Saturday, June 28, 2008

மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!


கட்டை கட்டையாய்ஒட்டுத்துணியுடன்ஓயாது உலாவருகின்ற‌இளைஞர் சமுதாயமே! - ஒரு கணம்மண்ணறை எனும் படு குழியை நினைத்துப்பார்!


பாசமெனும் பள்ளியறைக்குள்நேசம் எனும் நெருக்கத்தினால்மானமென்றும் மரியாதை என்றும் மறக்கின்ற‌மாந்தர்களின் மண்ண‌றையை நினைத்துப்பார்!


நித்திரையின்றி நித்தம் நித்தம்நெருங்க முடியா சத்தம் சத்தம்வீடு எனும் தேட்டருக்குள் காட்டுகின்ற கட்டம் -அதுமண்ணறையை மறந்த பெண்களின் மச்சம்.


நாக‌ரீக‌ம் எனும் நாச‌த்தினால்நாள் தோறும் வ‌ரும் வேச‌த்தினால்காத‌ல் என்று கைகோர்த்து - இதும‌ண்ண‌றையை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் காத்திருப்பு.
மார்க்க‌த்தில் ம‌ந்தைக‌ளாக‌உல‌க‌த்தில் உத்த‌ம‌ராக‌உலா வருகின்ற‌ இளைஞ‌ர்க‌ளே!ம‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை நினைத்துப்பார்!


ம‌துவுக்குள் மாட்டிதின‌ந்தோறும் அதில் மூழ்கிமுதுமை எனும் முதுகு உண‌ர்த்தினால் மார்க்க‌த்தை ம‌ற‌ந்த‌ம‌டைய‌ர்க‌ளின் ம‌ண்ண‌றையை நினைத்துப்பார்!


ஆடையில் ஆர‌றை குறைப்புஅதில் ஓரிரை ம‌றைவுபாரினில் பாழ‌டைந்த‌வ‌ர்க‌ளின் ந‌டிப்பு - இதும‌ண்ண‌றை எனும் ப‌டுகுழியை ம‌ற‌ந்த‌வ‌ர்க‌ளின் நினைப்பு!


இளைஞ‌ர் கூட்ட‌மே!இரும்புக்கோட்டையினுல் இருந்தாலும்இருப்பைக் காவுகொள்ளும் கொடூர‌ம் நிறைந்த‌ம‌ர‌ண‌த்தை ம‌ற‌ந்து வாழ்வின் அர்த்த‌த்தை இழந்துவிடாதே!

மரணத்தை நினைத்துப்பார்!


அன்புட‌ன்

எம்.எச்.ப‌ஸ்மிய்யா

அல்குர்ஆன் விரிவுரைக்கான‌ க‌ற்கை வ‌குப்பு மாண‌வி



நன்றி தாருல் அதர் அத்தஅவிய்யா

Friday, June 27, 2008

லால்பேட்டையில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது



லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜிதில் ஜும்ஆ பயானுக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு துஆ செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் A. அல்ஹாஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் மறைந்த தலைவரின் சேவையை நினவகூர்ந்து துஆ செய்தார்கள் இதில் ஆயிரக்கணக்கனோர் பங்கேற்று அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.





மெயின்ரோடு பள்ளிவாசலில் துஆ செய்யப்பட்டது....





லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை மெயின்ரோடு பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மொளலவி முப்தி, S.A. அப்துர் ரப் ஹஜ்ரத். ஜாமிஆ ம்ன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் அல்ஹாஜ், A. நூருல் அமீன் ஹஜ்ரத். பேராசிரியர் அப்துல் அலி ஹஜ்ரத். மவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் S.A.அப்துல் கப்பார். நகர தலைவர் அல்ஹாஜ், K.A.முஹம்மது. செயலாளர் M.H.முஹம்மது ஆசிப். பொருலாளர்,A.M. ஜாபர். மாநில மாணவர் அணி அமைப்பாளர் A.S. அப்துல் ரஹ்மான். நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அப்துல் காதர். முஹம்மது பாருக். மஸ்ஊத் அஹ்மத். முஹம்மது தையூப். மர்ஜுக் அஹ்மத். மற்றும் ஜமத்தர்கள் கலந்துக்கொன்டு மறைந்த தலைவரின் சேவையை நினவு கூர்ந்து அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.





Wednesday, June 25, 2008

G.M. பனாத்வாலா ஸாஹிப் வாழ்க்கைக் குறிப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர், முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் இன்று மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் நாளை காலை 7 மணியளவில் மும்பை சந்தன்பாய் கப்ருஸ்தானில் நல்லடக்கம் செய்யபடும்



அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:-
ஆசிரியர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் 1933ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி மும்பையில், ஹாஜி நூர் முஹம்மது அவர்களின் மகனாகப் பிறந்தார்.

மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.காம்., பி.எட். பட்டப்படிப்பை முடித்தார். 1954 முதல் 1962 வரை அஞ்சுமனே இஸ்லாம் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.


இக்காலகட்டத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களைச் சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தன்னை இணைத்துக் கொண்டார்.

சட்டமன்ற - பாராளுமன்ற பணிகள்:
மும்பை உமர்காடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1967 முதல் 1977 வரை மஹாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.

இக்காலகட்டத்தில், மஹாராஷ்டிர அரசு கருத்தடை சட்டம், பசுவதை சட்டம், வந்தேமாதரம் பாடல் கட்டாயம் பாட வேண்டும் என்றெல்லாம் சட்டம் கொண்டு வந்தபோது, அவற்றை எதிர்த்து கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட அறப்போராட்டங்கள் நடத்தி, அவற்றில் வெற்றியும் பெற்றார்.

இந்திய பாராளுமன்றத்திற்கு கேரள மாநிலம் பொன்னானி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1971 முதல் 1991 வரையிலும், 1996 முதல் 2004 வரையிலும் உறுப்பினராக இருந்தார்.


ஷரீஅத் சட்டத்திற்கெதிரான ஷாபானு வழக்கு நடைபெற்றபோது, இந்திய பாராளுமன்றத்தில் தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்களும், ஷரீஅத் பற்றிய தெளிவுரையும், பாராளுமன்ற வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிக்கப்பட்டவை. தனிநபர் மசோதா மூலம் (டீயயெவறயடய டீடைட) ஷரீஅத் சட்டம் பாதுகாக்கப்பட்ட பெருமை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும்.

பாராளுமன்றத்தில் அலிகர் சர்வ கலாசாலையில் சிறுபுhன்மையினர் அந்தஸ்தைப் பாதுகாத்தல், அஸ்ஸாமிய முஸ்லிம்களின் குடியுரிமை, அயோத்தி பாபரி மஸ்ஜித் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இருந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட வேண்டும்... முஸ்லிம்கள் மீதான தீவிரவாத முத்திரை அகற்றப்பட வேண்டும்... வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தேசிய பாதுகாப்பு சட்டம், ஜாமிஆ மில்லியா, இஸ்லாமிய பல்கலைக் கழக மசோதா, ராம்பூர் ரஜா நூலக மசோதா, மவ்லானா ஆஸாத் தேசிய உர்தூ பல்கலைக் கழக மசோதா, வாரணாசி, பேர்ணாம்பட், ஜாம்ஷெட்பூர், முஜப்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த இனக்கலவரங்கள், மத்திய - மாநில அரசுப் பணிகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம், உர்தூ மொழிக்கான குஜ்ரால் குழு, கேரள மாநிலம் மலப்புரம் மக்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட விவாதங்களில் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் எடுத்து வைத்த வாதங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவை.

பாராட்டுகள்:
பெருந்தலைவர் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபிற்கு சென்னை முஸ்லிம் அமைப்புகளால் 'சிறந்த சமூக சேவகர்" தங்கப்பதக்க விருது தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது. பன்னாட்டு நண்பர்கள் சங்கத்தின் சார்பில் 'விஜய் ஸ்ரீ விருது", குட்ச் சக்தீ சார்பில் 'சமாஜ்ரத்னா விருது", சிறந்த பாராளுமன்றவாதிக்கான 'மவ்லானா பஜ்ருல் ஹக் கைராபாதி" விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியா டுடே இதழில் - சிறந்த பாராளுமன்றவாதிகளில் பத்தில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். 'பயானீர்" இதழில் தேர்ந்த பாராளுமன்றவாதிகளில் 12 நபர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார்.


ஷரீஅத் சட்ட மசோதா மீது விவாதம் நடந்தபோது, தமிழக முஸ்லிம்களால் 'முஜாஹிதேமில்லத்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.

பொறுப்புகள்:
காயிதெமில்லத், பாபகி தங்கள், இப்றாஹீம் சுலைமான் சேட் ஆகியோருக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவராக இதுகாலம் வரை பணியாற்றி வந்தார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அரசியல் கூட்டணியான மிலலி ஜம்ஹீரி மஹஜ், மஜ்லிஸே இத்திஹாதே முஸ்லிமீன், முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இன்று வரை பணியாற்றி வந்தார்.


அலிகர் சர்வ கலாசாலை ஆட்சிக்குழு, இந்திய அரசின் பொன்விழாக் குழு, மஹாராஷ்டிரா தேசிய ஒருமைப்பாட்டுக் குழு உள்ளிட்ட குழுக்களின் உறுப்பினராகவும், மும்பை அமைதிக்கான நீதித்துறையின் நீதிபதியாகவும், முஸ்லிம் ஆம்புலன்ஸ் சங்கத்தின் துணைத் தலைவராகவும், அஞ்சுமனே இஸ்லாம் பொருளாதாரப் பள்ளியின் தலைவராகவும், கச்சி மேமன் ஜமாஅத் மாணவர் வட்டத்தின் தலைவராகவும் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலராகவும் பணியாற்றி இருக்கிறார் - பணியாற்றியும் வருகிறார்.

வெளியீடுகள்:
'மார்க்கமும் - அரசியலும்", 'சுதந்திரத்திற்குப் பின் முஸ்லிம் லீக்" ஆகிய புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். கட்டுரைகள், பிரசுரங்கள் பல வெளியிட்டிருக்கிறார்.

பயணித்த நாடுகள்:
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு முறை உம்றா செய்திருக்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரோம், ஜெர்மனி, மால்டா, துருக்கி, சைப்ரஸ், ஆஸ்திரேலியா, நார்வே, பாகிஸ்தான், ஸவூதி அரபிய்யா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு சமுதாயத்தின் பிரதிநிதியாக அவர் பயனித்திருக்கிறார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் மஹாராஷ்டிரா சட்டமன்றத்திலும், இந்திய பாராளுமன்றத்திலும் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு நூலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினமான மார்ச் 10ஆம் Nதியன்று சென்னையில் வெளியிடப்பட்டது.

கடந்த ஜூன் 20,21 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 60ஆம் ஆண்டு நிறைவு மணிவிழா மாநாட்டில் கலந்துகொண்டதே அவரது கடைசி நிகழ்ச்சியாயிற்று.

எல்லாம்வல்ல அல்லாஹ், மறைந்த முஜாஹிதெமில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிபின் நற்பணிகளை கபூல் செய்து, அவர்களின் பிழைகளைப் பொறுத்து, உயர்வான சுவனத்தைத் தந்தருள்வானாக, ஆமீன்.

தாய்ச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் மர்ஹ_ம் அவர்களின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு தலைமை நிலையம் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது.


அல்லாஹ் காப்பற்றுவானாக ஆமீன்...


IDMK கொள்கை விளக்கப் பாடல்கள் வெளியீடு - பிரமுகர்கள் பங்கேற்பு

திரு. அப்துல் ரவூப் உரையாற்றுகிறார், மேடையில் தலைவர்கள்


அபுதாபி, ஜீன் 24, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இன்று இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கைப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா விமரிசையுடன் நடைபெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக புரவலர் நோபள் மரைன்ஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மரியாதைக்குறிய சாகுல் ஹமீது அவர்களும், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்திருந்த இணைய எழுத்தாளரும் பிரபல சமூக ஆர்வலருமான திரு முகவைத்தமிழன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

நிகழச்சியில் பிரபல மார்க்க அறிஞரும் அறிவு ஜீவியும், திருக் குர்ஆன் விரிவுரையாளரும், பன்னூல் ஆசிரியரும் ஆகிய திரு. காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.

பின்னர் புரவலர் நோபள் மரைன்ஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மரியாதைக்குரிய சாகுல் ஹமீது அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கை விளக்கப் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை வெளியிட பிரபல சமூக ஆர்வலருமான திரு முகவைத்தமிழன் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்கள்.

குறுந்தகடை திரு. சாகுல் ஹமீது வெளியிட திரு முகவைத் தமிழன் பெற்றுக் கொள்கிறார் அருகில் IDMK தலைவர் திரு. குத்பதீன் ஐபக், அமர்ந்திருப்பது திரு. காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள்.



பின்னர் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களும், பொதுச் செயளலர் திரு. வரிசைக் ககனி அவர்களும் உரையாற்றினார்கள்.இறுதியில் இந்திய தேசிய மக்கள்கட்சியின் சட்ட ஆலோசகர் திரு. இஜாஸ் பேக் அவர்களும்,இந்திய தேசிய மக்கள்கட்சியின் ஆலோசகர் திரு. அப்துல் ரவூப் அவர்களும், இயக்கத்தை சோந்த பொறுப்பாளர்கள் திரு. கார்த்திக், திரு. குமரி ஜேம்ஸ் அவர்களும் உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்கு திரு. சி.எம் ஹீசைன் அவர்கள் தலைமையேற்றார்கள், திரு கமால் பாஷா நன்றியுரை வழங்கினார்கள். நிகழச்சிக்கான ஏறபாடுகளை இந்திய தேசிய மக்கள் கட்சியின் அபுதாபி கிளை செய்திருந்தது.

Tuesday, June 24, 2008

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வாதாடிய கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்கள் பெயரிலும் விருது வழங்க வேண்டும்

தமிழக அரசு பல்வேறு தலைவர்கள் அறிஞர்கள் பெயரில் விருதுகள் வழங்குவது போல, கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்கள் பெயரிலும் விருது வழங்க தமிழக முதல்வர் கலைஞர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் வாழ்த்துரை வழங்கி அவர் பேசியதாவது- கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக இயங்கி, இன்று அறுபதாம் ஆண்டு விழாவை மணிவிழா மாநாடு என பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதோடு, அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அவர்ளுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காயிதெமில்லத் அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்துக்கு மட்டும் தலைவராக இருக்கவில்லை.

ஒட்டுமொத்த தமிழக சமுதாயத்துக்கும் தலைவராக திகழ்ந்தார். தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வாதாடிய பெருமை அவரைச் சாரும்.

அப்படிப்பட்ட கண்ணியமிக்க தலைவரை கவுரவிக்கும் வகையில், நமது தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் காயிதெமில்லத் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி பேட்டை மாநகர் சாலைக்கு காயிதெ மில்லத் சாலை என பெயர் சூட்டியது போல,
அவர் மறைந்து அடக்கமாகியிருக்கும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு காயிதெமில்லத் நெடுஞ்சாலை என பெயர் சூட்டி கவுரவப்படுத்தியது போல,
மற்ற தலைவர்களின் அறிஞர்களின் பெயரில் வழங்குவது போல

கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களின் பெயரில் தமிழக அரசின் சார்பில் விருது ஒன்றினை வழங்க முதலமைச்சர் கலைஞர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.

மேலும் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியதுபோல, மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளிலும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலான முயற்சிகளை முதலமைச்சர் கலைஞர் மேற்கொள்ளவேண்டுமெனவும், அதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.


Sunday, June 22, 2008

மவுலானாக்களுக்கெல்லாம் மவுலானா கலைஞர் கருனாநிதி



தி.மு.கழகத்திற்கும் எங்களுக்கும் தொப்புள் கொடி உறவு
கலைஞரின் வழியில் அவருக்கு உற்ற துணையாக முஸ்லிம் சமுதாயம் என்றும் அணி வகுத்து நிற்கும்


இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேச்சு (நன்றி – முரசொலி – 20.01.2004 இதழில் வெளிவந்தது)

கலைஞரின் வழியில் அவருக்கு உற்ற துணையாக முஸ்லிம் சமுதாயம் என்றும் அணி வகுத்து நிற்கும். தி.மு.கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் உள்ள உறவு தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள தொப்புள் கொடி உறவாகும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசுகையில் குறிப்பிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் அக்கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் கலைஞர் தலைமையிலான மதநல்லிணக்க முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேர்கிறது என்பதைத் தெரிவித்தோம். கலைஞர் அவர்களும் நம்மை அன்போடு சேர்த்துக் கொண்டார்கள்.

கலைஞருக்கு முழு ஆதரவு

தமிழ்நாட்டிலே வாழக்கூடிய முஸ்லிம் சமூகத்தினருக்கு அங்கீகரிக்கப்பட்ட, ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே அரசியல் பேரியக்கமாக இருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைஞருக்கும் அவரது முற்போக்கு கூட்டணிக்கும் தன்னுடைய முழு ஆதரவையும் தந்து கலைஞருடைய தலைமையை ஏற்றுக் கொள்கிறது.

இந்த முடிவினை உங்களுக்கு தெரிவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகினைச் சேர்ந்த நாம், கலைஞர் அவர்களை புதிதாகப் பார்க்கக் கூடியவர்கள் அல்லர். நாம் அவர்களோடு இல்லாத நேரத்தில் கூட அவர்கள் அருகிலேதான் இருந்திருக்கிறோம்.

அவர்களிடமிருந்து நாம் தூரத்திலே சென்றிருந்தாலும் கூட அவர்களோடு நாம் இதயபூர்வமான உறவை தொடர்ந்தே வந்திருக்கிறோம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய ஸ்தானத்திலே இச்சமுதாயம் கலைஞர் அவர்களை அன்று முதல் இன்று வரை வைத்துப் போற்றி வருகிறது என்பதை இத்தருணத்திலே சொல்ல வேண்டியது என்னுடைய கடமை!

கலைஞரின் அற்புதமான உரை:

கலைஞர் அவர்களை விமர்சித்த காலம் எல்லாம் கூட உண்டு. அந்த சமயத்தில் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியிருந்தார். முரசொலியிலே அந்த உரை வெளியாகியிருந்தது. அந்த உரை ஒரு அற்புதமான உரை அதனைச் சொல்வது பல பேருக்கு அதிசயமாக் கூட இருக்கலாம். திருக்குரானிலே உள்ள 6,666 வசனங்களில் ஆண்டவனைப் பற்றிய வர்ணனை: ஒரு வசனம்:

இறைவன் வானம் பூமிக்கெல்லாம் ஒளிமயமாக இருக்கக்கூடியவன், ஒளியாய் இருக்கக்கூடியவன் - என்று ஒளியைப் பற்றி திருக்குரானிலே இறைவனை சம்பந்தப்படுத்தி வருகிற அந்த ஆயத்துக்கு வசனத்துக்கு நானும் எனது 50 ஆண்டு கால ஆராய்ச்சிpலே தமிழ்நாட்டிலே உள்ள வியாக்யான கர்த்தாக்கள், உலகளவிலே உள்ள திருக்குரானுடைய காமெண்டேட்டர்கள், மாபெரும் அறிஞர்களுடைய உரைகளையெல்லாம் படித்திருக்கிறேன். அந்த ஆராய்ச்சிpயிலே நான் 40 ஆண்டு காலமாக என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த திருக்குரான் வசனத்திற்கு தமிpழிலே ஒரு அழகான இரத்தினச் சுருக்கமான விளக்கத்தை சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டிருந்த நேரத்திலேதான் கலைஞர் அவர்கள் தந்திருந்த அந்த உரையினை படித்து மெய்சிலிர்த்துப் போனேன்.

இது சாதாரண மனிதர் சொல்லக்கூடியது அல்ல. இது வலியுல்லாக்களும், ஆன்மீகச் செல்வங்களும், சொல்லக்கூடிய விளக்கம் என்று அவர்களுக்கே நான் எழுதினேன். இதை எப்படி நீங்கள் சொன்னீர்கள். எதைப் படித்துச் சொன்னீர்கள்? என்று கேட்ட போது சிரித்துக் கொண்டார்.

பட்டது சொன்னேன் என்றார். என்ன சொன்னார் தெரியுமா?

கற்பனைக்கு எட்டாத வெட்;ட வெளியிpலிருந்து தானே எழுந்து வெளிக் கிளம்பி வருகிற ஒளி வெள்ளம் என்று அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.

உங்களுடைய இந்த விளக்கம் : கலைஞர் அவர்களே உங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. சரித்திரம் காணாத அளவிற்கு உங்களது பெயரும் புகழும் உயர்ந்திருக்கிறது.


உண்மையாகச் சொல்கிறேன், திருக்குரானில் இந்த வசனத்திற்கு யாரும் சொல்லாத அழகிய அர்த்தத்தை, அழகிய தெளிவுரையைச் சொன்ன உங்களை எங்களுடைய மவுலானாக்களுக்கெல்லாம் மவுலானவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய ஆன்மீக குருவாக நான் என்னைப் பொருத்தவரை ஒப்புக் கொள்கிறேன். ஆன்மீக ரீதியாக எனக்கு அறிவுரை கூறிய மிகப் பெரிய அறிஞராக நான் கலைஞரை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த உணர்வில்தான் அவர்களோடு நாம் என்றும் பழகி வந்திருக்கிறோம். அவர்களைப் போற்றி வருகிறோம். அவர்களைப் பாராட்டி வருகிறோம்.

நாடித்துடிப்பை அறிந்தவர்

கலைஞர் அவர்கள் ஏதோ இன்று நேற்று இந்த சமுதாயத்Nhடு உறவு கொண்டவரல்லர். இந்த சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து இந்த சமுதாயத்தினுடைய ஒவ்வொரு நாடித்துடிப்பையும் அறிந்தவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைப் பற்றி அணு அணுவாகப் புரிந்து கொண்டிருக்கிற மாமேதை அவர். நான் வெட்கப்படாமல் சொல்வேன், வெளிப்படையாகச் சொல்வேன் - திராவிட முன்னேற்றக் கழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்த காலத்திலேதான் நாங்கள் மதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன. எங்களுக்கு கண்ணியம் காக்கப்பட்டிருக்கிறது.

உங்களோடு இருந்த காலத்திலே எங்களுக்கு அருகிலே எம்.பி. என்ற பட்டம் போட முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலே ராஜ்ய சபை உறுப்பினர்களாக நாங்கள் ஆக முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலேதான் சட்டமன்றத்திலே எம்.எல்.ஏக்கள் என்ற அந்த பட்டங்கள் எல்லாம் எங்களால் போட முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலே தான் முனிசிபாலிட்டியிலே மாநகராட்சிpயிலே தலைவர்களாக துணைத் தலைவர்களாக எங்களால் வர முடிந்தது.

இதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தி.மு.கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள உறவு மற்ற கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு போன்றதல்ல. இது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது.

இது தொப்புள்கொடி உறவு என்று சொல்வார்களே அப்பேர்ப்பட்ட உறவு. யாதும் ஊரே யாவரும் கேளீர், ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று தமிழ் நெறியை நீங்கள் (கலைஞர்) வரிவரியாக விளக்கி விவரித்து இந்த நாட்டு மக்களுக்கு போதனையாகச் செய்து கொண்டிருக்கிறீர்களே அந்த போதனையை தமிழ்நெறியை அந்தத் தமிழ்த் தத்துவங்களை உலகமெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய மார்க்கத்திலே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த முஸ்லிம் சமுதாயம் தமிழ் நெறியின் தத்துவ மேதையாக தங்களை ஏற்றுக் கொண்டது மாத்திரமல்லாமல், இஸ்லாமிய நெறியின் போதகராக தங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்நேரத்தில் சொல்ல வேண்டியது எனது கடமை!


கலைஞரோடு இருப்பது பொற்காலம்

உங்களோடு இருந்தகாலம், எங்களுக்குப் பொற்காலம். உங்களோடு இல்லாத காலம் எங்களுக்கு கற்காலம். அந்த கற்காலம் சில காலம் ஆனால் உங்ளோடு இருக்கக்கூடிய அந்த பொற்காலம் மீண்டும் திரும்பி விட்டது என்று அன்றைக்கு சொன்னீர்களே, அந்த பொற்காலம் இன்று திரும்பி விட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும், தி.மு.க.விற்கும் உள்ள இந்த உறவு ஏதோ அரசியல் ரீதியான உறவல்ல. குடும்ப ரீதியான உறவல்ல. பண்பாட்டு ரீதியிலான உறவு. தத்துவ ரீதியான உறவு. இதய பூர்வமான உறவு. உணர்ச்சி பூர்வமான உறவு. உண்மையான உறவு. யாராலும் தவிர்க்க முடியாத அற்புதமான நிரந்திர உறவு என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அரசியலில் அவ்வப்போது சில விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டது உண்டு. ஆனால் இத்தகைய மாற்றங்கள் இனி ஒரு போதும் ஏற்படமுடியாது ஏற்படக்கூடாது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அத்தகைய பழைய கால பண்பாட்டு உறவை நினைவிலே வைத்து உங்களுடைய நடவடிக்கை அத்தனையும் எங்கள் மீது இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அந்த அன்பும் பாசமும் என்றும் தழைக்கும், நாளையும் தழைக்கும், நிரந்தரமாக தழைத்து நிற்கும்.

கலைஞருக்கு துணை நிற்போம்

இந்தச் சமுதாயம் உங்கள் பின்னே நின்று உங்களுக்கு ஒத்தாசையாக, நீங்கள் எடுக்கக்கூடிய எந்த முடிவாக, நீங்கள் செல்லக்கூடிய எந்த வழியாக இருந்தாலும், நீங்கள் ஆற்ற கூடிய பணி எதுவாக இருந்தாலும் அனைத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை மட்டுமல்ல, தமிழக முஸ்லிம் சமுதாயம் அனைத்தும்.. அதற்கு உறுதுணையாக நிற்போம், எங்களது அழைப்பை ஏற்று நீங்கள் சிறப்பாக வருகை தந்து எங்களுக்கு அறிவுரை கூற வந்திருப்பது கண்டு நாங்கள் மெத்தவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களது அகில இந்திய பொதுச்செயலாளர் அகமது அவர்கள் பல்வேறு பணிகளுக்கிடையிலும் நீங்கள் வருகிறீர்கள் என்று சொன்னவுடன் உடனே நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தி.மு.க வின் பார்வையில் அன்று கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கள்

தி.மு.க வின் பார்வையில் இன்று கண்ணியமிழந்த முனீருல் மில்லத்??? அவர்கள்


அதிர்ச்சியடையாமல் முகவைத்தமிழனின் இந்த பதிவையும் பார்க்கவும்....

Thursday, June 19, 2008

சிங்கப்பூரில் இரத்த தான முகாம்


வரும் ஜீன் 22ம் தேதி சிங்கப்பூரில் உள்ள பென்கூலன் பள்ளிவாசலில் தமிழ்நாட முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சிங்கப்பூர் கிளை மாபெரும் இரத்த தான் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தள்ளது.


மனித நேயம் மிக்க இப்பணியில் பங்களிக்க விரும்புவோம் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கு 92282984 (சகோ. அக்பர் அலி) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு சிங்கப்பூர் தமுமுக கேட்டுக்கொள்கின்றது.

செய்தி : தமுமுக சிங்கப்பூர்

Wednesday, June 18, 2008

முஸ்லிம்களை ஏமாளிகளாக்கும் கோமாளித் தலைவர்களை தெரிந்து கொள்ளுங்கள்

இவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்!!முஸ்லிம்களை ஏமாளிகளாக்கும் கோமாளித் தலைவர்கள்!!





கொள்கை மனிதர்கள் விற்பனையாகுவதில்லை. ஆம், முட்டாள்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. அறிவாளிகள் தாம் முஸ்லிம்களாக இருக்க முடியும். ஆடுகளாக, ஆம், மந்தைகளாக நாம் இருக்க முடியாது. ............

.........அண்ணன் பி.ஜே.யும் தி.மு.க கூடாரத்தில் மூக்கை நுழைப்பது தன்னைப் பின்பற்றும் தொண்டர்களை ஏமாளியாக்கும் கோமாளித்தனம். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டத்தைக் கூட்டுவதும், பொய்யைச் சொல்லி பையை நிரப்புவதும் கோடிகளுக்கு குப்புற விழுவதும் தன்னை நம்பி வந்த தொண்டர்களை முட்டாளாக்குவதும், இரட்டை நாக்கைச் சுழற்றுவதும் இவருக்கு கைவந்த கலை. அரசியலை புறக்கணித்த புஸ்வானங்களின் வான வேடிக்கை பட்டியல் இதோ,


வாழ்வுரிமை மாநாடு அ.இ.தி.மு.க ஆதரவு, தஞ்சைப் பேரணி தி.மு.க ஆதரவு, கும்பகோணம் மாநாடு அ.இ.தி.மு.க ஆதரவு, தஞ்சை வல்லம் மாநாடு தி.மு.க ஆதரவு. போலி நாடகம் நடத்திய அரசியல் துறவிகளின் போலி வேஷத்திற்கு பலியாகி விடாதீர்கள். பொய் சாக்கு சொல்லி விற்பனையாகும் சூழ்ச்சியில் விட்டிலாய் வீழ்ந்து விடாதீர்கள்.


உங்களை ஏமாற்றும் கோமாளிகளிடம் ஏமாறாதீர்கள். இவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும். Public Memory is not short, but very sharp என்பதை தெரிவியுங்கள். ......... CLICK HERE TO READ FULL ARTICLE



WWW.IDMK.ORG

Sunday, June 15, 2008

முகவை தமுமுக வின் கல்வி உதவி


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இராமநாதபுரத்தில் தமுமுக வின் கல்வி உதவி


இராமநாதபுரத்தில் நகர் தமுமுக வழங்கிய கல்வி உதவி நிகழ்சியில் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திர ராமவன்னி மற்றும் இராமநாதபுர (மத்திய) மாவட்ட தமுமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




(இன்ஷாஅல்லாஹ்) கல்லாமை என்பதை இல்லாமையாக்குவோம்!

இரத்த தானம் செய்தீடுவீர்! மனித உயிர் காக்க உதவிடுவீர்!!

வரதட்சணைக் கொடுமைகளை ஒழிப்போம்! மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!

கார் நம்பருக்கு ரூ.5 கோடி செலவு

துபாய், ஜூன் 16:
துபாயில் கார் நம்பர் ஒன்று ரூ. 5.5 கோடிக்கு ஏலத்தில் விற்பனை ஆனது.
கார் நம்பர்களை ஏலத்தில் விட்டு கார் உரிமையாளர்களுக்கு ஒதுக்குவது துபாயில் வழக்கம். துபாய் போக்குவரத்து ஆணையம் கார் நம்பர் ஏலத்தை நடத்துகிறது.

58 வது கார் நம்பர் ஏலம் நேற்று முன் தினம் துபாயில் நடந்தது.
இரட்டைப் படை எண்ணுள்ள கார் நம்பர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. ஜி 16 என்ற கார் எண் உயர்ந்தபட்ச தொகைக்கு விற்கப்பட்டது. அதன் ஏல விலை 50 லட்சம் திர்ஹாம் (ரூ. 5.5 கோடி).

ஈ 60 என்ற கார் எண் 36 லட்சம் திர்ஹாமுக்கு விற்பனை ஆனது.
ஜி 21 என்ற எண்ணுக்கு கிடைத்த விலை 34 லட்சம் திர்ஹாம்.
இந்த ஏல விற்பனையின் மூலம் போக்குவரத்து ஆணையத்துக்கு கிடைத்த தொகை ரூ. 35 கோடி.

நன்றி தினகரன்

கடல் கடந்து ஒரு கண்ணீர் மடல்


(இது சீத‌னக் கொடுமையால் க‌ற்பை இழ‌ந்து த‌விக்கும் ஏழைக் கும‌ரின் க‌ண்னீர் கடிதம்)

என் அன்பான‌ குடும்ப‌த்திற்கு..
அஸ்ஸ‌லாமுஅலைக்கும்(வ‌ர‌ஹ்)த‌ம்பி! உம்மா! நீங்க‌ள் எப்ப‌டி? நான் ந‌ல்ல‌ சுக‌ம்.
நீங்க‌லெல்லாம் சுக‌த்தோடு வாழ‌ நான் அல்லாஹ்விட‌ம் பிரார்த்திற்கின்றேன். நான் குவைத்திற்கு வந்து சுமார் எட்டு மாதங்களாகின்றது. என்னால் இங்கு வாழ‌ முடியாதுள்ள‌து. என்னை மிருக‌த்தை விட‌க் கேவல‌மாக‌வே ந‌டாத்துகின்றார்க‌ள். என‌து முத‌லாலி ஒரு காட்டு மிராண்டி. என்னை ப‌ல‌ முறை த‌காத‌ உற‌வுக்கு வ‌லுக்க‌ட்டாய‌மாக அழைத்து அனுப‌வித்துவிட்டான். ஒரு நாளைக்கு ப‌ல‌ பெண்க‌ளும் ஆண்க‌ளும் செய்யும் வேலைக‌ளை என‌க்கு ம‌ட்டும் த‌ருகின்றார்க‌ள். நான் வேலைக்குச் சென்றிருக்கும் இட‌த்தில் வ‌ய‌து போன‌ ஒரு பைத்திய‌ம் பிடித்த‌ ஒருவ‌ன் இருக்கின்றான். என‌து ஆடைக‌ளையும் பொருட்க‌ளையும் நான் க‌வ‌னிக்காம‌ல் இருந்தால் நெருப்பால் எரித்துவிடுகின்றான். ஒவ்வெரு நாளும் துன்ப‌த்தோடுதான் என‌து வாழ்வை இங்கு க‌ழிக்கின்றேன்.

உம்மா! ஏன் என்னை வெளிநாடு வெளிநாடு என்று அனுப்பி வைத்தீர்க‌ள்? இங்கு ந‌ர‌க‌த்தையே நான் காணுகின்றேன். உம்மா! ஊரில் இருக்கும்போது என‌க்குத் தொழுகை எப்போதும் த‌வ‌றுவதில்லை. உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் இங்கு ஒரு வ‌க்துக் கூட‌த் தொழ‌ என‌க்கு அனும‌தி இல்லை.

ஒரு நாள் உங்க‌ளோடும் த‌ம்பிமார்க‌ளோடும் பேசுவ‌த‌ற்கு அர‌பியின் வீட்டு போனை நான் அழுத்திய‌ போது என‌து எஜ‌மானி என்னைக் க‌ண்டுவிட்டாள். உட‌னே என‌க்குப் ப‌ய‌ங்க‌ர‌மாக‌ அடித்து விட்டு சிறிதாக‌ துவார‌முள்ள‌ ஒரு ரூமுக்குள் என்னைக் க‌ட்டி வைத்தாள். சுமார் ஒரு இர‌வும் இர‌ண்டு ப‌க‌ல்க‌ளும் அந்த‌ ரூமுக்குள் நான் எவ்வித‌ உண‌வோ குடிநீரோ இன்றித் த‌வித்துக் கிட‌ந்தேன்.அப்போது த‌ற்கொலையாவ‌து செய்து கொண்டால் என்ன‌ என்ற‌ சிந்த‌னைகூட‌ வ‌ந்த‌து. உம்மா! பிற‌கு உங்க‌ள‌து முக‌ங்க‌ள் என‌து ஞாப‌க‌த்திற்கு வ‌ந்த‌வுட‌ன் அதை நிறுத்திக்கொண்டேன்.

நான் இவ்வ‌ள‌வு மிருக‌த்த‌ன‌மாக‌ நடாத்த‌ப்ப‌டுவ‌து உங்க‌ளுக்கெல்லாம் வேத‌னை அளிக்கும். ஆனால் என்னைப் போன்று மோச‌மாக‌ எத்த‌னையோ கும‌ருக‌ள் இங்கு அர‌பிக‌ளால் ந‌டாத்த‌ப்ப‌டுவ‌து உங்க‌ளுக்குத் தெரியாது.

உம்மா! என‌து கூட்டாளி பெள‌சியாவுக்கு போன‌ மாத‌ம் திருமண‌ம் ந‌ட‌ந்த‌தாக‌ இங்கு ஒரு ட்ரைவ‌ர் சொன்னார். அல்ஹ‌ம்துலில்லாஹ். என‌க்கு இப்போது வ‌ய‌து இருப‌த்தி எட்டு. நான் இங்கு வ‌ந்த‌தே என‌து திரும‌ண‌த்திற்கு வீடு க‌ட்ட‌த்தான். உங்களுக்குத் தெரியும்.

உம்மா! நான் ஒரு முடிவெடுத்துள்ளேன். என‌க்கு இனிமேல் திருமண‌ம் வேண்டாம். என‌க்கு நீங்க‌ள் எந்த‌ ஆம்பிளையையும் திரும‌ண‌ம் பேச‌ வேண்டாம். ம‌ரியாதையும் மார்க்க‌மும் உள்ள‌ யாராவ‌து முன் வ‌ந்து வீடு காணி கைக்கூலி இல்லாம‌ல் என்னை முடிக்க‌ வ‌ந்தால் அவ‌ரோடு வாழ‌ நான் விரும்புகின்றேன். இல்லாவிட்டால் நான் இப்ப‌டியே வாழ்ந்து கொள்கின்றேன்.

உம்மா! என‌து த‌ம்பிமார்க‌ளுக்கு திரும‌ண‌ம் செய்யும் போது யாரிட‌த்திலும் வீடோ சொத்துக்க‌ளோ வாங்காதீர்க‌ள். அக்கொடுமையை நான் அனுப‌வித்துக் கொண்டுதான் இத‌னைக் கூறுகின்றேன். அல்லாஹ்வின் அச்சமில்லாத கோழைகளே பெண்களிட‌த்தில் வீடு வாக‌ன‌ம் சொத்துக்க‌ளை வாங்குவார்க‌ள். நம்ம‌ட‌ த‌ம்பிமார்க‌ளை அவ்வாறான‌‌ ஆண்க‌ளாக‌ ஆக்கிவிடாதீர்கள்.

சீத‌ன‌க்கொடுமையால் இன்று முஸ்லிம் கும‌ருக‌ள் ப‌டும் க‌ஷ்ட‌ங்க‌ளை ஏன் உம்மா ந‌ம்ம‌ட‌ உல‌மாக்க‌ள் புரிகின்றார்க‌ளில்லை???

உம்மா! ந‌ம்ம‌ட‌ வாப்பா ம‌ர‌ணித்து சுமார் மூன்று வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்துவிட்ட‌ன‌. நாம் எங்கு வாழ்ந்தாலும் மான‌மும் ம‌ரியாதையும் தான் முக்கிய‌ம். இதை ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்.

எல்லாவ‌ற்றிற்கும் அந்த‌ நாய‌ன் இந்த‌ சீத‌ன‌ம் வாங்கும் ஆண்க‌ளை சும்மா விட‌மாட்டான்.உம்மா! இம்ம‌ட‌லில் என‌து க‌ஷ்ட‌ங்க‌ளில் ஒரு ப‌குதியைத் தான் கூறியுள்ளேன். மிக‌ விரைவில் நான் நாடு திரும்புவ‌த‌ற்கு துஆச் செய்யுங்க‌ள்.
சீத‌ன‌த்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் ந‌ம‌து ஊரிலிருக்கும் ‘தாருல் அத‌ருக்கு’ க‌ட்டாய‌ம் ஞாயிற்றுக் கிழ‌மைக‌ளில் பெண்க‌ளுக்கான‌ பயானுக்கு போங்க‌ள். இம்ம‌ட‌லை முடிக்கின்றேன். வ‌ஸ்ஸ‌லாம்.
க‌ண்னீருட‌ன்…
ஷ‌ர்மிலா

(அன்பின் இளைஞ‌ர்க‌ளே! இது க‌ற்ப‌னைக் க‌டித‌ம‌ல்ல‌. பெய‌ர்க‌ளை ம‌ட்டும் மாற்றியுள்ளோம். ந‌ம‌து ஏழைக்கும‌ருக‌ள் வெளிநாடுக‌ளுக்குச் செல்வ‌தால் ப‌டும் அவ‌ஸ்தைக‌ள் தான் நீங்க‌ள் க‌ண்ட‌து. க‌ட‌ல் க‌ட‌ந்து க‌ற்பையும் இழ‌ந்து ந‌டுவீதியில் நிற்கும் இக்கும‌ருக‌ளுக்கு என்ன‌ தீர்வு???

வீடுவாங்கும் சீத‌ன‌க்கொடுமைதானே கார‌ண‌ம்? அல்லாஹ் ஹ‌ராமாக்கிய‌ இக்கொடுமையை செய்யும் அத்த‌னை இளைஞ‌ர்க‌ளும் அந்த‌ ம‌றுமைநாளில் அல்லாஹ்வின் முன்னால் நிச்ச‌ய‌ம் நிறுத்தப் படுவார்கள். சீத‌ன‌ம் எனும் இக்கொடுமையில் இருந்து அல்லாஹ் ந‌ம்ம‌னைவ‌ர்க‌ளையும் பாதுகாத்து அருள்வானாக!‌)

நன்றி : தாருல் அதர் அத்தஅவிய்யா

Saturday, June 14, 2008

விமானங்களில் கட்டண சலுகை : ஏர்இந்தியா அறிவிப்பு


சென்னை :
உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் பதிவு செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என்று ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய அரசு நிறுவனமான ஏர்இந்தியா, ஸ்பாட் பேர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின்படி, உள்நாட்டில் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்குள்ளாக, விமான டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்படும்.
இதன்படி சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் என்றும், இச்சிறப்புத் திட்டத்தின்படி டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 5400 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஏர்இந்தியா அறிவித்துள்ளது.
இதற்கான டிக்கெட்களை விமான நிறுவன அலுவலகம், விமான நிலையம் மற்றும் இன்டெர்நெட்டிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு விமான பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Wednesday, June 11, 2008

இஸ்லாத்தின் பார்வையில் ஸதக்காவும் ஜகாத்தும் - மெளலவி அலி அக்பர் உமரி

"இஸ்லாத்தின் பார்வையில் ஸதக்காவும் ஜகாத்தும்"

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்.

Al-Sheikh. Ali Akbar Umari


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்
ஸதக்கா,ஜக்காத்,ஜகாத்,ஜக்கா,ஸக்காத்,zakat,zaka,sadaka,sadhaka

Tuesday, June 10, 2008

தமிழகத்தில் முஸ்லிம்களின் வீரமிகு சுதந்திர தின அணிவகுப்பு - PFI அறிவிப்பு

ஆகஸ்ட் 15ல் தமிழகத்தில் சுதந்திர தின அணிவகுப்பு
பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அறிவிப்பு


MNP யினர் நடத்தப் போகும் சுதந்திர தின அணிவகுப்பை பற்றி பலரும் பலவாறு விமர்சித்து கொண்டிருக்கின்றார்கள், ஃபாசிச பத்திரிகைகளான தினமலர் போன்றவை ஒரு படி மேலே போய் தமிழகத்தில் தீவிரவாதிகள் ஆயுதப் பயிற்சி என்ற அளவிற்கு செய்தி வெளியிட்டு மக்களிடையே பீதியை கிளப்பி வருகின்றார்கள் இந்த நிலையில் MNP யின் மாநில தலைவர் திரு. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தங்கள் அமைப்பு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடத்தவிருக்கும் சுதந்நதிர தின அணிவகுப்ப குறித்து ஒரு பத்திரிகை அறிக்கை ஒன்றினை இன்று (10-06-2008) வெளியட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது :

மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பு (Freedom Parade) நடத்த திட்டமிட்டுள்ளோம். பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த அணிவகுப்பு நடக்கின்றது. தமிழகத்தில் மதுரையிலும், கேரளாவில் கொச்சி, வயநாடு ஆகிய இர இடங்களிலும் கர்நாடகத்தில் மங்களுரிலும் இந்த அணிவகுப்புகு நடக்கின்றது.

நாம் பெற்ற சுதந்திரம் என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றினைந்து போராடிப்பெற்ற சுதந்திரம். இந்துக்களும் முஸ்லிம்களும் எந்தவித பாகுபாடும் இன்றி போராடி இந்த தேசத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். நமது தேசம் விடுதலை அடைந்தபோது, அப்போது இருந்த முஸ்லிம்களின் சதவிகிதத்தை விட இரண்டு மடங்கு முஸ்லிம்கள் சுதந்திரப் போரில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்திரக்கின்றார்கள். நூற்றான்டுகால ஒற்றுமைப் போராட்டத்தின் வெற்றிக்கனிதான் நாம் இப்போது சுவாசித்து கொண்டிருக்கும் சுதந்திரக் காற்று.

சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டே வந்திரக்கின்றார்கள். தேசத்தின் நச்சுக்கிருமிகளாகவும் புற்றுநோயாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் சங் பரிவார ஃபாசிஸ்ட்டுகளின் நீண்ட நெடிய சதிச்செளல்களின் ஒரு பகுதிதான் இந்த அந்நிய மயமாக்கல் திட்டம்.

நாம் நடத்திவிருக்கும் சுதந்திர தின அணிவகுப்பு சுதந்திர தின வஜழாவை கெளரவிக்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்டத்தின் நினைவலைகளை எல்லோர் மனதிலும் பூத்துக் குலுங்கச் செய்யும் விதமாகவும், இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலை நிறுத்தும் முகமாகவும், குறைந்த சதவிகிதமே இருந்தாலும் தங்கள் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிரை தியாகம் செய்த முஸ்லிம்களின் தியாகத்தை பெருமைப்படுத்தும் விதமாகவும், இரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற சுதந்திரததின் பாதுகாவலர்களாக ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் செயல்பட வேண்டும் என்பதை வலியுருத்தும் விதமாகவும் இருக்கும்.

ஆகஸ்ட் 15ம் நாள் சுதந்திர தின அணிவகுப்பை மதுரையில் நடத்த திட்டமிட:டுள்ளோம். இந்த அணிவகுப்பிற்காக மாவட்டந்தோறும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆங்காங்கே பயிற்சி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த அணிவகுப்பிற்கான ஒத்திகைகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. அணிவகுப்ப பயிற்சி மற்றும் ஒத்திகை குறித்த முறைப்படி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாக தெறிவித்துள்ளோம். இந்த அணிவகுப்பிற்காக மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரம் செய்து வருகின்றோம்.

இந்த அணிவகுப்பில் சுமார் 1000 ம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அணிவகுப்பின் ஆரம்ப நிகழ்ச்சியாக தேசியக்கொடி ஏற்றப்படும். அணிவகுப்பின் முடிவில் சுதந்திர தின பொதுக்கூட்டம் நடைபெறும். தமிழகம் முழுவதிலுமிருந்து பொதுமக்கள் திரளாக இதில் கலந்து கொள்வார்கள் என மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முஹம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவித்துள்ளார்.

Monday, June 09, 2008

ஒரு லட்சம் சம்பளமா... ? - தமுமுக ஹைதர் அலி பேட்டி

ஒரு லட்சம் சம்பளமா...

தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் செ. ஹைதர் அலி் தமிழன் தொலைக்காட்சியில் அளித்த சிறப்பு பேட்டியிலிருந்து...

-முத்துப்பேட்டை மாலிக்
திரு.ஹைதர் அலி அவர்கள்

கேள்வி : தமிழகத்தில் திறமையான ஏராளமான முஸ்லிம் வழக்கறிஞர்கள் இருக்கையில் அவர்களை பணியில் அமர்த்தாமல் நீங்கள் தலைமை வகிக் கின்ற வகஃபு வாரியத்திற்கு லட்சுமி நாராயணன் என்பவரை நியமித்து உள்ளீர்கள். இது எப்படி சரியாகும்? தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம்களுக்காக தனி இட ஒதுக்கீடு முழு அளவில் பெறவேண் டும் என்று போராடி கொண்டிருக்கும் போது முஸ்லிம் அல்லாத ஒருவரை நியமனம் செய்தது சரிதானா?


பதில்: தமிழ்நாடு வக்பு வாரியத்தில் தமிழகத்தில் முஸ்லிம்களில் ஏராளமான திறமையான வழக்கறிஞர்கள் இருக்கும் போது வக்பு வாரியத்தில் ஒரு இந்து சகோதரனை லட்சுமி நாராயணன் என் கிற வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளீர்கள் இது நியாயம் தானா? அதற்காக போராட்டம் நடத்த போவதாக கூட ஒரு பத்திரிக்கையின் மூலமாக கூட சொல்லி இருக்கிறார்கள்.

நான் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். ஹதீஸ்களை ஆய்வு நடத்துகிற போது ஹதீஸ் கலை வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒரு ஹதீஸில் ஒரு அறிவிப்பா ளர் பொய்யராக இருந்தால், அல்லது அவர் பலகீனமாக இருந்தால் அல்லது ஞாபகமறதி உடையவராக இருந்தால், புத்தி சுவதீனம் இல்லாதவராக இருந்தால் அந்த ஹதீஸ்களை நாம் விடவேண்டும். அதற்கு ஒரு ஸஹீஹ் என்ற அந்தஸ்தை தரமுடியாது என்பது ஹதீஸ்களை நாம் பகுத்து பார்க்க வேண்டிய விஷயம். அந்த அடிப்படையில் நீங்கள் இதை பார்க்க வேண்டும். எல்லா விஷயங்க ளுமே குர்ஆன், ஹதீஸ் தான் நமக்கு வழிகாட்டி.



ஒரு விஷயத்தை தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்கிற ஒரு பொய்யன் சொல்கிற எல்லா குற்றச்சாட்டு களுக்கும் பதில் தர வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொய்யன் என்று எப்படி சொல்கிறீர்கள் ஆதாரம் இருக் கிறதா? என்றால் இருக்கிறது.






நான் பதவி ஏற்ற உடனேயே... தமுமுகவால் நடத்தி கொண்டு இருந்த உணர்வு என்கிற பத்திரிக்கை திருடி செல்லப்பட்டு அதை அபகரித்து வைத்து கொண்டு இருக்கிறார்கள் அதில் வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று எழுதினார்கள் 1 லட்சம் ரூபாய் சம்பளம் என்று எழுதியபிறகு அவர்கள் இயக்கத்தில் இருக்கக்கூடிய ஜாகிர் உசேன் என்கிற சகோதரன் அவரிடத்தி லேயே (பி.ஜே) என்ன அண்ணன் 1 லட்சம் சம்பளம் என்று எழுதி இருக்கின்றீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே. உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்துள்ளார்கள் என்று அவர் கூறிய உடன் அவர் என்ன செய்திருக்க வேண்டும். அப்படியா? என்று மறுப்பு போட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அவரி(ஜாகிர் உசேன்)டத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்றால் மானியம் அது இது என்று எல்லா அலவன்ஸ் என்று அது ஒரு லட்சம் வரும் அப்படி என்னன்ன வருகிறது என்று நீங்களும் ஒரு பட்டியல் எடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.


வக்ஃபு வாரியத்தில் இருந்து வக்பு வாரியத் தலைவருக்கு சம்பளம் தரப் படுகிறதா? என்றால் இல்லை. அந்த புத்திசாலிகளுக்கு இது தெரியாது போலிருக்கிறது. தெரிந்தாலும் பொய் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பொய்யை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற முனைப் புடன் செயல்பட்டு கொண்டு இருப் பவர்களுக்கு இது பற்றி பிரச்சனை இல்லை.
வாகனத் திற்கு டீசல் தரப்ப டும், அதுவும் எப்படி தரப்படு கிறது? ஒரு நாளைக்கு 12 லிட்டர் டீசல், வீட்டு தொலைபேசிக்கு, எனது கைபேசிக்கு கட்டணம் இவைதான் தரப்படுகின்றன. இவைகள் தான் வாரியத் தலைவருக்கு தரப்படுகின்ற மானியங்கள், சலுகைகள்.

சில மாதங்களுக்கு முன்பு டி.என்.பி.சி. தமிழ்நாடு தேர்வாணையத்தில் ஒருவரை நியமனம் செய்தார்கள். அப்படி நியமனம் செய்தவுடன் உடனடியாக ஒரு கூக்குரல் பாருங்கள் இடஒதுக்கீடு என்று சொல்லி ''இடஒதுக்கீடும் இல்லாமல் போய்விட்டது. இப்ப இதில் கூட ஒருவர் கூட முஸ்லிம் இல்லை'' என்று கூச்சலிட்டார்கள். உடனடியாக செய்திவருகிறது, நாம் பத்திரிக்கையில் எழுதுகிறோம். முதலில் யாஸ்மீன் அஹமது இருந்தார். அவர் போன பிறகு காசி விஸ்வநாதனை தலைவராக கொண்டு அமைக்கும் போது ஜின்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று நாம் பத்திரிக்கையில் எழுதிய பின்னர் அடுத்த வாரம் (களவாடிய) பத்திரிக்கையில் எழுதுகிறார்கள், தப்பு மனிதனுக்கு வராமல் இருக்குமா தவறாக வந்து விட்டது. இதை பத்திரிக்கையில் பெரிதாக எழுதுகிறார்கள். என்று கூச்சலிட்டார்கள்.

நாம் ஏன் இதற்கு கூட பதில் எழுதினோம் என்றால் முதலில் ஒரு தவறு நடந்து இருக்கிறது. வக்பு வாரியத் தலைவருக்கு 1 லட்சம் சம்பளம் என்று சொன்னயோக்கியனே, புத்திசாலியே அதுக்கு இன்னும் ஏன் நீ பதில் சொல்ல வில்லை?

சில நண்பர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள். என்ன அவர் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை? என்று கேட்கிறார்கள். அவர்களிடத்தில் நான் சொல்வதெல்லாம் நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது என்ன வழிமுறையை எடுத்து கொண்டேனோ அதே போன்று தான் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பொய்யன் தொடர்ந்து பொய் சொல்லி கொண்டு இருந் தால் நாம் பதில் சொல்லி கொண்டு இருக்க முடியாது.

லட்சுமி நாராயணனை நீங்கள் நியமித்தது உண்மையா? பொய்யா? என்றால் உண்மையில் நியமித்து உள்ளோம். ஏன் நியமித் தோம்? முன்பெல்லாம் ஒருவர் கூட இந்து இல்லை. இவர்கள் வந்து நியமித்து விட்டார்கள் என்கிற குற்றச்சாட்டு இவர்கள் வைக்கிறார்கள் ஒன்றும் தெரியாமல் மக்களை மூடர்கள் என்று நினைத்து கொண்டு பிதற்றுகின்றார்கள். இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சில நேரங்களில் சில உண்மைகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.

புதிதாக வழக்கறிஞர்களை நியமிக் கும் பொழுது அவர்களுடைய தன்மை அறிந்து நியமனம் செய்கிறோம். பழைய ஆட்களில் யாரெல்லாம் தவறான நபர்கள் என்று தெரிகிறதோ, சாட்சிரீதி யாக யார் இருந்தாலும் நீக்கி விடுகி றோம். லட்சுமி நாராயணனை நாம் எப்படி நியமனம் செய்கிறோம் என்றால், வக்ஃபு வாரியத்திற்கு விசாரணைக்கு வரும் போது அவருடைய வாதத் திறமை விவாதத்தினுடைய தன்மை களை முழுமையாக கிரகித்து கொண்டு தான் நியமித்தோம். பரங்கிபேட்டையில் உள்ள ஒரு சொத்து வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நமக்கு பாதகமாக தீர்ப்பு வந்து, அந்த சொத்து அவர்களுடையது என்று தீர்ப்பு வந்து விட்டது. உடனே வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞர் ஜின்னா அவர்களை, இடைக்கால தடைவாங்க சொன்னோம். தடை வாங்கி விட்டு என்னிடத்தில் சொன்னார், ''அண்ணன், நான் என்கின்ற முறையில் இடைகால தடை வாங்கி விட்டேன். ஆனால் வழக்கு பலகீனமாக இருக்கிறது என்றார். உடனே சம்பந்தப்பட்ட வக்ஃபுக்குரியவரை கூப்பிட்டு நாங்கள் சொன்னோம். தாங்கள் ஏதாவது வழக்கறிஞர் வைக்க வேண்டுமானால் லட்சுமி நாராயணனை வையுங்கள் என்று கூறினோம்.

லட்சுமி நாராயணன் எனக்கு பழக்கமெல்லாம் கிடையாது. லட்சுமி நாராயணன் வாரியத்திற்கு வந்து இரண்டு முறை வாதம் புரிந்து உள்ளார். அப்ப தான் லட்சுமி நாராயணன் பற்றிய செய்திகளை சேகரிக்கிறோம். லட்சுமி நாராயணன், பாட்டன், தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அவர் குடும்பமே வழக்கறிஞர்கள் ஆவர். தாத்தா வக்ஃபு வாரியத்தில் வழக்கறி ஞராக இருந்துள்ளார் இந்திய துணைக் கண்டத்தில் முதன்மையாக உள்ளார். பெங்களூர் சட்டக் கல்லூரியில் தான் படித்துள்ளார். அது மட்டுமல்ல கோல்டு மெடலிஸ்ட்.

ஒரு முறை ஒரு சிறிய வழக்கு, அந்த வழக்குக்காக வாதிட வருகிறார். அந்த ஒரு வழக்கு ஒரே தன்மையுடைய இரு வழக்கு, இரு தரப்பினர்கள் வருகிறார்கள். ஒரு தரப்பினர் வழக்கு விசாரிக்கப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்து விடுகிறோம்.

லட்சுமி நாராயணன் மற்றொரு வழக்குக்காக வருகிறார். ஒன்றரை மணி நேரம் அதற்காக வாதிட்டார். 1920, 1950, 1970 பல்வேறு பட்ட கல்கத்தா நீதி மன்றத்தில் சொல்லப்பட்ட வக்ஃபு சட்டங் கள் திருவாரூரில் நடந்த வழக்குகள் மதுரையில் நடந்த வழக்குகளை தன்னு டைய விரல் நுனியில் வைத்து கொண்டு அதற்குரிய நகல்களை எடுத்துத் தந்து வாதிட்டார். நான் மட்டும் அல்ல அங்கு இருக்கக் கூடிய வாரிய உறுப்பினர்கள் அனைவரும் அவருடைய வாதத்திற மையை பாராட்டினார்கள். இது மாதிரி யான வழக்கறிஞர்கள் நமக்கு வேண்டும் என்று கூறினார்கள். அதன் அடிப்படை யில் தான் அவரிடத்தில் நாம் ஒரு ஆளை அனுப்பி ''நீங்கள் வருவீர்களா?'' என்று கேட்டோம்.

வக்பு வாரிய வழக்கறிஞராக இருந்தால் என்ன கிடைக்கும்? வக்பு வாரிய வழக்கறிஞர் என்கிற தகுதி கிடைக்குமே தவிர... பணம் கிடைக்காது. ஒரு வழக்குக்கு அங்கு 15 ஆயிரம் 20 ஆயிரம் என்று வாங்குபவர். வாரியத்தில் நாம் எவ்வளவு கொடுப்போம் 400, 500 ரூபாய் தான் கொடுப்போம் அரசு என்ன நிர்ணயித்து இருக்கிறதோ அரசு என்ன கொடுக்கின்றதோ அதை தான் நாம் கொடுப்போம் அது கூட மிகவும் குறைவாக உள்ளது, அதி கரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.


இந்த புத்திசாலி (?) தமுமுகவில் இருந்து திருடி சென்ற சொத்துகளுக்காக வழக்கு போட்டாரே எந்த முஸ்லிம் வழக்கறிஞரை வைத்து போட்டார்? முஸ்லிம்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற இயக்கம் என்று சொல்கிற ஒரு அமைப் பைச் சேர்ந்த நீ, ஒரு முஸ்லிம் வழக்கறி ஞரை அல்லவா வைத்திருக்க வேண்டும்?



அது மட்டும் அல்ல ஒரு சிறு சம்பவம் பின்னத்தூரில் ஜமாஅத், குடிகாரர்களை வைத்துக் கொண்டு சில பிரச்சனை செய்தார்கள் அப்போது எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் அந்த புத்திசாலியிடத்தில் போய் ''என்ன செய்ய லாம்?'' என்று கேட்க அதற்கு அவர் கூறியிருக்கிறார்.



''நீங்கள் இந்து வக்கீல் வைத்தால் மட்டும் பத்தாது; ஆர்.எஸ்.எஸ்.(மெண்டா லிட்டி) யுடையவனாக பார்த்து வை; அப்போது தான், ஒரு வெறியுடன் அழிக்க வேண்டுமென்று வேலை செய்வான்'' என்று கூறியிருக்கிறார்.




இவர் தான் இஸ்லாத்திற்காக உழைக்க வந்தி ருக்க கூடிய ''நவீன மிர்ஸாகுலாம்'' என்று கூறிக்கொள்கிறார். இப்படி கூறுகிறார்களே அவர் கூட நீங்கள் இருந்தீர்களே என்று கேட்கலாம். அவரோடு அந்த சம்பாசணை யில் இருந்தவர் சாட்சியாக அல்லாஹ் மீது ஆணையாக நான் சொல்கிறேன். நீ வைக்கிறவனை ஆர்.எஸ்.எஸ். காரனா பார்த்து வை அதுவும் வெறி புடிச்ச இந்துத் துவா காரனக பார்த்து வை அப்பத்தான் அவர்களை அழிக்க முடியுமா?

நாம் வந்த பிறகு இவர் ஒருவரை தான் நியமித்துள்ளோம் அதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்திலும் சரி மதுரையிலும் சரி மற்றபகுதிகளிலும் சரி அதிகமான வழக்கறிஞர் இருக்கிறார்கள். சென்னையில் ரமேஷ் என்பவர் திருநெல் வேலியில் சுப்பிரமணி, சகாயதாஸ், திருச்சியில் அருள் காந்தி, கண்ணன், மதுரையில் செந்தில், தஞ்சாவூரில் வைத்தியலிங்கம், வேலூரில் வீரராகவன், கடலூரில் பத்மநாதன், சக்கரபாணி, இராமநாதபுரத்தில் அற்புத ராஜ், வெங்கட் ராமன், கோபால் சாமி, கோயம்புத்தூரில் பிரபு, விஜய், சேலத்தில் ரங்கநாதன், ஜெகன் நாதன், காஞ்சிபுரத்தில் சக்கர பாணி செங்கல்பட்டு ஜெகன்நாதன் இவர்கள் எல்லாம் இருக்கின்ற முஸ்லிம் அல்லாத வழக்கறிஞர்கள், இப்போதும் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடவே செய்தி தருகிறேன். இதற்கும் சேர்த்தே ஆர்ப்பாட்டம் செய்ய சொல்லுங்கள்.
இவர்கள் எல்லாம் நான் வந்து நியமித்தவர்கள் அல்லர் இதற்கு முன்பே போடப்பட்டது. நாம் சில வழக்கறிஞரை தேடிக் கண்டு பிடித்து கொண்டு வந்து வைத்திருப்பதற்கு ஒரு சில சிக்கலான வழக்குகளை பார்ப்பதற்காக வைத்திருக்கி றோம்.


புத்திசாலியே (?) நீ முற்றுகை, ஆர்ப்பாட்டம் பண்ணு மக்கள் உன்னை காரித்துப்புகிறார்கள். இவர் செய்யக்கூடிய குறிப்பாக... இந்த மாதிரியான விஷயங்களில் கூட பாக்கர் சில நேரங்களில் வக்பு பற்றியும் மற்றதை பற்றியும் காரசாரமாக பேசுகிறார் என்று என்னிடத்தில் சொல் கிறார்கள். சிரித்துக் கொள்வேன். என்ன அவர் உள்ளார்த்தமா என்பது எனக்குத் தெரியும். இருக்கக் கூடிய இடத்தில் தன்னுடைய எஜமானன் மெச்சி கொள்ள வேண்டும் என்பதற்காக சில விஷயங் களை செய்து அது மாதிரியான அங்கு நடக்கக்கூடிய பொம்மலாட்டம்.


பல இடங்களில் ''ஏய் அந்த ஆள் நல்லாதான் செய்கிறான். அந்த ஆளு வக்ஃபு வாரியத் தலைவரான பிறகு தான் வக்பு வாரியம் நல்லா இருக்கிறது'' என்று பாக்கர் பல இடங்களில் சொல்வது சொல்லிக் கொண்டிருப்பது எனக்கு தெரியும். அவர் மேடையில் பேசுவதற்கும் அவர் உள்ள ரீதியாக இருப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. அவர் மனம் வெதும்பிக் கொண்டு வேதனை யோடு அந்த விஷயத்தை சொல்ல வேண்டும். ஏன் என்றால் சில விஷயங் கள் காப்பற்றப்பட வேண்டும். எனவே பாக்கர் சொல்வதை நீங்கள் (மக்கள்) எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆனாலும் அவர் உள்ளத்திற்கு தெரியும் முன்பெல்லாம் நானும் அவரும் பேசி கொள்வோம். போன் செய்து பேசுவேன்; இன்றைக்கும் பெருநாள் வந்தால் வாழ்த்து செய்தி (எஸ்.எம்.எஸ்) அனுப்புவேன். முதலில் வருவார் இப்ப வருவதில்லை. நட்புரீதி யாக வேறு நானும் பாக்கரும் 38 நாள் ஒன்றாக சிறையில் இருந்திருக்கி றோம். ஒரே அறையில் இருந்தோம். என்னைப் பற்றி முழுமை யாக அவருக்கும் பாக்கரை பற்றி முழுமையாக எனக்கும் தெரியும். நபி(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் 3 நாள்கள் நீங்கள் பிரயாணித்தீர்கள் என்று சொன்னால் அவர்களை பற்றி தெரியும் 38 நாள் நாங்கள் ஒன்றாக இருந்திருக்கி றோம். பாக்கருன்னா யாருன்னு எனக்கு தெரியும். ஹைதர் யார் என்று பாக்கருக்கு தெரியும். எனக்கு என்ன வருத்தம் என்றால் தன்னுடைய உரத்த குரலில் பேசக் கூடியவர் பல நேரங்களில் நிர்வாக குரலில் நியாயமான விஷயங்களை பேசுவதில் ஒரு ஆளாக இருந்தவர் பழைய நண்பர் பாக்கர் இன்றைக்கு இல்லை என்கின்ற வருத்தம் இன்றைக் கும் உண்டு. மனிதருக்கு சில நேரங்களில் தேவைகள் அதிகமாகி விடுகிற நேரங்களில் இப்படியெல்லாம் தவறு நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நாம் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒருவர் குற்றச்சாட்டுகள் வைப்பதி னால் அதற்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்கின்ற நிலையில் நாம் இல்லை. நம்முடைய வேலைகள் அதிகம் என்னுடைய சுயவேலைகள் செய்வதில் கூட நான் முடங்கிக் கிடக்கின் றேன். சில விஷயங்களை முதன்மை செயலாளரிடம் ''இது ஏன் இப்படி உள்ளது பழையது இப்படி நடந்துள்ளதாமே'' என்றால் ''என்ன சார் எனக்கு தெரிய வில்லை உங்களுக்கு செய்தி தெரிகிறது'' என்று திகைக்கின்ற மதிரியாக தான் வைத்துள்ளோம். இன்றைக்கு வக்ஃபு வாரியத்தில் பழைய நிலை இல்லை. ஆள்கள் குறைவாக இருக்கிறார்கள். அதற்கு அரசிடம் அனுமதியை கேட்டு உள்ளோம். வேலை வாய்ப்பு அலுவலகத் தில் கேட்டு எட்டு மாதங்கள் ஆகிவிட் டன. பல நினைவூட்டு கடிதம் அனுப்பி விட்டோம். இன்னும் அவர்கள் அந்த பட்டியலை தரவில்லை. ஏன் என்றால் நாம் முஸ்லிம்கள் மட்டும் தான் வேண்டும் என்று கேட்டு உள்ளோம் வக்ஃபு வாரியத்தில் இது மாதிரியான பணிகளில் தான் பார்க்க முடியும். வக்ஃபு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் அல்லாதவர் இருக்கி றார்கள். ஒருவர் இறந்து விட்டார். சந்திரன் என்பவர் ஒருவர் இன்றும் இருக்கிறார். வந்த உடனே அவரை டிஸ்மிஸ் பண்ணி அனுப்பிவிட முடியுமா? அது மட்டும் அல்ல பணியில் இருக்கும் போது ஒருவர் இறந்து விட்டால். கருணை அடிப்படை யில் வேலை கொடுக்க வேண்டும். அதே போல் முஸ்லிம் ஒருவரும் பணியில் இருக்கும் போது இறந்துள்ளார். கருணை அடிப்படையில் அவருக்கு வேலை கொடுத்து உள்ளோம்.

நான் வந்த பிறகு கருணை அடிப் படையில் ஒரு இந்து பெண்ணுக்கும் வேலை கொடுத்து இருக்கிறேன். அதுக்கும் சேர்த்து போராட்டம் நடத்த நியாயம் அநியாயம் பார்க்க வேண்டாமா?

இனத்தின் பெயரால் அவருக்கு ஏன் அநியாயம் இழைத்தாய்? என்று கேட்டால் அல்லாஹ்விடத்தில் நான் அல்லவா பதில் சொல்ல வேண்டும். உனக்கு அது பற்றி ஒன்றும் கிடையாது. அல்லாஹ் வுடைய நம்பிக்கை இருக்கின்றவனா இல்லையா என்பது எங்களுக்கு தான் தெரியும் எங்களை பற்றி நீ நன்றாக பேசு, திட்டு; என்ன வேண்டும் என்றாலும் பேசு, எதை பற்றியும் நாம் கவலைப்பட போவதில்லை. நபி(ஸல்) அவர்கள் சொல் கிறார்கள் திட்டுகின்றவன் என்ன திட்டி னாலும் திட்டுபவனைத்தான் வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள். அதனால் புத்திசாலியே(?) எல்லாத்தையும் நீயே வாங்கிக்கட்டிக் கொள் பிரச்சனை இல்லை.



நன்றி : தமுமுக இணையத் தளம்

Sunday, June 08, 2008

அமீரகம் செல்ல விசிட் விசா கட்டணம் உயர்கிறது


அமீரகம் செல்ல விசிட் விசா கட்டணம் உயர்கிறது ஐக்கிய அரபு அமீரகம் செல்வதற்கான விசிட் விசா கட்டணம் 200 திர்ஹத்திலிருந்து 500 திர்ஹம் ஆக உயர்கிறது. இக்கட்டண உயர்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2008 முதல் உயர இருக்கிறது. இம்முடிவு சமீபத்தில் நடைபெற்ற அமீரக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

மேலும் விசிட் விசா பெற பதினாறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் கல்வி, சுற்றுலா, மருத்துவம், கண்காட்சி உள்ளிட்ட பதினாறு வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கான விசிட் விசா கட்டணம் 500 திர்ஹம். இவ்விசாவினை புதுப்பிக்க முடியாது.

90 நாட்களுக்கான விசிட் விசா 1000 திர்ஹம் கட்டணமாகும்.
மாணவருக்கான விசிட் விசா 1000 திர்ஹம். இவர் அமீரகத்தில் உள்ள ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் 1000 திர்ஹம் டெபாசிட் செலுத்த வேண்டும். கருத்தரங்கில் பங்கேற்போருக்கான விசா 100 திர்ஹம். ஒரு மாதத்திற்கான சுற்றுலா விசா திர்ஹம் 100. இதர கட்டண விபரம் வருமாறு :

VISA FEES

Type of visa............................................................................Fees in Dhs

Short Entry (visit) Visa..........................................................500 (1 month)
Long Entry (visit) Visa ..........................................................1,000 (3 months)
Multiple Entry Visa.................................................................2,000
Entry Visa for Study...............................................................1,000
Renewal of Study Visa............................. ............................. 500
Entry Visa for Medical Treatment...................................... .1,000
Renewal of Medical Treatment Visa..... .. ............................500
Entry Visa for Expos and Conferences.................................100
Tourism Entry Visa ................................................................100
Renewal of Tourism Visa .......................................................500
Entry Visa for GCC State Residents ....................................100
Renewal of GCC State Resident's Visa................................. 500
Entry Visa for GCC State Resident's Companions ............100
Renewal of GCC State Residents Companions' Visa .........200
Mission Entry Visa 200Transit Entry Visa... ....................100
லால்பேட்டை இனைய தளம்

காயிதே மில்லத் பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க சிந்திப்பீர்!! ஓர் இறை! ஓர் குலம்!!

காயிதே மில்லத் பெயரைக் களங்கப்படுத்தாதீர்கள்
அவர் படம் அல்ல, பாடம்.


கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கள்

WWW.IDMK.ORG

காயிதே மில்லத் என்கிற பெயர் தனி மனித பெயர் அல்ல. அது ஒரு சரித்திரம். விடுதலை வரலாற்றோடும், இந்திய அரசியலோடும், முஸ்லிம்களோடும், பின்னிப் பினைந்த பெயர்தான் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். காயிதே மில்லத் ஒரு விளம்பரப் பொருள் அல்ல. இஸ்லாமிய சமூகத்தின் அரசியல் விடியலுக்கு வித்திட்டவர். உன் வீடு தேடி ஓட்டுக்காகவும், சீட்டுக்காகவும் அரசியல்வாதிகள் வந்ததுண்டு, இன்றோ உன் கல்லறையை நோக்கி தன்னை விளம்பரப் படுத்தி ஓட்டு வாங்க சிலர் வருகிறார்கள்.

அரசியல் ஒரு சாக்கடை அந்த சாக்கடையை சந்தனக் காடாக மாற்றிய பங்கு உமக்கு மட்டும் உண்டு. ஒரு மனிதர் ஒரே நேரத்தில் அரசியல்வாதியாகவும், மனிதனாகவும் இருக்க முடியாது என்ற கூற்றை உடைத்து எரிந்த மாமனிதர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். பேரறிஞர் அண்ணா அவர்கள் கண்ணியம் என்ற வார்த்தை இந்த மண்ணில் இருக்கும் வரை காயிதே மில்லத் புகழ் இருக்கும் என்றார். இன்று அவரைப் பின்பற்றுவதாக போலி வேஷம் போடுபவர்கள் அவர் கட்டிக் காத்த கண்ணியத்தைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். பதவி என்பதே ஒரு கண்ணியம் அந்த கண்ணியத்தை இழந்து அற்ப எம்.பி. பதவியை பெறுவதற்கு தன்னை நிறம் மாற்றிக்கொண்டு தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராகி பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினராக கையெழுத்து இடுகிறார். அய்யோ பாவம்!! தாய்ச்சபை தடுமாறி, உருமாறி, நிறம்மாறி நிற்கிறது. வரலாற்று பேரியக்கம் வத்தலாய் வாடி வதங்கி தொத்தலாய் நிற்கிறது. ஆம்! மரணித்த பிறகு மணி விழாவா? மரணித்த இதயங்களால் மாற்றங்களைக் கொண்டு வரமுடியாது. இளைஞர்களே சிந்தியுங்கள்.

தி.மு.க.வின் கொறடா எப்பொழுது எதைப் பற்றி பேச அனுமதி அளிக்கிறாரோ அப்பொழுதுதான் பேச முடியும். இவர் எப்படி சமுதாயத்தின் குரலை ஒலிக்க முடியும்? திராவிட கட்சிகள் காயிதே மில்லத் கண்ட முஸ்லிம் லீக்கையும், முஸ்லிம் லீக்கை குறை சொல்லி எழுந்த இயக்கங்களையும் கற்கண்டாய் நினைத்து, கடவாய் பற்களில் போட்டு மென்று விழுங்கி ஏப்பம் விட்டு விட்டன. காயிதே மில்லத்தின் ஒற்றை அடையாளத்தை அழித்து விட்டனர். தயவு செய்து காயிதே மில்லத்தின் நினைவு நாளில் அவர் பெயரை களங்கப்படுத்தாதீர்கள். அவர் பெயர் கூட உங்களை காரி உமிழும். காயிதே மில்லத் வெறும் படம் அல்ல. அவர் ஒரு பாடம். அந்தப் பாடத்தை மறுபடியும் படியுங்கள். அவர் பிறந்த நாளில் சமுதாயச் சிந்தனைவாதிகளாக மாறுங்கள். சிந்திப்பவர்களுக்கு மட்டுமே.


இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369, 9443021050

Qaid-e-Millat M. Muhammad Ismail Saheb

Saturday, June 07, 2008

இந்திய குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் - JUNIOR VIKATAN ARTICLE





நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கம் பல செயல்கள் பலரால் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால், நாம் செய்யத் தவறிய அல்லது தவறாகச் செய்யும் ஒரு செயல் பலருடைய கண்டனத்துக்கு உள்ளாகிறது. குhல்பந்து விளையாட்டில் எதிரணியினர் போட மயலும் எத்தனையோ 'கோல்'களை ஒரு கீப்பர் எடுத்திருக்கலாம். ஆனால், அவர் தடுக்கத் தவறியதால் விழுந்த 'கோல்' மட்டுமே நம் நினைவில் வகிநிறது. ஆதைப் போலவே பயங்கரவாதத் தாக்குதல்களை காவல்துறை பலமுறை தடுத்திருக்கலாம். உளவுத்துறை மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட இருந்த பயங்கர வாதிகளைக் கைது செய்திருக்கக்கூடும். ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவுடன் அரசு தடுக்க தவறிவிட்டது என்ற எண்ணமே நம் அனைவருடைய மனதிலும் நிறைந்துவிடுகிறது.

இந்த எண்ணம் சாதாரணமாக மக்கள் மனதில் எழுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் இதுபோன்ற துயரமான நிகழ்வுகளைகூட அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதைப் பார்க்கும்போது மனதில் வேதனை எழுவதை தவிர்க்க முடிவிதில்லை.

கடந்த மே மாதம் 13-ம் நாள் ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் குறிந்து பாரதிய ஜனதா கட்சி எழுப்பிய கண்டனங்களில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பலவீனமான அரசு என்றும், சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியைக் கருத்தில்கொண்டு பயங்கரவாதிகளுக்கு சதிராக உறுதியாக நடவடிக்கை எடுப்பதற்கு மத்திய அரசு தயங்குகிறது என்றும் மத்திய அரசு மீது குற்ற்ச்சாட்டுகள் எழுந்தன. முணி;டும் மீண்டும் ஒரே புகாரைச் சொல்லிக் கொண்டிருந்தால் மக்கள் அதை உண்மையென நம்பிவிடுவார்கள் என்று பீ.ஜெ.பி கருதுகிறது போலிருக்கிறது. போடா சட்டம் அமலில் இருந்த போதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தன என்பதை இந்திய மக்கள் மறந்து பொயிருப்பார்கள் என்று அந்தக் கட்சித் தலைமை நினைக்கக்கூடும். இப்பொது கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பீ.ஜெ.பி. பெற்றிருக்கும் நிலையைப் பார்க்கும்போது அந்தக் குற்றச்சாட்டும்கூட கர்நாடக மக்கள் மத்தியல் எதிரொலித்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இந்தியவில் நடக்கும் பயங்கரவாத செயல்களில் அப்பாவி மக்கள் குறி வைக்கப்படுகிறார்கள் நம்முடைய மக்கள் கோயில்களிலும் மசூதிகளிலும் இறக்கிறார்கள். பேருந்துகளிலும் தொடர்வண்டிகளிலும் பயணம் செய்து கொண்டிலுக்கும்போதே மடிகிறார்கள். கடைவீதிகளிலும் பொழுதுபோக்குப் பூங்காகளிலும் சிதறி சின்னா பின்னமாகிறார்கள். எதற்கா சாகிறோம் என்று அறியக்கூட அவகாசம் இல்லாமல் அப்பாவிகளுடைய உயிர் பறிக்கப்பட்டு விடுகிறது. இவர்களில் பலர் அவர்களுடைய குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபராக இருக்கலாம். இவர்களுடைய மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பங்கள் பலவிதமான துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகலாம். ஆனால், இவற்றைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் சிலர் இந்தத் துயரங்களில் அரசியல் ஆதாயம் தேட முனைகிறார்கள்.



ஒவ்வொரு குண்டு வெடிப்புக்கம் ஏதாவது ஓர் அமைப்புகாரணம் என்ற முடிவுக்கு வருகிறோம். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று யாராவது சிலர் கைது செய்யப்படுகிறார்கள்.
மோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இருந்தும், அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி என்றால், முதலில் கைது செய்யப்பட்டவர்கள் அல்லது கொல்லல்ட்டவர்கள் தவிர, புதிதுபுதிதாக பயங்கரவாத இயக்கங்களில் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருளாகிறது அல்லது கைது செய்யப்பட்டவர்களோ,கொல்லப்பட்டவர்களோ முந்தைய சம்பவத்துடன் தொடர்பில்லாதவர்கள் என்று அர்த்தமாகிறது.



இந்த பயங்கரவாத நிகழ்வுகளால் அரசியல் ஆதாயம் யாருக்குக் கிடைக்கிறது? இந்த சம்பவங்கள் நடைபெறவேண்டிய நாளைத் தீர்மானிப்பது யார்? அதில் ஏதேனும் அரசியல் இருக்கிறதா? ஒவ்வொரு பயங்கராவாத நிகழ்வும் வேறு ஏதாவது சம்பவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறதா? இவை எதுவும் அர்த்தம் இல்லாத கேள்விகளாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒன்றிரண்டு கேள்விகளுக்கான விடைகளில் ஏதேனும் உண்மை ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த வினாக்கள் பலருடைய சிந்தனையில் எழுந்திருக்கக்கூடும். இருந்தும், தொடர்ந்து அவற்றுக்கான விடை தேடும் பணியில் ஒருவர் ஈடுபட முடியாமல் அவருடைய அன்றாடப் பணிகள் அவரை ஆக்கிரமித்திருக்கலாம்.

அண்மையில் தற்செயலாக இணையதளத்தில் படிக்க நேர்ந்த ஒரு ஆங்கிலக்கட்டுரையில் இடம் பெற்றிருந்த சில தகவல்கள் இந்தக் கேள்விகளில் அர்த்தம் இல்லாமல் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தின.

சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் சர்வதேச பின்னணி இருக்கக்கூடும். தேர்தல் மூலம் பாக்கிஸ்தானில் அமைந்த அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மே 20-22 தேதிகளில் சந்திக்க இருந்தார். இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவு ஏற்பட்டால் யாருக்கு இழப்பு ஏற்படுமோ, அவர்களே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும்.





1948ம் வருடம் மே 14 அன்று இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி உலகமெங்கும் இஸ்லாமியர்களும் பாலஸ்தீன ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அந்த செய்தியபை; பின்னுக்குத் தள்ளி 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற செய்தி உலக ஊடகங்களில் இடம் பெறும் வகையில் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்திருக்கின்றன. லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்க ஜூலை 11, 2006 அன்று மும்பையில் தொடர்வண்டியில் குண்டுகள் வெடித்தன.




மேலும் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தலுக்கான வாக்கப்பதிவு நடக்க இருந்தது இதேபோல, குஜராத் தேர்தல் வாக்கப் பதிவுக்கு இரு மாதங்களுக்கு முன்தாக அஷhதாம் கோயிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தனர். 2005, மே 2ம் நாள் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்ததையொட்டி மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இந்தியாவில் நடந்தன. அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு வாரணாசியில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது.



இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் குறித்த எதிர்ப்பு அதிகமாக இருந்த கடந்த ஆண்டில் ஹைதராபாத் பூங்காவில் குண்டுகள் வெடித்தன என்று அந்தக் கட்டுரை பட்டியலிடுகிறது.


அமெரிக்காவும் இஸ்ரேலும் பல நாடுகளில் தங்களுடைய பங்காளிகளுக்கு அரசியல் அதாயம் கிடைக்கும் செயல்களைச் செய்வார்கள் என்று அரசியல் தளத்தில் நிலவும் கருத்துக்கு வலுவூட்டுகிற வகையில் அந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் இருந்தது.

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையா அல்லது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்குதம் முடிச்சுப் போடுவது போல் இட்டுக்கட்டி சொல்லப்படும் அரசியல் வாதங்களா என்பதை நம்மைப்போல சாதாரண மக்களால் அறிந்துகொள்ள முடியாது. அதிகாரம் நிறைந்த ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளும்தான் இதற்கான முன் முயற்சியை எடுக்கவேண்டும். அவர்களால்கூட கண்டுபிடித்து நிரூபிக்க முடியாத வகையில் செயல்படும் வல்லமை சர்வதேச பயங்காரவாதிகளுக்கு ஒருவேளை இருக்கக்கூடும். அந்தந்தப் பகுதியில் இருக்கும் ஏதாவது ஒரு இயக்கத்தின் மூலம் தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் வலிமை அவர்களுக்கு இருக்கலாம்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் நடந்த பல பயங்கரவாத நிகழ்வுகள் குறித்து முழுமையான ஆய்வு நடத்தி விசாரிப்பதற்கு சுதந்திரமான ஓர் ஆணையத்தை இந்திய அரசு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதாக அறிய முடிகிறது. எப்பொதும் சொல்லப்படும் இந்து-முஸ்லிம், இந்திய – பாக்கிஸ்தான் போன்ற முரண்பாடுகளையும் தாண்டி வேறு யாருடைய கரங்களாவது இந்திய மக்களை பலிவாங்கும் பயங்கரவாதச் செயல்களில் இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர வேண்டும்.

நன்றி : ஜீனியர் விகடன்

http://www.vikatan.com/jv/2008/jun/01062008/jv0503.asp

Received by Mail

223 ஆண்டுக்கு முன் இஸ்லாமிய மன்னறால் உறுவாகிய சமத்துவபுரம்...

சரித்தில் சாதனை செய்த சன்மார்கத் தொன்டர்கள் தோன்றிய லால்பேட்டையை இங்கே அறிமுகம் செய்கிறோம். அல்லாஹ்வின் நாமம் கூறி அல் ஹம்தின் புகழும் கூறி அழைக்கிறோம் வாருங்கள் படித்தறிவோம்.

நவாப்புகளின் பொற்கால ஆட்சியில் தம் சிறந்த முத்திரை பதித்த வித்தகர்களாம் ஆற்காட்டு நவாபுகளின் ஆட்சித்தொடரில் சிறந்த ஆட்சி அமைத்து மக்களின் உணர்வுகளை உரமாய், விழுதாய் எடுத்து பற்பல சிறந்த சேவைகளை செய்த ஜனாப் ‘அன்வருத்தீன், அவர்களின் அமைச்சரவையில் “லால்கான்,,எனும் பெறற்கரிய செல்வ மகனின் கடைகண் பார்வையில் பட்டதுதான் இந்த லால்பேட்டையாகும் இவ்வூரை நிர்மானித்த பெருமை இவரையே சாரும்.

மிகச்சிலரே சொற்பமாய் எங்கெங்கோ வாழ்ந்து வந்த சின்னஞ்சிறு கிராமமாய் இவ்வூர் இருந்தது என்ரும், லால்கான் வரவுக்கு முன்னாள் ஊரேஇல்லை என்றும் இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் லால்கான் வரவுக்கு பின்புதான் ஊரின் வளர்ச்சி களை கட்டத்துவங்கி உள்ளது என்பதைபுரிய முடிகிறது.

அமைச்சர் லால்கான் இப்பகுதியில் தங்கி சேவையாற்றியுள்ளார். அவர் தங்கியிருந்த பகுதிக்கு “கான் இருப்பு,, எனும் சொல் வழங்கிவந்துள்ளது. அது இன்ரும் “காங்கிருப்பு,, என அழைக்கப்படுகிறது. இன்னும் அப்பகுதி பாசனத்திற்கென அவர் வீராணத்திலிருந்து கொண்டுவந்துள்ள வாய்காலுக்குகூட “கான் வாய்கால்,, என இன்று வரை அழைக்கப்படுகிறது.

இப்படியாய் தன் நிர்வாகத்தை இங்கே துவங்கிய லால்கான் தன் குற்றேவலர்களை ஒருபகுதியில் தங்கவைத்துள்ளார். இன்ரு குற்றேவலர்-கொத்தவால் தெரு,என அழைக்கப்படுகிறது. அத்துடன் இதை ஒரு பேரூராக மாற்றியமைக்க முனைந்த லால்கான் அவர்கள் ஜாமிஆ மஸ்ஜிதை முதன் முதலாக் சிறிய அளவில் நிறுவி அதனை சுற்றி வடக்குதெரு,தெற்குதெரு,கீழத்தெரு,மேலத்தெருவிலும் முஸ்லிம்களை கொண்டுவந்து குடியமர்த்தினார்,

இதனுடன் கொற்றேவலர்-கொத்தவால்தெருவும் இணைந்திருந்தது. அவர்களின் இஸ்லாமிய வாழ்வு இங்கே தழைக்க ஆரம்பித்தது. இப்பகுதிக்கு வித்திட்டு வளர வைத்த அந்த மாபெரும் மனிதரான லால்கானின் பெயரே இன்றுவரை நின்று நிலவுகிறது.

அத்துடன் பாகு பாடற்ற இஸ்லாமிய உணர்வுள்ள லால்கான் அவர்கள் வீராணக்கரை யோரம் இன்று, சத்திரம்,சாவடி என அழைக்கப்படுகின்ற ஒரு சத்திரம் கட்டி அதன் அருகே கோவில் ஒன்ரும் அமைத்து, மேலும் ஒரு குளமும் தோண்டியுள்ளார், அந்த குளம் திருக்குளம் என்று இன்று வரை கூறப்படுகிறது, அதன் நாற்புறத்து கரையிலும் எட்டு ஜாதி மக்களை லால்கான் குடியமர்த்தினார்,

இப்படி ஜாமி ஆ மஸ்ஜிதின் பகுதியில் முஸ்லீம் களும் வீராணப்பகுதியில் ஹிந்துக்களும் ஒரே சம காலத்தில் குடியமர்த்தப்பட்டு அவர்களின் வாழ்வுக்கான தேவைகளும் லால்கானால் நிவர்த்திக்கப்பட்டு வளர ஆரம்பித்த இந்த லால்பேட்டை இன்று ஆல் போல் தழைத்து அருகு போல் வேறூன்றி தன்படர்ந்த கொப்புக் கிளைகளை நாற் புறமும் விரித்து ஒரு நகர பேரூராய் வளர்ந்துள்ளது அல் ஹம்துலில்லஹ்.

மத நல்லிணக்கத்தின் மறு பெயருக்கு உதாரணமாய் விளங்கி வரும் இந்த லால்பேட்டை 1775 ம் ஆண்டுக்கு முன்பு லால்கான் உருவாக்கிய சமத்துவபுரம்.


லால்பேட்டை இனைய தளம்

'ஹாங்காங், சீன இணையங்கள் ஆபத்தானவை'

இணையதளங்களை பயன்படுத்தும் போது வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க Anti-virus மென்பொருட்கள் பல இருந்தாலும், அவற்றை அனைவரும் பயன்படுத்துவது இல்லை.

வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களைப் பயன்படுத்தும் பலரும் அதனை அவ்வப்போது மேம்படுத்தாமல் பழைய பதிப்பையே உபயோகித்து வருவதால், வைரஸ் தாக்குதல்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது.

இது இப்படி இருக்க, அதிக ஆபத்தான இணையதளங்கள் எவை என்று மெக்கஃபீ (McAfee) நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த இணையங்கள் முன்னணியில் உள்ளன.

.hk (ஹாங்காங்) மற்றும் .cn (சீனா) என்ற டொமைன் பெயருடைய இணையதளங்கள் முறையே 19.2 மற்றும் 11.8 சதவீதம் ஆபத்தானவை என மெக்கஃபீ கண்டறிந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக .info எனப்படும் தகவல் இணையதளங்களில் 11.7 சதவீதம் ஆபத்தானவை எனத் தெரியவந்துள்ளது.இதில் சீனா மற்றும் ஹாங்காங் இணையங்களை பயன்படுத்துபவர்களுக்கு சம்பந்தப்பட்ட மொழி தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் .info எனப்படும் தகவல் இணையதளங்களுக்கு மொழி ஒரு தடையாக இல்லாததால், இதனை பலரும் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏராளமான இணைய பார்வையாளர்கள் பாதிக்கப்படுவதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.உலகளவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள .com இணையதளங்களில் 5 சதவீதம் மட்டுமே ஆபத்தானவை என்பது ஆறுதலான விஷயம்.
http://www.lalpet.com

Friday, June 06, 2008

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்


உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

Thursday, June 05, 2008

இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!

கருணாநிதி (அன்கோ) வின் இட ஒதுக்கீடு பித்தலாட்டமும், முஸ்லிம்களின் ஏமாற்றமும்!


30.05.2008 அன்று மீண்டும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறார். முன்பு அறிவித்த இட ஒதுக்கீட்டின் அர்த்தம் என்ன? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆய்வு செய்ய 9 பேர் அடங்கிய ஜனார்த்தன கமிட்டியில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லாதது கருணாநிதியின் சாதனை. கமிட்டியில் கூட இட ஒதுக்கீடு வழங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் கலைஞர் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அம்பாசமுத்திர கமிட்டி அறிக்கையை தூசு தட்டி முஸ்லிம்கள் ஓட்டுக்களை அறுவடை செய்ய அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது தான் சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு.

6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கமிட்டியை தள்ளுபடி செய்து, இன்றைய முஸ்லிம்களின் மக்கள் தொகை, கல்வி, பொருளாதாரம், இட ஒதுக்கீடு நிலையை ஆய்வு செய்து வழங்க வேண்டும் என்று ஆந்திர மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் 4 சதவீதம் முறையாக அங்கு கொடுக்கப்பட்டது. (கவனத்தில் கொள்க) 2 லட்சத்து 81 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்பட்டதாக டாக்டர் கலைஞரின் அரசு விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. அதில் சிறுபான்மையினருக்கு 3.5 சதவீதம் என்றால் தலா கிருஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் 10,500 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும். கிடைத்திருப்பதோ 0.5 சதவீதம் கூட இல்லை. மேலும் சில உயர் பணியிடங்களுக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிப்பதற்கு கூட தகுதி இல்லாத நிலை உருவாகி விட்டது.

சிறுபான்மையினர் பாதுகாவலர், சமூக நீதி காத்தவர் என்று ஏற்றி போற்றி பாடப்படும் கருணாநிதியோ அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு என்று சாக்கு போக்கு சொல்கிறார். சட்ட மன்றத்தில் சிறுபான்மை சமூகத்தினர் இட ஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருக்கிறது என்று இரட்டை நாக்கை சுழற்றினார். அரசு அதிகாரிகளோ! கிருஸ்துவர்கள் 14வது இடத்திலும், முஸ்லிம்கள் 28வது இடத்திலும் (ரோஸ்ட்டர்) சுழற்சி முறையில் இருக்கிறார்கள், அரசு ஆணைப்படி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முழுமையாக கிடைக்க வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகள் நீங்கள் பொருத்து இருக்க வேண்டும் என்கின்றனர். அப்படி பொறுத்திருந்தால் வயது வரம்பு கடந்து பணிக்கு சேரும் தகுதியை நம் சமுதாய இளைஞர்கள் இழந்து விடுவார்கள். இந்த இட ஒதுக்கீட்டால் எந்த நம்மையும் இல்லாமல் போய்விட்டது. முன்பு 3.2 சதவீத இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடிம், சட்ட சிக்கலும் இல்லாமல் முஸ்லிம்கள் சில இடங்களைப் பெற்றார்கள். அந்த நிலை இன்று கருணாநிதி அரசால் தட்டிப் பறிக்கப்பட்டு விட்டது.

அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியும், அன்பழகனும், நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இட ஒதுக்கீடு குளறுபடிகள் சரி செய்யப்படும் என்றனர். சரி செய்யப்படாத நிலையில் சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்தது. ஒரு தலைமுறையே பாதிக்கின்ற மிகப் பெரும் கொடுமை 3.5 சதவீத உள் இட ஒதுக்கீடு. எங்களின் விகிதாச்சார அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், சட்ட சிக்கல்கள், குளறுபடிகள் நீக்கப்பட வேண்டும் என்று பல்வேறு கிருஸ்த்துவ, இஸ்லாமிய அமைப்புகளும், இந்திய தேசிய மக்கள் கட்சியும் 30.05.2008 அன்று சென்னையில் மிகப்பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அவசர அவசரமாக கருணாநிதி (அன்கோ) கூடி தமிழக அரசின் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முறையாக மீண்டும் அமல்படுத்தப்படும் என்றனர். இன்று 3 லட்சம் பணி இடங்கள் நிரப்பப்பட்டு விட்டது. முஸ்லிம்களுக்கு அதில் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. இனி முறையாக அமல்படுத்த கலைஞர் அன்கோ ஆணை பிறப்பித்து இருக்கிறது. குதிரை போன பிறகு லாடத்தை தேடும் நிலையில் அரசு ஈடுபட்டு இருக்கிறது. நன்றி பாராட்டி விழா நடத்தியவர்கள், ரகசியமாகச் சென்று துண்டு போட்டு சிறை நிரப்பு போராட்டத்தின் வெற்றி என வெற்று அறிக்கை விட்டவர்கள் இட ஒதுக்கீட்டு துரோகத்தை வரலாற்று சாதனை என்று கூனி குறுகி கூன்பிறையாய் கொக்கரித்தவர்கள், சுனாமியை விட பயங்கரமான ஒரு தலைமுறையையே பாதிக்கும் துரோகத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இதயத்தை இரும்பாகப் பெற்றவர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள். இளைஞர்களே! சிந்தியுங்கள்!!.

தவிட்டைத் தங்கம் என்று சொன்னால் பாராட்டுவதா? குப்பையை குண்டு மல்லி என்று சொன்னால் குதித்து ஆடுவதா? அறிவைத் தொலைத்து விட்டு அறுப்பதற்கு ஆடுகள் என்று தலையை நீட்டுவதா?? மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி சுயநலத்திற்கு சமுதாயத்தை அடகு வைக்கும் தலைவர்களை (மன்னிக்கவும்) தலைவலிகளை, ஆம்! சமுதாய ஏஜென்டுகளை, கடல் செத்த மீன்களை ஒதுக்கி விடுவது போன்று அவர்களை ஒதுக்கி விட்டு அரசியலில் இந்திய தேசிய மக்கள் கட்சியில் ஒற்றுமையை உறுதிப்படுத்தி நம் இட ஒதுக்கீட்டை நாமே தீர்மானிக்க இணைவீர், இன்றே தொடர்பு கொள்வீர்.


இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369

டெல்லி, மும்பையிலிருந்து அடுத்த மாதம் முதல் துபாய்க்கு நேரடி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் தொடங்குகிறது.

துபாய் ஜுன்-04. டெல்லி, மும்பையிலிருந்து அடுத்த மாதம் முதல் துபாய்க்கு நேரடி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் தொடங்குகிறது.

கடந்த ஜனவரி மாதம் வளைகுடா நாடுகளுக்கான தனது சேவையை ஜெட் ஏர்வேஸ் தொடங்கியது. தற்போது குவைத், பஹ்ரைன், மஸ்கட், தோஹா ஆகிய நாடுகளுக்கு ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் மும்பை, தில்லியிலிருந்து துபாய்க்கு நேரடி சேவையை மேற்கொள்ளவுள்ளதாக ஜெட் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் கூறியுள்ளார்.
www.lalpet.com

Wednesday, June 04, 2008

மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்

"மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்' என, அபர்டீன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள ஐந்து பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று அபர்டீன் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
www.lalpet.com

Sunday, June 01, 2008

மியான்மார் புயலில் நாற்பதாயிரம் தமிழர்கள் சாவு!


மியான்மார் புயலில் நாற்பதாயிரம் தமிழர்கள் சாவு!

மியான்மார் நாட்டைத் தாக்கிய "நர்கீஸ்" புயலுக்கு இரண்டு இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். அதில் சுமார் நாற்பதாயிரம் பேர் தமிழர்கள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. அது தவிர சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கின்றனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இது பற்றி தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் பின்வரும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

"நர்கீஸ்" தாக்கியதைத் தொடர்ந்து மியான்மாரில் உள்ள இராணுவ அரசாங்கம் வெளிநாடுகளின் உதவிகளை வேண்டாமென்று மறுத்து வந்தது. ஐநா சபையின் வலியுறுத்தலுக்குப் பிறகே தற்போது உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன. அந்த உதவிகளும் கூட பர்மியர்களுக்கே வழங்கப்படுகின்றன. அங்கு வாழும் சிறுபான்மைத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

மியான்மாரில் ஐராவதி டெல்டா பகுதியும், பகோ மகாணமும், யங்கூனைச் சுற்றியுள்ள பகுதிகளும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகள் யாவும் தமிழர்கள் நிறைந்து வாழும் பகுதிகளாகும். தமிழர்களின் கிராமங்களான தங்கி, திங்காஜுன், டவுன்டகோன் முதலியவை முற்றாக அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.


பகோ மாகாணத்தில் ஐம்பது சதவீதத்திக்கும் அதிகமாகத் தமிழர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். யங்கூனில் சுமார் இருபது சதவீதம் தமிழர்கள் உள்ளனர். இது தவிர பிலிக்கான், டகோன், டாகிடா, எரியா, டகோமியா முதலான தமிழர் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மியான்மாரில் தற்போது சுமார் 15 லட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களில் சுமார் நாற்பதாயிரம் பேர் "நர்கீஸ்" புயலுக்கு பலியாகி இருப்பது மிகப் பெரும் துயரத்தை ஏற்படுத்தக்கூடியதாகும்.

மியான்மாரில் இராணுவம் சரிவர மீட்புப் பணிகளை செய்யாததால், அங்கு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. உப்பு ஒரு கிலோ மியான்மார் பணத்தில் 1500 ருபாய் விற்கிறது. ஒரு லீட்டர் குடி தண்ணீர் மியான்மார் பணத்தில் 1200 ருபாய். பால் பவுடரின் விலையோ ஒரு கிலோ பத்தாயிரத்திற்கும் அதிகம்.

மியான்மாரில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் மணிப்பூர் மாநில தமிழ்ச் சங்கத் தலைவர் திரு, சேகர், செயலாளர் ரவிச்சந்திரன், அதன் நிறுவனர்களுள் ஒருவரான திரு யூசுப், மணிப்பூர் மாநிலம் மோரே மாவட்டத்தில் சப் கலெக்டராகப் பணிபுரியும் திருமதி ஜெசிந்தா லசாரஸ் ஐ.ஏ.எஸ். ஆகியோர் இத் தகவல்களை உறுதிப்படுத்துகின்றனர்.

மியான்மாரில் வசிக்கும் தமிழர்கள் உரிய உதவிகள் கிடைக்காவிட்டால் மேலும் உயிர் இழப்புக்களை சந்திக்கும் அவல நிலையில் உள்ளனர்.

இத் தகவல்களை தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தமிழக அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயற்கைச் சீற்றங்களும் தமிழர்களுக்கு அழிவைக் கொடுத்துக் கொண்டிருப்பது சோகமான விடயம். மியான்மாரில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உலகத் தமிழர்கள் தம்மாலான உதவிகளை செய்ய முன் வரவேண்டும்.

நன்றி : இணையம்

இஸ்லாமோபோபியாவின் தாக்கம்


இஸ்லாமோபோபியாவின் தாக்கம்
சகோ.ரஃபீக் உதுமான்

கடந்த 2 வாரங்களாக கேரள மாநிலத்தில் தொலைக்காட்சிகளும் செய்திகளும் குறும்படம் போல அங்குள்ள போலி ஆண் பெண் போலி சாமியார்களைப்பற்றிய செய்திகளை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது.

ஒருவரே ஆண்மீக போர்வையில் ஒரு பெயரும் கடவுச்சீட்டுக்கு ஒரு பெயரும் ஆவணப்பதிப்புகளுக்கு வேறு பெயரும் வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்ததும் பெண் பக்தர்களோடு தவறான உறவில் சல்லாபித்ததும் அவை அனைத்தையும் விடியோ சிடிக்களாக்கப்பட்டு வைத்திருந்ததும் செய்திகள் தெரிவித்துக்கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமாக உயர் பதவிகளில் இருக்கின்றவர்களின் மனைவிமார்களும் பிள்ளைகளும் இருப்பதாக தெரிவிக்கிறது.

படைத்த ஒருவனை தவிர மற்றவைகள் போலிகள் என்பதை உணர ஏற்றுக்கொள்ள மறுப்பதால் இப்படி ஆகிறது.


கேரள அரசாங்கம் இப்படி எவ்வளவு பேர் கேரளாவில் இருக்கிறார்கள் இவர்களுக்கு பணம் எப்படி வருகிறது என்று ஆய்வை இப்போது ஆரம்பித்திருக்கிறது.தினம் தினம் புது புது தகவல்களோடு தொலைக்காட்சிகள் செய்திகளை தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.23-05-2008 அன்று செய்தியில் கழிந்த ஒரு வருடம் மட்டும் இந்த மாதிரி இந்து கிறிஸ்தவ அமைப்புகளுக்கு 7584 கோடி ரூபாய்கள் வெளிநாடுகளிலிருந்து மட்டும் வந்ததாக மத்திய வெளிவிவகாரத்துறை ஆய்வு கூறுகிறதாம். அதில் ஒரிஸாவிற்கு மிக அதிகமாகவும் அடுத்தபடியாக கேரளாவிற்கு வந்துள்ளது. முன்பு மயிலாடுதுறையில் இருந்து பிறகு கேரளாவில் ஆண்மீகத்தை செய்து வருகிற ஒரு மூத்த பெண் சாமியாரின் மடத்திற்கு 85 கோடிகளும் 2-வது ஒரு கிறிஸ்தவ அமைப்பிற்கு 78.5 கோடிகளும் கொஸபல் கிறிஸ்தவ அமைப்பிற்கு 52.5 கோடிகளும் ஒரு வருடம் மட்டும் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளதாக தெரிவிக்கிறது.

இவ்வளவு தொகை வந்தும் எந்த கண்காணிப்பும் இல்லை. இஸ்லாமிய அமைப்புகளுக்கு சில லட்சங்கள் வந்தாலே துருவி துருவி அரசாங்கம் ஆராய்கிறது. கழிந்த அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகவும் கேரள பீஜேபி யின் முக்கிய தலைவருமானவர் கொஞ்சம் கட்சிக்காரர்களுடன் ஒரு மிக இளவயது பெண் சாமியாரின் மடத்திற்கு போய் அவர் முன்பு இரு கால்களையும் முட்டிபோட்டு நீண்ட நேரம் வணங்குவதையும் பல கிரியைகள் செய்வதையும் தினவிட்னஸ் நிகழ்ச்சி தொடர்ந்து குறும்படம் போல் காட்டுகிறது.இன்னும் பல பல ஆண் பெண் போலி சாமியார்களையும் அவர்கள் மடம் வருமானம் அங்கே பெண்கள் வணங்குகிற முறை பெண்களுடன் ஆண் சாமியார்கள் கட்டிப்பிடித்து ஆசீர்வாதம் செய்வது இப்படி காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள.

கேரள சட்டசபையில் இதுகுறித்து தொடர்ந்து சர்ச்சைகள் நடந்து மந்திரிகள் கொண்ட தனிகுழு அமைத்து என்ன செய்யலாம் என்று வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.வேடிக்கை என்னவெனில் முன்பு இந்திய கள்ளரூபாய் அடித்து ஜெயிலில் தண்டனை பெற்ற ஒருவர் இப்போது குருவாயுரில் சாமியாராக இருப்பதையும் காட்டுகிறது.விரிவஞ்சி யாரையும் புண்படுத்தக் கூடாது என்று நீட்டவில்லை.நீங்கள் கேரள தொலைக்காட்சியை பார்க்கவும்.


இதில் கவனிக்கவும் இங்கு பதியவும் தூண்டியது கேரளாவில் எல்லா சேனல்களும் வாரக்கணக்கில் இதைகாட்டிக்கொண்டிருக்க தமிழகத்தில் மற்றும் இந்திய முழுவதும் உள்ள தொலைக்காட்சிகள் இதை செய்தியாக கூட சொல்லவில்லை.இஸ்லாத்திற்கு எதிரான செய்திகளையே மிக பெரிதாக்கி மீண்டும் மீண்டும் சொல்கிறவர்கள் இதை கண்டுகொள்ளவேயில்லை.


இஸ்லாமோபோபியாவின் தாக்கம் எவ்வளவு உண்மைகளை மறைக்கிறது என்பதை உணர முடிகிறது.