Thursday, June 15, 2006

பேட்டியில் பொய்கள் இடம்பெற்றதா? மறுப்பு

தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை வலைப்பதிவில் இடம்பெற்ற பேட்டியில் பொய்கள் இடம்பெற்றதா?
இறைவன் திருப்பெயரால்

தேதி : June 07, 2006

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.....)

இந்த மின் அஞ்சல் பார்த்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் கோவை சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகி பொதுச் செயலாளர் எம். சம்சுநிஷா அன்சாரி வரையும் மடல். கோவை சிறைவாசிகள் தொடர்பாக http://tmpolitics.blogspot.com என்ற முகவரியில் சில தகவல்கள் பேட்டி வடிவமாக வெளியாகி உள்ளன. இந்த தகவல்கள்.
சிறைவாசிகளின் பொறுப்பாளர் எம். முகமது அன்சாரி
அவர்களிடமிருந்து சிறுபான்மை உதவி அறக்கட்டளை (CTM) மூலமாக சகோ. முகவைத் தமிழன் என்ற ரைஸுத்தீன் அவர்களால் முறையாக பெறப்பட்டதே ஆகும்.


இந்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்தவுடன் எங்கள் அலுவலகத்தில் உள்ள கணிணியில் இணைய தள இணைப்பு உதவியுடன், மேற்குறிப்பிட்ட சகோதரர் ரைஸுத்தீன் அவர்களின் (தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை) வலைப்பதிவில் உண்மைக்கு மாற்றமான தகவல்கள் ஏதாவது செருகப்பட்டுள்ளதா? ஏன்பதை கண்காணித்து வந்தோம். ஆனால், மேற்கண்ட 3 பதிவுகளும் சிறைவாசிகள் தொடர்பாகவும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் பற்றியும் எந்த தவறான தகவல்களும் இடம் பெறவில்லை என்பதோடு இதில் இடம் பெற்றுள்ள குறிப்புகள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்பதை எங்களது சிறுபான்மை உதவி அறக்கட்டளை CTM-யின் சார்பாக இங்கு தெரிவித்துக்கொள்கிறோம்.


வஸ்ஸலாம்
இப்படிக்கு


எஸ்.யு.அன்வர்கான்-தலைவர்

எம்.சம்சுநிஷாஅன்சாரி-செயலாளர்

கோவைதங்கப்பா-பொருளாளர்

CLICK OVER THE FOLLOWING PICS TO SEE THE SCANED DOCUMENT SIGNED BY THE ABOVE







இறைவன் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்....)

இந்த மின் அஞ்சல் பார்த்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சமுதாய இயக்க தலைமைகளுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் கோவை மத்திய சிறையிலிருந்து சிறைவாசிகளின் பொறுப்பாளர் எம். முகமது அன்சாரி எழுதும் கடிதம்.

முகவைத் தமிழன் மூலமாக சிறைவாசியான எனக்கு பேட்டி தொகுப்புகள் பிரிண்ட் செய்து படிப்பதற்காக கொடுக்கப்பட்டது.
மற்றும் சிறைவாசிகள் தொடர்பாக அவரின் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் தகவல்கள் அனைத்ததையும் நாங்களும் கவனித்து வருகின்றோம். அவற்றில்
நான் தெரிவிக்காத எந்த தகவல்களும் கொடுக்கப்படவில்லை என்பதோடு அந்த தகவல்கள் முற்றிலும் உண்மை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



எமது யதார்த்த நிலையை உலகிற்கு அறிவித்த முகவைத் தமிழன் என்ற சகோ. ரைஸுத்தீன் எழுத்துக்களால் சிறைவாசிகளுக்கோ, சிறைவாசி குடும்பங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இறைவன் நாடினால் இதன் மூலம் நன்மையே விளையும் என்று நம்புகின்றோம்.


வஸ்ஸலாம்
இப்படிக்கு
இஸ்லாமிய ஊழியன்
எம். முகமது அன்சாரி

விசாரணை சிறைவாசிஎண் : 2638
கோவை மத்திய சிறை
கோயமுத்தூர் – 18
கோவை – 18
CLICK OVER THE FOLLOWING PIC TO SEE THE SCANED DOCUMENT SIGNED BY THE ABOVE



பஸ்லுல் இலாஹியின் மெயில்கள் அடங்கிய "சத்திய மேவ ஜயதே" படிக்க இங்கு சொடுக்கவும்

2 comments:

அபூ முஹம்மத் said...

//இந்த நிலையில்தான் இந்த மெயில் வந்துள்ளது. 30-05-2006 அன்று எனது வீட்டுக்கு மவுலவி ஹாமித் பக்ரி அவர்கள் வந்தார்கள். மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமும் இந்த மெயிலில் உள்ள பொய்களை படித்துக் காட்டினேன். உடனே அவரும் தங்கப்பாவுக்கு போன் போட்டு பேசினார். இப்படி நாங்கள் சொல்லக் கிடையாது என்றார். அந்த மெயில் அனுப்புகிறவர் யார்? எந்த ஊர்? என்பது தெரியுமா? அவரை முன் பின் பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டேன். எதுவுமே தெரியாது. ஈ.மெயில் அனுப்புவார் அது மட்டும்தான் தெரியும் என்றார் தங்கப்பா.//

மேற்கண்டவாறு ரைஸுதீன் அவர்களைத் தெரியாது என்று தங்கப்பா சொன்னதாக பழ்லுல் இலாஹி தன்னுடைய முதல் மின்னஞ்சலில் சொல்கிறார்.

ஆனால் CTM தரப்பிலிருந்தும் கோவை விசாரணை சிறைவாசி முகமது அன்சாரி அவர்களிடமிருந்தும் கொடுக்கப்பட்ட மறுப்புகள் முற்றிலும் மாறுபட்டு உள்ளன. மேற்கண்ட ஒரு விஷயத்திற்கு ஹாமித் பக்ரீ சாட்சியாக இருப்பதால் பழ்லுல் இலாஹி அவர்கள், ஹாமித் பக்ரீ அவர்களிடமிருந்து ரைஸுதீன் அவர்களை தெரியாது என்று கோவை தங்கப்பா சொன்னது உண்மைதான் என்று ஒரு கடிதம் பெற்று வழக்கமான மின்னஞ்சலில் அனுப்பினால், "பொய் சொன்னது யார்?" என்பதை எளிதாக அறிந்துக்கொள்ள முடியும்.

பேட்டி நேரடியாக எடுக்கலாம், தொலைப்பேசியில் எடுக்கலாம், மின்னஞ்சலில் எடுக்கலாம், மற்றவரை விட்டும் எடுக்கலாம். ஆனால் பெறப்பட்ட செய்திக்கு பங்கம் விளைவிக்கும்படி தகவல்கள் மாற்றப்படக் கூடாது.

சம்பந்தப்பட்டவர் பேட்டியாக வெளியிட சம்மதிக்கும்போது, பேட்டியாக வெளியிட்டவரை குறை சொல்வது சரியல்ல. யாருடைய பேட்டி வெளிவந்ததோ அவர்கள் தகவல்கள் சரிதான் எனும்போது, வெளியிட்டவரை குறை சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

எனவே, தகவல்களில் தவறுகள் இடம்பெற்றிருந்தால், அதற்கு தகவல் கொடுத்தவரே பொறுப்பாளர்.

பழ்லுல் இலாஹி அவர்களின் கடிதத்தில் நான் ரசித்த விஷயம் என்னவென்றால் அவரின் மூன்றாம் கடிதத்தின் முடிவில்
"அடுத்த இதழில் பார்ப்போம்".
என்று எழுதியிருப்பதுதான்.

அபூ முஹம்மத் said...

அன்பின் முகவைத்தமிழன்,

தங்களின் "தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை" குறைந்த காலங்களில் நிறைய முன்னேற்றம் அடைந்த வலைப்பதிவாகும் (அல்ஹம்துலில்லாஹ்). இலவசமான தளத்தில் அமைந்திருந்தாலும் தனிப்பட்ட இணையதளத்தைவிட அதிக தொழில்நுட்ப முன்னேற்றத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. தங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

1) பேட்டி வடிவில் மக்களுக்கு செய்தியை கொடுக்கும்போது மக்களுக்கு படிக்க ஆர்வமாக இருந்தாலும், பேட்டியை எதன் மூலம் (Direct, Email, Chat, Tel., through other source, etc..) பெற்றீர்கள் என்பதை தாங்கள் குறிப்பிடுவதுதான் சரியானதாக இருக்கும். எனவே எதிர்வரும் காலங்களில் இதனை முறையாக நீங்கள் அமுல்படுத்த வேண்டும்.

2) இன்று நமக்கென்று இஸ்லாமிய இணையதளங்கள் பல இருந்தும் தடைபடாத தரமான செய்தி தளம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. நான் மட்டுமல்ல உங்களைப்போன்ற பலரும் இதனை சிந்தித்திருக்கலாம். எனவே இணையத்தில் சஞ்சரிக்கும் முகவர்களை (Webmasters, Site & Magazine Editors, Blog writers, etc..) அணுகி, செய்திதளம் என்பது எட்டாக்கனியாக போனதற்கு காரணங்கள் மற்றும் அதனை வெற்றிக்கனியாக்க வழிகள் போன்றவற்ற பேட்டி கண்டு வெளியிடும்போது, இணைய இதழ் ஆரம்பிக்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் அதனை முறையாக கையாள்வார்கள். புதிதாக யாராவது இணைய இதழ் ஆரம்பித்தாலும் அவர்களுக்கு இத்தொகுப்பு பேருதவியாக இருக்கும்.