Friday, April 28, 2006

ஷரீஅத் சட்டத்தை ஏற்காத வேட்பாளருக்கு..

ஷரீஅத் சட்டத்தை ஏற்காத வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

அ.தி.முக.வின் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் திருமதி. பதர் சயீத். இவருக்கு வாக்கு சேகரிக்கும் த.த.ஜ.வினர் 'முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்கு அளியுங்கள்' என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் தலைவர் ஜெய்னு லாப்தீன் அவரை ஒரே மேடையில் அமர வைத்து அவருக்காக வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பதர் சயீத் வக்ப் வாரியத் தலைவியாக உள்ளார். இவர் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு எதிரானவர் என்ற போதினும் இந்தப் பதவியைப் பெற்றதற்கான ஒரே காரணம் அவர் ஜெயலலிதாவின் தோழி என்பதால் தான்.

தலாக் விஷயத்தில் ஜமாஅத்தார்கள் தலையிடக் கூடாது, அதனை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்தவர். இது பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற சங்பரிவாரின் கருத்துக்கு இணையானதாகும்.

பொதுவாகவே 'பெண்கள் தலைமுக்காடு போட வேண்டும்' என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இஸ்லாத்தின் இந்தக் கட்டளையைத் தூக்கி குப்பை யில் போட்டவர் பதர் சயீத்.

வக்ப் பிரச்சினைகளுக்காக பல்வேறு சமயங்களில் தமுமுகவினர் இவரை சந்திக்க வக்பு வாரியத்திற்கு சென்றிருக்கின்றனர். ஆனால் ஒருமுறை கூட பதர் சயீத் தலைமுக்காடு போட்டு பார்த்ததில்லை என்பதுதான் உண்மை.

மேலும், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை 'அடிமைத்தனம்' என்று விமர்சித் தவர் பதர் சயீத். பொது இடங்களில் அநாகரீகமாக உடையணிந்து வருவதை சமுதாயப் பெரியவர்கள் வேதனையோடு குறிப்பிடுகிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவல்லிக்கேணிக்குச் சென்ற பதர் சயீத், அங்குள்ள கோயிலுக்குச் சென்று பூஜை நடத்தி, பூசாரியிடம் ஆசிர்வாதம் பெற்றார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் இவரைப் போன்றவர்களை 'முற்போக்கு முஸ்லிம்கள்' எனக் கருதி, வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தி வருகிறார்.

இவருக்காகத்தான் 'கொடி தூக்கும் ஜமாஅத்'தாக மாறியுள்ளவர்கள் 'முஸ்லிம் பெண்ணுக்கு வாக்களியுங்கள்' என்று கூறிக்கொண்டு திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

1 comment:

Anonymous said...

Dear Kadal Kadantha TMMK,

Your insights on so called Muslim "Bader sayeed" is very good. But i still dont understand something, you know what, she calls himself as a muslim, thats a very good thing, insha Allah may Allah give her hidhayaa. I understand your concern that she may not do good things to our Muslim community, but she may not allow harming our community people, at this point of time we need that big time. So, as always, so called muslim is far better than others. Hope you understand that.

By the way, are you justifying to vote for a non-muslim and getting muslim representation in assembly. It's a big time contradiction, even a mentally ill person would thing twice before he claims that.


One more thing why didnt you support PMK, you answer was they didnt give muslim representation in the candidates nomintation, do you accept if they claim they dont have a good muslim in our party, can you swear on Allah that all the DMK's so called muslim candidates are islamic, for that matter how about Muslim leaque.


Come on argue maturely, grow up, try to get-to-gether with others, do something good for the community. Think something in long-term, not short-term benefits.


Please stop all these personnel revenge and i insist "try to get-to-gether", do some good things to our community rathar than destroying our muslim community.

By the way last para is an also appeal to TNTJ as well.

May Allah make easy on us in this world and hereafter.

P.S: I would be happy if someone can translate this into tamil if they think it's good enough to translate :)