« Home | அல்லாஹ்வின் திருப்பெயரால்..எப்புடி இருந்தவங்க..! எ... »




த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா 2001 தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து வெளியிட்ட அறிக்கைஅன்று மாபெரும் கொடுமைக்காரனாக , முஸ்லிம்களின் எதிரியாக த.மு.மு.க வால் கருனாநிதி சித்தறிக்கபடுகிறார்.

ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை முன்னிறுத்தியே. த.மு.மு.க. துவக்கப்பட்டது. அவரது ஆட்சியில் நடந்த கொடுமைகளை அம்பலப்படுத்தியே த.மு.மு.க. வளர்ந்தது. கரசேவையை ஆதரித்தது, தடாச்சட்டத்தின் கீழ் முஸ்லிம்களைச் சிறையில் அடைத்தது. இந்து முன்னணியுடன் வெளிப்படையாக உறவு வைத்திருந்தது போன்ற பல காரணங்களைக் கூறலாம். ஜெயலலிதாவையும் அவரது கட்சியான அ.தி.மு.க.வையும் கடும் விமர்சனம் செய்த த.மு.மு.க. இப்போது ஆதரிப்பது என்ன நியாயம்? என அறிவு ஜீவிகள் சிலர் பிரச்சாரம் செய்துவருகின்றனர். நமக்கு கூட நேரடியாக கடிதம் எழுதுகின்றனர். ஜெயலலிதாவை ஆதரிக்கும் நாம், ஜெயலலிதா அந்த அக்கிரமங்களைச் செய்யவில்லை என்று கூறவில்லை அல்லது அதை நியாயப்படுத்தியும் பேசவில்லை. அன்றைக்கு நாம் செய்த விமர்சனத்தை எல்லாம் திரும்பப் பெறவும் இல்லை. அந்த விமர்சனங்கள் அப்படியே உள்ளன. அதில் எந்த மாற்றமும் நமக்கு இல்லை. ஜெயலலிதாவுக்கு முன் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் செய்த கொடுமைகளுடன் ஜெயலலிதாவின் கொடுமைகளை நாம் ஒப்பிட்டுப்பார்த்தோம். ஜெயலலிதாவின் கொடுமைகள் தான் மிகைந்திருந்தன. எனவே ஜெயலலிதாவை எதிர்த்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டோம். அதுபோல் கருணாநிதி ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டரை வருடங்களிலும் நமக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன. அந்தக் கொடுமைகள் ஜெயலலிதாவின் கொடுமைகளை விட பல மடங்கு அதிகமாகி விட்டன. கருணாநிதியின் கொடுமைகள் ஜெயலலிதாவின் கொடுமைகளைச் சிறியதாக ஆக்கிவிட்டது என்பதுதான் நமது வாதம். ஜெயலலிதா எந்தக் கொடுமையும் செய்யவில்லை என்பது நமது வாதமல்ல. 1997 ஆம் ஆண்டு தாம்பரத்தில் ராமச்சந்திரன் என்பவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் புனித ரமலானில் தராவீஹ் தொழுகை நடத்திய தாம்பரம் பள்ளிவாசல் இமாம் அபூபக்கர் சித்தீக் உட்பட தொழுது கொண்டிருந்த இளைஞர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஐவர் மீது கொலை வழக்குப் போடப்பட்டது. மூன்று மாதங் களுக்கும் அதிகமாக சிறைச்சாலையில் வேதனை அனுபவித்தனர். (இப்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது). இந்தக் குற்றப்பத்திரிக்கையில் முன்னர் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் இல்லை. இது அப்பட்டமான பொய் வழக்கு என்பதில் சந்தேகமில்லைபுனித ரமலான் என்றும் பார்க்காமல், பள்ளிவாசல் என்றும் பார்க்காமல், மவ்லவி என்றும் பார்க்காமல் அக்கிரமம் புரிந்த ஆட்சி கருணாநிதி ஆட்சி!. அதுபோல நெல்லை மேலப்பாளையத்தில் மூன்றுபேர் கொல்லப்பட்டனர். உடனே, ஷம்சுல் லுஹா என்ற மவ்லவியையும் பள்ளிக்குத் தொழ வந்தவர்களையும் கொலை வழக்கில் கைது செய்த ஆட்சி கருணாநிதி ஆட்சி!. 100 நாட்களுக்கும் மேலாக இவர்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். குற்றப்பத்திரிக் கையில் இவர்கள் பெயர் இல்லை. இது கருணாநிதியின் மற்றொரு கொடுமை. தங்கள் பகுதியில் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருப்பதைப் பற்றி புகார் செய்த தேங்காய்பட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள் மீது வெடிகுண்டு வழக்குப்போட்ட ஆட்சி கருணாநிதி ஆட்சி! முத்துப்பேட்டையில் தங்கள் கடை இந்து முன்னணியினரால் தீ வைக்கப்பட்டதாக புகார் கூறிய முஸ்லிம்கள் மீதே தீ வைப்பு வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது கருணாநிதி அரசே! த.மு.மு.க மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், துணைத்தலைவர் அப்துல் ஜலீல், தலைமை நிலையச் செயலாளர் சாதிக் பாஷா ஆகியோர் பிப்ரவரி 14ஆம் தேதி முன் எச்சரிக்கையாக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது வெடிகுண்டு வழக்கைப் பதிவு செய்து இன்றுவரை அலைக்கழித்து வருவதும் கருணாநிதி ஆட்சி! முஸ்லிம்களில் இரு பிரிவினருக்கிடையே சமாதானம் செய்து வைக்கச் சென்ற த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் பாக்கர் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகளைப் போட்டு நீதி மன்றத்துக்கு அலையவிட்டது கருணாநிதி ஆட்சி! மூன்று மாதம் அவர்களைச் சிறையிலும் தள்ளி சந்தோஷப்பட்டவர் கருணாநிதி! டிசம்பர் 6 மாநாட்டுக்காக த.மு.மு.கவினர் உத்தமபாளையத்துக்கு நிதி திரட்டச் சென்ற போது ஒருவர் கொல்லப்பட்டார். உடனே த.மு.மு.க.வினர் (அந்தக் கொலை வழக்கில்) கைது செய்யப்பட்டனர். உரிய ஆவணங்களையும் ஆதாரங்களையும் காட்டிய பிறகும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. ஆறு மாதம் வரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். கோவையில் 1997 நவம்பர் இறுதியிலும் டிசம்பர் முதல் நாளும் 19 முஸ்லிம்கள் காவல்துறையினா லும், சமூக விரோதிகளாலும் கொல்லப்பட்டனர். கொலை செய்த போலீசார் மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக, முஸ்லிம்களை நரவேட்டையாடிய முத்து சந்திரசேகரனுக்கு அண் ணா பதக்கமும், பதவி உயர்வும் அளிக்கப்பட்டது.
1000 கோடிக்கு மேல் சொத் துக்களை முஸ்லிம்கள் இழந்தாலும் இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. வரலாறு காணாத இக்கொடுமை நிகழ்த்தியவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத கொடுமைக்காரர் இந்த கருணாநிதி. மாறாக, அந்தக் கொடுமைகளை மூடி மறைப்பதற்காக கோகுல கிருஷ்ணன் கமிஷன் அமைத்தவர் கருணாநிதி! பிப்ரவரி குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி நாடெங்கும் பல்லாயிரம் முஸ்லிம்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தவர் கருணாநிதி! வழக்கம் போல் நடவடிக்கையை நிறுத்தி விடுதலை செய்யாமல் நீதி மன்றத்தின் ஜாமீனில் விடுதலை பெற்றுச் செல்லும் நிலையை ஏற்படுத்தியவர் கருணாநிதி! அதைத் தொடர்ந்து சில வாரங்களில் வாஜ்பேயி பிரதமராக பதவியேற்பதைக் காரணம் காட்டி அப்போதும் பல்லாயிரம் பேரைக் கைது செய்தார் கருணாநிதி! அத்வானி, வாஜ்பேயி திருச்சி வருகிறார்கள் என்பதற்காகவும் ஆயிரக்கணக் கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். மூன்றாண்டுகளாக ஒவ்வொரு டிசம்பரிலும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த ஐம்பதாண்டுகளாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவுதான். ஆனால் கருணாநிதியின் மூன்றாண்டு கால ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாகும். சமீபத்தில், வெடிக்காத குண்டுகளைக் கைப்பற்றியபோது இரண்டாயிரம் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். பல முறை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவிகள். பெரும்பாலோர் அன்றாடங்காய்ச்சிகள். அவ்வாறு கைது செய்யப்பட்டதால் பணியாற்றிய கடைகளிலி ருந்து நீக்கப்பட்டவர்கள் பல்லாயிரம்! இந்துக்களின் வீடுகளில் வாடகைக்கு இருந்தவர்கள் வீட்டைக் காலி செய்யும் நிலை இதனால் ஏற்பட்டது. நள்ளிரவில் முஸ்லிம் வீடுகளில் புகுந்து தரக்குறைவான வார்த்தைகளால் முஸ்லிம் பெண்கள் ஏசப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. மாணவர்கள், அரசு ஊழியர்கள், பட்டதாரி கள் கூட கருணாநிதியின் கொடுமைக்குத் தப்பவில்லை. திண்டிவனம் ராமமூர்த்தியும். ஜெயலலிதாவும் கண்டனம் தெரிவித்து, த.மு.மு.க.வும் வழக்குத் தொடுத்த பிறகுதான் கைதுப்படலம் நின்றது. தப்லீக் ஜமாஅத்தில் சென்றவர்களையும் ஜட்டியுடன் காவல்நிலையத்தில் நிறுத்தியவர் கருணாநிதி! வெளியூரிலிருந்து வரும் தப்லீக் ஜமாஅத்தினரை பள்ளிவாசல்களில் தங்க வைக்க வேண்டாம் என்று பள்ளிவாசல் நிர்வாகிகள் மிரட்டப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்! பள்ளிவாசலிலேயே (மோப்ப நாய்களை விட்டு) வெடிகுண்டு சோதனை நடத்திய புண்ணியவானும் கருணாநிதி தான்! ஆயிஷா என்ற பீதியைக் கிளப்பி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களையெல்லாம் சோதனை செய்து அவமானப்படுத்தியவர் கருணாநிதி! பெண்கள் மதரசாக்களில் ஆயிஷாவைத் தேடி சோதனை செய்தவர் கருணாநிதி! (கடைசியில் ஆயிஷா என்ற பெயரே குற்றப்பத்திரிக்கையில் இல்லை. இது ஒரு கற்பனை பாத்திரம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது). இன்றுவரை எண்ணிலடங்காத கொடுமைகளை கருணா நிதியின் ஆட்சியில் அனுபவித்துவிட்டோம். த.மு.மு.க. பாதிப்புக் குள்ளான இந்த மக்களின் உணர்வுகளைத்தான் மதிக்குமே தவிர அறிவு ஜீவிகளின் வரட்டு வாதத்தை அல்ல! பாதிக்கப்பட்ட இந்த மக்களிடம் சென்று கருத்துக் கேட்டால் வாஜ்பேயியைவிட கருணாநிதி மோசம் என்று தீர்ப்பளிப்பார்கள். கோவை மக்களிடம் கேளுங்கள்! 'அத்வானியை ஆதரித்தாலும் கருணாநிதியை ஆதரிக்கமாட்டோம்' என்பார்கள். அந்த உணர்வைத்தான் த.மு.மு.க. பிரதிபலிக்கிறது. பொதுக்குழுவில் கூடிய சுமார் ஆயிரம் பேரில் ஒருவர் கூட இம்முடிவை ஆட்சேபிக்கவில்லை. இந்த சமுதாயத்துக்கு கருணாநிதியைப்போல் வேறு எவரும் கொடுமை செய்ததில்லை. முஸ்லிம்களின் உரிமைக்காக எழுப்பப்படும் ஒவ்வொரு குரலும் கருணாநிதியால் நசுக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் சகோதரர்களே! கருணாநிதி ஆட்சியில் முஸ்லிம் சமுதாயம் தினமும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றது. நள்ளிரவில் போலீஸ் எப்போது கதவை உடைக்குமோ என்று அஞ்சி அஞ்சி வாழும் நிலை. இதனால்தான் கருணாநிதிக்குப் பாடம் கற்பிக்கும் முடிவை நாம் எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். ஜெயலலிதா என்ற கோட்டுக்கருகில் கருணாநிதி என்ற பெரிய கோடு போடப்பட்டதால், ஜெயலலிதா சின்னக் கோடாக காட்சி தருகிறார் இதைத் தவிர வேறு காரணம் இல்லை.

த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா 2006 தேர்தலில் கருனாநிதியை ஆதரித்து வெளியிட்ட அறிக்கை அன்று நல்ல பெண்மனியாக , முஸ்லிம்களின் நண்பனாக த.மு.மு.க வால் சித்தறிக்கபட்ட ஜெயலலிதா இன்று மாபெரும் சித்தறிக்கபடுகிறார்.ஜெயலலிதாவின் ஆட்சி முஸ்லிம்களுக்கு நிம்மதி அளித்த ஆட்சியா?
2001 முதல் 2006 வரை தமிழகத்தில் ஜெயலலிதா நடத்தி வந்த ஆட்சி சங்பரிவாரத்தின் மறுவடிவமாக இருந்தது என்று ஆணித்தரமாக கூறலாம். இந்த ஆட்சியின் போது முஸ்லிம்கள் பலவகையான மனஉளைச்சலுக்கு இலக்காகினர். ஆனால் ஜெயலலிதாவை கடந்த மார்ச் 3ம் தேதி சந்தித்து, ஆணையத் திற்கான அரசாணை என்ற பெயரில் ஒரு வேஸ்ட் பேப்பரை பெற்ற போது அவரது ஆட்சியில் தான் முஸ்லிம்கள் நிம்மதியாக சுவாசித்து வருவதாக சில அதிமேதா விகள் கூறி வருகின்றனர். அதிமுகவின் ஆட்சியின் சிறப்பை அதிமுக காரர்களை விட சிறப்பாக பிரச்சாரம் செய்ய போவதாகவும் அவர்கள் பிரகடனம் செய்துள்ளனர். ஜெயலலிதா ஆட்சியில் அவர்களை நிம்மதியாக சுவாசிக்க வைத்தவை எவை என்று சிந்தித்தோம்.
இதோ பட்டியல்.... இவற்றை ஜெயலலிதா அரசின் சாதனைகளுடன் சேர்த்து அவர்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்யலாமே?
இமாம் அலியை சுட்டு கொன்ற ஜெ. ஆட்சி
இந்த ஆட்சியின் போதுதான் பெங்களூரில் தலைமறைவாக இருந்த இமாம் அலி மற்றும் ஒரு பெண் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இமாம் அலி மற்றும் அவரது கூட்டாளிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்த காவல்துறையினர் அவரை எளிதாக உயிருடன் பிடித்திருக்க இயலும். ஆனால் வேண்டுமென்றே அவர்கள் எவ்வித பதில் தாக்குதல் நடத்தாத போதிலும் சுட்டுக் கொன்றார்கள். சதாம் ஹுசைனை பாதாள அறையில் கண்டுபிடித்த அமெரிக்க ராணுவம் அவரை அங்கேயே சுட்டுக் கொல்லவில்லை. அவரை உயிருடன் பிடித்து நீதிமன்றம் என்ற பெயரில் இருக்கும் ஒரு அவையில் நிறுத்தியது. ஆனால் ஜெயலலிதா அரசோ சட்டத்தை தன் கையில் எடுத்து இமாம் அலியையும் அவரது கூட்டாளிகளையும் சுட்டுக் கொன்றது. அப்பட்டமான இந்த மனித உரிமை மீறலை அங்கீகரிப்பவர்கள் தான் ஜெயலலிதாவின் ஆட்சியில் நிம்மதி யாக சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோத்ரா ரயில் விபத்து: விஷம் கக்கிய ஜெயலலிதா
கோத்ராவில் ரயில் எரிப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதனை கண்டிக்காத தலைவர்கள் கிடையாது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இடதுசாரி கட்சிகள் ஆகிய அனைவரும் கண்டித்தார்கள். ஆனால் தமிழக முதல்வர் ஜெயல லிதா, சிறுபான்மையினர் பாதிக்கப் பட்டால் மட்டும் குரல் கொடுப்பவர்கள் பெரும்பான்மை யினர் பாதிக்கப்படும் போது ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கூறினார். கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டது குறித்து அவர் மவுனம் சாதித்து, தான் யார் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டார்.
மதமாற்றத் தடைச் சட்டத்தை திரும்பப் பெறாத ஜெயலலிதா
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பல கருப்புச் சட்டங்களை ஜெயலலிதா அரசு தமிழகத்தில் திணித்தது. இதில் ஒன்று தான் மதமாற்றத் தடைச் சட்டம். சங்பரிவார் அமைப்புகளின் வழிகாட்டலின் அடிப்படையில் தான் ஜெயலலிதா மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இந்த சட்டம் அரசியல் சாசனச் சட்டம் தரும் அடிப்படை உரிமைகளை பறிக்கும் சட்டமாகும். நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு பல கறுப்புச் சட்டங்களை ஜெயலலிதா முறைப்படி வாபஸ் வாங்கினார். மதமாற்றத் தடைச் சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட சட்டமாகும். இதனை திரும்ப பெற வேண்டுமெனில் சட்டமன்றத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் வாங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினரை ஏமாற்றுவதில் கைத்தேர்ந்தவரான ஜெயலலிதா மதமாற்றத் தடைச் சட்டத்தை வாபஸ் பெறுவதற்காக 2004ம் ஆண்டு மே 18 அன்று ஆளுநர் மூலமாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தார். இந்த அவசர சட்டம் நவம்பர் 18, 2004வுடன் காலவதியாகிவிட்டது. இந்த நிலை யில் தற்போது மதமாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் அமுலில் தான் உள்ளது.
அரக்கன் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஜெயலலிதா
குஜராத்தில் முஸ்லிம் படுகொலைகளை முன்நின்று நடத்திய கொடும் அரக்கன் நரேந்திர மோடி மீண்டும் முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பா.ஜ.க. கட்சியை சேராத ஒரே முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. முஸ்லிம் பெண்களை மானப்பங்கப்டுத்தி, ஆயிரக்கணக்கில் முஸ்லிம் உயிர்களை பறித்ததை அங்கீகரிப்பதாக அமைந்துள்ளது ஜெயலலிதாவின் இந்த செயல்
ஆந்திர முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை எதிர்த்த ஜெயலலிதா
ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார் ஜெயலலிதா. முஸ்லிம்கள் மட்டுமா இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று கேட்ட ஜெயலலிதா, பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மையினர் அதிக சலுகைப் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இத்தகைய மனப்போக்கு கொண்ட ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவார் என்று நம்ப முடியுமா? நம்ப முடியாது என்பதை அவரது ஆட்சி காட்டி விட்டது. 2001 அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று வாக்குறுதி அளித்தவர் அதனை இறுதி வரை நிறைவேற்றவில்லை. அவரது ஆட்சி காபந்து ஆட்சியாக செயல் இழந்த நிலையில் இருக்கும் நேரத்தில் ஒரு வேஸ்ட் பேப்பரை அளித்து ஆணையம் அமைத்ததாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.





பொது சிவில் சட்டமும் ஜெயலலிதாவும்
இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது மிக அவசியம் என்று வலியுறுத்தியவர் ஜெயலலிதா. சென்னையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் 2003 ஜூலை 29 அன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியதாக தி ஹிந்து நாளிதழ் தெரிவித்தது. முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் ஷரிஅத் சட்டத்தை பின்பற்றக் கூடாது, திருமணம் உள்ளிட்ட வைபவங் களை பொது சிவில் சட்ட முறைப்படி தான் நடத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கும் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு அளித்தவர் ஜெயலலிதா .
ராமர் கோவிலை வேறு எங்கே கட்டுவது? என்று கேட்ட ஜெயலலிதா
ஜெயலலிதா அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த போதினும் அவரது பேச்சுகள் சங்பரிவார் தளகர்த்தர்களின் வார்த்தைகள் போன்றே அமைந்துள்ளன. பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்ற சங்பரி வாரின் கருத்தை ஆதரித்து அவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும் போது, இராம பெருமானுக்கு இந்தியாவில் கோவில் கட்ட முடியவில்லை என்றால் அதனை வேறு எங்கு கட்டுவது? கண்டிப்பாக ராமர் கோவிலை கட்டியே ஆக வேண்டும் என்று சொன்னார் ஜெயலலிதா. பாபரி மஸ்ஜித் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கையில் ஜெயலலிதா சொல்லியுள்ள இந்த கருத்து ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி. பஜரங் தளம், பா.ஜ.க முதலிய சங்பரிவார் அமைப்பு களின் ஊதுகுழலாக அவர் இருக்கின்றார் என்பதை மெய்பிக்கின்றன.
தமிழக அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு இடமில்லை
தமிழக வரலாற்றில் முதன் முறையாக ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தான் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற நிலையை உருவாக்கி தனது முஸ்லிம் விரோத போக்கை வெளிகாட்டியவர் ஜெயலலிதா
பாடநூல்களில் சங்பரிவார் அமைப்புகளுக்கு வக்காலத்து
தமிழக அரசு பாடநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள 12ம் வகுப்பு வரலாற்று பாடப் புத்தகத்தில் காந்தியடிகளை கோட்úஸ என்ற ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி சுட்டுக் கொன்றான் என்ற வாசகத்தை நீக்கியது ஜெயலலிதா அரசு. இதே போல் இதே பாடநூலில் நீதிக் கட்சி பற்றி பாடத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளதால் அந்த பாடத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று முடி வெடுத்துள்ளது ஜெயலலிதா அரசு.
முஸ்லிம் விசாரணை சிறைவாசிகளுக்கு ஜாமீன் மறுக்கும் ஜெயலலிதா
தமிழக வரலாற்றில் முதன் முதலாக ஜெயலலிதா தான் தடா என்னும் கொடிய சட்டத்தின் கீழ் முஸ்லிம்களை சிறையில் அடைத்தார். அவரது ஆட்சியை தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில் தடா கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டனர். திமுக ஆட்சியில் கோவை குண்டு வெடிப்பு மற்றும் அது தொடர்பாக வழக்கில் 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சி யில் இவர்களுக்கு ஜாமீன் மறுத்ததுடன், இவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் மறுத்து வருகின்றது ஜெயலலிதா அரசு.
சங்பரிவார சக்திகளின் ஜனரஞ்சக முகமாக உலாவரும் ஜெயலலிதா ஒருகாலத் திலும் நம்பிக்கைக்குரியவர் அல்ல.

மக்களே சிந்திப்பீர் !! ஏன் இந்த மாற்றம் ? ஏன் இந்த கபட நாடகம் ??

த.மு.மு.க வின் தொன்டர்களே சற்று சிந்தியுங்கள் !! உங்கள் தலைவரிடம் கேளுங்கள் !! அன்று ஜெயலலிதாவை நல்வவராக கூறி கருனாநிதியை சங்பரிவார கும்பலின் தலைவராக சித்தறித்த இதே உங்கள் தலைவர் ஜவாஹிருல்லா இன்று தலைகீழாக மாறி 'கழக கண்மணிகளே' என்று உங்களை ஏமாற்றுவது ஏன்?

ஜெயலலிதாவிடம் உறவு வைப்பதும் என் தாயிடம் உடலுரவு கொள்வதும் ஒன்று என்று கூறி அடுத்த தேர்தலிலேயே கூட்டனி வைத்த ராமதாசின் தாயுடன் உடலுரவு வைத்த ராமதாசின் நடவடிக்கைக்கும் த,மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாவின் நடவடிக்கைக்கும் ஏதேனும் மாற்றம் உன்டா ???

தாயுடன் உடலுரவு வைத்தது யார் ??? முஸ்லிம் உம்மாவை சுயநலத்திற்காக கருனாநிதியிடம் அடகு வைத்து கூட்டி கொடத்தது யார் ??

சிந்திப்பீர் கழக கண்மணிகளே !! சிந்திப்பீர் கழக கண்மணிகளே !!

சகோதரரே...

உங்களுக்கு என் பதில் இங்கே...

நபிவழியின் பரினாம வளர்ச்சி.....?


சென்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபியோடு திமுக இருந்தபோதே பிஜேயும் தமுமுகவில் இருந்தபோது அதிமுகவும் திமுகவும் மோதும் தொகுதிகளில் திமுகவைதான் தமுமுக ஆதரித்தது மறந்து விட்டீர்களா


Post a Comment

தொடர்புடையவை

Create a Link