Wednesday, July 26, 2006

சமுதாயத்தலைவர்களுக்கு மட்டும்

SORRY இளைஞர்களே!
இது சமுதாயத்தலைவர்களுக்கு மட்டும்

அன்பார்ந்த சமுதாய இயக்கத் தலைவர்களே!

அன்று வெள்ளை ஆதிக்கத்திற்கு இறுதி அத்தியாயம் எழுதினோம். இன்றோ நமக்கு எதிராக இறுதி அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கிறது இந்திய நாட்டில்.அதுவும் நமது சமுதாயத்தின் உள்ளேயே இருக்கும் சில புல்லுருவிகளால். அக்கிரமங்களை எதிர்த்து போராட சமூக அரசியல் பேரியக்கங்கள் கண்டவர்கள் (தங்களை காப்பாற்ற??) சங்பரிவாருக்கு துணைபோய் தமது சுயநலத்திற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையே பலி கொடுக்கும் நிலை.

நமக்கு எதிராக நடக்கும் நிகழ்வுகள், அரசு அதிகாரிகளின் அத்து மீறல்கள், காக்கி சட்டைக்குள் கயவாலித்தனம் பன்னும் கருப்பு ஆடுகளின் காட்டுத் தர்பார்கள், நம்மை மந்தைகளாய் வைத்துக் கொள்ள தந்திரங்கள் செய்யும் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனங்கள், பத்திரிக்கை என்ற போர்வையில் நம்மை அடிமைப்படுத்த நினைக்கும் ஆதிக்க சக்திகளின் அலறல்கள், பல் சமய மக்களிடையே நம்மைப் பற்றி தவறான விஷக் கருத்தை விதைக்கும் சூழ்நிலைகள், நம்மைப் பற்றி சந்தேகப் பார்வையோடு பார்க்கும் அவலங்கள், நினைத்த மாத்திரத்தில் நிரபராதியைக் கூட குற்றவாளியாக மாற்றும் போக்குகள், வதந்திகளைப் பரப்பி கலவரத்தை ஏற்படுத்தி சமூக நல்லெண்ண உறவைக் கெடுக்கும் அபாயக் கரங்கள், முஸ்லிம் வியாபாரத் தலங்கள் தொடர்ந்து திட்டமிட்டு சூரையாடப்படும் நிலைகள், வெளிநாடுகளில் உழைக்கும் நம் சொந்தங்கள் தாயகம் சென்று திரும்பி வரும்போது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கும் அவலங்கள், சந்தேகக் கைதுகள், நீதி நியாயங்கள் முஸ்லிம்களுக்கு இல்லை என்ற நிலைமைகள், முஸ்லிம்கள் கல்வி இட ஒதுக்கீடு முதலியவற்றில் வந்து விடக் கூடாது என்பதில் ஆதிக்க சக்திகள் எச்சரிக்கையாக இருக்கும் சூழ்நிலைகள், இவை எல்லாம் பகிரங்கமாக நமக்கு எதிராக சமீப காலத்தில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இதற்கு எல்லாம் காரணம் பொறுப்பற்ற, சுயநலமுள்ள, இறை அச்சமற்ற சமுதாயத் தலைவர்கள் தாம். கோவை சம்பவத்திற்கும் காரணம் 'ஜமாத்' வைத்து நடத்தும் ஒரு
குறிப்பிட்ட தலைவர்தான் இந்த உண்மை விரைவில் வெளிவரும். இந்த நிலை தொடர இனியும் அனுமதி அளித்தால் கலவரத் தீயில் கடைசி விறகில் நீங்கள் எரிவீர்கள்.


வி.டி. ராஜசேகர் (DALIT VOICE): முஸ்லிம்களே! உங்களை கூண்டோடு அழிக்க சதித் திட்டம், முறியடிக்க நீங்கள் தயாரா??? என்று கேட்டார். சமுதாயத் தலைவர்களே! கவுரவம், பிடிவாதம், தான் என்ற அகந்தை, சுயநலம், தலைமைப் பித்து இவற்றை எல்லாம் புறந்தள்ளி அரசியலில் நாம் ஒன்று என ஓங்கி முழங்கிட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுபோல் சுயநலத்திற்காக அப்பாவி முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள் என்று பொய்வழக்கு போட்டு நமது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிராக உளவுத்துறையில் உள்ளவர்களோடு சேர்ந்து செயல்படும் இது போன்ற 'ஜமாத்' தலைவர்களின் முகத்தை மக்களுக்கு அடையாளப்படுத்த வேண்டும். அதற்கு நமது இயக்கத் தலைவர்கள் தயங்க கூடாது.

இப்படிக்கு
பழைய மாருதம்

1 comment:

ஆத்தூர்வாசி said...

It's nice to see our community is getting together. This is what we wanted from you TMMK, way to Go.

It's really unfortunate and mysterious why TNTJ is in darkside in this issue. I hope it will wake up soon.

At the same time criticizing the TNTJ's "Support for Lebnon" is seem to be an unwanted and unreasonable critism.

Thanks for such a quick news MughavaiThamizhaa.

MaaSalaama.