்பு

3.மாணவர் விடுதி:

* உணவு, உடை, இருப்பிடம்
* கல்விச் செலவுகள்

4.கிராம மருத்துவ செவைகள்:

* இலவச மருத்துவ பரிசோதனை, மருந்து விநியோகம்

5.அலுவலகச் செலவுகள்

உங்களது கனிவான கவனத்திற்கு,

இப்பொழுது நமது விடுதியில் 170 மாணவ, மாணவிகள் படித்துவருகிறார்கள். அவர்களுக்கு புதிய கல்வி ஆண்டு (2008-2009) துவங்கிவிட்டதால் கல்விப்பணம், சீருடை, நோட்டு புத்தகம் கொடுக்கப்பட வேண்டும்.

170 X மாணவர்களுக்கான கல்விப்பணம் (ரூ1000) = ரூ1,70,000
170 X மாணவர்களுக்கான சீருடை 2செட் (ரூ 800) = ரூ1,36,000
170 X மாணவர்களுக்கான புத்தகம் (ரூ250) = ரூ 42,500
170 X மாணவர்களுக்கான 1மாத சாப்பாடு (ரூ750) = ரூ1,27,500


தேவைப்படுகின்ற மொத்தப் பணம் = ரூ4,76,000

ஏறக்குறைய 5 லட்சம் உடனே தேவைப்படுகிறது. ஆகவே இந்த இறைப்பணிகள் தொடரவும், மறுமையில் பேறு பெறவும் தங்கள் ஜகாத், ஸதகா மற்றும் நன்கொடைகள் போன்றவற்றை அனுப்பி, சமூதாய வளர்ச்சியில் பங்கு பெறுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


தங்களது செக் மற்றும் டிராப்ட்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Mugavai Nala Arakattalai, A/C NO: 601601081351, I C I C I BANK, Madurai. (Or)
Forum for brotherhood and social Justice, A/c No: 489105155, INDIAN BANK.

அலுவலக முகவரி:

Forum for Brotherhood and Social Justice,
M2/10, Housing Unit, Near Railar Nagar
Madurai – 625 018. Phone: 0452-660167. Cell: 9444159347

Saturday, July 05, 2008

பெற்றோர்களின் கவனத்திற்கு! - எம்.என்.பி. பொதுப்பிரசுரம்

பெற்றோர்களின் கவனத்திற்கு! - எம்.என்.பி. பொதுப்பிரசுரம்
தகவல்: எஸ்.கே.எஸ் (தாருத்திப்யான் நெட்வொர்க்)



பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முஸ்லிம் மாணவியரின் பெற்றோர் கவனத்திற்கென மனித நீதிப்பாசறை (எம்.என்.பி.) பொது பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்ளடக்கம் பின்வருமாறு:-

அன்பான பெற்றோர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும். அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

முஸ்லிம் சகோதரர்களே! நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்தாமல் உடனே செய்ய வேண்டும்.

நமது சகோதரிகளைப் பாதுகாக்க சில வழிகள்:-

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)


நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)


முன்னர் அஞ்ஞான் கால்தில் பெண்கள் திரிந்துக் கொண்டிருப்பதைப் போல் நீங்கள் திரியாதீர்கள் (அல்குர்ஆன் 33:33)


அந்நிய ஆண பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள்.

வகுப்பறைகளில் சக மாணவர்களோடு பேசக்கூடாது என்பதை கண்டிப்புடன் கூறுங்கள்.

அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

வலிய வந்து பேசி (வீண்;களோடு வீணாக பேசுவதும், அவர்களோடு பாக வந்து பேசி) தெந்தரவு செய்யும் மாணவர்ள் பற்றி வகுப்பாசிரியரிடம் புகார் கூற சொல்லுங்கள். அதனையும் மீறி தொந்தரவு செய்யும் மாணவர்கள் இருந்தால் காவல்துறையிடம் புகார் கூறி தண்டனை பெற்று தாருங்கள்.

ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பஸ் நிலையங்களில் அதிக நேரம் நிற்கக் கூடாது என்பதனை வலியுறுத்துங்கள்.

தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது.

கயவர் கூட்டத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களை உதவிக்காக அழைத்துக் கொள்வது.

முதன்மையாக ஆண்ஃபெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் - இறையச்சம்,

பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல்.

தொலைபேசி, மொபைல், பள்ளி, கல்லூரிகளில் வருகைப்பதிவு சரியாக உள்ளதா என்பதை கண்கானித்தல்.


இவண்.
ஜம்இய்யத்துன்னிஸா
(முஸ்லிம் பெண்கள் அமைப்பு) காயல்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம்.

Friday, July 04, 2008

"மைனர் குஞ்சோடு" குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய வல்லம் T.N.P.J மாநாடு ஓர் பார்வை!


குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிய வல்லம் டி.என்.பீ.ஜெ மாநாடு ஓர் பார்வை!


புலியை பார்த்து அது போல் ஆக பூனை சூடு போட்டு கொண்டதாக கேள்வி பட்டிருப்பீர்கள். இதை செயலில் காட்ட நினைத்து அவர்களின் இயக்கத்தினிரிடையே மூக்குடை பட்டு போனார்கள் டி.என்.பீ.ஜெ மைனர் குஞ்சு சகோதரர்கள்.

ஒவ்வொரு வருடமும் சென்னையில் மக்களின் வசதிக்கேற்ப பிரமாணண்டமான ஒரு இடத்தை தேர்வு செய்து PEACE என்ற பெயரில் அதன் 'அமைதி' என்ற பொருளுக்கேற்ப 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் இஸ்லாமிய மார்க்க அறிவியல் கண்காட்சியில் இடம் பெறும் மார்க்க அடிப்படையிலான பல்வேறு நிகழ்ச்சிகள், மாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை பயன்பெறும் வகையிலான பல்வேறு அரங்குகள், இந்நிகழ்ச்சிக்காகவே பல நாடுகளிலிருந்து வருகை தரும் புகழ் பெற்ற மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள் (தமிழ், ஆங்கிலம், உருது இன்னும் பல்வேறு மொழிகளில்) தனி தனி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டும், பல்வேறு அறிஞர்கள் எழுதிய இஸ்லாமிய மார்க்க நூல்கள், சிடிக்கள், விற்பனைக் கூடங்கள், உணவுக் கூடங்கள், மக்கள் தாகத்தை தீர்க்க தட்டுப்பாடில்லாத குடிநீர் வசதி இருபாலருக்கும் தனித்தனியான கழிவறை, உளூ செய்ய, தொழுகை வசதி.

ஷிர்க், பித்அத்களை விளக்கும் அரங்கில் மக்கள் தெளிவு பெற்றபின் அறுத்தெடுத்த தாயத்து கயிறுகள், தூய இஸ்லாத்தை அறிந்த பல மாற்று மத சகோதரர்கள் உடனடியாக கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் நுழையும் நிகழ்ச்p. அந்த 10 நாட்களிலும் வழக்கமாக நடந்தேறியது, பார்த்தவர்களும் புகழ்ந்தார்கள். பத்திரிக்கைகள் பாராட்டி எழுதின. இது அண்ணனுக்கும் தம்பி மைனர் குஞ்சுக்கும் (9444360006) பொறுக்குமா? தங்கள் ரசிகர்களுக்கு போகக் கூடாது என்று உத்தரவு போட்டார்கள். காரணம் கேட்பவர்களுக்கு அங்கு 10 கலரில் கொடிகள் பறக்கின்றன, அதில் ஒன்று காவி நிறத்தில் உள்ளது, அது ஆர்.எஸ்.எஸ் உடைய கொடியின் நிறம். நாம் புயூர் தவ்ஹீது. இது மாதிரியான இடங்களுக்கு செல்ல கூடாது என டி.வி மூலமாகவே உத்தரவுகள் பறந்தன. எவ்வித அசம்பாவிதமும் இன்றி இறைவனின் அளப்பெரிய கிருபையால் PEACE மாநாடு இனிதே நிறைவடைந்தது, இது தழும்பாத நிறைகுடம்.

இதென்ன பெரிய நிகழ்ச்சி? இதைவிட பெரிய அளவில் தமிழக மக்களை ஒன்று திரட்டி மாநாடு நடத்தி காட்டுகிறேன் என்று சவால் விட்டு கடந்த 6 மாதங்களாக விண் டிவி மூலம் கௌண்டவுன் முறையில் (ஒலிம்பிக் கௌண்டவுன் கூட தோற்றது) தஞ்சை வல்லத்தில் தவ்ஹீது எழுச்சி மாநாடு என்ற பெயரில் விளம்பரப்படுத்தி வசூல் வேட்டையில் இறங்கினர், அண்ணனும் தம்பி மைனர் குஞ்சும்.

மக்களுக்கு ஆர்வத்தை தூண்டிய பொய்யான விளம்பரங்கள்
  • இது வரை யாருமே நடத்திடாத அளவில் 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுத் திடல்
  • வேலையில்லா இளைஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பிற்கான ஆலோசனைகள்
  • மேல் படிப்பு விரும்புபவர்களுக்கு என்ன படிக்கலாம்?
  • 1000 முதல் 1 கோடி வரை பணம் உள்ளவர்களுக்கு தொழில் செய்ய ஆலோசனை
  • குடும்ப பிரச்சனையா? இலவச சட்ட ஆலோசனை!
  • டாக்டர் குழுவுடன் இலவச மருத்துவ ஏற்பாடு!
  • அறிவியல் அரங்கம், வரலாற்று அரங்கம், பூகோள அரங்கம்
  • புனித கஃபாவின் பிரமாண்ட அளவிலான மாதிரி!
  • இன்னும் சிறுவர்களுக்கான குதிரை சவாரி. ராட்டினம் என பாமர மக்களை கவரும் விதமாக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து மண்டையை பிளக்கும் அக்னி வெயிலில் மே 10, 11 தேதிகளில் பிரமாண்டமான பந்தல் ஏற்பாடு, ஆனால் தாக்காத அளவில் ஏர்கூலர் வசதிகள்.
  • ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் நவீன கழிவறை, குளியலறை வசதிகள் என டி.வியில் காட்சியகள்.
  • 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் வருவார்கள் என எதிர்பார்த்து தேவைக்கேற்ப உளூ செய்ய, குடிநீருக்கு சிறப்பு ஏற்பாடுகள்! என சன் டி.வி விளம்பரம் போல கடந்த ஆறு மாதங்களாக விண் டி.வியில் 10.30 மணிக்கு மேல் உள்ள அவர்களது நிகழ்ச்சியில் விளம்பர சாதனையே படைத்தார்கள்.


முன்பெல்லாம் ரேடியோ விளம்பரத்தில், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் மக்களின் பேராதரவு பெற்றது கோபால் பல்பொடி என கேட்டிருக்கிறோம்.

இன்றோ இந்தியா, அலேசியா, சிங்கப்பூர் மற்றும் அரபுநாடுகளுக்கு தவ்ஹீதை எத்தி வைத்து மக்களின் பேராதரவு பெற்றது எங்களது அமைப்புத்தான் என டி.லி விளம்பரம் செய்து கடந்த ஆறு மாதமாக வசூல் ராஜா மைனர் குஞ்சு குழுவினர்கள் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் சுருட்டிய தொகை 3 கோடிக்கு மேல், சொலவழித்ததோ 1 கோடிக்குள் மீதத் தொகை வழக்கம் போல் பங்காளிகளுக்கு.

இவர்கள் விளம்பரப்படுத்திய அனைத்து வாக்குறுதிகளும் விளம்பரங்களும் பொய்யானவையும் மோசடிகளும்தான்.

100 ஏக்கர் நிலத்தில் மாநாடா?



வெறும் 5 ஏக்கர் நிலத்தில் மாநாட்டு அரங்கு போடப்பட்டு அதை சுற்றிலும் அரங்குகள், கழிவறைகள், கஃபாவின் மாதிரி நுழைவாயில் என 3 ஏக்கர் மொத்தத்தில் 8 ஏக்கர் மாநாட்டு பந்தல் போட்டு 100 ஏக்கரில் போடப்பட்டதாக பொய்யான பிரச்சாரம்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு-மேல் படிப்ப தொழில் ஆலோசனை


இதுவும் ஒரு ஏமாற்று வேலை

தவ்ஹீது எழுச்சி மாநாடு என்று போட்டு விட்டு கூட்டத்தை சேர்த்தாக வேண்டும் என்பதற்காக வேலையில்லாமல் அலைபவர்களுக்கு இங்க வந்தால் வேலைக்கான ஏற்பாடு செய்து தரப்படும். இதனை நம்பி வந்து ஏமாந்தார்கள் பலர்.

மேல் படிப்பு

டிகிரி வாங்கியவர்களுக்கு இவர்கள் ஆலோசனையாம், 4ம் வகுப்பு தாண்டாத பீ.ஜேவுக்கும், காமுகன் கோர்ஸ் படித்த மைனர் குஞ்சுவின் குழுவினர் தரும் ஆலோசனையாம், விளங்கி போயிடும்.

தொழில் ஆலோசனைஃவேலை வாய்ப்பு

இதுவரை நாம் செய்த தொழில் கை கூட வில்லை, சரி என்னதான் சொல்கிறார்கள் என்று பார்க்க வந்தவர்கள் பலர்.

அங்க போன பின்தான் தெரிந்தது?? உணர்வு, ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி மற்றும் அண்ணனின் மார்க்க புத்தகங்கள், தம்பியின் சி.டிக்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய 1500 பேருக்கு வேலை வாய்ப்பு இருப்பதாகவும், நல்ல கமிஷன், மாதம் மக்கள் ஏமாந்தால் 10,000 வரை சம்பாதிக்கலாம்??.

குடும்ப பிரச்சனை வழக்கறிஞரின்ஃஇலவச சட்ட ஆலோசனை

பல குடும்பங்களில் பிரச்சனைகள் இருப்பது இயல்பு வக்கீலிடம் தனியாக சென்றால் கன்சல்டிங் என்ற பெயரில் 1000, 2000 என்று கறந்து விடுவார்கள், இங்கு ஓசிதானே! அதற்காவது போவோமே என்று வந்தவர்கள் பலர்.

மருத்துவ முகாம்

இங்கு டாக்டரிடம் போனால் மருந்து மாத்திரை என்று நிறைய செலவாகும். மாநாட்டில் இலவசம் தானே! ஒரு எட்டு போயிட்டு வந்திடுவோமே என்று குவிந்தவர்கள் பலர். வாரந்தோறும் சன், கலைஞர் டி.விக்களில் புது நிகழ்ச்சியாக மந்திரமா? தந்திரமா மேஜிக் நிகழ்ச்சி ஒளி பரப்படுகிறது. சமீபத்தில் கூட நமது அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே நேரத்தில் 1000 நிபுணர்கள் பங்கு கொண்டு மேஜிக் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அவைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு 40,000 பேர் கொள்ளவு உள்ள மாநாட்டு திடலில் 10 லட்சம் பேர் வந்து அமர்ந்து மாநாட்டு நிகழ்ச்சியை பார்த்து எழுச்சி பெற்றதுதான் மந்திரா? தந்திரமா? நிகழ்ச்சியின் ஹைலைட்டான விசயம்!!!


அறிவியல் அரங்கம், வரலாற்று அரங்கம்

தமிழகத்தில் கண்காட்சி, பொருட்காட்சி என எங்க நடத்தப்பட்டாலும் அது சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் மாநாட்டு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஒப்பந்த அடிப்படையில் (அதாவது பணம் கொடுத்துப் போடச் சொல்வது).

வரலாற்று அரங்கம் என்பது இஸ்லாமிய மார்க்கத்திற்கு தொண்டு செய்த தாபியீன்கள், தபோ தாபியீன்கள், இமாம்கள் இவர்களின் வரலாற்றைப் பற்றியது, மார்க்கத்தை அற்ப விலைக்கு விற்காமல் ...

மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவன் ஆகிய அல்லாஹ்விற்கே சொந்தமாகும் ... அல்குர்ஆன் 6:162.


என்ற இறைவசனத்தின்படி அர்பணித்து வாழ்ந்த அறிஞர்களின் வரிசையில் மார்க்த்தின் பெயரால் காசு பார்க்கும் ஒரு சுயநலவாதி, மார்க்க பேணுதலற்றவர், இஸ்லாத்தின் ஒற்றுமையை சிதைத்து பிளவாக்கி, பிரிவாக்கி அதன் மூலம் ஆதாயம் தேடுபவர், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற அமல்களில் அனைவருக்கும் எதிராக தனது கருத்தை வழுப்படுத்த நினைப்பவர், இவரின் பிறப்பு வருடமும், பெயரும் இந்த நூற்றாண்டில் தோன்றி அறிஞர்களின் வரிசையில் பதியப்பட்டுள்ளது. இது ஒரு சரித்திர மோசடியாகும், ஆரிய தந்திரமாகும், வெக்கக்கேடாகும்.


இன்னொரு அரங்கத்தில் பதவி ஆசைக்கு தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி படத்தையும், பேராசைக்கு காதர் முகைதீன் படத்தையும், இன்னும் 65 பெயர்களின் பட்டியலிட்டு இவர்கள் தவ்ஹீதை விட்டு தடம் புரண்டவர்கள் என அங்கு வரும் மக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். இது பலர் மனதில் சங்கடத்தை ஏற்படுத்தினாலும் இப்பட்டியலில் உள்ளவர்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. காரணம் 2004 லேயே தான் அபூஜகீலைவிட மோசமானவன் என தனக்குத் தானே சான்றிதழ் கொடுத்த பின் அது பொய்யாகுமா என்ன? ஏதோ ஒரு ஹதீஸில் படித்த ஞாபகம், தஜ்ஜால் வருவான் இவர்களெல்லாம் சொர்க்கவாதிகள் என்பான் அவர்கள் நரகம் புகுவார்கள், இவர்களெல்லாம் நரகவாதிகள் என்பான் அனைவரும் சொர்க்கம் புகுவார்கள், இப்போ தெரியுதா அண்ணன் யாரென்று?


ஏகத்துவத்தை ஏற்ற எவரும் பழைய நிலைக்கு திரும்ப மாட்டார்கள், தான் தான் யோக்கியன் மகா யோக்கியன் என தன்னைத் தானே கூறிக்கொள்ளும் இவர்கள் இயக்கத்தின் பெயரால் பல கோடிகள் ளொள்ளை அடித்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் வசூலிக்கும் தெகாகைகள் எதுவும் (பித்ராவாகட்டும், ஜகாத்தாகட்டும்) முழுமையாக மக்களை சேர்வதில்லை. முக்கியமாக மைனர் குஞ்சுவிடம் ஒழுக்கமில்லை.

தொடர்ந்து 10 நாட்கள் ஓய்.கே மேன்ஸனில் பழனிப் பகுதியில் இருந்து வந்த யாஸ்மின் என்ற பெண்ணிடம் மகரந்த சேர்க்கை நடத்தியது ஊரறிந்த விசயம்.

அடுத்து தங்கி படிக்கும் தஃவா பெண்களிடமும் சில்மிசம்,

அடுத்து மதுரையைச் சேர்ந்த நந்தினி என்ற புதிதாக இஸ்லாத்திற்கு வந்த பெண்ணிடம் ரதி மீனா பஸ்ஸில் சல்லாபித்து சென்றதற்கு தக்க ஆதாரங்களுடன் பிடிப்பட்டு 38 நாட்கள் கட்சியை விட்டு நீக்கி, பின் அண்ணன் கேஸ் தம்பியின் கைவசம் ஆதாரத்துடன் மாட்ட பிறகு சமரசம் ஆகி இனி நமது அனைச்சரவையில் 'மைனர் குஞ்சு' என்ற சிறப்பு பெயருடன் இனி அவர் செய்யும் அனைத்து செயல்களும் அட்வான்ஸாக செலுத்தி விட்டதால், மைனர் குஞ்சுவை யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என்பது அண்ணனின் அன்பு கன்டிஷன்.


புனித கஃஅபா மாதிரி




42 அடி உயரமுள்ள கஃஅபாவின் மாதிரி மற்றும் மக்கமே இப்ராஹிம் மாடல்கள் வைக்கப்பட்டுள்ளது, இதை பலர் வலம் வந்து தொழுது முன் நின்று துஆ செய்த கூத்தும் நடந்த வண்ணம் இருந்தது. ஷிர்க்கை கண்டித்துப் போடப்பட்ட தவ்ஹீது எழுச்சி மாநாடு புதிய ஷிர்க்கை உருவாக்கியது இது முதல் நாளே வீசிய பலத்த காற்றில் சரிந்து பின் சரி செய்யப்பட்டது.

ஹஜ் செயல் முறை விளக்கத்திற்கு உருவாக்கப்பட்டதால் கஃஅபா சரி, எதிரில் மக்கமே இப்ராஹிம் சரி, சயீக்கு தண்ணீருக்காக மக்கள் அங்கும் இங்கும் தொங்கோட்டம் ஓடினார்கள் அதுவும் சரி, 10, 11ல் சைத்தானக்கு கல் எறிய வேண்டுமே அதுவும் பிற்பகல் தண்ணீருக்காக அலையவிட்ட சைத்தான்கள் மூன்று பேருக்கும் கல் எறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. சின்ன சைத்தான் மைனர் குஞ்சு, நடு சைத்தான் சம்சுல்லுஹா, பெரிய சைத்தான் TNPJ ஆகிய மூவருக்கும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பெண்களால் இந்நிகழ்ச்சி நடந்தேறியது (அதாவது கடுமையாத் திட்டினார்கள்).

பசுமைக்கு பெயர் பெற்ற தஞ்சை மண்

10 வட்சம் மக்களுக்கான ஏற்பாடு உண்மையாக இருந்தால் விளம்பரம் மேற்கொண்ட 150 நாட்களும் தூங்கிவிட்டு மாநாடு துவங்க 4 நாட்களுக்கு முன்பாக 4 இடத்தில் தண்ணீருக்காக இராட்சத போர்கள் போடப்பட்டது. தண்ணீர் வந்துச்சு, ஆனா வரலை என திரைப்படங்களில் வரும் நகைச்சுவை போல் பதிலளித்தார்கள்.

உடனடி மாற்று ஏற்பாடு இல்லை, காலை 9.30 மணிக்கு மாநாடு துவக்கம், ஆனால் வெகு தூத்தில் இருந்து பயணத்தில் வந்த ஆண்களும், பெண்களும் விடிவதற்கு முன்பாகவே விடலுக்கு வரத்துவங்கி விட்டனர்.

வந்திறங்கியவர்களுக்கு ஓர் அதிர்ச்சி, மிகவும் பிரமாண்டமாக டிவியில் வர்ணிக்கப்பட்ட இடமா இது? பெரிய அளவில் மாநாட்டு பந்தல் என்று சொன்னார்கள்! இது என்ன சில ஆயிரம் பேர்கள் தான் அமரக்கூடிய இடத்தில்பல லட்சம் பேர்களை எப்படித் திணிப்பார்கள்? இன்னுமோர் அதிர்ச்சி கழிவறை சென்றவர்கள் பொன வேகத்தில் திரும்பி விடுகிறார்கள். ஒரு பைப்பிலும் தண்ணீர் வரவில்லை? எப்படி போவது? யாரிடம் கேட்பது? மாநாட்டு நிர்வாகிகள் ஒருவர் கூட அங்க இல்லை, அனைவரும் தஞ்சையில் ஏ.சி ரூமில் ஜோடியுடன் சங்கமித்து இருந்ததாக தகவல் வந்தது.

கூச்சல் குழப்பம் மாநாட்டு நிகழ்ச்சிக்கு முன்பாகவே துவங்கி விட்டது மக்கள் வர வர சல சலப்பும் அதிகமானது. பெண்கள் பட்ட சிரமம் சொல்லி மாளாது. தண்ணீர் பாட்டில் அதிக விலை கnhடுத்து வாங்கி அதில் கழிவறைக்கு போய் வ்நத கnhடுமையம் இங்கு தான் கடைபெற்றது. நேரம் ஆக ஆக முன் வந்தவர்கள் ஊரில் பின்னால் வந்து கொண்டிருப்பவர்களுக்கு செல் போன் மூலம் தகவல் கொடுத்து, யாரும் புறப்பட வேண்டாம் இங்கு அடிப்படை தேவைகள் நிறைவேற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்று சொல்ல இடையே வநடதவர்கள் உஷாராகி அருகில் உள்ள ஊhகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி காழல தேவைகளை முடித்து கொண்டு மாநாட்டு திடலை வ்நதடைந்தார்கள். மாநாட்டின் நிர்வாகிகள் அடுத்தடுத்து திடலில் வந்து இறங்கினார்கள், ஆனாலும் முகத்தில் ஈயாடவில்லை. எப்பொது ஆரம்பிப்பது? எப்படி ஆரம்பிப்பது என்ற குழப்பத்தில் இருந்தார்கள். ஒரு வழியாக தொண்டரணி ரோட்டில் இருந்து மூன்று அடுக்காக நடந்து வர முன்னால் TNPJ வழிநடத்தி மாநாட்டு மேடைக்கே அழைத்துச் சொன்றார் படு ஜோக்காக இருந்தது.

ஒரு வழியாக நிகழ்ச்சி ஆரம்பமானது, அதை யார் காது கொடுத்து கேட்டா? ஒரே சந்தை கடை சத்தமாக குழந்தைகள் அலறலும், பெண்கள் வந்த கதை, போன கதை பேசுதும் ஒரே சலசலப்பு தான். நேரம் ஆக ஆக மேடையில் பயானுக்குப் பதிலாக காணாமல் போன குழந்தைகள்ப் பற்றிய அறிவிப்பு அஃஅபா மாடலில் மக்களின் மண்டியிடுவதும், சுற்றி வருவதும், முத்தமிடுவதும் தவறு என அறிவிப்பு செய்வதற்கே அன்றைய தினம் சரியாக இருந்தது.

போலீஸ் உயர் அதிகாரி சொன்னாராம் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்து கொண்டிருக்கிறது, முதலில் இங்க வந்தவர்களை போகச் சொல்லுங்கள், இல்லாவிட்டால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்விடும் என பலமுறை எச்சரித்தாராம், அதன் பின் இவர்கள் அறிவிப்பு செய்த பின்னே பலர் ஊர் திரும்பினராம், கேட்கிறவன் கேனையானாக இருந்தால் கேப்பையில் நெய் வடியும் என்பார்கள்.

அந்த உயர் அதிகாரி TNPJ மையும், மைனர் குஞ்சுவையும் கூப்பிட்டு கடுமையாக எச்சரித்தது இதுதான்.

குண்டி கழுவக் கூட தண்ணீர் இல்லாமல் என்ன மாநாடு நடத்துகிறீர்கள்? மக்கள் இந்த வெயிலில் படுகிற கஷ்டம் என்னாலாயே தாங்க முடியல, எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏதாவது சட்ட பிரச்சனையானால் நான் ஒன்றும் செய்ய முடியாது, இந்த கடும் வெயிலிலும் உஷ்ண காற்றிலும் தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள், முதலில் மாநாட்டை இன்றோடு முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.



தண்ணீர் இல்லாத காரணத்தால் சில நூறு பேர்கள் மட்டுமே தொழுதார்கள். மறுநாள் சுபுஹூவிலும் இதே நிலைதான்.

இன்றாவது நிகழ்ச்சிகள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தவ்ஹீது எழுச்சி பற்றி பேச வேண்டிய மேடையில் தமுமுக அப்படி, விடியல் இப்படி, சுன்னத் ஜமாஅத் அப்படி என அனைத்து இயக்கங்களையும் பிராண்டுவதிலேயே போனதே தவிர உருப்படியான பயான் ஏதும் இல்லை.



ஏதோ ஒரு கொள்ளை கூட்டத்தினரிடம் பணத்தை பறி கொடுத்து விட்டு வீடு திரும்பிய சோகம் போல அனைத்து மக்களிடமும் தெரிந்தது.

ஆண்களும்பெண்களும் தனித்தனி இடவசதி என பொய் சொல்லி அழைத்திருக்கிறார்கள். ஆன்களும் பெண்களும் கலந்தே பல இடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். அரங்கத்துக்க செல்லும் பெண்களிடம் இடி ராஜாக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இதை 15.05.2008 அண்ணனின் கேள்வி நேரத்தில் டி.எஸ்.எஸ் மணியை பேட்டி கண்ட மைனர் குஞ்சுவிற்கு அளித்த பதிலில் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக இருந்தார்கள். இவ்வளவு நாளும் பெண்களுக்கு உரிமைகள் இஸ்லாதம்தில் பறிக்கப்படுவதாகச் சொன்னார்கள். நான் பார்த்த அனதை;து இடங்களிலும் சுதந்திரமாக இரண்டரக் கலந்து இருந்தார்கள். (போக போக TNPJ புண்ணியத்தில் புர்கா விற்பனைக்கெல்லாம் ஆப்புதான்) இது ஏகத்துவ எழுச்சி மாநாடா? நிச்சயமாக இல்லை. அகம்பாவத்தில் உருவான மாநாடு. இவர்களின் பேச்சில் ஏமாந்த மக்களுக்கு அறிவு புகட்டிய மாநாடு. ஏகத்துவ எழுச்சி என்றால் பரகத் போன்ற நன்மைகள் அள்ளி தரக் கூடியது, இதை நடத்திய மாக்களுக்கு பரியவில்லை.

முன்பெல்லாம் பரக்கத் பற்றி அழகாக சொல்லும் அழகப்பனுக்கு இதோ ஒரு டிப்ஸ்! தவ்ஹீது எழுச்சி என்பது வராத எண்ணிக்கையை வந்ததாக காட்டி பிரமாண்டப் படுத்துவது எழுச்சியல்ல.

சத்தியச்தை மட்டுமே சொன்ன மாநாடுகளை கடந்து வந்ததை மறந்து புலம்புகிறார். இதற்கு முன் மதுரையில் அனைத்து தவ்ஹீது ஜமாஅத் மாநாடு நடந்ததே அதில் பரகத் அதிகம். அதற்கு முன் அதே மதுரையில் முழுமையாக மாநாடு ஏற்பாடுகள் முடிந்து அனைத்து மக்களும் குழுமிய நேரத்தில் தடையாகி நின்றதே, இதைவிட அதில் பரகத் அதிகம். அதற்கு முன்பாக 1988ல் நடைபெற்ற நாகூர் மாநாடு சரித்திரத்தில் பதிய வேண்டியது. மற்றவைகளை விட அதில் பரகத் பன்மடங்கு. இவை அனைத்தையும் விட பரகத் பன்மடங்கு நிறைந்த மாநாடுகள் அனைவரும் ஒன்றிணைந்து திருச்சியில் 1985 மற்றும் 1987ல் நடத்திய மாநாடுகளாகும், அவைதான் தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சியை ஏற்படுத்திய மாநாடுகள், அவற்றில் கலந்து கொண்ட அனைவரும் இஸ்லாமிய பிரச்சாரர்களாக மாறியுள்ளனர்.

மீடியாக்கள் மூலம் தவ்ஹீது பெயரை சொல்லி பொய் பிரச்சாரம் செய்வதை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள்.

அன்பு சகோதர, சகோதரிகளே! வெளிநாட்டில் தன் இரத்ததை சிந்தி சம்பாதிக்கும் அன்பர்களே!! சற்று சிந்தியுங்கள், பி.ஜேயின் வார்த்தை ஜாலத்திற்கு மயங்காதீர்கள். இவர்கள் மார்க்கத்தின் பெயரால் கொள்ளை அடிப்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வே நேர்வழி காட்டப் போதுமானவன்.



இப்படிக்கு
சேக் அப்துல்லாஹ்
திருவல்லிக்கேணி, சென்னை-05